நம் நாட்டில் பல புத்திஜீவிகளுக்கு தூங்கி எழுந்தவுடன் சட்டென ஞானம் பிறந்து உளறுவதைப் பார்த்துள்ளேன். அப்படிச் சமீபத்திய உளரல்களில் முக்கியமானது தமிழ்ப்பள்ளியை இந்நாட்டில் இல்லாமல் ஆக்கிவிட்டு தேசியப்பள்ளி என்ற ஒற்றை அடையாளத்துடன் இயங்குவது. அதன் மூலம் தேசியப்பள்ளிகளில் தமிழைக் கட்டாயப்பாடம் ஆக்குவது. அப்படியே இந்நாட்டில் தமிழை வளர்த்துவிடுவது.
நான் இவர்களிடம் எப்போதுமே சில அடிப்படையான கேள்விகளை முன்வைத்துள்ளேன்.
1. தேசியப்பள்ளிகளில் தமிழைக் கட்டாயப்பாடம் ஆக்கும்பட்சத்தில் இப்போதிருக்கும் தமிழ்மொழியின் தரம் தேசியப்பள்ளியிலும் நிலைக்குமா? அல்லது இன்று தேசியப்பள்ளிகளில் போதிக்கப்படும் தமிழைப் போல எளிமைப்படுத்தப்படுமா? அவ்வாறு எளிமைப்படுத்தப்படுவதில் சம்மதமா?
2. தேசியப்பள்ளி என்றால் அதில் தலைமை ஆசிரியர்கள் முதல் துணைத்தலைமை ஆசிரியர் என அனைத்து வகையான பொறுப்புகளும் பாராபட்சம் இல்லாமல் அனைத்து இனங்களுக்கும் வழங்கப்படுமா? அல்லது மலாய்ப் பள்ளி அடையாளத்துடன் இப்போதிருக்கும் தேசியப்பள்ளிகள் போலவே இயங்குமா? இப்போதிருக்கும் 300க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் அதே பதவியில் நிலைநிறுத்தப்படுவார்களா? தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் உள்ளிட்ட அரசாங்கப்பதவிகள் பாராபட்சம் இன்றி தேசியப்பள்ளியிலும் எண்ணிக்கைக் குறையாமல் வழங்கப்படுமா?
3. அறிவியல், கணிதம், நன்னெறி, வரலாறு போன்ற பாடங்களில் உள்ள கலைச்சொற்களை ஒரு தமிழ்மாணவன் அறிய வேறு வழிகள் ஏதேனும் உண்டா? அல்லது அவற்றை அறிய வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறீர்களா?
4. மலாய்ப்பள்ளிகளில் இஸ்லாமிய சமய விழாக்கள் கொண்டாடப்படுவது போல மலேசியாவில் சீனர்கள் மற்றும் இந்தியர்கள் தத்தம் விழாக்களைத் தேசியப்பள்ளிகளில் தடைகள் இல்லாமல் கொண்டாட வாய்ப்புண்டா?
5. தேசியப்பள்ளியில் தமிழ்ப்பாடம் மட்டும் தமிழில் போதிக்கப்படும்போது இதரப்பாடங்களுக்கு நூல் எழுதியவர்கள், பயிற்சி புத்தகம் தயாரித்தவர்கள் என அதைச்சுற்றி உருவாகியிருக்கும் பொருளாதார வலை பாதிப்பதில் உங்களுக்குச் சம்மதம் உண்டா? அந்த அச்சகம் மற்றும் பதிப்புரிமை தமிழர்களிடமிருந்து கை மாறும் என்ற பிரக்ஞை உண்டா?
