என்றுமே இல்லாத அளவில் மலேசியாவின் பிரதமர் ஒருவர் சிறுபான்மையினரின் கட்சியாக இருக்கும் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சிக்கு அடிபணியும் நிலையில் உரையாற்றியிருப்பது பெருமையாக உள்ளது. மஇகா பிளவுப்பட்டுக் கிடந்தாலும் அதற்கு அங்கிகாரமும் ஆதரவும் கொடுத்து அதோடு அள்ளி கொடுக்கப்போவதாக பிரதமர் அறிவித்துள்ளது காலத்தின் கோலமாகும்.
நேற்று மஇகாவின் 70 ஆவது ஆண்டு பொதுப்பேரவையில் உரையாற்றிய பிரதமர் நஜிப் துன் இரசாக், இந்தியர்கள் ஒன்றுபட்டால் அவர்கள் தேவைகளைக் கோரலாம் என்றார். இதற்கு முன்பெல்லாம் இந்த சிறுபான்மை இனத்தின் கட்சி கோரிக்கைகளை முழங்கியே தொண்டை கட்டி கடைசியில் மவுனமாக தலையை மட்டுமே ஆட்டும் நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தது.
கோரிக்கைகள் மட்டுமா, இனி யாரும் நம்மை கிளிங் என்றும் பென்டாத்தாங் என்றும் அழைக்கக்கூடாது என்கிறார் மாண்புமிகு பிரதமர். எதற்கும் ஓர் அளவு வேண்டும் என்று எண்ணிய போது, இந்தியர்களுக்கென்று ஒரு தேசிய செயல்திட்டத்தை அடுத்த சனவரியில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
மஇகா உடைந்த நிலையில் இருந்த போதும் நஜிப் அவர்கள் இந்த அளவுக்கு இறங்கி வந்திருப்பதில் ஒரு திருட்டுச் சுகம் இருப்பதை உணர முடிகிறது.
1எம்டிபி ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள முதலாம் மலேசிய அதிகாரி என்று அமெரிக்க நீதித்துறை அது பதிவு செய்தள்ள குற்றச்சாட்டில் கூறியிருப்பது பிரதமரைத்தான் என பிரதமர்துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் டலான் உட்பட பலர் கோடிகாட்டியுள்ளனர். அதோடு 230 கோடி ரிங்கிட் பிரமரின் வங்கி கணக்கில் பதிவாகியிருந்தது ஒரு நன்கொடை என்று கூறிய பிரதமர் அதை மீண்டும் திருப்பி அனுப்பி விட்டதாக சாமளித்திருந்தார்.
இந்த 1எம்டிபி ஊழல் நாட்டின் சொத்தில் சுமார் ரிம 4,000 கோடியை விழுங்கியிருக்கும் என முன்னாள் பிரதமரும், எதிர்க்கட்சி தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த 1 எம்டிபி நிறுவனம் பிரதமர் நஜிப் அவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வருவதாகும்.
லஞ்சம் மற்றும் ஊழல் ஆகியவற்றால் நாட்டின் பொருளாதராம் தாக்கதிற்கு உள்ளான போதும், அதில் தான் சம்பந்தப்படவில்லை என நஜிப் மறுத்து வருகிறார். இவற்றுக்கிடையே அம்னோவிலிருந்து அவரை வெளியாக்கவும் பிரதமர் பதவியிலிருந்து அவரை அகற்றவும் கோரும் மக்கள் பிரகடனம் ஒன்றை முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் மாமன்னரிடம் சமர்பித்துள்ளார்.
இப்படி இக்காட்டான சூழலில் சிக்கியுள்ள நஜிப் தனது அரசியல் பலத்தை உறுதி செய்ய தீவிரமாக இறங்கியுள்ளதை அவரின் நடவடிக்கைகள் காட்டுகின்றன. பொதுத்தேர்தல் வழி தனது செல்வாக்கை நிலைநாட்டினால் மட்டுமே அவருக்கு அரசியல் சுவாசம் கிடைக்கும். அதற்காக அவர் விளையாடும் சதுரங்கத்தில் அவர் நகர்த்தும் ஒவ்வொரு காயும் முக்கியமாகும்.
இரண்டாக பிளவுபட்ட நிலையிலுள்ள மஇகாவினர், தஞ்சாவூர் பொம்மை போல் தலையாட்டினாலும் அதில் தவறில்லை. அப்பாவிகள் போல அப்படியே தலையாட்டி அதன் வழி இந்தியர்களின் நல்வாழ்வுக்காக சோரம் போவதில் அப்படி என்ன தவறு இருக்கிறது என்றும் விவாதிக்கலாம். தலைக்கு மேலே வெள்ளம், சாண் போனால் என்ன முழம் போனால் என்ன என்று கிடைக்கும் வாய்ப்புகளை மஇகா முழுமையாக பயன்படுத்தி சமூகத்தைக் காப்பாற்ற முன்வரவேண்டும் என்றும் விவாதிக்கலாம்.
அந்தத் திருட்டுச் சுகம்தான் அம்னோவின் சுவாசமே என்பதை அனைத்து தேசிய முன்னணி கட்சிகளும் உணரும். இதில் மஇகா மட்டும் விதிவிலக்காக இருப்பது ஊழலுக்கு அவமானமாகும். அரசியல் என்பது சாக்கடைதானே, சுத்தமாகும்வரை நீச்சல் அடியுங்கள்!
“இப்படி இக்காட்டான சூழலில் சிக்கியுள்ள நஜிப் தனது அரசியல் பலத்தை உறுதி செய்ய தீவிரமாக இறங்கியுள்ளதை அவரின் நடவடிக்கைகள் காட்டுகின்றன.”
ஆபத்தில் உதவாத நண்பன் இருந்தால் என்ன இறந்தால் என்ன? ம.இ.க. எதிர்வரும் பொதுத் தேர்தலில் இந்தியர்களின் வாக்கில் 75% தே.மு. பெற்றுத் தந்தால் நம்பிக்கை நாயகன் என்றென்றும் இந்தியர்களுக்கு நம்பிக்கை நாயகனாகவே திகழ்வார்.
“அந்த திருட்டுச் சுகம்தான் அம்னோவின் சுவாசமே என்பதை அனைத்து தேசிய முன்னணி கட்சிகளும் உணரும். இதில் மஇகா மட்டும் விதிவிலக்காக இருப்பது ஊழலுக்கு அவமானமாகும். அரசியல் என்பது சாக்கடைதானே.”
சாக்கடையாக இருந்தால் என்ன பேக்கடையாக இருந்தால் என்ன? மலத்தில் போட்ட பணம் நாறுமா என்ன?
அப்படி நாம் சாக்கடையில் விழக்கூடாது என்றால் சாக்கடையில் விழுந்தோரிடம் உதவி நாடாமல் வாழ பழகிக் கொள்ள வேண்டும். முடியுமா இளம்பிள்ளை வாதம் பிடித்த இந்திய இனத்தால்?
நம்பிக்கை நாயகனின் பேச்சை இன்னும் நம்பலாம் ஆனால் நட்டாற்றில் தான். மேலும் என்ன கூற முடியும்? 59 ஆண்டுகளில் நமக்கு என்ன உரிமை இருக்கிறது? ஓரங்கட்டப்பட்ட சமூகம்.- இதுதான் மிஞ்சியது.
