மக்கள் பிரச்சனைகளுக்கு நிறைவான தீர்வை விரும்பும் எந்த ஓர் இயக்கமும் தனிமனித தலைமைத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது பெரும் தவறு. அவ்வாறு தனிமனிதனுக்கு முக்கியத்துவம் அளிப்பதின் மூலம் ஓர் இயக்கத்தின் நோக்கமே பணயம் வைத்துவிடப்படக்கூடிய ஆபத்து நிகழலாம். ஹிண்ட்ராப் மக்களின் பேரியக்கமாக உருவாக தனிமனித தலைமைத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என்பதற்கு ஹிண்ட்ராப் அமைப்பின் கடந்த காலமே ஒரு பாடமாக இருக்கட்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
கொள்கை மற்றும் கருத்து வேறுபாடுகளால் பதிவு பெற்ற ஹிண்ட்ராப் இயக்கத்திலிருந்து வெளியான ஒரு குழுவினர் தொடர்ந்து ஹிண்ட்ராப்-ஐ மக்களின் ஒரு பேரியக்கமாக உருவாக்க சமூக ஆர்வலர்களுடன் ஒரு கலந்துரையாடலை கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கிள்ளானில் நடத்தினர்.
இதில் சுவராம் மனித உரிமை இயக்கத்தின் தலைவர் கா. ஆறுமுகம், செம்பருத்தி ஆசிரியர் ஜீவி காத்தையா, மைஸ்கில்ஸ் அறவாரியத் தலைவர் சி. பசுபதி , மலேசிய சோசியலிசக் கட்சியை சார்ந்த சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் ஜெயகுமார், அவரது துணைவியார் இராணி, மேலும் அக்கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர் சகோதரர் எஸ். அருட்செல்வம், சகோதரி சிவரஞ்ஜினி, தொழிற்சங்கவாதி பா. கந்தசாமி மற்றும் ஹிண்ட்ராப் பேரியக்கத்தின் தலைமைச் சபை உறுப்பினர்களும் மாநில செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
காலை மணி 10 க்கு துவங்கி மாலை மணி 4 வரை நீடித்த இந்த கலந்துரையாடலில் பல ஆழமான கொள்கைகள் குறித்து விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டன. பரந்த சமூக சேவைகளில் நிறைந்த அனுபவம் வாய்ந்த அனுபசாளிகளின் ஆக்கபூர்வமான கருத்துகள், ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கத்தின் எதிர்கால சமூக சேவைகளின் வியூகம் எப்படி அமைய வேண்டும் என்ற திட்டமிடலுக்கு பெரும் பங்களிக்கும் வகையில் அமையும் என்றார் இதன் ஒருங்கிணைப்பாளர் நா. கணேசன்.
தெளிவான புள்ளிவிவரங்களின் அடிப்படையில், விவேகமாக அணுக வேண்டிய பல சமூக திட்டங்களை சி. பசுபதி முன்வைத்தார். மேலும் அரசு இலாகாகளையும், இயந்திரங்களையும் மட்டுமே எதிர்பார்த்து இந்தியச் சமூகம் காத்திருக்கக் கூடாது என்றும், சமூக அமைப்புகள் மக்கள் பலனடையும் வகையில் துரிதமாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் தம் கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
கவனிக்கப்பட்டு, கருத்தில் கொண்டு, தீர்க்கப்படக் கூடிய பல அவலங்களால் மக்கள் இன்னலுற்று இருக்கிறார்கள் என்றும், மக்களோடு ஒன்றிணைந்து அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண களத்தில் இறங்கி சேவை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி தமது அனுபவங்களை விரிவாக டாக்டர் ஜெயக்குமார் பகிர்ந்துகொண்டார்.
மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கத்தோடு இணைந்து செயல்பட மலேசிய சோசியலிசக் கட்சி தயாராக இருப்பதாக எஸ். அருட்செல்வம் தெரிவித்தார்.