இதில் இன்னும் விவாதிக்க நிறைய உண்டு என்றாலும் இப்போதைக்கு இதுபோதுமானது. தமிழ்ப்பள்ளிகளுக்கு மூடு விழா செய்ய முற்போக்கு எனச் சொல்லிக்கொண்டு உளறுபவர்கள் மத்தியில்தான் உதயசங்கரும் இணைந்துகொண்டுள்ளார். நேற்று The Malaysian Insider வலைத்தளத்தில் அவர் எழுதிய கட்டுரை ஒன்று இடம்பெற்றிருந்தது. (Persoalan kempen ‘SJKT Pilihan Kita’) எனும் தலைப்பிடப்பட்டிருந்த அக்கட்டுரை இதுவரை தமிழ்ப்பள்ளிகள் மேல் மறைமுகமான கசப்பை உமிழ்ந்துகொண்டிருந்த மேட்டுக்குடியினரின் ஒட்டுமொத்த முகச்சுளிப்பாகவே பார்க்கமுடிகிறது.
உதயசங்கரின் எழுத்து எப்போதும் ஆய்வு அடிப்படையில் உள்ளதல்ல. அதை நான் பொருட்படுத்துவதும் இல்லை. மலேசியாவில் அவதூறுகள் எழுதுவது மூலம் அடையாளம் காணப்படுபவர்களில் அவர் முக்கியமானவர். பெரும்பாலும் அவர் கட்டுரைகளில் ‘நான் கேள்விப்பட்டேன்’,’என்னிடம் கூறினார்கள்’, ‘என் அனுபவத்தில்’ என ஆதாரங்கள் இல்லாத மூலங்களில் இருந்து கதையைக் கட்டமைப்பார். இந்தக் கட்டுரையில் அவர் அவ்வாறு முன்வைத்துள்ள சில விடயங்களை இவ்வாறு பட்டியலிடலாம்.
– நான் தமிழ்ப்பள்ளியில் பயின்று யூ.பி.எஸ்.ஆரில் ‘ஏழு ஏ’ எடுத்த சில இடைநிலைப்பள்ளி மாணவர்களைச் சந்தித்தேன். அவர்கள் இடைநிலைப்பள்ளிக்குச் சென்றதும் அவர்கள் அடைவு நிலைகள் படு மோசமாக உள்ளன.
– அவர்களில் பலர் இடைநிலைப்பள்ளி சோதனையின் போது காப்பியடித்ததால் மாட்டிக்கொண்டு நெறிவுரைஞரிடம் அனுப்பிவைக்கப்படுகின்றனர்.
– ஒன்றாம் ஆண்டு முதல் காப்பியடிப்பது ஏமாற்றுவது என எதை செய்தாவது தேர்ச்சி அடைய தமிழ்ப்பள்ளிகளில் அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. இதை இடைநிலைப்பள்ளியில் அமுலாக்க முடியாமல் மாட்டிக்கொண்டு விழிக்கின்றனர்.
– என்னிடம் யு.பி.எஸ்.ஆர் தேர்வில் 7 ஏ எடுத்ததோடு போட்டி விளையாட்டிலும் சிறப்பான அடைவுநிலையை அடந்த மாணவனின் பெற்றோர், தன் மகனை நல்ல இடைநிலைப்பள்ளியில் இணைக்க முடியாமல் உதவி கேட்டனர். இடைநிலைப்பள்ளி நிர்வாகம் அவர்களை மறுக்கிறதாம். நான் மலேசிய வானொலிகள், துணை அமைச்சர் கமலநாதன், ம.இ.கா போன்றவற்றிடம் உதவி கேட்கச் சொன்னேன். அவர்கள்தானே கட்டாயம் தாய்மொழிப்பள்ளிக்கு அனுப்பும் பிரச்சாரங்களைச் செய்கின்றனர்.
– 1993 முதல் நடப்புச்சூழலை அவதானித்து வரும் நான் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இடைநிலைப்பள்ளிகளில் மலாய்மொழியில் பேச திணருவதை உணரமுடிகிறது.
– நான் அடிக்கடி இடைநிலைப்பள்ளி மற்றும் கல்லூரியில் உள்ள மாணவர்களைச் சந்திப்பதுண்டு. தமிழ்ப்பள்ளியில் இருந்து வந்த அவர்கள் தங்கள் தேர்ச்சிக்குத் தமிழ்ப்பள்ளி மட்டுமே காரணம் அல்ல என அறுதியிட்டுக் கூறியுள்ளனர்.