எப்படியும் மக்களுக்கு பணத்தை அல்லி இரட்சி வெல்ல நினைப்பான்.
எல்லாம் மக்கள் கையில் உள்ளது
வணக்கம் ,திரு கா.ஆறுமுகம் அவர்களே ,அரசியல் விமரிசனம் என்பது பொதுவாகவும் பொதுநலனாகவும்,சமுதாயம் நலன் கருதி எழுதப்பட வேண்டும் ,ஆளும்கட்சிக்கு இருக்கும் பலவீனங்களையும் ,அதில் இருக்கும் இந்திய பிரதிநிதி மா இ கா வை குறைகாண்பதில் குற்றமேதும் காண நான் விரும்பவில்லை ,எனது கேள்விக்கு தாங்கள் கண்டிப்பாக நிதானமாக பதில் அளிக்க வேண்டும் .மா இ காவை கை விடுவோம் ,வெறுப்போம் ,இது உங்கள் பிரச்சாரங்கள் ஒன்று ,சரி மா இ காவுக்கு மாற்று எது ? எதிர்க்கட்சியா? மத்திய அரசாங்கமும் மா இ காவும் இந்திய மக்களை பூசி மொழுகுகிறார்கள் என்றால் ,எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வாழும் இந்திய மக்களுக்கு எதிர்க்கட்சிகள் செய்த சாதனைகள் என்ன ,அவற்றை உடனடியாக பட்டியலிட்டு எனக்கு விளக்கி கூறுங்கள் நான் மிகவும் ஆவலாகா இருக்கிறேன் உங்களின் பதிலுக்கு , எனக்காக இல்லை இந்திய மக்களுக்காக கேட்கிறேன் ,மா இ காவுக்கு மாற்று எது எதிர்க்கட்சியா ? உங்கள் கட்டுரைகள் எதிர்கட்சிக்கு சாதகமாகவே இருக்கிறது என்றால் நீங்கள் எதிர்கட்சிக்கு ஆதரவாளனாக இருப்பதால் மட்டுமே ,எதிர்க்கட்சியில் இருக்கும் பலவீனத்தையும் தைரியமாக சுட்டிகாட்டுங்கள் ,எதிர்க்கட்சி முதல்வர்கள் அரசியல் சண்டையிடுவதிலே நேரத்தை செலவழிக்கிறார்கள் அவர்களுக்கு மக்களின் மீது என்ன கவலை இருக்குமோ என்ற அச்சம்தான் மத்தியில் ஆளும் கட்சிக்கு அடுத்த தேர்தலில் மிக பெரிய வெற்றியை தேடி தர போகிறது என்பதை உங்காலால் மறுக்க முடியுமா ? மாற்றம் வேண்டும் என்று இருந்த மக்களின் மனதில் எதிர்க்கட்சிகள் மீது இருந்த நம்பிக்கை ,தர்பொழுது ஆளும்கட்சியின் மீது திரும்பி இருக்கிறது என்பதை ஒருகருத்து கணிப்பை நடத்திவிட்டு உங்கள் கட்டுரையில் மா இ காவுக்கு மாற்று எது என்பதையும் ,மத்தியில் எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்திரிகளை பிரதிநிதிக்க போகும் கட்சி எது என்பதை சொல்லுங்கள் .சீனர்களுக்கு டி ஏ பி ,மலாய்காரர்களுக்கு சொல்லலேவே வேண்டாம் ,தமிழனின் பிரதிநிதி எது ? சும்மா எதிர்கட்சிக்கு ஆதரவாளன் என்பதால் அதுவும் சிலாங்கூர் மநலத்தில் வசிக்கும் நீங்கள் அதும் டத்தறான் மெண்டாரி ரெஸ்டாரன் சுபைடாவில் காலையில் தேனீர் அருந்தும் திரு கா ஆறுமுகம் அவர்களே ,வாருங்கள் டேசா மென்டாரி பக்கம் வந்து உங்களுடைய கருத்து கணிப்பை நடத்துங்கள் ,மா இ காவா எதிர்க்கட்சியா என்றால் ….சிலாங்கூர் மாநில இந்திய மக்களின் வாழ்வாதாரம் சிரியாய் சிரிப்பதை பார்ப்பீர்கள் .தீபாவளிக்கு ஐந்து கிலோ அரிசியோடு வரும் எதிர்க்கட்சிகள் அடுத்த தீபாவளிக்கு எட்டிப்பார்க்கும் கதைகளும் உங்கள் காதில் விழும் ,அதை வாங்குவதற்கு கை ஏந்தும் இந்திய குடும்பம் இன்னும் வரிசையில் நின்று கொண்டுதான் இருக்கிறது .நன்றி .அரசியல் என்பது சாக்கடைதான் அங்கு மா இ கா இருந்தால் என்ன எதிர்க்கட்சி இருந்தால் என்ன எல்லாம் பதவி மோகமும் சுயநலமும் என்பதை புரிந்து கொள்பர்கள் புரிந்து கொள்வார்கள் நீங்களும்தான் .
இந்திய சமுதாயத்திலிருந்து ஒரு குரல் ,ஐயா ஆறுமுகம் எழுதிய கட்டுரைக்கு ஏக வசனம் பாடியுள்ளார். திரு ஆறுமுகம் பாகாதான் என்றால் அந்த ஒரு குரல் BN ம இ கா போல உணர்கிறேன். நான் ம இ காவில் 25 ஆண்டுகள் பிறகு 10 ஆண்டுகள் அரசியல் ஓய்வு இப்போது 10 ஆண்டுகள் PKR இல் உள்ளேன். இது அரசியல் விமர்சனம் அல்ல. அரசியல் பேசினால் நாம் யார் என்ற தெளிவு வேண்டும். இரண்டு ம இ காவில் இந்த ஒரு குரல் எந்த பக்கம் என்றும் சொல்லணும் அப்போதுதான் விளக்கமா கேள்வி கேற்க முடியும். ஏன் நண்பன் ஏவுகணை BN னையும் ம இ காவையும் காய்ச்சி கஞ்சாக்குகிறது எழுதுவதுதானே?
பெருமைக்கல்ல அல்லது அதி திருப்திக்கும் அல்ல கேட்டதற்கு …..சிலாங்கூர் மாநிலம் தண்ணீர் தருது ..செத்தா 2000 தருது 1000 உயர்கல்வி நிதி தருது. மருத்துவ செலவுகள் உண்டு ….BN அல்லது ம இ கா தர வில்லை என்று சொல்ல வில்லை யாருக்கு தருகிறது என்று கணக்கு கேட்டு சொல்லுங்கள். மக்கள் சம்பாதித்து கொடுத்த ம இ காவின் AIMS பல்கலைகழகம் எவ்ளோ கொடுத்தது சொல்லுங்கள் யாரு அனுபவிக்கிறா சொல்லுங்கள்? மைக்கா வித்தாச்சு,,,, வித்த விலைக்கும் கொடுத்த விலைக்கும் இடைப்பட்ட காசு யாரு அடிச்சா ? மக்கள் சொத்தான மைக்காவின் OUA வித்தது 240 மில்லியன். மைக்கா பங்குகள் 100 மில்லியன் 30 வருசத்துக்கு பின் கிடைத்த பங்குகள் 80 மில்லியன் …எல்லாம் யாரு அடிச்சது.
