அரசாங்கம் இந்தியக் குழந்தைகளின் பாலர் கல்விக்கு போதுமான வகையில் இன்னமும் முயற்சிகள் எடுக்கவில்லை. ஆனால், அரசாங்கம் அதிகமாகச் செய்து வருவதாக ஒரு மாயையை விளம்பரப்படுத்தி நமது பிரச்சனைகள் களையப்பட்டு வருவதாக செடிக் திட்ட அறிக்கைகளின் வடிவம் உள்ளது. இந்த நிரந்தரமற்ற செடிக் திட்ட வடிவங்கள் சமூக மாற்றங்களுக்கு அரசாங்கம் செய்ய வேண்டிய கடப்பாடுகளை சமூகத்தின் மீது திணிக்கும் ஒரு வியூகமாவே தோற்றமளிக்கிறது.
ஒரு வகையில் அரசியல் கட்சிகளின் கீழ் மாட்டாமல் செடிக் என்ற ஒரு தனிப் பிரிவின் வழி பலதரப்பட்ட சமூக நடவடிக்கைகளுக்கு அரசாங்க நிதி வழங்கப்பட்டது பாராட்டக்கூடியது என்பதை மறுக்க இயலாது. ஆனால், பாலர் கல்வி, தொழிற்கல்வி போன்ற அடிப்படை உரிமை சார்ந்த துறைகளுக்கு நிரந்தரமான தீர்வு தேவை. அவை அரசாங்க கொள்கை அளவில் தீர்க்கப்பட வேண்டும்.
மலேசிய அரசாங்கத்தின் கல்விப் பெருந்திட்ட அறிக்கையின்படி (2013-2025) 2020-க்குள் பாலர் கல்வி என்பது எல்லாக் குழந்தைகளுக்கும் கிடைக்கும் சூழல் உருவாக்கப்படவேண்டும் என்ற திட்டவரைவு உள்ளது. நமது நாட்டின் பாலர் கல்வி சுமார் 90 சதவிகித மக்களுக்கு கிடைத்து வருவதாக 11 வது மலேசியத் திட்ட அறிக்கை (2014) கோடி காட்டுகிறது. ஆனால், இந்தியக் குழந்தைகளைப் பொறுத்த மட்டில் 2013 வரையில் உள்ள அரசாங்க அறிக்கைகளின் வழி கிடைத்த தகவல்களை வைத்து ஒப்பீடு செய்கையில் சுமார் 64 சதவிகித குழந்தைகள் மட்டுமே பாலர் கல்வி பெற்று வருகின்றனர். பாலர் கல்வி என்பது 5 (4+) மற்றும் 6 (5+) வயது குழந்தைகளை உட்படுத்தும். சுமார் 56,000 இந்தியக் குழந்தைகளுக்கு இந்தத் தேவை உள்ளது. இதில் அரசாங்கம் சுமார் 15,000 குழந்தைகளுக்கு பாலர் கல்வி வழங்குகிறது. தனியார் நிறுவனங்களும் தொண்டூழிய அமைப்புகளும் சுமார் 20,500 குழந்தைகளின் தேவையை பூர்த்தி செய்கின்றன. பாலர் கல்வி எட்டாத நிலையில் பாதிப்புக்கு உள்ளாகும் சுமார் 20,500 குழந்தைகள் பி40 என்ற பின்னடைவில் உள்ள 40 சதவிகித வறுமை நிலையில் உள்ளவர்களின் குழந்தைகளாக இருப்பவர்களாகும்.
இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளில் ஒன்றாக அரசாங்கமும் – சமூக ஆர்வலர்களின் அமைப்புகளும் ஒருங்கிணைந்து கூட்டாகச் செயல்பட்டு பாலர் கல்வியை வழங்க முன்வர வேண்டும் என்பது அரசாங்கத்தின் ஒரு வழிமுறையாகும். இதில் ஒரு குறிப்பிட்ட நிதியை அரசாங்கம் வழங்கும். மற்றதை சமூக அமைப்புகள் திரட்ட வேண்டும் என்பதாகும். அந்த வழிமுறையின் கீழ் பல அமைப்புகள் இதில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழிமுறையானது பாலர் கல்வி பிரச்சனைக்கு ஒரு நிரந்தரமான தீர்வாக அமையாது. மேலும் இந்த வறுமை நிலையில் உள்ள இந்தியக் குழந்தைகளின் பாலர் கல்விக்கு நிதி வழங்க முன்வருபவர்கள் அதிகம் இல்லை. இது வரையில் மிகவும் தீவிரமாக நிதி வழங்கிய நிறுவனம் எம்சிஇஎப் என்ற மலேசிய சமூக கல்வி அறவாரியம்.
