ஹிண்ட்ராப்புக்கும் எம் ஐ விக்கும் என்ன சம்பந்தம் ?

Uthaya - Umno govt killed hindraf4ஹிண்ட்ராபின் 10 ம் ஆண்டு நினைவு நிகழ்வாக அடுத்த 2017 ஆண்டு நவம்பர் 25 தாம் தேதிதான் என்று வேதா அறிவிக்க…. மலேசியாவில் மீண்டும் ஒரு அமைதி போராட்டம் நடத்த ஹிண்ட்ராபின் ஒருங்கிணைப்பாளர் திரு வேதமூர்த்தி அறிவிப்பு செய்துள்ள வேளையில் MIV என்ற இயக்கம் தன்னிச்சையாக நாளை மறுநாள் கிள்ளான் செட்டி பாடாங்கில் ஹிண்ட்ராப்ப் 9 தாம் ஆண்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளதை MIV விளக்க வேண்டும் என்று நாடுமுழுக்க உள்ள ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் ஆவேசம் அடைந்துள்ளனர்.

ஹிண்ட்ராபின் ஐந்து போராளிகளில் மூவர் இந்நிகழ்விலிருந்து ஒதுங்கி இருக்க கணபதி ராவும் வசந்த குமாரும் இந்நிகவுலுக்கு ஏற்பாடு செய்து சம்பந்தமே இல்லாத MIV இதற்கு அரசியல் வலை விரித்து இருப்பதின் நோக்கம் என்ன என்று நாட்டிலுள்ள ஹிண்ட்ராப் சமூக பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஒரு அரசு சாரா எம் ஐ வி யின் தலைவராக MPAJ நகராண்மைக்கழக உறுப்பினரும் DAP கட்சியின் திரு சுப்பிரமணியம் பொறுப்பு வகிக்க இன்னொரு நிகராண்மைக்கழக ரைடுவும் DAP யின் சிலாங்குர் மாநில நடப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு கணபதி ராவும் இந்த நிகழ்வின் முக்கிய பங்குதாரகள் என்பது கண்கூடாகும்.

மலேசிய வரலாற்றில் அரசியல் அதிரடி சக்தியை வைத்துள்ள ஹிண்ட்ரபின் உறவு மலேசியா ஹிந்துக்களின் மாபெரும் சக்தியாக விளங்குகையில் அதன் தோற்றுநர்கள் ஆதரவாளர்கள் தொண்டர்கள் அடுத்த ஆண்டு தனது பத்தாவது அரசியல் உரிமை பதிவை செய்யும் திட்டத்தில் உள்ள வேளையில் அவசர குடுக்கையாக இடையில் ஒன்பதாவது மண் சட்டி உடைப்பது ஏன் என்று விளங்க வில்லை?

ஹிண்ட்ராபின் ஏற்ற இறக்கங்களை நாம் அறிவோம். திரு வேத மூர்த்தி பட்ட அவஸ்தை திரு உதயகுமார் அனுபவித்த அரசியல் வாழ்வியல் துயரம் ,திரு மனோகர் மலையாளம் திரு கங்காதரன் போன்றோரின் உணர்வுகளை நாம் மதிக்க வேண்டும்.

சிலாங்குர் ஆட்சிக்குழுவில் வசதியாக வாய்ப்பாக இருப்பவர் அவருக்கு உதவியாக இருப்பவர்களின் அரசியல் போகங்களை நாம் குறைக்கூற வில்லை. ஒட்டு மொத்த மலேசியா இந்தியர்களின் ஹிந்துக்களின் தமிழர்களின் இதர இனம் மதிக்க நாட்டின் ஒட்டு மொத்த நிகழ்வாக இருக்க வேண்டும் என்பதில் உரிமை கொண்டாட MIV வை தாண்டி மற்ற இயக்க இந்தியர்களுக்கும் அந்த பெருமையை தந்து இருக்க வேண்டும்.