இங்கே நாம் அரசை கேற்க வில்லை அரசியல் நடத்திய ம் இ கா மைக்கா, எய்ம்ஸ் இன்னும் பல கோபராசிகளை கேற்கிறோம்.மிச்சங்களை பிச்சி போடுவது அதற்கு திடீர் வேந்தர்கள் வேதாந்த அறிவிப்புகள் இந்த சமுதாய சொத்து மதிப்பில் பீப் பீப் பூ பூ விற்க வறுமையின் தூக்கு கயிறுதான் இந்த சமுதாயத்தின் மிச்சம் என்பதை ஏன் உங்கள் கட்டுரை உணரவில்லை ?
ம இ கா மாநாட்டில் பொருளாதா ரீதியில் பிரதமர் எதை சொன்னாரோ தெரியவில்லை ! இன்னும் ஏமாற்றம்தான் என்ற சாட்டை கயிறை சுழற்றி உள்ளார் ..கொடுத்த காசை செலவு செய்ய பெரிய நிபுணத்துவர்கள் வேண்டாம் … கொடுத்த காச கீஸ் அடிக்காம இருந்தால் இந்த சமுதாயம் உருப்படும் ..அந்த நல்ல விவேக தலைவனை பிரதமர் தேடுகிறார். எங்கள் பாகாத்தானிலும் அப்படி ஒரு இக்கால அரசியல் தமிழ் / இந்தியன் தலைவனும் இல்லை.அதிலும் இதிலும் அரசியல் பொருளாதாரத்தில் அடிவாங்கும் உலக மகா ஏமாளிகள் சமூகம் குறிப்பா மலேசிய தமிழர் சமூகம், நன்றி. வரிகள் விமர்சனத்துக்கு மன்னிக்கவும்,
ஐயா , பிரதமர் கூறியது ம இக மாநாட்டில் .இதை அவர் அம்னோ மாநாட்டில் கூறியிருக்கவேண்டும். இங்கு ம இக மாநாட்டில் கூறுவது
எதோ நாமே நம்மை கெலிங் என்று கூறிக்கொள்வது போல் இருக்கிறது.. எல்லாம் வரவிருக்கும் தேர்தலுக்காக..
பொன் ரங்கன் ,25 வருடங்கள் மா இ காவில் இருந்து கொண்டு ,இந்திய மக்களின் காதுகளில் பூ சத்திய நபர்களில் நீங்களும் ஒருவர் என்பதை ஒத்துகொள்ளவா போகிறீர்கள் ,25 ஆண்டுகால உங்களுக்கு தேவை பட்டது உங்களுக்கு மா இ காவல் இந்திய சமூகத்துக்கு ஆப்பு என்று ,பி கே ஆர் தண்ணி கொடுத்தது ,அருசி கொடுத்தது ,தீபாவளிக்கு 100 வெள்ளி பற்று சீட்டு கொடுத்தது ,எல்லாம் அல்வா கதை எல்லாம் இங்க உடாதீங்க .முன்பு உள்ள ஆட்சியை விட படும் மோசமான சிலாங்கூர் மாநில ஆட்சி இருக்கிறது என்பதை ஒற்று கொள்ள திறன் இருக்கிறதா உங்களுக்கு ? இல்லை மா இ கா என்பது அரசியல் கட்சி உங்கள் அன்பு கட்டுரையாளர் ம இ கா என்று ஆரம்பிக்கும் போதே அங்கு அரசியல் வெளிப்பட்டு இது அரசியல் விமரிசனம் என்பது உறுதியாகிறது ,கூஜா தூக்குகிறோம் என்று உண்மைக்கு புறம்பாக கருத்து எழுதாதீர்கள் ,சிலாங்கூர் மாநில புதிய மந்திரி பெசார் பதவி ஏற்ற ஒரே வருடத்தில் ,எத்தனை ஆலயங்கள் தரைமட்டமாகியது, இதைத்தான் முன்பு பாரிசான் ஆட்சியும் செய்தது ,ஜாலான் பிஜேஸ் 5 பக்கம் தேசா ரியா போகும் சாலைக்கு வாங்க பொன் ரங்கன் ,மலாய்காரன் சாலை ஓரம் உள்ள கால்வாயை மூடி அதன் மேலே தோம் ஆயாம் கடை நடுத்துறான் ,ஆனால் அதை உங்கள் பி கே ஆர் அரசாங்கம் கண்டு கொள்ள வில்லை ,அதே வரிசையில் பல ஆண்டுகள் இந்தியர்கள் வைத்திருந்த அணைத்து கடைகளும் தரைமட்டமாக்கி விட்டு ,அந்த மலாய்க்காரன் கடை மட்டும் விடுபட்டது உங்கள் பி கே ஆர் அரசாங்கத்தின் லட்சணம் சிரிக்க வில்லையா ? உங்கள் கட்டுரையாளர் கா .ஆறுமுகத்தை இந்த அவலத்தையும் எழுத சொல்லுங்கள் ,தேசா மென்டாரி சுற்றி எத்தனை பாள்ளிவாசல்கள் இருக்கிறது என்பதை எழுத சொல்லுங்கள் ,ஆனால் அங்கு இருக்கும் ஒரே ஆலயமான ஆலயம் இருக்கும் இடத்தை போய் பார்க்க சொல்லுங்கள் ,பல ஆயிரம் இந்தியர்கள் வாழும் தேச மென்டாரி ஆலயம் ,இன்னும் அதன் பழைய தோற்றத்தில் இருந்து பொலிவு பெறவில்லை ,அதை ஆராய்வதற்கு உங்கள் பி கே ஆர் கட்சியின் இந்திய தலைவர்களும் நேரமும் அக்கறையும் இல்லை ,இதையும் எழுத சொல்லுங்கள் உங்கள் கட்டுரையாளரை பாராட்டுவேன் நிச்சியமாக ,இது சிலாங்கூர் மாநிலத்தில் ஒரு இடத்தில நடக்கும் பிரச்சனைதான் ,வர சொல்லுங்குள் உங்கள் பி கே ஆர் தலைவர்களை ஒவ்வொரு மலிவு விலை அடுக்குமாடிகளுக்கும் ,மின்தூக்கி பிரச்னை தலைவிரித்தாடுகிறது ,இருக்கும் 2 மின்தூக்கிகளில் ஒன்றை நிரந்தரமாக அடைத்துவைத்து உள்ளனர் ,இருக்கும் ஒன்றும் வாரத்துக்கு 3 மூன்றுமுறை பழுதாகிவிடுகிறது ,இங்கு இருக்கும் நோயாளிகளின் நிலைமையும் ,முதியவர்களின் நிலைமையும் என்ன என்பதை உங்கள் பி கே ஆர் தலைவர்களை ஆராய சொல்லுங்கள் ,அல்லது உங்கள் கட்டுரையாளரை வந்து ஆராய சொல்லுங்கள் ,மா இ கா செய்ய வில்லை ஆமாம் செய்ய வில்லை ஆட்சியை உங்கள் கையில் கொடுத்தோம் நீங்கள் என்ன கிழித்தீர்கள் என்பதையும் ஆராயுவோம் ,பொன் ரங்கன் நீங்கள் 25 ஆண்டுகள் எந்த கட்சியில் இருந்தது இப்பொழுது எந்த கட்சியில் இருப்பது எனபது எங்களுக்கு தேவை இல்லை ,நாங்கள் பாமர மக்கள் ,விழித்து கொண்டோம் சுயமாக எடைபோட புரிந்து கொண்டோம் ,எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி ஆளும்கட்சியாக இருந்தாலும் இனியும் மொட்டை அடிக்க முடியாது ……….அம்புறோம் அந்த தோம் ஆயாம் கடை மறந்து விடாதீர்கள் ஓடுங்கள் ஓடுங்கள் உங்கள் கட்டுரையாளர் புகைபடம் கருவியோடு ,படம் பிடித்து உங்கள் பி கே ஆர் ஆட்சியின் லட்சணத்தையும் . நன்றி பொன் ரங்கன் …