முனைவர் என். எஸ். இராஜேந்திரன் கீழ் இயங்கும் செடிக் இந்த பாலர் கல்விக்கு முதன்மை கொடுத்துள்ளது பராட்டத்தக்கதாகும். இதற்காக அரசாங்கம் செடிக் அமைப்புக்கு ஒதுக்கீடு செய்த 100 மில்லியனில் சுமார் 10 மில்லியன் ரிங்கிட்டை 7,000 குழந்தைகள் பயனடையும் வகையில் ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் வழி பாதிப்புக்கு உள்ளாகி இருந்த 20,500 குழந்தைகளில் ஒரு பகுதியினர் தற்காலிக நிவாரணம் பெற்றுள்ளனர்.
நிரந்தர தீர்வு வேண்டும்
பாலர் கல்வியை தற்காலிக அளவில் நடத்துவது அரசாங்கத்தின் தீர்வாக இருக்கக்கூடாது. இது ஒரு முழுமையான அரசாங்கத்தின் கடப்பாடாகவும் செயலாக்கமாகவும் இருக்க வேண்டும். முறையாக பாலர் கல்வியை வழங்க ஒரு குழந்தைக்கு அரசாங்கம் வருடத்திற்கு இயக்க செலவுக்காக சுமார் ரிம4,000 செலவு செய்கிறது. அதன் வழி கணக்கிட்டால் வருடத்திற்கு ரிம 82 மில்லியன் தேவைப்படும். இதில் மூலதனச் செலவுகள் அடங்காது; அதற்குத் தனியான ஒதுக்கீடு தேவைப்படும்.
செடிக் வழி ஒதுக்கப்படும் நிதி போதாது; மேலும் அது நிரந்தரமற்றது. இது சார்பாக போதுமான தகவல்களை மலேசிய சமூக கல்வி அறவாரியம் தனது பல ஆண்டுகால ஈடுபாட்டில் கிடைக்கப்பட்ட தகவல்களை அரசாங்கத்திடம் பகிர்ந்து கொண்டு இந்த பிரச்சனையைக் களைய செயலாற்றி வருகிறது. எனவே போதுமான ஆய்வுகள் உள்ளன. ஆனால், அரசாங்கதின் தீர்க்கமான செயலாக்கம்தான் இல்லை.
முரண்பாடான ஒதுக்கீடு
அதே வேளையில் பிரதமர் நஜிப் அவர்களின் துணைவியார், ரோஸ்மா மன்சோர் அவர்கள் நடத்தும் பெர்மாத்தா எனப்படும் பாலர் கல்வி திட்டத்திற்கு கடந்த 8 வருடங்களுக்கான (2009-2016) இயக்க செலவுக்கு அரசாங்கம் ரிம328 மில்லியனை ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் வழி தற்போது அவர்கள் நடத்தும் 88 குழந்தைகள் மையத்தில் சுமார் 2,300 குழந்தைகள் உள்ளதாக அதன் இணையத்தளம் கூறுகிறது. அதன்படி கணக்கெடுத்தால் ஒரு குழந்தைக்கான அரசாங்க ஒதுக்கீடு ரிம 22,000 ஆகும். இது அரசாங்கம் மற்ற அரசாங்க பாலர் பள்ளிகளுக்கு அளிக்கும் ஒதுக்கீடுகளை விட 5.5 மடங்கு அதிகமாகும். செடிக் ஒதுக்கீட்டோடு ஒப்பிடுகையில் 17 மடங்கு அதிகமாகும்.
அடிப்படையில், குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய ஒதுக்கீட்டை பெர்மாத்தா என்ற பெயரில் அளவுக்கு அதிகமாக செலவிடுவதும், அதே வேளையில் வறுமையில் உள்ள சுமார் 20,500 இந்தியக் குழந்தைகள் நிரந்தர பாலர் கல்வியற்ற நிலையில் இருப்பதும் ஒரு மோசமான கொள்கை முரண்பாடாகும்.
பிரதமர் இந்தியர்களுக்கான ஒரு விசேச திட்ட வரைவை சனவரியில் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார். அதில் இந்த பாலர் கல்விக்கான தீர்வை கொள்கை அளவில் அமலாக்கம் காண வலியுறுத்த வேண்டும்; அதற்காகப் போராட வேண்டும்.