இப்படி நீள்கிறது உதயசங்கரின் உளரல்கள். “தமிழ்ப்பள்ளியே எனது தேர்வு” எனும் இயக்கத்தை விமர்சிப்பதாக எழுதப்பட்ட இக்கட்டுரை தமிழ்ப்பள்ளிகளையும் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களையும் ஒட்டுமொத்தமாக சிறுமைபடுத்தவே முனைகிறது என யார் படித்தாலும் அறிவர். ஆனால் மிக நாசுக்காக தனது கோபம் இனத்தைப் பிரித்தாலும் அரசியல்வாதிகள் மீதென கலண்டுக்கொள்கிறார். இதுவும் உதயகுமார் எஸ்.பி அடிக்கடிச் செய்வதுதான்.
அரசியல்வாதிகள் மீதுதான் அவரது கோபம் என்றால் அவர் தமிழ்ப்பள்ளிகளின் கல்விதரம் குறித்தோ ஆசிரியர்களின் நேர்மை, நம்பகத்தன்மை குறித்தோ எழுதவேண்டிய அவசியம் இல்லை. அந்த அறிவும் அவரிடம் இல்லை என்றே நினைக்கிறேன்.
காப்பியடிப்பதால் நெறிவுரைஞரிடம் அழைத்துச்செல்லப்படும் நாடுமுழுவதிலும் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை விபரம் ஏதும் ஆய்வு செய்யப்பட்டுள்ளதா? யூ.பி.எஸ்.ஆரில் சிறப்புத்தேர்ச்சி பெற்ற எல்லாவகை பள்ளிகளிலும் உள்ள மாணவர்களின் அடைவு நிலை இடைநிலைப்பள்ளியில் என்னவாக மாறியுள்ளது என்ற கணக்கெடுப்பு அவரிடம் உண்டா? எதுவும் இல்லை. உள்ளதெல்லாம் சுய அனுபவங்கள் அல்லது யாரோ அவருக்குச் சொல்லிவிட்டு சென்ற புலம்பல். இதுதான் அவர் எழுத்தின் ஆதாரம். இந்த எழுத்தை வைத்துதான் அவர் பிழைப்பு ஓடுகிறது. இதில் தமிழ்ப்பள்ளியில் படித்தால் நல்ல இடைநிலைப்பள்ளி கிடைக்காது என்ற அவரது அற்பமான எச்சரிக்கை தொணியையும் கவனிக்க வேண்டியுள்ளது.
எந்த ஆய்வும் இன்றி போகிற போக்கில் தமிழ்ப்பள்ளிகள் மேல் எச்சில் துப்பிவிட்டு போகும் உதயசங்கர் எஸ் பி யின் கூற்றுகளை நாம் மிகச் சுலபமாக தகர்க்க முடியும். தமிழ்ப்பள்ளியில் கற்று உயர்நிலைக் கல்விவரை உயர்ந்துள்ள பல மாணவர்களை பட்டியலிட நம்மால் முடியும். அதே போன்று, மலாய்ப் பள்ளியில் பயின்றும் கல்வியில் தோல்விகண்ட பல மாணவர்களையும் குற்றச்செயல்களில் சிக்கி தண்டனை பெரும் மாணவர்களையும் சுட்டிக்காட்ட முடியும். ஆனால் உதயசங்கர் எஸ் பிக்கு அதெல்லாம் ஒரு பொருட்டல்ல. தமிழ்ப்பள்ளிகள்தான் சமுதாய சீரழிவிற்கு காரணம் என்ற தோற்றத்தை உண்டுசெய்வது மட்டுமே அவர் நோக்கம்.
