இன்று பின்னேரத்தில், கெந்திங் மலையில் தமிழ்ப்பள்ளிகளில் இயங்கும், இயங்க வேண்டிய தமிழ்ப்பள்ளி மேலாளர்கள் வாரியங்கள் பற்றி விவாதிக்க ஒரு மாநாடு கூடுகிறது. இம்மாநாடு தமிழ்ப்பள்ளி மேலாளர்கள் வாரியங்களின் ஆண்டு மாநாடு அல்ல. இது தமிழ்ப்பள்ளி மேலாளர்கள் வாரியம் மீது ஈடுபாடு கொண்டவர்கள் அவற்றை மேம்படுத்து பற்றி விவாதிக்க ஏற்பாடு செய்திருக்கும் மாநாடு. இம்மாநாட்டில் சுமார் 500 பேர் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது
தமிழ்ப்பள்ளிகளை நிர்வாகிக்கும் அதிகாரம் பெற்ற மேலாளர்கள் வாரியம் ஒவ்வொரு தமிழ்ப்பள்ளியிலும் இருக்க வேண்டும். இது சட்டம். இச்சட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பு கல்வி அமைச்சை சார்ந்ததாகும்.
இந்நாட்டில் 523 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. இப்போது 524 ஆக உயர்ந்துள்ளன. அப்படி என்றால், 524 தமிழ்ப்பள்ளி வாரியங்கள் இருக்க வேண்டும். அப்படி ஏதும் இல்லை. சட்டம் என்ன ஆயிற்று? கல்வி அமைச்சர்தான் (முழு அமைச்சர்) இதற்கு பதில் கூற வேண்டும்.
2009 ஆண்டில், தமிழ் அறவாரியம் ஒவ்வொரு தமிழ்ப்பள்ளியிலும் மேலாளர்கள் வாரியம் இருப்பதை உறுதி செய்ய தீர்மானித்தது. அதற்கு முன்பு அந்த அமைப்பின் கணிப்புப்படி 10 விழுக்காட்டிற்கும் குறைவான தமிழ்ப்பள்ளிகளில் மட்டுமே மேலாளர்கள் வாரியங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவை எப்படி செயல்பட்டன? ஆண்டவனைத்தான் கேட்க வேண்டும்.
தமிழ் அறவாரியம் எடுத்த முடிவிற்குப் பின்னர், அதன் விடாமுயற்சியால் இன்று 414 தமிழ்ப்பள்ளிகளில் மேலாளர்கள் வாரியங்கள் இருக்கின்றன. அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதை இனிமேல்தான் தெரிந்துகொள்ள வேண்டும். மேலும், இன்னும் 110 தமிழ்ப்பள்ளிகளில் மேலாளர்கள் வாரியங்கள் அமைக்கப்படவில்லை. ஏன் என்பதற்கான பதிலை செய்தியாளர்கள் இம்மாநாட்டை நிறைவுசெய்து வைப்பதற்காக வரும் கல்வி அமைச்சரைக் கேட்க வேண்டும்.
தமிழ் அறவாரியம், பிரதமர்துறையின் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலத் திட்ட வரைவு மற்றும் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மன்றம் ஆகியவை ஒன்றிணைந்து இந்த தமிழ்ப்பள்ளி மேலாளர்கள் வாரியம் மாநாடு 2016 ஐ ஏற்பாடு செய்துள்ளன.
இம்மாநாட்டில் பல முக்கியமான கருத்துகள் விவாதிக்கப்படவிருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமானது தமிழ்ப்பள்ளிகளுக்கு அரசாங்க நிதி ஒதுக்கீடு சம்பந்தப்பட்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் இந்நாட்டு குடிமக்கள். ஆகவே, அவர்களுக்கும் அரசமைப்புச் சட்டப்படி மற்ற பள்ளிகளுக்குச் சமமான நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதை இம்மாநாடு வலியுறுத்த வேண்டும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்ப்பள்ளிகளின் மேலாளர் வாரியக்குழு மாநாடு சிறப்புடன் வேற்றிப்பெற எனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தலைவர் மு.சீரியநாதன். இராசாக் தமிழ்ப்பள்ளி வாரியம்.
முதலில் அணைத்தது 524 தமிழ் பள்ளியிலும் ,பாலர் பள்ளி இருப்பதை
உறுதி செய்ய வேண்டும் .இடைநிலை பள்ளியில் ,தமிழ் மொழி பாடம் தினசரி பாட அட்டவனையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் அதை அமல் படுத்த வேண்டும் .
‘இந்நாட்டில் 523 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. இப்போது 524 ஆக உயர்ந்துள்ளன. அப்படி என்றால், 524 தமிழ்ப்பள்ளி வாரியங்கள் இருக்க வேண்டும். அப்படி ஏதும் இல்லை. சட்டம் என்ன ஆயிற்று? கல்வி அமைச்சர்தான் (முழு அமைச்சர்) இதற்கு பதில் கூற வேண்டும்.’
நீண்ட காலமாக தமிழர் குறட்டை விட்டுத் தூங்கி விட்டு இப்பொழுதுதான் ஏதோ அறிவு வந்தது போல் கேள்வி கேட்க ஆரம்பிக்கின்றனர். இதுவரை 420 பள்ளிகளில் மேலாளர் வாரியக் குழு அமைக்கப் பட்டுள்ளதாம். போதுமா?
