உலகில் 6000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் இருப்பதாக கூறப்படுகின்றது. இவை அனைத்தையும் விட தமிழ் மொழி சிறப்பு மிக்கது என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.
உலகின் மூத்த குடியெனப் பெயர் பெற்ற தமிழினம் பேசும் மொழி. மொழியால் இனம் பெருமை பெற்றது எனில் அது தமிழினமாகத் தான் இருக்க வேண்டும்.
உலகில் தோன்றி பல மொழிகள் அழிந்து இருந்த இடமே தெரியாமல் போக, தமிழ் மட்டும் இன்றளவும் பேச்சிலும், எழுத்திலும் நீடித்து நிலைத்து தன்னையும், தான் சார்ந்த இனத்தையும் பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறது.
ஏன் இந்த பீடிகை தொடர்ந்து படியுங்கள் புரியும்,
சும்மா… சொல்லுவோம் தமிழின் சிறப்பை, அது சரி சும்மா? என்றால் என்ன? அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான் இந்த சும்மா. பேச்சு வழக்கு சொல்லாக இருந்தாலும் தமிழ் மொழியில் உள்வாங்கப்பட்டுள்ள ஒரு வார்த்தை இது.
இந்த வார்த்தைக்கு மட்டும் 15 அர்த்தங்கள் உண்டு வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை, நாம் அடிக்கடி கூறும் இந்த சும்மா எனும் வார்த்தை எடுத்துக்காட்டும்.
அமைதியாக – சும்மா (அமைதியாக) இருங்கள் – quiet
களைப்பாறிக்கொண்டு – கொஞ்ச நேரம் சும்மா இருக்கின்றேன் – leisurely
உண்மையில் – சும்மா சொல்லக்கூடாது அருமை – in fact
இலவசமாக – சும்மா ( இலவசமாக) கிடைக்காது – free of cost
பொய் – சும்மா கதை அளக்காதே – lie
உபயோகமற்று – சும்மா தான் இருக்கின்றது எடுத்துக்கொள் – without use
அடிக்கடி – சும்மா சும்மா சீண்டுகின்றான் இவன் – very often
எப்போதும் – இவன் இப்படித்தான் சும்மா ( எப்போதும்) சொல்லுவான் – always
தற்செயலாக – ஒன்றுமில்லை சும்மா சொல்கின்றேன் – just
காலி – இந்த பெட்டி சும்மா தான் இருக்கின்றது – empty
மறுபடியும் – சொன்னதையே சும்மா சொல்லாதே – repeat
ஒன்றுமில்லாமல் – சும்மா ( வெறும்கையோடு) போகக் கூடாது – bare
சோம்பேறித்தனமாக – சும்மா தான் இருக்கின்றோம் – lazily
வீணாக – நான் வெட்டியாக (சும்மா) ஏதாவது உளறுவேன் – idle
விளையாட்டிற்கு – இதை எல்லாமே (விளையாட்டிற்கு) சும்மா தான் சொன்னேன் – just for fun
நாம் அன்றாடம் பாவிக்கும் இந்த ஒரு சொல் பயன்படுத்தும் இடத்தின்படியும் தொடரும் சொற்களின் படியும் பதினைந்து அர்த்தங்களைக் கொடுக்கிறது. சும்மாவாவது சிந்தித்தீர்களா இதனை..??
உலகில் உள்ள மற்ற மொழி அனைத்தும் வாயினால் பேச, செவிக்குக் கருத்தை உணர்த்துகின்றமை, ஆனால் தமிழ் மொழி இதயத்தாலே பேசி இதயத்தால் உணரவைக்கும் மொழியாகும்.
-http://www.tamilwin.com
சும்மா சொல்லப்படாது ! அருமையான விளக்கம் ,சும்மாவா சொன்னாங்க நம்ப தமிழ் தனித்தமிழ் !! கண்டுபிடிப்பாளருக்கு நன்றி !!!