உதயசங்கர் எஸ்.பி சொல்லும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொதுவாக ஆதாரமற்றவை. பல அவதூறானவை. அவர் அனுபவத்தில் அவருக்குத் தெரிந்தவர்களை மட்டும் வைத்து சொல்லும் நியதிகள் சமூகத்துகானதாகிவிடாது. அதேபோல் 2014ல் தேர்வுக்கு முன்பே கசிந்த யூ.பி.எஸ்.ஆர் சோதனைத்தாள்கள் தேசியப்பள்ளியுடையவை என்பதை நினைவில் நிறுத்த வேண்டும். ஒரு தேசியப்பிரச்சனையை ஒரு சமூகத்தின் தலையில் மொத்தமாக சுமத்தி அச்சமூகத்தை பிரச்சனையாகக் காட்டி கீழ்மைப்படுத்துவதுதான் உதயசங்கர் எஸ்.பி போன்றவர்களின் அரசியல்.
தமிழ்ப்பள்ளிகளில் மலாய் இலக்கியத்தை வளர்ப்பதாக கூறிக்கொண்டு வருகை தரும் அவரை அனுப்பதிப்பது குறித்து பள்ளி நிர்வாகம் இனியாவது யோசிக்க வேண்டும். ஏதோ ஒரு நடவடிக்கை நடத்தினால் போதுமானது என கண்டவர்களை தமிழ்ப்பள்ளியில் நுழையவிடும் போக்குத் தொடருமானால் நம் சுயமரியாதை மீது நாமே காரி உமிழ்வதற்குச் சமம்.
தமிழ் பள்ளி இல்லையேல் ….நாம் யாரு என்பதை தெரியாமல் போய் வீடும் ….இந்த நாட்டில் மட்டும் அல்ல ..இந்த உலகத்திலே ..
இவரு இப்போ வேறமாதிரி தெரியுறாரே !!
ரகசியமா குல்லா போட்டுகிராரோ ?
இவர் தாய் மொழிவழி தமிழரா இல்ல திராவிடிய தமிழரா ?
சிந்திக்கச் செய்யும் கட்டுரை.
திராவிட தமிழர் யாருங்கே . கலிங்க துக்கும் தமிழர்களுக்கும் சமந்தமே இல்லாத போது ஏன் இங்கேதமிழர்களை கெலிங் என்று சொல்றாங்கே
நானும் ஒரு விஷயத்தைக் கேள்விப் பட்டேன். ஒரு பொதுத் தேர்வுக்கு முன்பே அதை எழுதும் மலாய் மாணவர்களை சூராவ்வில் கூட வைத்து, என்னென்ன கேள்விகள் வரும், அவற்றுக்கு எப்படிப் பதில் எழுத வேண்டும் என்று ceremah கொடுக்கப்படுகிறதாம். அதனால்தான் அவர்கள் அறிவுத் திறன் அயல்நாட்டு நிறுவனங்களின் தேவைகளுக்குப் போதமானதாக இல்லாமல், அந்நிறுவனங்கள் அவர்களை வேலைக்கு அமர்த்துவது இல்லையாம். மலாய்ப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் ஆங்கில மொழித் திறனும் இதுபோன்ற சூழ்ச்சிகளால்தான் இந்நாட்டில் மங்கிப் போகிறதாம்.
நான் இன்னொன்றையும் கேள்விப் பட்டேன். பல்கலைக் கழகங்களில் பயிலும் மலாய் மாணவர்கள் பல தில்லுமுல்லுகள் மூலம்தான் சான்றிதழ்கள் பெறுகிறார்களாம். இதனால் நாடு சிங்கப்பூர் போன்ற அண்டை நாடுகள் போன்று முன்னேற முடியவில்லையாம்.
நான் இன்னும் பல விஷயங்களைக் கேள்விப் பட்டேன்….. யாரும் எனக்குக் காசு பணம் தருகிறார்கள் என்றால் பல அவதூறுகளை அள்ளி வீச முடியும்.
காசு பணம் தருகிறவர்கள் யாராவது இருந்தால் இந்த உலறல் சங்கர் போல நானும் நிறையே உலறித் தள்ளுவேன்.
