மலேசிய சோசலிசக் கட்சி, கிள்ளான் கிளையும், ஹிண்ட்ராப் சிலாங்கூர் பிரிவும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யுதுள்ள நூல் வெளியீடும், கருத்தரங்கும்.
காட்டுப் பெருமாள் நூல் வெளியீடு
தோட்டத் தொழிலாளர்களின் தோழன் ‘காட்டுப் பெருமாள்’, 1940-களில் சுங்கை சிப்புட் வட்டாரத்தில் காலனித்துவ ஆட்சிக்கும் முதலாளித்துவ சுரண்டலுக்கும் எதிராகத் துணிந்து போராடியவர். அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருந்தபோது, காட்டில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டே, இவர் தோட்டத் தொழிலாளர்களைப் போராட்டத்திற்கு ஒருங்கிணைத்தார். பின்னாளில், ஆட்சியாளர்களால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டாலும், தோட்டப்புற மக்களால் இன்றும் இவர் மதிக்கப்படும் தலைவராக இருக்கிறார்.
தோட்ட மக்களின் உரிமைக்காகப் போராடிய தோழர் காட்டுப் பெருமாள் அவர்களின் தொகுப்பு நூல் கீழ்க்கண்ட விபரப்படி வெளியிடப்படவுள்ளது:–
நாள் :- 11.9.2016 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் :- மாலை 3 மணி
இடம் :- பேக்கிலி உணவக மண்டபம், கிள்ளான் .
Dewan di Restoran Berkeley, Klang.
இந்நூல் வெளியீட்டில் சில சிறப்பு நபர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். நூலின் எழுத்தாளரான தோழர் தேவ் அந்தோணி, இந்த நூலை எழுவதற்கு தூண்டுகோலாக இருந்த சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினரும், பி.எஸ்.எம் மத்திய செயற்குழு உறுப்பினருமான டாக்டர் ஜெயக்குமார் தேவராஜ், ஹிண்ட்ராப் தலைவருமான தோழர் வேதமூர்த்தி மற்றும் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாட்டைச் சேர்ந்த தோழர் ஆதவன் தீட்சண்யா அவர்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
தோழர் ஆதவன் தீட்சண்யா
தோழர் ஆதவன் தீட்சண்யா தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், பேச்சாளர் என பன்முக திறம் கொண்டவர். இவர் சமூகத்தின் பிரச்சனைகளை பெரியார், அம்பேத்கர் மற்றும் மார்க்சிஸ்சிய பார்வையில் அணுகுபவராவார். இவர் புதுவிசை இதழ் ஆசிரியரும் மற்றும் மாநில முற்போக்கு எழுத்தாளர், கலைஞர் சங்க துணை பொதுச்செயலாளரும் ஆவார். இவர் கீழ்கண்ட தலைப்பில் நமது நூல் வெளியீட்டில் பேசவுள்ளார்:
(உலகமயச் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்திற்கு காட்டுப் பெருமாள் போன்றோரிடம் இருந்து நாம் கற்கவேண்டியவை)
இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள நாம் அனைவரையும் அழைக்கிறோம். மேல்விபரங்களுக்கு தோழர் சிவரஞ்சனி அவர்களை 010-2402159 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி.
சிவரஞ்சனி
மலேசிய சோசியலிச கட்சி, கிள்ளான் கிளை.