“மேலும், இன்னும் 110 தமிழ்ப்பள்ளிகளில் மேலாளர்கள் வாரியங்கள் அமைக்கப்படவில்லை. ஏன் என்பதற்கான பதிலை செய்தியாளர்கள் இம்மாநாட்டை நிறைவுசெய்து வைப்பதற்காக வரும் கல்வி அமைச்சரைக் கேட்க வேண்டும்.”
150 மாணவர்களுக்கும் குறைந்த மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் 200- ம் மேல்! 5 -50 பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் வாரியம் அமைத்து என்னத்தைச் செய்யப் போகின்றீர்கள்? என்று மந்திரி கேட்டால் என்ன பண்ணுவீர்கள். ‘Arm-Chair General’ செம்பருத்தியில் அதிகமாகவே உள்ளனர்.
“தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் இந்நாட்டு குடிமக்கள். ஆகவே, அவர்களுக்கும் அரசமைப்புச் சட்டப்படி மற்ற பள்ளிகளுக்குச் சமமான நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதை இம்மாநாடு வலியுறுத்த வேண்டும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.”
பிரதமர் நஜிப் பதவிக்கு வந்த 2009-ம் ஆண்டு முதல் இன்று வரை தமிழ்ப் பள்ளிகளுக்குப் பல்வேறு வகையில் அரசாங்க மாணியமாக கொடுத்தத் தொகையை பட்டியலிட்டால் பலர் வாய் மூடிக் கொள்வார். சொன்னா கேளுங்கப்பா!. பிரதமர் நஜிப் தமிழ்ப்ப் பள்ளிகளுக்கு அள்ளிக் கொடுத்துள்ளார் மாமாவைப் போல் கிள்ளிக் கொடுக்கவில்லை.
மலேசியாவில் தமிழ் பள்ளிகள் இருக்கணும்னா …..
1. குடும்பங்களில் குழந்தைகள் பெறுக வேண்டும்…>4 kids
2. குடும்ப செலவீனங்களை கருத்தில் அதிகம் குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு மலேசியா இந்திய அரசியல் மற்றும் சமூக கட்சிகள் REWARDS போன்று சில சலுகைகள் வழங்க வேண்டும்.
3. அரசாங்க துறைகளில் இந்தியர்களை பிரதிநிதிப்பவர்கள் கண்டிப்பாக ஆறு வருடம் தமிழ் பள்ளியில் படித்தவர்களாக இருக்க வேண்டும்.
4. அரசியல் கட்சிகளில் பிரதிநிதிக்கும் அல்லது வ(லி)ழி நடத்தும் இந்தியரகள் கண்டிப்பாக ஆறு வருடம் தமிழ் பள்ளியில் படித்தவர்களாக இருக்க வேண்டும்.
5. தேர்தல் களத்தில் இந்திய வேட்ப்பாளர்கள் அவர்கள் கூட ஆறு வருடம் தமிழ் பள்ளியில் படித்தவர்களாக இருக்க வேண்டும்.
இது போன்று பல வழிகளில் தமிழ் படித்த மாணவர்களுக்கு மலேசியாவில் வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டால் ஒருவேளை தமிழ் பள்ளிகளுக்கு விடிவுகாலம் பிறக்கலாம்.
குடும்ப கட்டுப்பாடு அரசாங்கம் நம்மீது ஏற்படுத்தவில்லை. நாமே நமக்கு ஏற்படுத்திக் கொண்ட ஒரு கட்டுப்பாட்டை நாம்தான் களைய வேண்டும்.
தத்தம் சுயநலம் கருதி சமயக் கிரியைகளுக்கும் அதனைச் சார்ந்த மூட நம்பிக்கைகளுக்கும் நாம் செலவிடும் பணத்தை நம் சமூகச் சேவைக்குத் திருப்பி விட்டால் நம் மக்களில் பல இலட்சம் பேர் பயனடைவார். தமிழ் பள்ளி மாணவர்களுக்கும் இப்பயன் சென்று சேரும். தமிழருக்கு இத்தகைய சிந்தனை மாற்றம் 21-ம் நூற்றாண்டில் இன்றியமையாததாகின்றது. திருந்துமா நம்மில் இருக்கும் சில அறிவுகெட்ட ஜென்மங்கள்? சிவ சிவ.
தானைத் தலைவர் இருந்த காலத்தில் தமிழ் படித்தவர்களுக்கு ம.இ.கா. முதன்மை நிலை கொடுக்கப் பட்டது. அவர் செய்த தவறு தமிழ் படிக்காது அரசியலில் வான்குடை வழி குதித்த பழனிவேல் போன்றவரை தலைமைப் பதிவிக்கு நியமித்தது. இதன் வழி ம.இ.க.-வில் இன்று தமிழுக்காகப் போராடுவோர் குறைந்து விட்டனர் காரணம் பல தலைவர்கள், தொண்டர்களின் பிள்ளைகளும் தமிழ் பள்ளியில் படிக்கவில்லை என்பதாகும்.