எவ்வளவு வாங்கினாரோ, குரைத்துச் செல்லட்டும்.
Tamil palliyil padithathal yenathu iru pillaihalum nalla therchi petranar.. Upsr yenathu mahan 7A, PT3 8A. Vetri nichayam.
மிக நீண்ட சிந்தனைக்கு பின் தோழர் ம.நவீன் இக்கட்டுரயை படைத்திருக்கிறார் . அதை தொட்டு கருத்து கூறியவர்களில் சிலர் குறிப்பிட்டு கூற வேண்டுமாயின் தமிழர் எழுச்சி பறை, மற்றும் மன்சுளா, போன்றோர் மாங்கா ம..யன்கள் போல் கருத்து எழுதியிருக்கிறார்கள்.
நண்பரே! எழுச்சிப்பறை உதயசங்கரைப் பற்றி சொல்லுகிறாரே தவிர நவினைப் பற்றியல்ல. அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டாதீர்கள்!
நவீன் கட்டுரை சிறப்பு. மீண்டும் அவர் செம்பருத்தியில் எழுதத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. சமநிலையான அறிவுத்தளத்தில் நின்று எழுதக்கூடியவராக மலேசியாவில் அவரைக்காண்கிறேன். இந்தக் கட்டுரையிலும் தனிநபர் தாக்குதல் இன்றி கருத்துகள் அடிப்படையில் பேசுகிறார். அதற்கேற்ற மொழி. அவர் வாசகனாய் இருந்தே நான் என் மொழியையும் மேம்படுத்திக்கொள்கிறேன்.உதயசங்கர் இக்கட்டுரைக்கு பதில் கூறத்தான் வேண்டும். கட்டுரையின் ஓர் இடத்தில் உதயகுமார் என இருப்பதை மட்டும் திருத்திக்கொள்க.
மலாய் இலக்கியத்தில் குட்டையைக் குழப்பி முடிவதற்குள் தமிழ் பள்ளியில் குட்டையை குழப்ப ஆரம்பித்திருக்கிறார் உதயசங்கர். எங்கள் குடும்பத்தில் உடன் பிறந்தவர்களின் பிள்ளைகள் அனைவரும் தமிழ் பள்ளியில் படித்தர்வகளே. சிறப்பான முறையில் தேர்ச்சிக் கண்டு பல்கலைகழகங்களில் இளங்கலைப் பட்டம் பெற்று சிறப்பான துறைகளில் வேலையை ஆரம்பித்து விட்டனர். இன்னும் சிலர் பல்கலைகழகங்களில் சிறந்த துறைகளில் படித்து வருகின்றனர். நிலைமை இப்படி இருக்க, எவ்வொரு காரண காரியமும் இல்லாமல், தாந்தோனித் தனமாக தமிழ் பள்ளி மாணவர்களை தரம் தாழ்த்தி உதயசங்கர் எழுதிய கூற்று கண்டிக்கத் தக்கது. அவரின் கூற்று உண்மையற்றதுமாகும்.
உதய சங்கர் உளறியுள்ள அந்தக் கூற்று தமிழ்ப் பள்ளியில் மட்டுமல்ல.எல்லா மொழிப் பள்ளிகளிலும் அந்தப் பிரச்சனைகள் உண்டு.ஆனால் அவரின் கேணத்தனமான ஆய்வுக்கு தமிழ்ப் பள்ளிகள் மட்டும் பலிகடாவாக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.தமிழ்ப் பள்ளிகளில் பிரச்சனைகள் இருந்தால் அதனை களைவது கல்வி அமைச்சின் பொறுப்பு.ஆனால் தமிழ்ப் பள்ளிகளைப் பொறுத்தவரையில் அரசாங்கத்தின் பார்வை மாற்றாந்தாய் பள்ளிகளாகவே வகைப் படுத்தியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் வகையில் அரசாங்கத்தின் பல மெத்தன போக்குகளை எடுத்துக் காட்டலாம்.ஆசிரியர் பற்றாக்குறை,தளவாடப் பொருட்கள்,தமிழில் போதிய பயிற்ச்சி புத்தகங்களுக்கு ஏற்பாடு செய்யாமை,விடுமுறை கால பயிற்ச்சிகள் போன்ற பல பிரச்சனைகள் தமிழ்ப் பள்ளிகளை நாளும் ஆட்டிப் படைகின்றன.இதற்கு ஒட்டுமொத அரசாங்க அதிகாரிகளின் மெத்தனப் போக்குதான் காரணம்.
