மலேசியாவின் 300 தேசிய தொடக்கப்பள்ளிகளில் இருமொழிக் கொள்கையை அறிமுகப்படுத்த மலேசிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதாவது கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் ஆங்கிலம் மற்றும் மலாய் ஆகிய மொழிகளில் கற்பிக்கப்படும். இது சார்பாக BBC தமிழோசை ஒரு பி்ரத்தியேகமான செய்தியை வெளியிட்டது. அதன் சாரம் வருமாறு:
மலேசியாவில் அடுத்த கல்வியாண்டு முதல் அறிமுகமாகவுள்ள புதிய கல்வி செயல்திட்டத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் மலேசியாவிலுள்ள ஆரம்ப பாடசாலைகளில் இருமொழிக் கொள்கையை அறிமுகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
ஆனால் இந்தக் கொள்கையை சிறுபான்மை தமிழ் மற்றும் சீன சமூகங்கள் எதிர்க்கின்றன.
மலேசிய அரசு அறிவித்துள்ள புதிய கொள்கையின்படி, அடுத்த கல்வியாண்டில் ஆரம்பக் கல்வியில், அறிவியில் மற்றும் கணிதப் பாடங்கள் ஆங்கிலத்தில் நடத்தப்படவுள்ளன.
ஆனால், ஆரம்பக் கல்வியை தாய்மொழியில் கற்பதே மாணவர்களுக்கு சிறந்த பலனை அளிக்கும் என அரசின் கொள்கையை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர்.
ஐ நா சபையின் கல்வி மற்றும் கலாச்சாரத்துக்கான அமைப்பு யுனெஸ்கோ அண்மையில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், தாய்மொழிக் கல்வியே சிறந்தது எனச் சுட்டிக்காட்டியுள்ளது என்று மலேசிய அரசின் கொள்கையை எதிர்ப்பவர்களில் ஒருவரும், சுவாரம் எனும் மனித உரிமைகள் அமைப்பின் செயல் இயக்குனருமான கா.ஆறுமுகம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
நீண்டகால அடிப்படையில், மலாய் மொழியை மட்டுமே முன்னிலைப்படுத்தி தேசிய பாடசாலைகளை வலுப்படுத்தி, தமிழ் மற்றும் சீன மொழிப் பாடசாலைகளை இல்லாமல் செய்வதே மலேசிய அரசின் நோக்கமாக உள்ளது என அவர் கூறுகிறார்.
தமிழ் சமூகத்தில் மிகவும் வறிய நிலையில் உள்ளவர்களே தமிழ்வழிக் கல்விப் பாடசாலைகளுக்கு செல்லும் சூழல் உள்ளது எனக் கூறும் ஆறுமுகம், அரசின் இருமொழிக் கல்விக் கொள்கை மூலம் சிறுபான்மை மக்களுக்கு பின்னடைவே ஏற்படும் எனவும் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
ஒரு நாட்டின் வாழும் பல்லினத்தின் அடையலாம் அழகு இனத்தின் பெருமைகள் யாவும் அவரவர் தாய் மொழியாகும். தாய் மொழியில் ஆரம்பககல்வி பிறகு வசதிக்கும் வாய்ப்புக்கும் இடை நிலைக்கல்வி பிறகு நிபுணத்துவ உலக மொழி கல்வி என்பது நிதர்சனம். கணிதமும் ஆங்கிலமும் இன்னும் இந்நாட்டு மலாய் மொழியும் கணித அறிவியல் பாடங்களை இதுவரை கடந்த 30 ஆண்டுகளாக போதித்து நாடும் வீடும் மக்களும் பயன் அடைந்துள்ளார்கள் என்பதும் உண்மைதான்.
இப்போது பூதமா… இரு மொழி…. அறிவியல், கணிதம் …என்று புதிய கல்வி கொள்கையில் இல்லாத ஆசாமிக்கு 2016 ம் ஆண்டில் அவசர பூசை நடத்த என்ன காரணம் ?
முன்னாள் துணை பிரதமரும் கல்வி அமைச்சருமான முஹைதீன் எழுதிய 2013-2025 கல்வி கொள்கையில் கைவைத்து ஆங்கில கணிதம் இரண்டுக்கும் இருமொழி இணைப்பு கையேந்தல் நடக்க
2016 ம் கல்வியாண்டு தயாராகிறது.
பிறகு 2018 ஆம் ஆண்டு 14 பொதுத்தேர்தலுக்கு பிறகு ஒரு புதிய கல்வி அமைச்சர் வருவார். இரு மொழியில் அறிவியலும் கணிதமும் வெற்றி பெறவில்லை மீண்டும் மலாய் மொழியில் 2013- 2025 கல்வி கொள்கைக்கே போவோம் என்பார்கள்,. பள்ளி ஆசிரியர்கள்,மாணவர்கள் பைத்தியம பிடித்து லோ லோ னு அலைஞ்சி இருக்கிற கொஞ்ச நஞ்சத்தையும் பிச்சி புடுங்கி கல்வி பலகலைகழக நுழைவுகள் மீண்டும் குளறுபடிகள் இன கெடுபிடிகள் இதுதான் மலேசியர்களின் மாற்று திரன்போமாசி / ரிபோமாசி விதி போலும். போங்கப்பா நீங்களும் உங்கள் கல்வி களவியல் காலாட்டாவும். ஒரு குறிப்பட்ட இனத்தின் மொழி வளர்ச்சிக்கு வெறிக்கு இப்படி எல்லாம் கையும் இன மூளையும் கலந்தால் விழைவது அங்காடிகள் சமூகம்தான். இன்று 50 க்கும் மேல் பட்ட
மொழி வந்தேறிகள் ஆங்காங்கே அவரவர் மொழிக்கு பலர் பள்ளிகள் நடத்தி வருகின்றனர். இன்னும் முப்பது ஆண்டுகளில் பிரமாதமான “கலவை மலேசியாவை” மலேசியர்கள் அனுபவிக்கலாம், இது உலக சந்தோஷத்தில் தோஷம் பரிகாரம் காண கல்வி மான்கள் கூட்டம் “பலகலவைகல்வி” கூடாரங்களை இந்நாட்டில் நிறுவும். இதுதான் பூலோகவியலோ? கணிதமும் அறிவியலும் பல மொழி சங்கமத்தில் சலனமாகலாம்.
யார் எதிர்கின்றனர் பல மொழி புலமை அறிவை கெடுத்து விடுமோ,நாராயண நாராயண.
பொன் ரங்கன் உங்கள் பிள்ளையை தமிழ் பள்ளிக்கு அனுப்பினீர்களா