இருமொழித் திட்டத்தை தவறாக கையாண்ட தலைமையாசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் மீது கல்வி அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சு அந்த திட்டத்தை தமிழ்ப்பள்ளிகள் நடத்துவதை இரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இவ்வாறு இன்று காலை செந்துல் உணவகத்தின் செய்தியாளர் அரங்கில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. முப்பது சமூக இயக்கங்களைப் பிரதிநித்த குழுவினர் மேற்கண்ட கோரிக்கையை விடுத்தனர்.
மலேசியாவில் உள்ள 524 தமிழ்ப்பள்ளிகளில் நாற்பத்தேழு (47) தமிழ்ப்பள்ளிகள் டிஎல்பி எனப்படும் இருமொழித் திட்டத்தை அமலாக்கம் செய்ய அனுமதி பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இப்பள்ளிகள் அனைத்தும் முறையான வழியில் இந்த அனுமதியைப் பெற்றனவா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
தலைமையாசிரியரின் ஆர்வத்தாலும் அல்லது பிடிஎஸ்டி(PTST) என்ற தமிழ்ப்பள்ளி திட்ட வரைவு அளித்த அழுத்தத்தாலும் இந்தப் பள்ளிகள் கல்வி அமைச்சு வரையறுத்துள்ள கோட்பாடுகளுக்கு முரணான வகையில் இதில் பங்கெடுக்க விண்ணப்பம் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
தேசியப்பள்ளிகளில் இந்த இருமொழித் திட்ட அமலாக்கத்திற்கு சில அடிப்படை அடைவுகளை கல்வி அமைச்சு நிர்ணயம் செய்துள்ளது. அவற்றை பூர்த்தி செய்யும் பள்ளிகள் மட்டுமே இதில் பங்குகொள்ள அனுமதிக்கப்படும். ஆனால், இந்த அடிப்படை அடைவுநிலைகளை எட்டாத நிலையில் உள்ள 47 தமிழ்ப்பள்ளிகள் இதில் பங்கு பெற்றுள்ளன. இந்தப் பள்ளிகளுக்கு கல்வி அமைச்சு எந்த அடிப்படையில் இந்த அனுமதியை வழங்கியது என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
அதோடு, இந்தத் திட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்கு உகந்தது அல்ல. தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் 90 விழுக்காட்டிற்கு அதிகமானோர் வீட்டில் தமிழ்மொழியைப் பயன்படுத்துபவர்கள். இந்தத் திட்டத்தால் இந்த மாணவர்களின் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களின் திறன்கள் பாதிப்படையும். அப்படிப்பட்ட நிலை உருவாகும் போது அதற்கான பொறுப்பை யார் ஏற்பது என்ற வினாவும் எழுகிறது.
பெற்றோர்களின் அனுமதி உள்ளதாக பள்ளிகள் கூறினாலும், தலைமையாசிரியர்தான் இதற்கான முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும். காரணம், தலைமையாசிரியருக்குத்தான் அந்த அடைவுநிலைகள், மாணவர்களின் தரம், ஆங்கிலமொழியில் அறிவியல் கணிதம் போன்ற பாடங்களை ஆங்கிலம் தெரியாத குழந்தைகளுக்குக் கற்பித்தலுக்கான ஆற்றல் பள்ளிக்கு உள்ளதா என்பது போன்ற தகவல் தெரியும்.
வெறுமனே ஆங்கிலமொழி மோகத்தில் ஆர்வம் கொண்டு குழந்தைகளின் மொழியாற்றலுக்கு அப்பாற்பட்ட வகையில், புரிந்துணர்வு தேவைப்படும் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களை, புரியாத ஆங்கிலமொழி வழி போதிக்க முற்படுவது குழந்தைகளின் திறன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாகவே அமையும்.
கல்வி அமைச்சு நிர்ணயத்துள்ள அடைவுநிலைகள் வருமாறு:
முதலாவதாக, அந்தப் பள்ளியில் கற்றல் கற்பித்தலுக்கு உகந்த பாடப் புத்தகங்கள், துணை நூல்கள், மேற்கோள் நூல்கள் போன்ற வளங்கள் போதுமானதாக இருக்க வேண்டும்.
இவை மிகவும் முக்கியமானவை. தமிழ்ப்பள்ளிகளில் இந்த அளவுக்கான வசதிகள் கிடையாது. மேலும், போதுமான அளவு எவ்வளவு என்பதும் தெரியாது.