தமிழ்ப்பள்ளிகளில் பயின்ற தலைசிறந்த மாணவர்களுக்கு வழிகாட்டும் குழுவில் கடந்த எட்டு ஆண்டுகளாக நானும் உறுப்பினன். பொதுவாக நம் மாணாக்கர் இடைநிலைப்பள்ளிகளில் சிறப்பான கல்விநிலை அடைவதில்லை என்று நினைக்கிறோம். இது உண்மைக்கு புறம்பானதாகும், இக்குழுவின் புள்ளி விவரத்தின்படி ஏறக்குறைய எழுபது விழுக்காட்டினர் வெகு சிறப்பான எஸ்பிஎம்
தேர்வு முடிவுகளைப் பெற்றுள்ளனர்.
தமிழ்ப்பள்ளிகளைக் குறைச் சொல்லத்தேவையில்லை, குறைகள் இருப்பின் நாம் அனைவரும் தீர்வுகாணும் வழிமுறைகளைப் பரிந்துரைக்க வேண்டும். தோள் கொடுக்க வேண்டும். அதை விடுத்தது இருப்பதை இடிக்காமல் இருக்கவேண்டும். பின் விளைவுகளை சீர்தூக்கி பார்க்கவேண்டும்.
ஆற்றல் உள்ளோர் முன் வரவேண்டும்; ஆக்கமுடையோர் நல்லதை செய்ய வேண்டும். காலத்தின் நிலை இதுதான்.
இவன் சொல்வதை பொருட்படுத்த தேவையில்லை . இவன் பிறப்பால் தமிழன் இல்லை. இவனிமிருந்து தமிழ் உணார்வை நாம் எதிர் பார்க்க முடியுமா .
ஒரு படைப்பாளிக்கு இருக்க வேண்டிய சமூக அக்கறை நவீன் எழுத்தில் உள்ளது. இன்னும் ஆழாமான பதிவை தொடர்ந்து எதிர்ப்பார்க்கிறேன். இலக்கியத்திற்கு ஈடான ஆளுமை சமூக சிக்கலை அலசுவதிலும் உள்ளது. தொடர்க நவீன்
தமிழர்கள் ஒற்றுமைக்கு பாதகமாக செயல்பட strategic analysts வேலைகளை திறன்பட செய்து பிரித்தாளுவதில் வெற்றியும் கண்டுள்ளதை உணர்வீர்! உதயசங்கரை நமக்கு எதிராக தூண்டியவர்களின் நோக்கம் எதுவாயினும் அவரை பகடை காயாக பயன்படுத்தி எமது ஒற்றுமைக்கு வெடி வைக்க முனைவது அம்னோவின் கைதேர்ந்த வித்தைகளில் ஒன்று.தமிழன் ஒன்று பட்டால் Hindraf இன்னொருமுறை அல்லது வேறு ரூபத்தில் தலை தூக்கிவிடும் என்பது மலாயக்காரனுக்கு நன்றாகவே தெரியும்! ஆகையால் அம்பை தூற்றுவதை நிறுத்திக்கொண்டு எய்தியவனை அடையாளம் காண முயற்சி செய்யுங்கள்! அதிலிருந்து தற்காத்து கொள்ளுவதோடு அதையே ஆயுதமாக்கும் வழிமுறைகளை ஆராயுங்கள்! வெற்றியும் நாளையும் நமதே! அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்…
abraham terahநவீனை பற்றி என்னய்யா சொல்லவேண்டும் ?
