பொதுவாகவே பிரதமர் நஜிப் அவர்களுக்கு மலேசியா இண்டியர் மத்தியில் இன பிரிவினை தலைவர் என்ற பெயர் இருப்பதை இவர் உணர்ந்து இருக்கிறாரோ என்னமோ தெரியவில்லை. 7 அல்லது எட்டு ஆண்டுகளுக்கு முன்பு டத்தோ தஸ்லிம் அவர்கள் ஒரு பொருளாதார கூட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு வாரியம் மலேஷியா இந்தியர்களை 11 இனமாக பிரித்து உள்ளதை தமது அறிக்கையில் காட்டினார். இது இன்றைய பிரதமர் நஜிப் தலைமையில் தான் நடந்தது என்றும் தெரிய வந்தது.
அது எது எந்த இண்டியர் இனம் என்று எனக்கு எழுத வரவில்லை, ஆனால் மலேசியத்தமிழர்களை மட்டும் இந்தியா தென்னாட்டு தமிழர்கள் என்று பிரித்து இருந்தார்கள் SOUTH INDIAN TAMILS . இது ஒரு வேளை அதி புத்தி “இந்தியர்கள்” நமக்குள் காட்டிய இன பெத்த பேத விரிவாக்க தப்பாக இருக்கலாம் அல்லது அரசிடம் வசூல் செய்ய SMART INDIANS காட்டிய சூசம சுத்தலாக இருக்கலாம்.
இதை மெய்ப்பிக்க மலேசியா தெலுங்கர்கள், மலையாளிகள் என்று “மலேசியா” உரிமம் இருவரும் வசமாக மில்லியன் கணக்கில் அரசிடம் வசூல் செய்த பத்திரிக்கை வசனங்களை பார்த்தோம்.
இதில் இதுவரை சங்கம் வைத்து பிரதமரிடம் வசூல் செய்யாத இன்மை தமிழர் மட்டும்தான். இது போக சீடிக், சீட் என்பதிலும் தமிழர்கள் வசூல் விநியோகம் குறைவுதான்.
கொஞ்சம் அரசியல் பக்கம் இரும்பினால் இன்னும் அநியாயமா தமிழர்களின் நுழைவாயிலுமாசனமும் புகையுது.
மத்திய அரசின் அதிகாரத்துவ கூட்டணி பாசங்களான ம இ கா வும் மைPPP யும் ஒரு பக்கமா இந்தியன் என்றாலும் அதில் தமிழர்கள் பிச்சயாண்டிகள்தான்.
அடுத்து ஆதரவு ஆண்ணாச்சிகளான மக்கள் சக்தி, மலேசிய ஐக்கியமாம் IPF போன்றவை அன்னக்காவடிகளாக இண்டியன் இனத்தை முன் வைத்தாலும் தமிழர்கள் மோரில் கறுப்பில போல வாயில் சப்பி கடித்து துப்புபட்ட நிலைதான். பேராளர் மாநாட்டுக்கு பிரதமருக்கா கலர் காலரா கூடும் கூட்டம் அதுக்கப்புறம் செய்திகள் ஆக்கிரமிப்பில் ஓடுது.
நாடும் வளர்ச்சியடைந்த சமூக வளர்ச்சிக்கும் திட்டமிட்ட NEP …2020….அப்புறம் EPU என்றதையும் தாண்டி சீட் சீடிக் இரண்டும் அவ்ளவாக உதவவில்லை என்ற தகவலை சமீப ம இ கா மாநாட்டில் பிரதமர் வெளி படுத்தி எல்லா இந்திய கட்சிகளும் ஒருங்கிணைந்து வாங்க என்ற முடியாத ஒன்றை முடித்து வைத்து பிரகடம் செய்துள்ளார்.
ஐக்கியம் நமது பலம் என்று அவர் ஆசைப்படுவது ஆரோக்கியமான ஒரு பிரதமருக்கு இருக்கும் கடப்பாட்டை பாராட்டுவோம். ஆனால் பிரிவினையில் ஒரு வினை என்பதுதான் விக்கிபிடியாவில் தேடுகிறேன்.
பிரதமரால் மட்டுமே இந்த முடி சண்டையும் கொண்ட சண்டையும் குடுமி சண்டையும் தீர்க்க முடியும் என்பதை அவரால் ஏன் உணரமுடியவில்லை. உண்டியல் ஓட்டையை அடைத்தால் அவன் அவன் காணாமல் போவான் என்பது பிச்சைகளுக்கு மக்கள் போடும் தண்டனை.
இனத்தை பிரிக்க பாசாங்கும் பாசமும் பணமும்தான் சைத்தான் என்பதை நன்கு புரிந்துள்ள தலைப்பாய்கள் சிக்கன் சாப்பிட இந்த சைத்தான் இனத்தை பிச்சி புடுங்கி ஊறுகாய் போட்ட குட்டி குசவர்கள் மாற பிரதமர்தான் வலியுடன் வழி காண வேண்டும்.
வினை விதைத்தவர்தான் வினை அறுக்க வேண்டும் என்பது பழைய பாட்டு. கபாலிடா… நெருப்புடா…. மகிழ்ச்சிடா… போல தேர்வை பிரதமர் கையில் ஏந்தாவிட்டால் BN ஏங்கும் !
காலப்போக்கில் சரியாகும் என்பது ஒரு சீக்கு ! லட்சிய விதைகள் விதைக்க நுணுக்கம் வேண்டும். நிலத்தை பண்படுத்தா விதை தாறுமாறா முளைக்கும் அங்கே பாம்புகள்தான் விஷம் கக்கும்.
நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களில் *நாணயத்தை* விதைக்கணும்
இந்த பாட்டை பிரதமருக்கு போட்டு காட்டுவோம்.
வணக்கம் நன்றி,
பொன் ரங்கன்
தமிழர் தேசியம் மலேசியா
அப்பாடா !இந்த தடவையாவது இனத் துவேசம் இல்லாமல் ஒரு கருத்தை கொடுத்தமைக்கு பொன்ரங்கன் அவர்களுக்கு நன்றி !நன்றி!!நன்றி!!!