மலேசிய தமிழன் ஏமாந்தத்திற்கு ம இ கா வும் , அதை வழி நடத்திய சாமி வேலுவும் தான் காரணம் என்று பல உண்மைகளை யாம் பல காலமாக இங்கே முன் வைத்துள்ளோம். இதுதான் உண்மையிலும் உண்மை. இருந்தாலும் சமீபத்தில் SEDIC மூலமாக 379 இந்திய NGO க்கள் பணம் வாங்கி உள்ளது. இவர்கள் வரும்காலங்களில் யாருக்கு ஒட்டு அளிப்பார்கள் ? பணம் தந்த முதலாளிக்கு ? அல்லது தமிழ் குளம் வாழ வேண்டும் என்று பாடு படும் ஜனநாயக மறுமலர்ச்சிகளுக்கா? தமிழர்களின் பொறாமையே அவர்கள் இன்று இருக்கும் நிலைக்கு ஒரு முக்கிய காரணம் ….எனவே பொன் ரங்கன் போன்றவர்கள் மட்ட்ற இந்திய பிரிவுகளின் மீது தமிழர்கள் வாழாதத்திற்கு இவர்கள் தான் முக்கிய காரணம் என்று பழிசுமத்துவது நல்லதல்ல … காரணம் அதையே தான் மா இ கா வும் தலைகீழாக செய்கிறது …. சுருக்கமாக சொன்னால் “திருட்டுச் சுகத்தில் மஇகா பயனடையும்! “
இந்தியன் குரல் சார்.!!!! ம இ காவில் ஒரு பிச்சைக்காசுக்கூட எடுக்கவில்லை.நான்தான் செலவு செய்தேன். அதன் அன்றைய தலைவர் என் கலை நிகழ்ச்சிக்கு 5,ஆயிரம் தருவதாக சொல்லி கடன்காரனானார். PKR ஆரிலும் பதவிக்கு விலைபோகவில்லை. இதுவும் விமோசனத்துக்கு அல்ல பகிர்வுக்கு மட்டும்.
அம்பாங் PKR தொகுதிக்கு தமிழனுக்கு அரசியல் விழிப்பு வேண்டு என்று போட்டியிட்டேன். இதையேத்தான் த ம துரை இறப்புக்கு பின் 1994 ம் இ கா வேட்ப்பாளரை எதிர்த்து சிலங்கோர் ஷா பண்டாரயா இடைத்தேர்தலில் போட்டியிட்டேன். அரசியல் பதவிக்கல்ல அரசியல் தமிழன் இன உரிமைக்கு. PRU 14 வில் தனியா போட்டி இடுவேன்.
அரசியல் ஏமாளிகள் என்று மூலையில் புலப்பும் பூனையல்ல.
அந்த புலி இனததமிழனை காணோம் என்ற ஏக்கம்தான். திரு ஆறுமுகம் ஒரு தெளிவான அரசியல் சிந்தனையாளர். அவர் பக்காத்தானை தூக்கி பேசவில்லை. ம இ காவின் பலவீனத்தை உருட்டினார் நீங்கள் நிமிர்த்த பார்க்கணும். விடைகாணும் தேடலில் சூடுகள் விழுவது சமூகம் சுகம் பெறவேண்டும் என்ற வேட்கைதான். அரசியல் அரசு இது இரண்டும் நமது உரிமை. இங்கே தனிமனித ஆர்ப்பரிப்பு வழிதான் உடையும். அரசியல் இயக்கத் தலைவர்கள் எல்லாம் தெரிந்த புத்திசாலிகளும் அல்ல ஒன்றுமறியா மட்டைகளுமல்ல ! பிரச்சனையை அரசியல் நகரீகத்துடன் விலாசலாம் என்று ஆசைப்படுகிறேன்.
சமூகம், பொருளாதாரம், கல்வி குறிப்பா தமிழ்க்கல்வி வளப்பம் நமக்கு சமசீராக கிடைக்கவில்லை. இது இதரவனின் திட்டமிட்ட நாடகம். இதை தலைவர்கள் நடிகர்களாக நம்மை அடிமைப்படுத்திய கேவலம் உண்டு. பக்காத்தான் BN இரண்டுமே கிழித்து விட்ட்து என்று நாங்கள் சொல்லவில்லை, விரக்தியில் உச்சத்தில்தான் உள்ளோம். அறிவுப்பூர்வ காலத்தில் கூட நமது வேட்ப்பாளர்கள் சதி நம்மை தேற்கடித்து உள்ளது. நமமில் இனத்துக்கு போராட இதுவரை எந்த தலைவனும் இல்லை. அடகுவைத்த அரசியல் அசிங்கவாதிகள்தான் நமக்குக்கிடைத்த பூஜியங்கள். நாம் எழுதுவதை கூட படிக்காத மாண்புமிகுகளால் எண்ணங்கள் தூசி படிந்து குப்பைகளாக நாம் மட்டும் மெச்சிக்க சண்டைபோடுகிறோம்.
அரசியல் வாதிகளின் போலிக்கொள்கைகள் ஆதாரபூர்வமற்றது என்று நிரூபிக்க பாமர மக்களுக்கு தகுதி இல்லை என்பது அமைச்சரர்முதல் மாநில சட்டமாண்புகள் வரை தெரிந்து வைத்து இருக்கிறார்கள். மக்கள் தேர்வு செய்த்தவர்கள் அரசுக்கு நேர்மையாக நடப்பேன் என்ற சத்திய பிரகடம் யாரை ஏமாற்றும் காமடி என்று யோசியுங்கள். இதனால் அடிபடுவது ஒட்டு போட்ட பாமர பிரஜைகள். நீங்களும் நானும் ஒட்டு போட்ட வேட்ப்பாளர் சொக்கனுக்கு வச்சா சுந்தரி போல வாயடைத்து வாழ்ந்தால் என்ன செய்வது.
அரசியல் ஏற்படுத்திய வரலாற்று தில்லு முல்லுகளை ஆராய ஆசாமிகள் இல்லை. நம்மை பற்றி படிக்காத இந்திய தமிழன் நாடாளுமன்ற சட்டமன்ற பிரதி நிதிகள் எல்லாம் உள்ளே உள்ளார்கள் நம்மை நன்கு படிக்கத் தெரிந்த தலைவர்கள் எல்லாம் வெளியே உள்ளார்கள்.