இரண்டாவதாக, தலைமையாசிரியர்/ஆசிரியர் இந்த திட்ட அமலாக்கத்திற்கு தயாராக இருக்க வேண்டும். குறுகிய மற்றும் நீண்ட கால அளவிற்குப் போதுமான ஆசிரியர் தேவையை உறுதி செய்ய தலைமையாசிரியர் திட்டமிட வேண்டும்.
இதற்கு ஆங்கிலத்தில் அறிவியல் மற்றும் கணிதம் போதிக்கும் திறன் மிகுந்த ஆசிரியர்கள் வேண்டும். PPSMI இரத்து செய்ததற்கான காரணங்களில் ஒன்று இவ்வகையான ஆசிரியர்கள் இல்லாததாகும். தமிழ்ப்பள்ளிகளைப் பொறுத்தமட்டில் இவ்வகையான ஆசிரியர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், தமிழில் அறிவியல் மற்றும் கணிதம் போதிக்க தமிழ் ஆசிரியர்கள் உண்டு.
மூன்றாவதாக, பெற்றோர்கள் எழுத்துமூலமாக இந்தத் திட்டத்தில் பங்கெடுப்பதை உறுதி செய்ய வேண்டும். பெற்றோர் ஆசிரியர் சங்கம் இதற்கு ஒப்புதலும் ஆதரவும் நல்க வேண்டும்.
உண்மையான விளக்கம் பெற்றோர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. உதாரணமாக, அறிவியல் பாடத்தை கேள்வி அறிவின் வழிதான் மேம்படுத்த இயலும். ஏன்? எப்படி? எதனால்? போன்ற வினாக்களை குழந்தைகள் கேட்க வேண்டுமானால் அவர்களுக்கு முதலில் என்ன பயில்கிறோம் என்பது புரிய வேண்டும். தமிழ் மாணவர்களுக்கு ஆங்கிலம் புரியாத மொழி. அதை அவர்களால் கிரகிக்க இயலாது. எனவே கேள்விகளின் வழி அறிவாற்றலை அதிகரிக்க இயலாத சூழழில் மனனம் மட்டுமே வழிமுறையாகிவிடும்.
நான்காவதாக, முந்திய ஆண்டின் யுபிஎஸ்ஆர் தேர்வில் அந்தப் பள்ளியின் மலாய்மொழி பாடத்தின் தேர்ச்சி விகிதம், தேசிய தேர்ச்சி விகிதத்தை எட்டியிருக்க வேண்டும் அல்லது அதைவிட கூடுதலாக இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் ஜிபிஎஸ் (GPS) 1.85 ஆக இருக்க வேண்டும்.
எந்தத் தமிழ்ப்பள்ளியும் இந்த அடைவுநிலையை எட்டவில்லை.
ஐந்தாவதாக, முழுமையான தகவலுடனும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒப்புதல் கடிதத்துடனும் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
இதில் எந்த அளவு பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஈடுபட்டது என்பது ஐயப்பாடாகும். தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டு, மேற்குறிப்பிட்ட அடைவுநிலைகள் சீர்தூக்கி பார்க்கப்பட்ட பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. வீட்டில் ஆங்கிலம் பேசும் சில பட்டதாரி பெற்றோர்களின் சுயநலப்போக்கால் அவசரப்பட்டு இந்த முடிவை தலைமையாசிரியர் எடுத்திருக்கக்கூடிய வாய்ப்புண்டு, அல்லது மாணவர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதற்காக அவர் இப்படிச் செய்திருக்கலாம்.
எங்களின் கோரிக்கை:
இந்த இருமொழித் திட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்கு உகந்ததல்ல. தமிழ்ப்பள்ளியில் பயிலும் பெரும்பான்மையான (90 விழுக்காட்டிற்கும் அதிகமான) மாணவர்கள் இந்தத் திட்டத்தின் அமலாக்கத்தால் பாதிப்படைவர். குறிப்பாக தமிழ் பேசும் கீழ்தட்டு 40 (B40) மக்களின் குழந்தைகள் மேலும் பாதிப்புக்கு உள்ளாகி பின் தள்ளப்படுவர். பிபிஎஸ்எம்ஐ (PPSMI) அமலாக்கத்தின் மீளாய்வு (2008) இதைத்தான் பரிந்திரைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
1. கல்வி அமைச்சு உடனடியாக தமிழ்ப்பள்ளிகளுக்கு அளித்திருக்கும் டிஎல்பி (DLP) திட்டத்திற்கான அனுமதிகளை இரத்து செய்ய வேண்டும்.