இதை படிக்கும்போது மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது .ஆனால் பழம்பெருமை மட்டும் போதாது .இன்றைய தமிழனின் நிலை கண்டு மனம் வருந்துகிறது .இனி வரும் காலங்களில் இந்நிலை மாற நம்மில் ஒவ்வொருவரும் முயல வேண்டும் .மிதிக்கப்படும் நிலை மாறி நம் இனம் மதிக்கப்படும் நிலைக்கு உயர வேண்டும் .அதற்கு அடிப்படை தேவை நம் இந ஒற்றுமை ,அதை நாம் உரமிட்டு வளர்க்க வேண்டும் .
சும்மா சொல்லக்கூடாது. சும்மா சும்மா இது போனற செய்திகளை போட்டால் தான் சும்மா படிப்பதற்குப் பதிலாக சும்மா ஏனோ தானோ என்று படிக்க மாட்டோம்!
நன்றி சும்மா
சும்மா சொல்லக்கூடாது !! சூப்பரோ சூப்பர் !! இருப்பினும் அரசியல், பொருளாதார பலம் நம்மொழிக்கு சேர்க்கப்பட்டாலொழிய, தமிழ் சோறு போடுமா? கறி ஊற்றுமா ? என்றெல்லாம் கேள்வி கேட்கும் வேற்று மொழி பிரியர்களிடமிருந்து தப்பி அவர்களையும் அரவணைத்துக்கொன்டு வலுவுடன் நம் நாட்டில் மேன்மேலும் வளம் பெறும் நம் அருமைத் தமிழ். அதற்கான முனைப்பில் நம் இயக்கங்கள் செயல்பட வேண்டும்.
தமிழன் கண்டிப்பாக பார்க்க வேண்டிய உண்மை
https://www.facebook.com/aathiyoki/videos/1863501370553738/
சும்மா தான் சொன்னேன் நமக்கு என்று தனி நாடு இல்லை.அதனால்தான் கண்டவன் எல்லாம் சும்மா சும்மா தமிழனை தலையில் கொட்டுகிறான்.நாமும் சும்மா இருந்து விட்டு தமிழர்களை கொன்ற சிங்களவனை சும்மா வேடிக்கை பார்க்கிறோம்.துரோகி கருணாநிதியே இந்த படுகொலை எல்லாம் சும்மா என்று பேசினான்,சும்மா சொல்லக்கூடாது தமிழ்நாட்டு மக்கள் இந்த துரோகியை சும்மா நம்பி நம்பி ஏமாந்து போனோம்.இன்னும் எவ்வளவு காலம்தான் சும்மா இருக்க போகிறோம்.இன்னும் எத்னைங்காலம்தான் நம்மை சும்மா சும்மா மண்டையில் கொட்டவானுங்க .சும்மா சொன்னேன்.
அருமை! வாழ்க தமிழ்!
1. சும்மாப் படியுங்களென்றால் எப்படி. அசந்துப் போவீர்களென்று வேறு சொல்கின்றீர்கள்; நான் இன்னும் அசந்துப்போகவில்லை! சும்மா என்ற சொல்லிற்கு இத்துணை அர்த்தங்கள் சொன்னீர்களே. ஒன்றை மறந்து விட்டீர்களே! 2. அருணகிரியார் கந்தக் கடவுளுக்காக திருப்புகழ் மட்டும் பாடவில்லை; இன்னும் பலப் பாடல்கள் பாடியுள்ளார்; அதிலே ஒருப் பாடல் இப்படி வருகின்றதே. அந்தக் கந்தக் கடவுளே அருணகிரியார் சுவாமிகளுக்கு திருவுளம் கொண்டு . “சும்மாயிரு சொல்லற” என்றுப் பணித்தாரே! இதன் பொருள்தான் என்ன? யாரவது கொஞ்சம் கருணையுள்ளம் கொண்டு சொல்லுங்களேன். எல்லா வாசகர்களும் அறிந்துக் கொள்ளட்டும்.