இந்நாட்டு குடிமக்கள் என்ற அடிப்படையில் நமது உரிமைகளைப் பெறுவதில் ஒருபோதும் தயக்கம் காட்டக் கூடாது என்றும், ஹிண்ட்ராப் பேரியக்கம் அத்தகைய நெறியில் இருந்து பின்வாங்கக் கூடாது என்றும் ஜீவிகாத்தையா எடுத்துரைத்தார். மலேசிய இந்தியர்களின் சமூக மற்றும் பொருளாதார சவால்களை கையாள்வதற்கு ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்க உறுப்பினர்கள் மத்தியில் திடமும், விவேகமும், அர்ப்பணிப்பு உணர்வும், திறமையும் இருப்பதை கண்டு மகிழ்வதாக கா. ஆறுமுகம் தெரிவித்தார்.
பதவிகளையும், சலுகைகளையும் எதிர்பார்க்காமல் மக்கள் நலனை முன்னிறுத்தி தூய சேவை மூலம் ஹிண்ட்ராப் பேரியக்கம் தொடர்ந்து செயல்படவேண்டும் என்று பா. கந்தசாமி கேட்டுகொண்டார்.
இந்தக் கலந்தாய்வு சந்திப்பின் போது முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளையும், ஆலோசனைகளையும் பரிசீலித்து அதற்கு ஏற்ப ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் அமையும் என்று கூறிய ஹிண்ட்ராப் தலைமைச் சபை உறுப்பினர் நா. கணேசன், ” இந்தக் கலந்தாலோசனைச் சந்திப்பிற்கு வருகை தந்த அனைவரும் ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கத்தொடு இணைந்து செயல்பட சம்மதம் தெரிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
ஹிண்ட்ராப் போராட்டத்தின் உண்மை நிலை தடம் புரண்டு சுயநலவாதிகளின் பிடியில் சிக்கியது சமுதாயத்தின் துரதிஸ்டம்.உண்மையான போராட்டவாதி உதயகுமார் போன்றவர்களை புறம்தள்ளி சுயநலவாதிகள் தங்களுக்கு சாதகமாக்கி போராட்டங்ககளை நிர்கதியாகியதுதான் மிச்சம்.சுயநலவாதிகள் கையில் உண்மையான ஹிண்ட்ராப் போராட்டம் தொடர வாய்ப்பில்லை. சமுதாயம் விழித்தால் மீண்டும் உண்மையான ஹிண்ட்ராப் போராட்டவாதிகளை இணைத்து போராட்ட பயணம் தொடர வாய்ப்புக்கள் உருவாகலாம்.காலத்தால் நவம்பர் 25 2007 என்றும் மறக்க இயலாத மலேசிய தமிழர்களின் உண்மை உரிமை போராட்டம் உதயகுமார் தலைமையிலான போராட்டம்.
நல்ல முயற்ச்சி வாழ்த்துக்கள்…!
இது யாருக்காக?
பேரியக்கமாக உருவாக்க முடியும் எல்லாம் ஒழுங்காக நடந்தால். நடக்குமா? நம்மவர் எடுத்த எந்த காரியம் நன்றாக நடந்தேறி இருக்கிறது? என்னைப்போன்ற ஆதரவாளர்கள் முகத்தில் கரியை பூசிகொண்டதுதான் மிச்சம். தேசிய தோட்ட தொழிலாளர் கூட்டுறவிலிருந்து மைக்கா மற்ற எதுமே தேற வில்லை– இப்போது hindraf — 2007ல் எனக்கு நம்பிக்கை இருந்தது -எத்தனை பேர் அடி பட்டனர்-ஒருவருக்கு கண் பார்வை கூட இழந்தது.– ஆனால் என்ன ஆனது? துரோகியின் சொந்த நலனுக்கு நாமும் விற்கப்படலையா? இதற்க்கு என்னதான் விடிவு?
இது தமிழருக்கா இருக்குமா அல்லது datok பட்டத்திற்க்கா.?