2. இதில் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்களையும், பெற்றோர் ஆசிரியர் சங்கங்களையும் விசாரணைக்கு உட்படுத்தி, அவர்களுக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
3. இருமொழித் திட்டம் வேண்டும் என கோரும் பெற்றோர்களுக்கு பல்லின மாணவர்கள் பயிலும் வகையில் தேசியப்பள்ளிகளை உருவாக்க வேண்டும். அதில் தமிழ்மொழியை ஒரு தேர்வு மொழியாக வழங்க வேண்டும்.
4. அரசாங்கம் தேசிய கல்விக் கொள்கை வழி அறிமுகப்படுத்தியுள்ள MBMMBI என்ற மலாய் மற்றும் ஆங்கில மொழிகளை வளப்படுத்தும் கொள்கையை தமிழ்ப்பள்ளிகளில் அமலாக்கம் செய்ய வேண்டும்.
இது சார்பான ஒரு குறிப்பானை கல்வி அமைச்சிடம் சமர்பிக்கப்படும் என்றார் இந்த நிகழ்ச்சியை வழி நடத்திய வழக்கறிஞர் கா. ஆறுமுகம்.
தமிழ்ப் பள்ளி தலை ஆரிசியர்களில் எத்தனை பேர் தமிழை தாய் மொழியாகக் கொண்டிருக்காதவர்கள் என்று முதலில் கணக்கிடுங்கள் காரணம் இவர்களுக்கு தமிழ் சோறு போடுகின்றது என்ற நினைப்புக்கு கூட இல்லாமல் நடந்து கொள்கிறார்கள்.
தலைமை ஆசிரியர்கள் ஒத்துக்கொள்ளுவதற்கு வேறு சில காரணங்கள் இருக்கின்றன. கல்வி அமைச்சினால் பணி மாற்றம் செய்யப்படுவோம் என்கிற பயமும் அவர்களுக்குண்டு! இதனை ஆதரிப்பவர்கள் கல்வி அமைச்சின் பயமுறுத்தலால் தான்!
தமிழ் பள்ளிகளை படிக்கல்லாக பயன்படுத்தி இடைநிலை பள்ளிகளுக்கு சென்றவுடன் கடந்து வந்த பாதையை மறந்து விடுவதும் நம் பின்னடைவுக்கு வழிவகுக்கிறது.
SEDIK அமைத்தது எதற்கு PTST இதில் நுழைந்தது எப்படி ?
நாட்டின் தமிழ்ப்பள்ளிகளை கடடடங்களை சீரமைக்கத்தான்
sedik என்று நுழைந்து PTST யாக மாறி – DLP எனும் தமிழ்ப்பள்ளி கல்வி
போதனை திட்டத்தில் கைவைத்தது எதற்கு?
ஒரு நாட்டின் கல்வி எல்லோருக்கும் குறிப்பாக அரசின் கல்வி கொள்கை சமசீராக இருக்க வேண்டும் இதற்குத்தான் 2013 – 2025 கல்வி கொள்கை. இதில் புதிய DLP என்ற திட்டம் எப்படி புகுந்தது என்ற அறிவுப்பூர்வ கேள்வியை யாரும் கேற்கவில்லை. கலவி அமைச்சரும் துணை கலவி அமைச்சரும் பொறுப்பை தலைமை ஆசிரியரிடமும் பெற்றோர்களிடமும் விட்டு விடும் யோக்கியதை எந்த வித் விளையாட்டு? பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் என்ன உத்திரவாத கல்வி போதனை அமைச்சர்களோ ?
நாட்டின் தமிழ்ப்பள்ளிகள் ஒரு இனத்தின் மொழி கல்வி உரிமையைக்கொண்டது இதில் மாற்று மொழி ஆற்றலுக்கு
அடிப்படை மொழி மேம்பாடுதான் உத்தமம். அதற்க்கு நேரத்தை கூட்டுங்கள் என்றால் ஊமைக்குறவர்கள் முனைவர்கள் மூடிக்கிட்டு போவது ஏன் ? பாடத்தில் கை வைத்து மொழி துரோகம் என்பது
கோடரி கணையில் இன்னொரு கோடரிக்கு கணைப்போட்டு காவ கொடுப்பதுக்கு சமம். இதை தமிழனே செய்கிறான் என்பதுதான் வளர்த்து விட்ட கெடா நெஞ்சில் பாயும் அதர்ம யோக்கியதை. தமிழ் இவர்களை எங்கள் தமிழ் எங்கள் இங்குள்ள தமிழர்களுக்கு சங்கடம் என்றால் சங்காரம் ……என்று பிறகு சங்கே முழங்கும்.