நாம் கத்துவதும் குரைப்பதும் எவர் காதிலும் விழப் போவதில்லை ! என்ன செய்யலாம் யோசிங்கள், உங்களிடம் நல்லத் தமிழ் எழுத்து நடை உள்ளது. இந்தியன் சமுதாயத்து ஒரு குரலிலிருந்து வெளியாகி நல்லத்தமிழனாக மிளிரவும்.நன்றி வணக்கம் . அவசர
வெடிதான் பிழைகள் தவிர்க்கவும். வாழ்க தமிழா !
எதிர் கட்சியோ அல்லது ஆளும் கட்சியோ, யாரும் தமிழ் ஏழை மக்களுக்கு உதவி செய்வதில் முழு மூச்சாக செயல் பட வில்லை என்பதுதான் உண்மை. இவர்களுக்காக தான் HINDRAF மக்கள் சக்தி 2008 ஒரு பெரிய யோகமே ( HINDRAF DEMO ) செய்தது. அதில் இருந்து எதிர்க்கட்சி பலமாக ஆகி, இந்தியர்களுக்கு அவ்வப்போது சில மண்டோர்களால் எலும்பு துண்டை வீசி சரி கட்டி விடுகிறது. ஆளும் கட்சியோ அரசாங்கத்தில் ஒட்டி கொண்டிருக்கும் மா இ கா வை நம்பாமல் தானாகவே SEDIC மூலம் குட்டி அரசியல் தலைவர்களை சரி கட்டி கொண்டிருக்கிறது ….. இதில் எப்படி HINDRAF முன் மொழிந்த இந்தியர்களின் உரு மாற்று திட்டம் அமலுக்கு வரும் ? கோயில்களை பாதுகாக்க ஒரு சட்ட வரைவு, தமிழ் பள்ளிகளுக்கு முழு உதவி, ஏழை இந்தியர்களின் ஏழ்மை சலுகைகள், பிறப்பு பத்திர உரிமைகள், தொழில் செய்ய மூலதனம் … இப்படி பல …… இதில் ஏதாவது ஒன்று கிடைத்ததா ? இல்லை! ஏன் என்றால் நாம் தான் ஏறி வந்த ஏணியை மதிப்பதில்லையே …. நானு என் குடும்பமும் பிழைத்தால் போதும் என்னும் இந்தியர்களின் வெறி ….இன்னும் படு மோசத்திற்கு கொண்டு செல்லும். அதற்கு மா இ கா வெக்க படாமல் உதவி செய்யும் ……
கடந்த 13 பொது தேர்தல்களில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் ஆதரவு தந்துவிட்டோம் ஆனால் நமது சமுதாயத்துக்கு நாம் எதிர்பார்ப்பது எட்டா கனியாகத்தான் இருக்கிறது. ஆகையால் எதிர்வரும் 14-வது பொது தேர்தலை புறக்கணிக்கலாம்.
எதிர்வரும் தேர்தலில் எதை வைத்து போட்டி போட போகிறீர்கள் பொன் ரங்கன் ,உங்கள் கட்சியை சார்ந்தா அல்லது அல்லது தனித்து நின்றா ? உங்கள் கட்சியை சார்ந்து என்றால் உங்கள் கட்சியின் சாதனைகளை நீங்கள் விளக்க வேண்டும் ,கடந்த தேர்தலின் வாக்குறுதிகள் காற்றில் பறந்து விட்டது , தனித்து போட்டி இடுகிறீர்கள் என்று வைத்து கொள்வோம் ,வென்று வீட்டிர்கள் என்று வைத்து கொள்வோம் ,தனியாக சட்டமன்றத்தில் தனித்து விடப்பட்டிருப்பீர்கள் ,என்னதான் காட்டு கூச்சல் போட்டாலும் செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் உங்கள் ஓசை இருக்கும் ,மத்தியிலும் ,மாநிலத்திலும் உங்கள் தொகுதிக்கு வர வேண்டியது ,வரும் ஆனால் வராது ,தேர்தலில் நிச்சயம் அருள் வாக்குகள் கொடுப்பதுபோல் வாக்குறுதி என்பது இருக்கும் ,அதை நிறைவேற்ற தவறினால் அரசியல் வாதிகள் எல்லாரும் வாக்கு வாங்கும் வரைதான் வாக்குறுதி என்ற பழி சொல்லுக்கும் ஏளனத்துக்கும் தள்ளப்படுவீர்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டோ ?பொன் ரங்கன் தேர்தல் நெருங்கும் நேரம் இது ,பாமர மக்களை எப்படி எல்லாம் வாக்குக்காக மூளை சலவை செய்ய முடியுமோ அந்த அளவுக்கு ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் வேலை செய்யவார்கள் நிச்சயம் இதில் இளிச்சவாயன் இந்தியர்கள் மட்டுமே ? பொன் ரங்கன் பொங்கல் தோட்டத்திற்கு ,தேடி செல்லுங்கள் எங்கேயெல்லாம் இந்தியர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் போய் சொல்லுங்கள் ,விளக்கம் கொடுங்கள் அடுத்த தேர்தலில் இந்திய சமூகம் எப்படி எச்சிரிக்கையாக வாக்களிக்க வேண்டும் ,இனி எந்த அரசியல் வாதியும் இந்திய மக்களை வாக்கு வங்கியாக மட்டும் உபயோக படுத்தாமல் இருக்க விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்குங்கள் ,நான் பி கே ஆர் ,மா இ கா என்றெல்லாம் சிந்தனையில் வைக்காமல் ,நான் இந்தியன் ,இந்திய மக்களின் பிரச்சனையை நன்கு அறிந்தவன் என்ற சிந்தனையில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்குங்கள் ,இன்னும் எவன் தேர்தலுக்கு அரிசியும் முப்பது வெள்ளி காசும் கொடுத்தால் ,எதுவும் அறியாத பாமர மக்கள் இந்திய சமூகத்தில் இன்னும் இருக்கிறார்கள் ,பாவம் என்ன செய்வது ,ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் அவர்களை இன்னும் கையேந்தும் நிலையில்தான் வைத்து இருக்கின்றனர் .இதை மாற்றுவதற்கு ஒரு இயக்கம் வேண்டும் . புதன் கிழமை எங்கள் மலிவு விலை அடுக்கத்தின் கீழ் ஒரு தன்னார்வ இயக்கம் இலவச உணவு வழங்குகிறது ,போய் பாருங்கள் எத்தனை வரிய குடும்பங்கள் அந்த உணவை பெறுவதற்கு இன்னும் கை ஏந்தி நிற்கிறது என்று ….
நாட்டை ஆளும் கட்சிக்கும் . மாநிலத்தை ஆளும் கட்சிக்கும் உள்ள வேற்றுமையை .முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும் . 100.% சதவிகிதம் உரிமைகள் .,அதிகாரங்கள் ,அத்துமீறல்கள் , பொருளாதாரங்கள் கொண்ட கட்சிக்கும் , 10% சதவிகிதம் உரிமைகள் கொண்ட எதிர்கட்சியையும் முடிச்சி போடுவது முட்டாள் தனமில்லையா? எதிர்கட்சிக்கு முதலில் முழு அதிகாரத்தை கொடுங்கள் . ஐந்து வருடத்தில் என்ன மாற்றங்கள் நிகழும் என்று பார்ப்போம்.