ஹிண்ட்ராயபின் வேத மூர்த்தி துணை அமைச்சராக இருந்த போது அதிக நெருக்குதலை தந்தது DAP இந்தியன் அரசியல்வாதிகள்தாம் என்பது குறிப்பில் உள்ளது. வேறு வழியில்லாமல் தேர்தல் பேரம் பேசியது தப்பென்றும் துணை அமைச்சரரானது குற்றமென்றும் வியாக்கியானம் பேசிய அரசியல் வாதிகள் எந்த அளவுக்கு சமுதாய உரிமைகளை தேடி தோண்டி நோண்டி சாதனை செத்துள்ளார்கள் என்றால் ஆமையை காட்டி நத்தை ஊர்நத புத்தியாகத்தான் உள்ளது.

ஹிண்ட்ராப்ப்பா காட்டி ஆளும் கட்சியை காட்டி சுய அரசியல் ஆளுமையை வளர்த்துக்கொள்ளும் ஆசாமிகளைத்தான் இந்த இனம் பெற்றுள்ளது நமது விதியாக உள்ளது.
உலகமே அதிர்ந்த இயக்கமதாம் ஹிண்ட்ராப். மலேசிய இந்தியர்களை குறிப்பாக தமிழர்களை விவேகமிக்க இன போராளிகள் குவித்த நாட்டுமக்களாக நம்மை அதி உச்சியில் நிறுத்திய புகழ் இன்று பிரிவினை வியாதியால் நாம் தந்த அரசியல் பொறுப்பில் MIV போன்ற சிலரால் ஆக்கிரமிப்பு நடப்பது அரசியல் துரோகம் என்றுதான் பதிவு செய்ய வேண்டும்.

நாட்டின் இருக்கும் எல்லா இந்தியர் காட்சியாளர்களும் களம் இறங்கி போராடிய பெருமையை இன்று வாழை இலை விருந்தாளியாக ஒரு சிலர் மட்டும் ஆதரவோடு அனுபவிப்பதும் அராஜக காரிருளாக உள்ளது.

இன்று நாட்டில் ஊடூட்ட் பில் பாயவுள்ளது இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமானது என்றாலும் ஏதோ அவரு அச்சத்தில் திரியும் மலேசியா இந்தியர்கள் சீனர்கள் மத்தியில் ஹிண்ட்ராப்பின் அமைதி சோகக்காற்றை சுவாசிக்க புல்லுருவிகள் சடுகுடு ஆட விழா வழி இன உடைசல் கொட்டாங்கச்சி புகைப் போடுவது இந்தியர்களுக்கென்று இருந்த ஹிண்ட்ராப்பின் அரசியல் கலப்பு அசிங்கமாகிவிட்டதை இவர்களால் ஏன் உணர முடிவில்லை என்ற கேள்வி நம்மின் மண்டையில் சூட்டை கிளப்புகிறது.

இன வெறி ஆணவத்தை எதிர்க்க வந்த ஹிண்ட்ராப் இன்று ஒரு தரப்பு அரசியல் சாயத்தால் நம் இனப்பெருமையை அழித்தொழிக்க விடியலுக்கு வழி தெரியாமல் சிலர் மட்டும் குகை வழி வெளிச்சம் அடித்துக்கொள்ளபவர்களை மறுக்க, ஒதுக்க இனம் மீண்டும் ஒன்றுபட வேண்டும். உறவு அரசியலில் சருகாகும் மானுடம் மாறும் வரை நமக்கு விடியல் இல்லை.

ஹிண்ட்ராப் தலைவர்கள் மீண்டும் எழ வேண்டும். போலி அரசியல் மோதலில் தொண்டர்கள் அழிந்துவிடாமல் இனம் காக்க சுய நல போக்கிரிகளை துடைத்தொழிக்க கண் விழிக்க அழைக்கிறோம்.

-பொன்.ரங்கன்