மலேசியா தமிழர் சங்கம்
செயலவை உறுப்பினர்
பொன் ரங்கன். 3 / 2 /2017
முறையாக அனுமதி பெறாமல் எந்த ஒரு தமிழ்ப் பள்ளியும் இந்த டி எல் பி திட்டத்தை அமுல் படுத்தி இருக்கக்கூடிய சாத்தியமில்லை. தலைமை ஆசிரியர்களும் சராசரி மனிதர்கள்தாம் அவர்கள் DLP திட்டத்தில் அதிதீத ஆர்வம்கொண்டு சொந்த விருப்பதின் பேரில் தாங்கள் தலைமையேற்றிருக்கும் பள்ளிகளில் இதனை அமுல்படுத்த வேண்டிய அவசியமில்லை . DLP திட்டத்தில் இணைவதனால் தங்களின் பள்ளி மாணவர்களின் இடைநிலைப்பள்ளி பிரவேசம் மேலும் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணத்தினால்தான் அவர்கள் DLP திட்டத்தை வரவேற்கிறார்கள். PTST அழுத்தம் கொடுக்கவேண்டியதின் அவசியமும் இங்கு இல்லை. அதில் உள்ள அதிகாரிகளுக்கு இதனால் எந்த ஒரு லாபமோ நட்டமோ இல்லை. அவர்களுக்கும் DLP தேர்வு செய்த பெற்றோர்களைப் போலவே டி எல் பியினால் இந்திய மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்ற என்ணத்தில் தமிழ்ப் பள்ளிகளில் டி எல் பிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். கல்வி அமைச்சு வரையறுத்துள்ள கோட்பாடுகளுக்கு எதிராக தலைமை ஆசிரியர்கள் செயல்பட்டுள்ளார்கள் என்ற குற்றச் சாட்டு கண்டிக்கத்தக்கது. அப்படி அவர்கள் செயல் பட்டுள்ளார்கள் கூறுவது கல்வி அமைச்சில் உள்ள அதிகாரிகள் கையாலாகாதவர்கள், கண்மூடித்தனமாக அனுமதி அளித்துள்ளார்கள் என்பன போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. 2015ல் இந்த DLP தேசியப் பள்ளிகளில் ஆரம்பிக்கப்பட்டப் பொழுது சில தமிழ்ப் பள்ளிகள் விண்ணப்பித்திருந்தன . ஆனால் அவற்றை கல்வி அமைச்சு நிராகரித்தது. பெற்றோர்கள் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் DLP திட்டத்தித்தை தங்கள் பள்ளிகளில் நடத்த வேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொண்டதால்தான் கல்வி அமைச்சு சில நிபந்தனைகளை தளர்வு செய்து 47 பள்ளிகளில் நடத்த அனுமதி தந்துள்ளது.
DLP யை கல்வி அமைச்சு தமிழ்ப் பள்ளிகளில் திணித்தது என்பது ஞாயமாகப் படவில்லை .கல்வி அமைச்சுக்கு திணிக்கவேண்டிய அவசியமுமில்லை. அது தேசிய பள்ளிகளுக்காகவே வகுக்கப்பட்ட ஒரு திட்டம். தேசிய மொழி அல்லாத பள்ளிகள் , குறிப்பாக தமிழ்ப் பள்ளிகள் கேட்டுக்கொண்டதால்தான் அத்திட்டம் அங்கும் செயல் படுத்த அனுமதிக்கப்பட்டது என்பதுதான் உண்மை. DLP யை நடைமுறைப்படுத்தும் பள்ளிகள் அனைத்தும் தேசிய மொழியில் 1.85 என்னும் அடைவு நிலையை பெற்றிருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை ஏன் கல்வி அமைச்சு தளர்த்தியது என்பதும் கேட்கப்படுகிறது. இந்த திட்டம் முதலில் மலாய் மொழியை பயிற்று மொழியாக் கொண்ட தேசியப்பள்ளிகளுக்கு மட்டும் என்று இருந்ததனால் மலாய் மொழியில் சிறந்த அடைவு நிலை இருக்கவெண்டும் என்ற ஒரு விதி இருந்தது. தமிழ் பள்ளி என்ற வரும் பொழுது அங்கு தமிழ் போதனாமொழி என்பதனால் மலாய் மொழியில் 1.85 என்னும் அடைவு நிலை தேவையற்ற ஒன்றாகிவிடுகிறது.