அவன் இன மொழி உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் சகோதரன் இன்னும் சொல்லபோனால் என் தம்பி .. கருங்காலிகள் செய்யும் காவாலிதனத்தில் கொதிச்சுபோய் இருக்கும்போது ….
“திராவிட தமிழர் யாருங்கே . கலிங்க துக்கும் தமிழர்களுக்கும் சமந்தமே இல்லாத போது ஏன் இங்கேதமிழர்களை கெலிங் என்று சொல்றாங்கே ” மஞ்சுளா , உங்கள் கேள்விற்கு என்னிடம் பதில் உள்ளது…………… ராஜா ராஜா சோழன் கி பி 1007 ஆம் ஆண்டு தமிழகத்தில் இருந்து படை எடுத்து, மொத்த பாரத நாட்டையும் (இந்தியா) வென்ற பொழுது, கலிங்க மன்னன் (கலிங்கன்), அப்பொழுது கலிங்கம் இந்தியாவின் மேற்கு பகுதி, இன்றைய அசாம் மற்றும் நேபால் மலைபகுதி. ராஜா ராஜா சோழனிடம் தன்னை தளபதியாகி கொண்ட கலிங்கன், கடாரதித்தின் (இன்றைய kedah ) மீது படையெடுக்க உதவினார். ராஜா ராஜா சோழன் படையை வழிநடத்திய ராஜேந்திர சோழன் வரும் 3 மையில் முன்னமே செல்லும் கலிங்கன், பூ, பலம், காய் என்று பார்க்காமல், எல்லவற்றையும் அழித்து பாதைகளை செய்வார். போரில் பாதை செய்வது என்பதின் பொருள் வேறு. அப்பொழுது இருந்த மலைவாசிகள் (orang asli ), சிறிய இரும்பு போன்ற பத்திரங்களை கொண்டு ஓசை எழுப்புவர். அது ‘கிளிங்’ என்று ஓசை எல்லுப்பும் தன்மை கொண்டது. அதை கேட்ட மக்கள் ஓடி ஒளிந்து கொள்வர். குழந்தைகளும் கூட. கடாரத்தை வென்ற ராஜேந்திர சோழன், மக்கள் பிரதிநிதியாக கலிங்கத்து ராஜாவான காளிங்கனை தலைமை ஏற்க செய்து, 1017 ஆம் ஆண்டு, சோழப்படை இந்தோனேசியாவின் ஜாவாவை கைபற்றியது. பிறகு சோழ ராஜ்யத்தில் ஏட்பட்ட உட்பூசலினால், கடாரம் மன்று ஜாவா பொலிவை இழந்தது, பிடி தளர்ந்தது. அப்போதைய கருணா போன்ற துரோகிகளினால், கலிங்க மன்னன் (கலிங்கன் – 9 அல்லது 10 ஆகா இருக்க வேண்டும் ), மஜாபஹிட் அரசாங்கத்திடம் தோற்க, கல்லில் gula melaka என்ற பேரில் விஷத்தை கலந்து கலிங்கன் கதையை முடித்தனர். துல்லியமான விளக்க உரைகள் இல்லாத பொழுதும், கலிங்கன் இறந்து, அவனின் குடி பழக்கம், அதின் பின் பலன் அடைந்த பிரிவினர் என்று ஆராய்ந்து, இந்த முடிவிற்கு வர நேர்கிறது. 1400 தொடக்கத்தில் , பலேம்பாங் ராஜாவின் இரண்டாவது மனைவியை கொன்றதனால், தந்தைக்கு பயந்து, மலாக்காவில் ஒளிந்தவர்தான் பரமேஸ்வரா. மஜாபஹிட் முதல் சுல்தான் – மலாக்கா பிரிவுகள். அப்பொழுது இருந்த சியாம் (thailand) மன்றம் துமாசெக் (singapore) மீது படை எடுக்க போகிறேன் என்றதனால், அவர் தலை தப்பித்தது. அப்படிதான் இந்த