ஏற்கனவே இந்தியர்களின் ஓட்டு செல்லா ஓட்டு … எப்படி என்றால் இருக்கின்ற 30 லட்சம் இந்திய மக்களில், 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை ஓட்டு போடா செல்வதில்லை. மா இ கா 6 லட்சம் உறுப்பினர்களை கொண்ட கட்சி. அதில் 3 லட்சம் பேர் வாக்காளர்களாகவே பதிய வில்லை என்று பிரதமர் துறை சாடுகிறது ….. இப்படி இருக்கும் பட்சத்தில் 45 லட்சம் அந்நிய தொழிலாளர்களில் 50 விழுக்காடு ஓட்டுரிமை குடுத்தாலும், இந்தியர்களின் ஓட்டு செல்லா ஓட்டு ஆக்கிவிடலாம். 15 பொது தேர்தலில் இந்தியர்கள் எதனையும் இந்த மலேசிய திருநாட்டில் அரசியல் ரீதியாக ஆளுமை செய்ய இயலாது. சீனர்களுக்கும் மலாய்காரரர்களுக்குமே நேரடியாக போட்டி நடக்கும். மெட்ரோபொலிட்டன் தொகுதிகளில் மட்டுமே இந்தியர்களின் ஓட்டு ஆளுமையை செய்யலாம், இருப்பினும் பெரிய மாற்றத்தை கொண்டு வரமுடியாது …. ஆகையால் தேர்தலை புறக்கணிப்பது தற்கொலைக்கு சமம்.
ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் ஆதரவு தந்து பார்த்துட்டோம். தேர்தலை புறக்கணிக்கலாம் என்றால் அது தற்கொலைக்கு சமம். அப்படியானால் இதற்கு முடிவுதான் என்ன ?
(ஒட்டு மொத்த மலேசிய) இந்திய சமுதாயத்தில் இருந்து ஒரு குரல் நாயகரே..
வணக்கம்.
1. இத்தனை ஆண்டுகால ம.இ.கா வராற்றில் கிளிங்’ என்ற சொல்லை உங்களால் (அதாவது உங்க கட்சியால்) அகற்ற முடிந்ததா? அல்லது அப்படி கூறுவோருக்கு தண்டனைதான் தர முடிந்ததா?
2. இந்துக் கோவில்களை உடைப்பவனுக்கு எதிராகவும், இந்து மதத்ததயும் கடவுள்களையும் இழிவு படுத்தியோருக்குத் தான் என்ன தண்டனை வாங்கித் தந்தீர்கள்? (ஆ ஆ…அதெப்படி வாங்கித் தருவோம் ஓங்கி அறை விட்டவனின் கையைப் பிடித்து முத்தம் கொடுத்த வீர வம்சம் ஆச்சே?
3. இதெல்லாம் போகட்டும்..கடந்த 5 ஆண்டுகளாக அல்லது 10 ஆண்டுகளாக ம.இ.கா இந்தியர்களுக்கு செய்த சாதனை என்ன? எத்தனை பேருக்கு பல்கலைக்கழக இடம் வாங்கிக் கொடுத்தீர்கள்?
எத்தனை மருத்துவ படிப்புக்கு இடம் வாங்கித் தந்தீர்கள்? 4. ம.இ.கா வில் இளஞர் அணி என்றும் மகளிர் அணி என்றும் சொல்லிக் கொள்பவர்களின் கடந்த 5 ஆண்டு நடவடிக்கைகள் என்ன? (சாதனை என்ன என்று கேட்கவில்லை காரணம் உங்க சாதனை என்ன என்று எமக்குத் தெரியும்) எனவே நடவடிக்கைகளை மட்டும் சொல்லுங்கள் போதும்.
6. நீங்கள் அடுக்கிய பிறகு கொஞ்சம் இடம் இருக்குமே அதில் எதிர்க்கட்சியினரின் 5 ஆண்டுகால 10 ஆண்டுகால சதனைகளை நாமும் அடுக்குவோம். சவாலை சமாளிக்க நீங்க தயார? நான் ரெடி நீங்க ரெடியா?
இந்திய சமுதாயத்தில் இருந்து ஒரு குரல் . wrote on 18 October, 2016, 15:00 – கருத்தில் முக்கியமானது :
“சிலாங்கூர் மாநில புதிய மந்திரி பெசார் பதவி ஏற்ற ஒரே வருடத்தில் ,எத்தனை ஆலயங்கள் தரைமட்டமாகியது, இதைத்தான் முன்பு பாரிசான் ஆட்சியும் செய்தது”
vin???vin???, சிலாங்கூர் மாநிலத்தில் இந்தியர்களின் ஆதரவு எதிர்கட்சிக்கு சென்றதிற்கு அன்று ஆலயங்கள் தரைமட்டமாக்கிய விவகாரமும் ஒன்று என்பதை மறுக்க முடியாது. ஆலயங்கள் விவகாரத்தில் தற்போது சிலாங்கூர் மாநிலத்தை ஆளும் எதிர்க்கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதைத்தான் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.