தமிழ்ப் பள்ளி மாணவர்கள் 90 விழுக்காட்டினர் வீட்டில் தமிழ்தான் பயன் படுத்துகிறார்கள் என்பது உண்மை. ஆனால் இந்த மாணவர்கள் அறிவியலையும் கணிதத்தையும் ஆங்கிலத்தில் பயில்வதனால் அதன் அடைவு நிலை பாதிப்புறும் என்பது ஆய்வுக்குறியது. 50 விழுக்காடு இந்திய மாணவர்கள் இப்பொழுது தேசிய மொழிப் பள்ளிகளில் மலாய் மொழியில் பயிலும் பொழுது இவர்களுக்கு இந்த மொழிப்பிரச்சனை இல்லையா ?. ஆங்கில மொழி கற்பித்தல் மொழியாக இருந்த காலத்திலிருந்து இன்று மலாய் மொழி கற்பித்தல் மொழியாக உள்ள காலம் வரை இந்திய மாணவர்கள் தேர்வுகளில் சிறப்பான தேர்ச்சியினை அடைந்துள்ளார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. பெரும்பாலான மருத்துவர்களும் , வழக்கறிஞர்களும் இந்த மலாய் /ஆங்கில மொழி வழி கல்வி கற்றவர்கள் என்பதனை மறுக்கமுடியாது .ஆகவே ஆங்கில மொழி வரவால் கணித அறிவியல் பாடங்களின் திறன்கள் பாதிப்படையும் என்பது எற்புடையதல்ல.
.தேசிய மொழி பள்ளியிலிருந்து வரும் மாணவர்களுடன் போட்டி போடும் அளவிற்கு தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தயார் படுத்தப்படுகின்றனாரா என்பது தான் முக்கியம். DLP இல்லாத பட்டசத்தில் நமது பள்ளி மாணவர்கள் இடை நிலைப்பள்ளியில் தேசிய பள்ளி மாணவர்களுடன் போட்டியிடும் போது அவர்களின் போட்டித்தனமை வெகுவாக பாதிக்கும் என்பதனை நாம் உணர வேண்டும்.
இந்த திட்டம் தமிழ்ப் பள்ளிகளின் மானவர்களின் முன்னேற்றத்திற்கு வலு சேர்க்குமா என்பதனைத்தான் நாம் முன்னிறுத்து பார்க்க வேண்டும். தமிழ் மொழிக்கு குந்தகம் வராத வரையில் தமிழ்ப் பள்ளிகளின் அடிப்படை தோற்றமும் , அங்கு வளர்க்கப்படும் கலை , கலாச்சாரம், பண்பாடு இவைகள் பாதிப்புராத வரையில் , மாணவ்ர்களின் முன்னேற்றத்திற்காக எந்தத் திட்டம் வந்தாலும் நாம் அதனை ஆதரிப்போம்.
ஐயா அண்ணாமலை சார் வணக்கம். நீங்கள் என் கேள்விக்கு பதில் சொன்னதாகவே இதை பதிலாக பதிவிடுகிறேன். எனக்கு நீங்களா இதை எழுதினீர்கள் என்ற சந்தேகம் உண்டு. அப்படியான இனமொழி உணர்வாளர் நீங்கள். நிறைகுடம் தளும்பியது ஏன்?
மறுபடியும் கேற்கிறேன்….SEDIK அல்லது PTST கல்வி போதனைகளுக்கு பொறுப்பா ?
அப்படியே இருந்தாலும் சமூக பொறுப்புணர்ந்து ஆயிரமாயிரம் இயக்கங்கள், பெ ஆ சங்கங்களுக்கு PTST -தன் DLP தொடர்பான முன் ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்து இருக்க வேண்டும். பிஜே விவேகானந்தா பள்ளியில் DLP தெடர்பான PTST கூட்டம் எப்படியானது என்று விபரம் கண்டுபபிடியுங்கள். இந்த கூட்ட முடிவை வைத்து கல்வி அமைச்சுக்கு PTST DLP யை சிபாரிசு செய்துள்ளது துரோகம் என்கிறோம்.
