அடுத்த ஆண்டு சனவரியில் இந்தியர்களுக்குக்காக ஒரு விசேச திட்ட வரைவு ஒன்றை அறிவிக்கப் போவதாக பிரதமர் சொன்னதில் எனக்கு சற்று அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், பட்ஜெட்டில் அதன் தாக்கம் இல்லாதது ஏமாற்றத்தை கொடுக்கிறது. நாட்டின் நிதி நிலைமை மோசமாக உள்ளதும், மோசமாக்கப்பட்டதும் காரணமாக இருக்கலாம்.
இருப்பினும், இந்தியர்களுக்காக சுமார் ரிம260 மில்லியன் ஒதுக்கியுள்ளது அழுகின்ற குழந்தைக்கு கிடைத்த மிட்டாய் என சற்று ஆறுதல் அடையலாம். இதில் தெக்குன் (50 மில்லியன்) மற்றும் அமனா இக்தியார் (100 மில்லியன்) வழி ரிம150 மில்லியனை ஒதுக்கீடு செய்திருப்பது சந்தேகத்தை உருவாக்குகிறது. இவை இந்தியர்களின் சிறுதொழில் மேம்பாட்டுக்கு எவ்வகையில் உதவும் என்பது தெளிவாக இல்லை. மேலும் B40 எனப்படும் 40 சதவிகித கீழ்மட்ட இந்தியர்கள் இதன் வழி பயன் பெற இயலுமா? கடன் கொடுத்து மேலும் இந்தியர்களை கடனாளியாக ஆக்கும் திட்டமாக இது? இல்லாமல் இருந்தால் சரி.
பாலர் பள்ளிக்கு தேசிய நிலையில் பயிலும் சுமார் 200,000 குழந்தைகள் பயன்பெற ரிம132 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டில் இந்தியக் குழந்தைகள் பயன் பெறுவதை நமது பிரதிநிதிகள் உறுதி செய்ய வேண்டும்.
தமிழ்ப்பள்ளிகளுக்காக ரிம10 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் வழி 50 தமிழ்ப்பள்ளிகளில் பாலர்பள்ளிகள் நிறுவகிக்கப்படும் என தெரிகிறது. இந்த வருடம் செடிக் நிதி ஒதுக்கீட்டின் வழி சுமார் 50க்கு அதிகமான பாலர் பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை முறைப்படுத்தப்பட்டு அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்புக்கு மாற்றப்பட வேண்டும். இதில் பணி புரியும் ஆசிரியர்கள் அனைவருக்கும் போதுமான பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களை அரசாங்க ஊழியர்களாக ஆக்க வேண்டும்.
இந்தப் பணியை கல்வி அமைச்சு மேற்கொண்டு அதன் வழி இந்த ரிம10 மில்லியனை தரமான 50 பாலர் பள்ளிகள் உருவாக்கம் காண வேண்டும். இந்த ஒதுக்கீடு சார்பாக துணைக் கல்வி அமைச்சர் கமலநாதனுடன் தொடர்பு கொண்ட போது இந்த ரிம10 மில்லியன் தனது அமைச்சின்கீழ் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
2020 ஆண்டுக்குள் நூறு சதவிகித பாலர் கல்வியை இந்தியச் சமூகம் பெற இயலாது. அதற்கு ஏற்ற ஒதுக்கீட்டை இந்த பட்ஜெட்டில் காணவில்லை. இருப்பினும் ஒதுக்கப்பட்டுள்ளதை கல்வி அமைச்சு பொறுப்புடன் கையாள வேண்டும். 2017-இல் 50 புதிய பாலர் பள்ளிகள் தமிழ்ப்பப்பள்ளிகளில் அரசாங்க பாலர் பள்ளிகளாகச் செயல்பட வேண்டும். துடிப்புடன் செயல் படும் கமலநாதன் இதை உறுதி செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது.
பிச்சை எடுத்தானாம் பெருமாளு அதை புடுங்கித் திண்ணானாம் அனுமாரு! அந்த கதைதான்.
ஒரு 10 வருடங்களுக்கு முன்பு பட்ஜெட்டில் தமிழ் பள்ளிக்காக 3 மில்லியன் பிரதமர் அறிவித்து விடடார் என்று முட்டைப் போட்ட கோழி மாதிரி தானைத் தலைவரின் அறிக்கை பட்ஜெட்க்கு மறுநாள் பத்திரிக்கையில் வருமே அப்பெல்லாம் இந்த கேள்வி இல்லாமல் போனது அதிசயம்தான்!