எல்லாவற்றையம் இழந்து விட்டு, இப்பொழுது மா இ கா வை பார்த்து: ‘நீங்கள் நல்லவர்களா அல்லது கெட்டவர்களா ?’ என்று கேட்க்கிறோமே, இதுவென்ன நாயகன் பார்ட் 2 வ ? 3 கோடி மக்கள் இருக்கும் ஒரு நாட்டில், 30 லட்சம் கூட இல்லாத ஒரு மனித இனம் (இந்தியர்கள்). மாஇக்கா துரோகத்தால் மற்றும் தனி மனித பொறாமையால் நிலை குலைந்து பொய் கிடக்கிறோம் நாம். சொத்து விழுக்காடு 0.01% குறைவாக உள்ளது இந்தியர்களிடம்; 10 பணக்காரர்களை வெளியில் எடுத்தால் (ஆனந்த கிருஷ்ணன், டோனி பெர்னான்டெர்ஸ், AK குமார், கனாலிங்கம், இன்னும் சிலர் ). ஆனால் மா இ கா வின் சொத்து 2,200 மில்லியன் வெள்ளி. உலக பணக்காரர்கள் வரிசையில் 200 குள்ளே அடக்கி விடலாம் மா இ காவை. சாமீ வேலுவும் அவர் தம் ஜாலராக்களும் மட்டுமே 70-80 % ம இ கா ஷேர் வைத்துள்ளனர். ஏழை மக்களிடம் இருக்கும் சொத்து 100 வருடத்திற்கு மட்டுமே பயன் படும் வீடுகல் , 25 வருடத்திற்கு பயன் படும் வாகனங்கள். பிறகு வீடும் நிலமும் மன்னருக்கு சொந்தமாகும். இதுவும் ஒரு சிலரிடமே. இன்னமும் பத்தே வருடங்களில், இந்தியர்களின் ஒட்டு, செல்லா ஓட்டாகும்; காரணம் அந்நிய தொழிலாளர்கள் நம்மை மிஞ்சுவர். போதாதிற்க்கு, புத்ரா ஜெயா வின் கடன்கள், ஒவ்வொரு குடிமகன்கள் தலையிலும் வந்து விடியும். தட் போதுள்ள நிலவரப்படி, ஒவ்வொரு குடிமகனின் தலையிலும் 25,000 வெள்ளி கடன் எழுத படவேண்டும். ஒரு கால் நாடு திவால் ஆகும் தருணத்தில், பணம் இல்லாத ஏழைகள், அடிமைகள் ஆக்க படுவர். படித்தவர்கள், நாட்டிடை விட்டு வெளியேறினால், அகதிகள் ஆக்க படுவீர்கள் … இதுவரை சுமார் 20 மேற்பட்ட நாடுகள் இந்த நிலை அனுபவித்து உள்ளன, 50 லட்சம் அகதிகளை உருவாக்கியும் உள்ளன . எனவே அரசாங்கத்திற்கு ஜால்ரா போடும் இந்திய அடிமைகளே, தூரநோக்கு சிந்தனை இல்லாமல் எப்படி எல்லாம் எழுதி, சொந்த இனத்தை அழிக்க உதவுகிறீர்கள் ? மா இ கா காரர்கள் அதி மேதாவிகள் அல்ல …. அதனால் தான் SEDIC தனிமனித கட்டு பாட்டில் வருகிறது. ம இ காவில் இருக்கும் சொட்ப்ப பேராசிரியர்களும், முடடால்கள் மத்தியில், தங்களை அறிவு ஜீவிகளாக காண்பித்து கொள்ளவே தவிர, வேறு எதற்கும் இல்லை. வென்றால் போலுளாதார சலுகை மட்ட்ற இனத்தவர்களுக்கு, தொடற்றால் சமமாக சுமையை இந்தியர்களும் அனுபவிக்க வேண்டும் …….. 200 ஆண்டுகளுக்கு மேல் நம் முன்னோர்கள் இந்த நாட்டில் வாழ்ந்து உள்ளார்கள். இருப்பினும் நாம் ஏழைகளே . எப்படி ? யோசிப்பீர்களா ?
ராமையா செப்பாங்,அவர்களே ,இங்கு நான் மா இ காவுக்கும் கூஜா தூக்க வில்லை ,எதிர்கட்சிக்கும் கூஜா தூக்கவில்லை,ம இ கா மகாதிரிடம் அடிமையாகா இருந்ததை இங்கு நான் விளக்கி சொல்வவும் வர வில்லை ,அந்த அடிமைகளுக்கு தலைமை பொறுப்பை வகித்த ஒரு பொறுப்பற்ற இந்திய தலைவரை பற்றியும் நான் சொல்லப்போவதும் இல்லை ,இந்தியர்கள் இன்னும் வாக்குக்கு கொத்தடிமையாகவும் உரிமைக்கு விளக்கம் தெரியாமலும் இருப்பதை கண்டு கலங்குகிறேன் ,ஒரு அன்பர் சொல்கிறார் மணிலா அரசு 10 விழுக்காடுதான் ,மத்திய அரசாங்கம் 100 விழுக்காடு ,10 விழுக்காட்டிலிருந்து மக்களுக்கு செய்யுங்கள் இனம் மொழி பாராமல் மக்களின் உரிமையை நிலைநாட்டினால் உங்களுக்கு 100 விழுக்காடு அதிகாரத்தை மக்கள் வழங்குவார்கள் ,எதிர்க்கட்சியில் அணைத்து இனத்தவரும் அங்கம் வகிப்பதால் இந்தியர்களுக்கு பயன் இருக்க போகிறது ,தனி ஒரு இந்தி கட்சி எதிர்க்கட்சியில் அங்கம் வகித்து அணைத்து இந்தியர்களும் அதன் கீழ் இருந்தால் மட்டுமே இந்தியர்களின் குரல் அங்கு ஓங்கி இருக்கும் என்பது உண்மை ,இங்கு பத்தோடு பதினொன்றாக இருந்து கொண்டு இந்தியர்களுக்கு கொடுங்கள் கொடுங்கள் என்றால் அங்கு ஒன்றும் இல்லை இது எனது தனிபட்ட கருத்து ,இங்கு கருத்து எழுதும் சமுதாய நலன் கருதிய அன்பர்களே ,தோட்ட புறங்களில் இருந்து ,கம்பங்களில் இருந்து ,அடுக்குமாடி குடியிருப்பு என்ற பெயரில் அடைக்கபட்ட ஒவ்வொரு இடத்திற்கும் செல்லுங்கள் 100 ஐம்பது குடும்பங்கள் வறுமையிலும் சமூக சீர் கேட்டிலும் சிக்கி தவிக்கிறது ,மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் (இந்திய பிரதிநிதிகள் )எதாவது காதுக்கு எட்டும் குடும்பங்களுக்கு கையில் 100 வெள்ளி 10kilo அரிசி ,சீனி மிளகாய்த்தூள் வாங்கி கொடுத்து விட்டு கை குலுக்கி பத்திரிகைக்கு போஸ் கொடுப்பதுடன் மட்டும் முடிந்து விட்டது .இதுதான் இவர்கள் செய்யும் சமுதாய சேவை .
ஐயா, ஒரு குரல்! நீங்கள் சொல்லுவது சரியே! மறுப்பதற்கு ஒன்றுமில்லை. இதற்கு யார் காரணம் என்பதை நான் விளக்க வேண்டிய அவசியமில்லை. ஐயன் சாமிவேலு போட்டுக் கொடுத்த பாதை! இந்திய சமுதாயத்தை எப்படி வழி நடத்த வேண்டும் என்று தெளிவான ஒரு பாதையைக் கொடுத்துவிட்டார்! ஆளுங்கட்சியோ எதிர்கட்சியோ அவர் வழிகாட்டுதல் படியே இப்போது அனைவரும் நடந்து கொள்ளுகிறார்கள்.அது தான் நடந்து கொண்டிருக்கிறது! ஆனாலும் உங்கள் நேரத்தை எடுத்துக்கொண்டு இந்த சமுதாயத்தின் மீது அக்கறையோடு இங்கு எழுத வந்தீர்களே அதற்கு நன்றி! நம் அனைவருக்குமே இந்த சமுதாயத்தின் மீது அக்கறை உண்டு. ஐயனின் வழியில் தொடர்ந்து பீடு நடை போடுவோம்!
தனி ஒரு இந்தி கட்சி எதிர்க்கட்சியில் அங்கம் வகித்து அணைத்து இந்தியர்களும் அதன் கீழ் இருந்தால் மட்டுமே இந்தியர்களின் குரல் அங்கு ஓங்கி இருக்கும் என்பது உண்மை ,இங்கு பத்தோடு பதினொன்றாக இருந்து கொண்டு இந்தியர்களுக்கு கொடுங்கள் கொடுங்கள் என்றால் அங்கு ஒன்றும் இல்லை
இதில் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை.