நல்ல முயற்சி. உங்கள் திட்டங்கள் வெற்றி பெற வேண்டும்! இருந்தாலும் ஹின்ராப் நா.கணேசன் இன்னும் சந்தேகத்துக்கு உரியவரே!
கூடிய சீக்கிரம் டத்தோ கணேசன் ஆகிவிடுவார். வேதா கூட இருந்தால் கிடைக்காது என்பது தெரிந்து விட்டது போல. வாழ்த்துக்கள் டத்தோ கணேசன்.
abraham terah ! உங்கள் சந்தேகம் நியாயமானதே !! பொதுவாகவே, நம் அரசியல்வாதிகளுக்கு மற்ற இன அரசியல்வாதிகளை விட சுயநலம் கொஞ்சம் அதிகமே !!! அதனால்தான் என்னவோ, உலக தலைவர்கள் பட்டியலில் அடிமைபடுத்தப்பட்ட கருப்பினத்தில் கூட நெல்சன் மண்டேலா என்ற புகழ் பெற்ற மாமனிதர் தோன்றினார் . ஆனால் தமிழர்களில் அப்படி யாரும் இதுவரைக்கும் இல்லை ! முதன் முதலில் பொருளாதாரதில் உயர்வதற்கு துன் சம்மந்தனார் கூட்டுறவு கலகம் ஒன்றை உருவாக்கினார், அது இன்று தனிநபர் சொத்தாகிவிட்டது ! பிறகு சாமிவேலு வந்தார், இந்திய சமூகத்தை பணக்கார சமூகமாக மாற்றபோகிறேன் என்று சொல்லி , அவர் பணகாரராகிவிட்டார் !! இவர்களால் நொந்து நூலாகிப்போன நமக்கு ஹிண்ட்ராபின் ஐந்து தலைவர்களும் பஞ்சபாண்டவர் போல் காட்சி அளித்தார்கள். இவர்களின் சுயநல போக்கால் ஐந்து பேரும் பஞ்சாய் பி ய்துக்கொண்டார்கள் .
மிருதன் ! உங்கள் தீர்க்கதரிசனம் சூப்பர் ! நம்ப என்ன சொன்னாலும் அவனுங்களுக்கு உரைக்காது ஐயா, அவனுங்க நோக்கமெல்லாம் பணம் பண்ணுவதுதான் ஒரே குறிக்கோள் !!
இறுதி முடிவு, எதிர் கட்சியிடம் சீட்டு கேட்டு கிடைக்காமல் ,( கிடைக்காது என்று தெரிந்தும் ) அனுவார் கெட்டவன் என்ற வருத்தத்துடன் BN பிரதமர் நமது கோரிக்கைக்கு சம்மதம் தெரிவித்துவிடார் என்று பூச்சாண்டி காட்டி இந்து மக்களை திசை திருப்புவார்கள் இந்த ஹிண்ட்ராப் பயல்கள் !
நந்தா சொல்வது போல அன்று எல்லா நாடகங்களுக்கும் சூத்திர தாரியான கணேசனின் புதிய நாடகம் இது.
எதிர்கட்சியோ இல்லை ஆளும்கட்சியோ தமிழன் கேட்டா எவனும் குடுக்கா மாட்டான்.. இதில் அன்வார் ஒன்றும் விதி விலக்கு இல்லை
ஐயா அஞ்சான் அதான் தெளிவாக சொல்லிவிட்டேனே ! BN அரசு செலாங்கூர் மாநிலத்தில் இந்தியருக்கு 3 சீட் கொடுக்கும் ! அன்வாரிடம் ஹிண்டாப் 8 சீட் கேட்டு நச்சரிக்கும் , இது எல்லா மக்களுக்கும் பிரதிநிதி PKR கட்சி என்று அன்வார் கலட்டி விடுவார் ! திரும்ப போய் BN னுக்கு பல்லக்கு தூக்க வேண்டியதுதான் ஹிண்ட்ராப் ! போன தேர்தல் விட இந்த முறை ஹிண்டாப் கட்சிக்கு பெட்டி கொஞ்சம் கனமாகத்தான் இருக்கும் !