ஆடி கறக்க வேண்டிய மாட்டை ஆடிக் கறக்க வேண்டும், பாடி கறக்கின்ற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்! கேட்பதை கேட்கும் விதத்தில் நேரம் காலம் அறிந்து கேட்க வேண்டும். பொறுங்கப்பா!
சம்திங் பெட்டர் தென் நத்திங் ( SOMETHING BETTER THEN NOTHING ) நாடுளுமன்றத்தில் பட்ஜெட்டில் இந்தியர்களை ஒரு பொருட்டாக மதித்து கிள்ளியாவது தருகிறார்கலே மகிழ்ச்சி !! நமது சமுதாயத்திற்கு அரசாங்கத்தின் வாயிலாக ஏதும் கிடைக்க வில்லை என்று சொன்னால் அது முழு பூசணிக்காயை சொத்தில் மறைக்கும் கதை ! தமிழ் பள்ளிக்கு மில்லியன் கணக்கில் ஒதுக்க பட்டுதான் வருகிறது ஆனால் ஒதுக்க படும் தொகை நமது தமிழ் பள்ளிகளுக்கும் ! தமிழ் மொழிக்கும் ! நம் சமுதாயத்திற்கும் சேருகிறதா !! என்பது தான் மில்லியன் டொலர் கேள்வி ! இன்று கமல நாதன் கல்வி அமைச்சில் ! அன்று கல்வி அமைச்சில் ஒரு அம்மையார் இருந்தாரே ! தானை தலைவனின் தலை ஆட்டியக !! பதுமையாக ! லச்சங்கள் கொள்ளை போக உதவியாக !! ஆறுமுகம் அவர்களே அரசாங்கத்தின் பணம் ! நமது வரிப் பணம் !! நாம் அனைவருக்கும் !! உரிய பணம் !! ம.இ. கா காரனின் பணம் கிடையாது ! அறிக்கை விடுவது மட்டும் உமது கடமை என்று நினைத்து விடாதீர் ! தயவு செய்து சமுதாயத்திற்கு இந்த உதவி தொகை சென்று சேருகிறது என்று பார்த்து கொல்வதும் உமது கடமை !! கமல நாதன் புறங்கையை நக்காமல் இருந்தால் மகிழ்ச்சி !!
“SOMETHING BETTER THEN NOTHING ” என்று s .மானியம் எழுதி உள்ளீர்கள். தங்கள் பொருளாதார மேதை இல்லை என்பது எனக்கு தெரியும், எனவே உங்களுக்கு தெரியாத விஷயத்தில் உங்கள் மூளையை தயவு செய்து பயன்படுத்தாதீர்கள். 26080 கோடி பட்ஜெட்டில் 260 கோடி என்பது ஒரு விழுக்காடிற்கும் குறைவானது. மக்கள் தொகையில் ஏறக்குறைய 10% வருகிறது இந்தியர்களின் பங்கெடுப்பு. இப்படி கடந்த 30 ஆண்டுகளாக எத்தனை முறை இந்திய சமுதாயம் ஏமாற்ற பட்டிருக்கும் என்று கணக்கிட்டு பாருங்கள் திரு மணியம் அவர்களே, என் கோபம் புரியும் உங்களுக்கு ! இப்படி தான் ஒவ்வொரு முறையும் உங்களை போன்றவர்கள் தானை தலைவருக்கு (சாமி வேலுவுக்கு) ஜால்ரா போட்டு, கிடைக்க வேண்டியதையும் இழந்தோம். மகாதீர் தந்த TV3 , SIME DERBY , TELECOM , TNB , MRCB பங்குகளை (150 மில்லியன்) விற்று ம இ கா வில் போட்டு கொண்டார் சாமி வேலு என்ற ஒரு தமிழன். அப்பொழுது அவரை ஏன் தட்டி கேட்கவில்லை நீங்கள், திரு மணியம் அவர்களே? இப்பொழுது கமலநாதனை கேள்வி கேட்க்கிறீர்கள்! கமலநாதன் சாமி வேலுவின் பட்டறையில் படித்த மாணவன். தலைவன் எவ்வழி அவ்வழி குடில் வழி. இதில் மாற்றம் எப்படி நிகழும் ? இந்த 2017 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் கிடைத்த 260 கோடியும், மா இ கா வுக்கு ஜால்ரா போடும் NGO வுக்குத்தான் சென்றடையும். மா இ கா குட்டி தலைவர்களே இதையும் சாப்பிடுவார்கள்; எப்படி என்றால் அவர்களே தனது சகாக்கள் பெயரில் NGO நடத்துவார்கள். போன ஆண்டு 379 இந்திய NGO கள் என்ன என்ன வகுப்புக்கள் நடத்த மானியங்களை பெற்றனர் என்று இந்த லிஸ்டை பாருங்கள் https://www.sedic.my/wp-content/uploads/2016/01/SEDIC_2015_LIST.pdf இதில் பாமர மக்கள் எப்படி பயன் அடைய முடியும் ? இந்தியர்களின் சொத்துடமை எப்படி கூடும் ? ஒரு மண்ணாங்கட்டியும் விளங்க விளங்கவில்லை என்றாலும், நானும் கருது சொல்வேன் என்று எழுதி தள்ளுவது ….