வணக்கம். கா.ஆறுமுகம் அவர்கள் சொல்வது உண்மையே, இன்றும் பெரும்பாலான பாலர் பள்ளி மாணவர்கள் தனியார் மையங்களில் பாலர் கல்வி பயில்வது ஏற்கமுடியாதா ஒன்று. இன்னும் பெரும்பாலான பாலர் பள்ளிகள் அரசு சார்பற்ற இயக்கங்களால் நடத்தபடுகின்றன. அப்படி என்றால் அரசாங்கம் என்ன செய்கிறது.
கா. ஆறுமுகம் அவர்களே ..எந்த காலத்தில் நீங்க இருக்கீங்க…..நாங்க எல்லாம் international school தேடி போகிறோம்…இப்போ தமிழ் (uuuaaaghhh) பாலர் பள்ளி பற்றி பேசுவது பச்சை அரசியல் சாயம் போல தெரிகிறது.
அரசியலில் இது எல்லாம் சகஜம்மப்பா….அப்டின்னு சொல்ல வரிங்க…ok(a) ok(a)
பாலர் பள்ளி கல்வி தமிழ் பிள்ளைகளுக்கு கட்டாயம் அரசாங்கச் செலவில் வழங்கப்படுவேண்டும்.
திரு சிவா கணபதி அவர்களே ! திரு ஆறுமுகத்தின் கட்டுரையில் என்ன படித்தீர்கள் > ஏதாச்சும் உங்களுக்கு விளங்கியதா என்று எனக்கு சந்தேகம் ? கல்விக்கு என்னய்யா காலம். தமிழ்பப்ளிகளில் பாலர் பள்ளிகள் வேண்டும் அப்போதுதான் தமிழ்ப்பள்ளிக்கு போகும் தமிழ்ப்பிள்ளைகள் இலகுவாக படிக்க தமிழ் தொடர்ந்து வாழும் என்ற ஒப்பீட்டை கட்டுரையில் தந்துள்ளார் .அதைப்போய் அரசியல் சாயம் என்கிறீர் ..சுய புத்தியோடுதான் உள்ளீரா ? தமிழ் கணபதியா அல்லது இந்துத்துவா சமஸ்கிருத கணபதியா ? சிவா வை சிவனை கழற்றி விடுங்கள்.
நமது பாலர்களின் ஆரம்பக் கல்வி நிறைவானதாய் அமையவேண்டுமென்பதே நமது எதிர்பார்ப்பும், தற்போதைய சீன, மலாய் பாலர்பள்ளி கல்விகளோடு ஒப்பிடுகையில் நமது பாலர்களுக்கான தமிழ் பாலர்கல்வி அவ்வளவு சிறப்பானதாய் அமைந்திருப்பதாய் தோன்றவில்லை.
மற்ற மொழிப்பாலர் புத்தகங்கள் மிகவும் அழகான தடித்த வண்ண அட்டைகளுடன், அழகிய வண்ணப்படங்கள் , பல நிறங்களில் எழுத்துக்கள் என பாலர்களின் கவனம் கவர்ந்து அவர்களை அப்புத்தகங்களை விரும்பி வாசிக்கும் ஆவலை தூண்டுவதாய் அமைந்திருக்கிறது ஆனால் நமது கவனத்துக்கெட்டியவரை பெரும்பாலான தமிழ் பாலர் பள்ளிகளில் பாலர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி புத்தகங்கள் நகலெடுத்து புத்தமாக்கப்பட்டவையாய், கண்ணங்கரேலென்ற படங்களும் , கறுமையாய் தடித்த எழுத்துக்களுமாய் காண்பதற்கே கன்றாவியாய் இருப்பதை நாம் காணமுடிகிறது. ஏன் இந்த அலங்கோலம் ? இதுவும் கவனத்தில் கொண்டு களையப்படவேண்டிய அவலம்தான்.
பாலர்களின் ஆரம்ப நிலைக்கல்வி என்பதே பெரும்பாலும் படங்களைப் பார்த்து கற்கும் நிலையே, எனவே நமது பாலர்களின் சிறப்பான கல்வி வளர்ச்சிக்கு நன்மை பயக்க வேண்டும் என்பதை கவனத்தில்கொன்டு நமது பாலர்களுக்கும் சீன, மலாய் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப் படுவதைப் போல அழகிய வண்ணப் புத்தகங்கள் உருவாக்கி வழங்கப்படவேண்டும் எனும் திட்டமும் இந்த முயற்சியில் இணைக்கப்பட வேண்டும்.