நம்மைப் பிரதிநிதித்து ஒரு கட்சி (அது சாக்கடைக் கட்சியாக இல்லாமல்) வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அவர்கள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் நாம் ஏணியாக மட்டுமே இருந்து அவர்கள் போடும் எலும்புத் துண்டுக்காக காலமெல்லாம் நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு காத்திருக்கும் நிலைதான் வரும். அப்படி ஒரு கட்சி எதிரணியில் நம்மைப் பிரதிநிதிக்குமானால் அது சுயநலவாதிகளின் கூடாரமாகவோ அல்லக்கைகளின் கூடாரமாகவோ மாறிவிடக்கூடாது.
abraham terah wrote on 19 October, 2016, 19:34….
“……….. ஒன்றுமில்லை. இதற்கு யார் காரணம் என்பதை நான் விளக்க வேண்டிய அவசியமில்லை. ஐயன் சாமிவேலு போட்டுக் கொடுத்த பாதை!…… ஐயனின் வழியில் தொடர்ந்து பீடு நடை போடுவோம்!”
சமுதாயத்திற்கு ஏற்படட தலைகுனிவு ம இ கா நடுத்தெருவில் ஆர்ப்பாட்டம்.ஊர் இரண்டுப்பட்டால் அம்னோவுக்கு லாபம்.
இன்றளவும் சாமிவேலு கையில் தான் ம . ஈ . காகம் . உள்ளது .காக்கா கா .கா . என்று மட்டுமே கடத்தும் . ஆதாயம் பெறுபவர்கள் .ஈ .போல் மொய்ப்பார்கள் .
மீண்டும் மீண்டும் அரைத்த மாவையே அரைக்க சொல்பவர்களே, மேலே நான் விவாதித்திருக்கும் நெடுநாளைய பயணத்தை கருத்தில் கொள்வீராக. எப்படி ஒரு நிரந்தர தீர்வு ஏற்படுத்துவது என்பதை சிந்தித்து எழுதுக …. நீங்கள் வெட்டியும் எழுதலாம் அல்லது ஒட்டியும் எழுதலாம் ….அது உங்கள் சுதந்திரம் உங்கள் கருத்து ….ஆனால் மீண்டும் மீண்டும் எதிரணியில் மாற்று மா இ கா என்ற இன்னொரு கட்சி இருந்தால் நாம் வென்றுவிடலாம் என்ற மூட தனமான வாதங்களை யாம் துளி அளவும் ஏற்று கொள்ள முடியாது காரணம் நாம் 4 மாநிலங்கள் தந்த பொழுதும் , அல்லது வேறு சில மாநிலங்களை தந்த பொழுதும் , அங்கேயும் ஒன்றுமே நடக்கவில்லை என்று 8 ஆண்டுகளில் உணந்துள்ளோம் …எனவே ….. உன்னத கருத்துக்களை யாம் பெரிதும் எதிர்பார்க்கிறோம்….
இந்திய சமுதாயத்தில் இருந்து ஒரு குரல் . wrote on 18 October, 2016, 23:01
எதிர்வரும் தேர்தலில் எதை வைத்து போட்டி போட போகிறீர்கள் பொன் ரங்கன்…..?
எதையும் வைத்து அல்ல எதற்கு என்று கேளுங்கள்… சட்டமன்றமோ நாடுமன்றமோ தெரியாது. எங்கள் 80 ஆயிரம் பல்லின அம்பாங் தொகுதி ஓட்டில் இந்தியர்களை ஏய்க்கும் BN PH PAS நாங்களும் இருக்கோம். உங்க ஓட்ட உடைப்போம் என்பதுதான். இதுதானே அரசியல் .இதில் 15,000 இந்தியர்கள் ஒட்டு இருக்கு. மொத்த எட்டு லட்சம் மக்கள் தொகையில் இந்தியர்கள் ஒன்றை லட்சம். இன்னும் 15 ஆயிரம் இந்தியர்கள் ஓடடார்கள் அல்ல ! அடுப்பில் வேவு பார்க்கின்றனர்.
இன்று இருக்கும் BN PH PAS மும்முனையில் முக்கா ஏக்கரில் இருக்கும் அம்பாங் தமிழ்ப்பள்ளிக்கு பாலர் பள்ளி இல்லை! நிலம் இல்லை ( பக்கத்தில் ) 4.5 ஏக்கர் மத்திய அரசு நிலம் இருந்தும் கடந்த 50 வருஷ முயற்சிகள் BN /MIC எங்களுக்கு பப்படம் சுட்டு க்ரக்கு…முறுக்கு அப்படம் காட்டிட்டாங்க சார்?
வேற ஒண்ணுமில்லைங்க !!! நான் என்ன நாட்டு சட்டத்தையா மாத்தப்போறேன் ? அதெல்லாம் இல்லைங்க ! அரசியல் வாதிகளை அரசு, கல்வி அமைச்ச ஏச தமிழ்ப்பள்ளி நிலப்பிரச்சனை போதும்.
கடைசியா நம்பிக்கையுடன் மாண்பும்கிகு ஐயா கமலநாதனிடம் கொடுத்துள்ளோம். நடக்கவில்லை என்றால் வாக்கில் ஏறுவேன். இதை வெச்சுதான் தான் சார். ஜெயிச்சா ஆர்ப்பாட்டம். ஜெயிக்கிலனா வந்தா மலை, வரல என்றால் மழையும், மலையும், மயிரும் என்பார்கள். மொட்டையாதான் இருக்கேன்.தமிழுக்கும் தமிழனுக்கும் கடசியா ப்ரீபெர்சத்துவோட இணைவேன்.
அரசியல்வாதிக்கு கட்சிக்குள் கொள்கையில்லா குரங்குத்தனம் ஒரு கேடா ?
அப்படியெல்லாம் கற்புத்தனமா தப்பு பண்ணிதான் இண்டியனும் தமிழனும் இந்த நாட்டில அரசியல் விபச்சாரத்தில் வீணாய்ப்போனோம். பல்லினம் மட்டுமல்ல பன்னாட்டு இனமெல்லாம் ஓட்டுப்போடுது. நமக்கென்ன மூளையில் மஞ்ச காமாலையா ஒரே கட்சி ஒரே ஆட்சின்னு துப்புபட ?
“மலைசியர் தமிழர் கட்சி” (மலேசியா முடியாதாம்) என்று உதித்தாலும் ஓகேதான். காசுதான் இல்லை . M1DB விலும் ஏமாந்தாச்சு சார் ! ப்ரீபெர்சத்துதான் கடசி கழுத்தை ! அரசியல் போதையில் மலேசியர்கள் மங்கிகளில் மான் இன்னும்கூட மயிர் இல்லாமல் ஓடுது சார். கங்காரு பாவம் பையோடு திரியுதுங்கோ !!
ஆண்டாண்டு தூரம் அலுத்து புரண்டாலும், தேய போவது கால் கைமுட்டிதான்…. நாம் போம் நமக்கும் அதுவலிதான். இப்படிக்கு அரசியல் அறிவுத்தாகம். விஷம் தான் சாஸ்திரம்., மனம் பல்லாயிரம் மைல்கள் பறக்கிறது . அவசியம் படியுங்கள். எழுதுவேன் எழுவோம்.
பொன் ரங்கன்.. அம்பாங்