ஐயா திலிப் ! நான் பொருளாதார மேதை கிடையாது ! ஒரு சாமான்யன் ! நீங்கள் குறிப்பிட்ட அத்தனையும் இந்திய சமுதாயத்திற்கு கொடுக்க பட்டதுதான் ! தானை தலைவன் ! புரட்சி தலைவன் ! மக்கள் தலைவன் எல்லோரும் சேர்ந்து இந்த சமுதாயத்தை இந்த நாட்டில் உச்சத்தில் வைக்கவிருக்கிறார்கள் என்று நினைப்பில் தான் தானை தலைவனுக்கு வால் பிடித்து கோசம் போடோம் !! 100 ஆண்டு காலம் வாழ்க என்று ஆளுயர மாலை போட்டு தானை தலைவனுக்கு விழா எடுத்தோம் ! தமிழ் பள்ளிகளின் காவலன் ! தமிழனின் இன்னல் போக்க வந்த சமுதாயத்தின் விடி வெள்ளி என்றெல்லாம் சுட்ரி திரிந்தோம் ! PWTC ,MERDEKA ஹோலில் எல்மெட் அடி வாங்கும் வரை சமுதாயத்திற்கும் !! அடி வருடிகளாய் சுட்ரி திரிந்த எங்களுக்கும் தானை தலைவன் பின்னால் வைக்க போகும் ஆப்பு தெரியவில்லை ! மன்னித்து விடுங்கள் நண்பரே ! அன்று நமது பொருளாதார மேதைகளும் ! டான்ஸ்ரீ ராமா அய்யர் ! டான்ஸ்ரீ செல்வராஜா ! டான்ஸ்ரீ நிஜார் ! நீள பட டைரக்டர் , டி .பி .விஜயேந்தரன் ! மற்றும் தானை தலைவனின் அடியாட்கள் ! டி..எம் .துறை ! சிவலிங்கம் ! ( பரலோகம் போய்விட்டார்கள் ) இவர்களை எல்லாம் மீறி !! இன்னும் தானை தலைவனுக்கு ஜால்ரா போட பல மணியம் கல் ! இதையெல்லாம் மீறி நான் ஒரு சாதாரண மணியம் என்ன செய்ய முடியும் ! கேள்வி கேட்டால் அடி உதய் ! 90 களில் ஒதுக்கியதால் ! உயிராவது இன்னும் மிஞ்சி இருக்கிறது !
உயர்திரு S.மணியம் அவர்களே …ஹி ஹி ஹி ஹி சம்திங் பெட்டர் தன் நத்திங் ( SOMETHING BETTER THAN NOTHING ) என்று கிடைத்ததே போதும் என்றோ (அள்ளிக் கொடுக்காமல்) கிள்ளியாவது கொடுக்கிறார்களே என்று எலும்புத் துண்டுக்கு நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு காத்திருக்க நாம் என்ன ‘அது’வா? நாம் என்ன பிச்சையா கேட்கிறோம்? நம் கேட்பது நமது உரிமையை..இந்த நாட்டு வளப்பத்தில் நமக்கும் பங்குண்டு , இதை மறுக்கும் தகுதி எவனுக்கும் இல்லை. தட்டிக் கேட்க வேண்டும் கிடைக்காவிட்டால் அதட்டிக் கேட்க வேண்டும். இப்படி ஒரு தலைவனைத் தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். கன்னத்தில் ஓங்கி அறைந்தவனின் கைகளைப் பிடித்து முத்தம் கொடுக்கும் தலைவன்களை அல்ல.