கா.ஆறுமுகம் அவர்களே ! அற்புதம் அருமையான ஒரு கட்டுரை 2016 இல் ஒரு கட்டுரை ! 2026 இல் ஒரு கட்டுரை ! மா. இ . கா . காரன் அவன் பங்கிற்கு ஒரு கட்டுரை ! இப்படியே விமர்சனகள் ஆய்யு கல் நடத்தி அறிக்கை விட்டு கொண்டிருப்போம் ! அரசாங்கம் வழிய வந்து நமக்கு ஏதும் செய்யாது !! பிரதமருக்கு யாரோ ஒருவன் எழுதி கொடுக்கும் அறிக்கையை படித்து விட்டு அதை செய்கிறேன் இதை செய்கிறேன் என்று அவர் அம்னோவையும் அவர் பதவியையும் தர்க்ககே போய் விடுவார் ! பிறகு அவர் அறிவித்த ஒரு சில லச்சங்களுக்ககே ! நமது தலைவர்களும் அவர் வாள் பிடுத்து திரிவார்கள் ! சமுதாயத்திற்காகே அல்ல தன் சொந்த ஆடம்பரத்திற்ககே !! உமது கட்டுரையில் எதாவது தீர்வு சொல்லியிருக்கிறீர்களா ?
s.maniam – உங்களின் கருத்து எனக்கு விளங்கவில்லை. ஐயா ஆறுமுகம் தனது கட்டுரையில், அரசாங்கம் செய்ய வேண்டியதை வறுமையில் உள்ள நம் தலையில் கட்டி விடுவதை தவிர்க்க வேண்டும் என்கிறார். அவரது தீர்வு – “பிரதமர் இந்தியர்களுக்கான ஒரு விசேச திட்ட வரைவை சனவரியில் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார். அதில் இந்த பாலர் கல்விக்கான தீர்வை கொள்கை அளவில் அமலாக்கம் காண வலியுறுத்த வேண்டும்; அதற்காகப் போராட வேண்டும்.”
எனக்கு தெரிந்து ஆறுமுகம் ஐயா, கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பாலர்கல்வி வளர்ச்சிக்கு பணியாற்றி வருகிறார். இவர் சன்வே கோயிலில் அமைத்த பாலர் பள்ளி இன்று ஒரு சிறந்த பலர் பள்ளியாக உள்ளது.
1978 ம் ஆண்டு என்று ஞாபகம் ! துன் சம்பந்தன் அவர்கள் கூட்டுறவு சங்க தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளை பாலர் கல்வி பெற வேண்டும் என்ற நல்ல நோக்கில் ! கூட்டுறவு தோட்ட தொழிலாளர்களின் பெண் பிள்ளைகள் ஒரு சிலரை சங்கத்தின் செலவில் தமிழ் நாடு ,கோயம்பத்தூர் ருக்கு அனுப்பி பாலர் கல்வி படித்து பயிற்சி பெற வைத்து கூட்டுறவு தோட்டங்களில் பாலர் பள்ளிகள் அமைத்து திறம் பட நடத்தி வந்தனர் ! இதற்கான ஆவணங்கள் நிச்சயமாக கூட்டுறவு அலுவலகத்தில் இருக்கும் !நமது கூட்டுறவு தந்தை நமது சமுதாய பலன் கருதி முன்னெடுத்த ஒரு சிறந்த திட்டம் ! நமது துர திஸ்டம் நல்ல வைகளை நாம் நீண்ட நாட்களுக்கு கடை பிடிப்பது கிடையாது ! ஐயா ஆறுமுகம் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நமது நாட்டில் தமிழ் பிள்ளைகளின் பாலர் பள்ளி வளர்ச்சிக்கு பணியாட்ரி வருகிறீர் என்றால் இது நிச்சயம் உமக்கு தெரிந்திருக்க வேண்டும் !
வெற்றி பெற்று விட்டார் கா . ஆறுமுகம் . தமிழ்ப் பள்ளிகள் தோறும் பாலர் பள்ளிகள் உரு கொள்கின்றன
அவருக்கும் செம்பருத்தி இயக்கத்துக்கும் தமிழ் அறவாரியத்துக்கும் நன்றி