மஜபாஹிட் ஆட்சி தோன்றியது. பெராக்கில் HAN (1904 ஆண்டு) மற்றும் SIANG (1908 ஆண்டு) , பேராக் சுல்தான் அப்துல்லாவை தீர்த்து கட்ட சதி தீட்டியது. இந்த இரு குண்டர் கும்பலும் தனை எதோ செய்து விடுமோ என்று பயந்த சுல்தான் 1929 பிரிட்டின்னுடன் ஒபந்தம் செய்தனர். பிறகு, 1957 பிரிட்டின் சுதந்திரம் தரும் பொழுது, நாட்டின் பூர்வீக குடிமக்களுக்கு ‘பூமி புத்ரா’ என்று, அப்பொழுது இந்த நாட்டில் இருந்த மற்றவர்கலுக்கு பிரஜைகள் ‘வார்கநேகர’ என்று பிரித்தளிக்க படத்து. கலிங்கத்து மன்னன் கருப்பாகவும் மூர்க்கமாகவும் இருந்ததினால், நம்மை கெலிங் என்று அலைகின்றனர். அது ராஜாவின் பெயர். பெருமை பட்டு கொள்ளுங்கள். தொடரும் …
ராஜேந்திர சோழன் அவர்களுக்கு 7 மனைவிகள். அதில் ஒருவர் தன் ராஜா புத்திரர்களுடன் johor மாநிலத்தில் இருந்து விட்டதாகவும், இன்னும் ஒருவர் ஜாவா வில் வாழ்ந்ததாகவும், இணையத்தில் படித்தேன். அப்படி இருந்தால், அந்த குடும்பத்தை சேர்ந்த புத்திரர்களும் ராஜாக்களே. அவர்களைத்தான் நான் தேடி கொண்டிருக்கிறேன். சமிபத்தில் ஒருகுடும்பத்தில், சோழர் மன்னர்களின் 7 பெயர்களை கொண்ட ஒரு பெரிய குடும்பத்தை பேராக்கில் சந்தித்தேன். வியப்பாக இருந்தது. ஆனால் உண்மையும் கூட.
பெராக்கில் HAN (1904 ஆண்டு) மற்றும் SIANG (1908 ஆண்டு) , பேராக் சுல்தான் அப்துல்லாவை தீர்த்து கட்ட சதி தீட்டியது………. இந்த இரண்டு குண்டர் கும்பலும், இன்று 04, 08 Gangster என்று நாடு முழுவதும் 40,000 தொண்டர்களை வைத்துள்ளது; பேராக் தலைமையிடமாக கொண்டு. பாவம் அவர்களின் வரலாறு அவர்களுக்கே தெரியாது. சமிபத்தில் புத்ரஜெயா, இவர்களின் மீது போர் என்று அறிவித்திருந்தது. திராவிடம் என்பது இரண்டு. ஆதி திராவிடம் மற்றும் திராவிடம். ஆதி திராவிடம் கிராந்த மொழிகளை அடிப்படையா கொண்டு, தமிழ் நாடு, கேரளம், ஆந்த்ரா, தெலுகு, இலங்கை, இன்னும் சில தீவுகளையும், குமரிக்கண்டத்தின் ஒருபகுதியையும் கொண்டது. 1000 ஆண்டுகளுக்கு முன் குஜராத் பகுதியில் இருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள்தான் இந்த சிங்களவர்கள். நாகரிக திராவிடம் என்பது தமிழ் நாடு, கேரளம், ஆந்த்ரா, தெலுகு போன்ற பகுதிகளை கொண்டது. இவைஅனைத்தும் பூர்வீக குடிஎட்ரத்தின் அறிகுறிகள். பிறப்பால் யாரும் உயந்து விடுவதல்ல, அப்படியே இறப்பும். எனவே சோழ மன்னர்களின் கடார படையெடுப்புகளை வைத்து பார்க்கும் பொழுது, திராவிடமும் நம் பூர்வீக அடையாளம்.