திரு Dhilip 2 அவர்களே. மகாதீர் தந்த TV3 , SIME DERBY , TELECOM , TNB , MRCB பங்குகளை (150 மில்லியன்) விற்று ம இ கா வில் போட்டு கொண்டார் சாமி வேலு என்ற ஒரு தமிழன் என்று ஆதார பூர்வமாக பேசும் நீங்கள் ஏன் மலேசிய ‘பார் கவுன்சிலின்’ உதவிய நாடக் கூடாது. அவர்கள் இலவச சட்ட உதவியும் இலவசமாக வழக்காடும் உதவியும் செய்கிறார்களே..
மன்னிக்க வேண்டுகிறேன் திரு S , மணியம் அவர்களே. சட்ட்று கோபமாக எழுதி விடடேன் ஐயா. நீங்கள் என்ன பண்ணுவீர்கள் ? நீங்களும் சாதாரணமான மனிதர்தானே…
மாத்தி யோசி அவர்கேளே, ஏன் எல்லாவட்றயும் மற்றவர்கள் செய்ய வேண்டும் என்று உபதேசிக்கிறீர்கள் ? நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? வாயாலேயே வடை சுட்டு விற்கிறீர்களா ? உங்களுக்கு மாற்றங்களின் மீது உரிமையில்லையா ? ‘பார் கவுன்சில்’ லே யார் உதவியை நாடுவது என்று முழிக்கிறது ! இதில் என்னையும் அங்கே போய் நிற்க சொல்கிறீர்கள், அட அட என்ன ஒரு அபாரமான யோசனை ! ஏன் எனக்கு இது தோன்றவில்லை ? சமீபத்தில் பார் கவுன்சிலுக்கு பதிலாக வேறு ஒரு வக்கீல்கள் சங்கத்தை அமைக்க வேண்டும் என்று அரசாங்கம் பரிந்துரைக்கிறது …. இதில் என்னையும் அங்கே போய் நிற்க சொல்கிறீர்கள் …… அட அட அட … புல்லரிக்கிறது சார் …. சரி உங்கள் வாதத்திற்கே வருகிறேன் மாத்தி யோசி அவர்கேளே: எங்கே மலேசியாயாவில் எத்தனை இந்தியர்கள் KLSE போர்டில் பெரிய நிறுவனங்களின் ஷேர் வைத்திருக்கிறார்கள் என்று பட்டியல் இடுங்கள் ….. நான் என்னுடையதை விளக்குகிறேன் பிறகு …. அதில் குறிப்பாக எப்படி மா இ கா ஹோல்டரிங் ஒட்டு மொத்த 66,000 சந்தாதாரகளை ஏமாட்ட்றியது என்று விளக்குவேன்… பிறகு 2010 ஆண்டு பட்ஜெட்டில் முதுகலை படம் பயிலும் மலாய் மாணவர்களுக்கு எப்படி rm 50k வெள்ளி பெறுமானம் உள்ள ஷேர் தரப்பட்ட்து என்று விளக்குகிறேன்…. முதலில் நீங்கள் …
அன்புள்ள மாண்புமிகு கமலநாதன் அவர்களுக்கு வணக்கம்.
முதலில் உங்கள் முயற்சியில் மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வி பன்னாட்டு தமிழாசிரியர்கள் மாநாட்டுக்கும் எங்கள் பாராட்டுக்கள்.
பொது மக்கள் ஆய்வரங்கில் கலந்துகொள்ளாமல் போனது சற்று ஏமாற்றம்தான். எனினும் வந்து கலந்துக்கொண்டவர்கள் தமிழ் உணர்வாளாக இருந்திருப்பாளர்கள் என்ற நம்பிக்கை உண்டு. அதிலும் ஏற்பாட்டுக்குழு தலைவர் திரு இளஞ்செழியன் நல்ல தமிழ்க்கல்வி ஆய்வாளர் என்பதில் சந்தேகமில்லை. அவருக்கும் என் பாராட்டுகள்.
மாநாட்டில் என்ன நடந்திருக்கும் என்பதில் எங்களுக்கு மிகுந்த ஆர்வம். எது நடந்ததோ நடக்கவில்லையே தமிழ்ப்பள்ளியில் படித்துவிட்டு போகும் இடைநிலை PT 1 முதல் PT5 வரை பள்ளி பாட நேரத்தில் தமிழ்மொழியை கட்டாய பாடமாக்கும் திட்டம் உங்கள் கல்வி துணை அமைச்சர் காலத்தில் நிறைவேற்றப்பட்டால். BN க்கும் MIC கும் கிடைத்த மாபெரும் வெற்றி மரியாதையாக இருக்கும்.
மாநாட்டின் கருப்பொருள் அடுத்து 21 நூற்றாண்டை நோக்கி தமிழ்க்கல்வி என்று அறிந்தோம். ஆனால் புதிய கல்வி கொள்கையில் 2013 -2025 PT பாடங்கள் இணைப்பில் இருந்தாலும் அதற்கான அங்கீகாரங்களை இடை நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பொறுப்பாக ஏற்பதில்லை.
காரணம் 1. பாட நேரத்தில் தமிழ்மொழியை இணைக்காமை
2. தமிழ் ஆறாம் வகுப்பு முடித்த மாணவ ஆசிரியர்கள்/பெற்றோர்கள் இடைநிலைப்பள்ளிக்கு தமிழ்மொழி படிக்க விண்ணப்பத்தை சேர்ப்பதில்லை/
3. தமிழ் மொழியை இந்திய மாணவர்கள் கட்டாய பாடமாக்காமல் மோரல் பாடத்தின் போது தமிழ் மாணவர்கள் பள்ளிக்குள் சுற்றித்திரிவது.
4. இந்த நிலையில் PT 3/ PT 5 PMR / SPM தேர்வில் தமிழ் எடுப்பவர்கள் நிலைமை மோசமாக போகும் நிலைமைகள் மிக வருத்தமளிக்கிறது.
5. ஆசிரியர் தேர்ச்சி பெற்று வேலை இல்லாமல் இருப்பவர்களை இடை நிலைப்பள்ளிகளில் தமிழ் பாடம், ஆங்கிலப்பாடம், கணிதம் போன்றவை போதிக்க அமைச்சு முடிவு எடுக்க வேண்டும்.
இதுவெல்லாம் மாநாட்டில் பேசப்பட்டதா என்று தெரியவில்லை. பெரும்பாலும் ஆசிரிய பெருந்தகைகள் பதவி தவிப்பு காரணமாக மக்கள் பிரச்சனைகளை பேச அஞ்சுவார்கள். பள்ளி முடிந்து தமிழ் மாணவர்கள் பள்ளியின் தமிழ் மொழி சங்கங்களிலும் ஈடுபடுவதில்லை. ஒரு சில பள்ளிகளில் இருக்கலாம். ஆனால் அவற்றுக்கு செயல் பட மொழிக்கு திட்டமிட பண வசதியும் இக்காலத்தில் முக்கியம் என்பதை கல்வி அமைச்சு கவனத்தில் கொண்டு இடை நிலைப்பள்ளிகளில் மொழி சார்ந்த சங்ககங்களுக்கு நிதி வழங்கி ஊக்குவிக்க வேண்டும். அல்லது செடிட் JPM 50 கோடி நிதியில் தமிழ் மொழிக்கு ஒதுக்கீடு வேண்டும். சமீபத்தில் ஆசிரியர் பச்சைபாலன் SRP /SPM தமிழ் மொழி இலக்கிய பாட நூல்களை தயார் செய்துள்ளதாக அறிகிறோம் அதையும் ஆதரித்து ஆவண செய்தால் தமிழ் மொழி கல்வி இந்த நாட்டில் உருப்படும் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
மன நலம் மண்ணுயிர்க்கு ஆக்கம்
இன நலம் எல்லாப்புகழும் தரும்
வாழ்க தமிழ் வெல்க உங்கள் கடமைகள்
நன்றி ,வணக்கம்
பொன் ரங்கன்
தமிழர் தேசியம் மலேசிய
தமிழ் அறவாரியம் மலேசியா
செ. உறுப்பினர்.
Anonymous அவர்களே..உங்கள் கருத்துக்கள் சிந்திக்க மட்டும் அல்ல. செயல்படுத்தவும் உகந்தவை. இவை செவிடன் காதில் ஊதிய சங்காக போய்விடாதிருக்க சம்மந்தப்பட்டவர்கள் உடனடி நடவடிக்கையில் இறங்க வேண்டும்.