நாட்டில் நடக்கும் திட்டமிட்ட நம்மின , மொழி ,பொருளாதார , அரசியல் சமூக துரோகங்களை ஒரு ஊடகவியலாளர் என்ற தகுதியில் நீங்கள் அறிந்திருக்க முடியாமல் இல்லை. இல்லை என்றால் வியப்புதான். அல்லது எதோ சுயநலம் உங்கள் குருதியில் குடிக்கொண்டானா விபத்தை தமிழின ரத்தமாக பார்க்கிறேன்.
தமிழ்ப்பள்ளிகள் தமிழ்மொழிக்கு என்பதில் உங்களுக்கு மாற்று கருத்து எப்படி வந்தது ? கல்வி அமைச்சும் அரசும் தமிழ்ப்பள்ளியின் உரிமையை பிடுங்க எத்தனிக்கவில்லை என்ற உறுதியை PTST சும் உங்களைப்போன்ற தமிழால் வாழும் கற்றவர்களும் உறுதி செய்ய முடியுமா ?
நான் முன் எழுதிய கல்வி DLP போதனை முறையை, முடிவை,பொறுப்பை பெற்றோர்களிடம் MOE விட்டுவிடுவது என்ன நியாயம் ?
உங்கள் வழிக்கே வருகிறேன் அமுலாக்கம் பெற்ற 47 தமிழ்ப்பள்ளிகளில் DLP கான அடிப்படை வசதிகள், DLP விதிக்கான
முன் வரைவு திட்டமில்லை என்பது உங்களுக்கு தெரியுமா ? கணிதத்தையும் ஆங்கிலத்தையும் போதிக்க பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா ?
SEDIK அல்லது PTST பள்ளி மேம்பாட்டுக்கு நிதி கொடுக்கிறது என்பதற்காக நம தமிழ்ப்பள்ளிகளின் தமிழ், தமிழர் என்ற
உரிமையை உங்கள் கோணத்தில் விட்டுகைகொடுக்க முடியுமா ?
sk பள்ளிகளில் படித்த நம் மாணவர்களின் பாசார் மலம் தமிழ் நீங்கள் கேட்டதில்லையா ? நாட்டில் இதுவரை 10 ஆயிரம் தமிழ் ஆசிரியர்கள் தமிழில்தானே கணிதமும் அறிவியலும் கற்று ஆசிரியர்களானார்கள் ஆக இவர்கள் போதனை தப்பு என்று சொல்ல வருகிறீர்களா ?
நம் காலத்தில் மதிப்பெண் பெறல் அவசியமானது , ஆனால் இன்று உலகவிய கல்வி மதிப்பெண் என்பது இல்லை. merit நிலைக்கு இந்த புடவியின் அகண்ட உலக வாழ்க்கையின் பட்டறிவுக்கு மனிதனை மாந்தன் உருமாற்றம் பெற தொழில் திறனுக்கு திட்டமிட்டுள்ளான். நாட்டின் INTEGERSAI NATIONAL ஒரு மொழியில் அல்லது ஆங்கிலத்தில் மட்டும் வருவதில்லை. அது தாய் மொழியில் உணர்ந்து உணர்ச்சியில் பதிய வேண்டும். மாறாக வேற்று மொழியில் மனனம் வழி ஒப்புவித்தல் கல்வி சந்தையில் கூவி விற்கும் வேற்று மொழி போதையில் நிலையற்றதாகிவிடும். இது நமது கலாச்சாரமல்ல என்பதை நீங்கள் எப்படி உணர மறந்தீர் என்பது எனக்கு மண்டைக்கொடைச்சலை தந்துள்ளது.
பொதுவாக SEDIK என்ற நம்து அரசு பணம் நமது பல இயக்கங்களுக்கு நிதி கொடுத்து வசதிக்கு agenda போட்டு ந்மம்மவர்களை மூளைச்சவரம் செய்வதாக நம்புகிறேன். பள்ளிகளுக்கு வேண்டியதை முன் கூட்டியே திட்டமிட்டு விண்ணப்பிக்க தெரியா தலைமை ஆசிரியர்கள் வசதிக்கு சுலப விலை போவது, சமுதாயத்தை அடிமையாக்கி உரிமையை விற்று கடமையை அடகு வைக்கும் போக்கு மாற வேண்டும்.
எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள் சுய உணர்வில் எழுதியதாக எனக்குப்படவில்லை. 2015 ல் 100 மில்லியன் /2016 ல் 50 மில்லியன்
2017 ல் 50 மில்லியன் ஆக 200 மில்லியன் தமிழ்ப்பள்ளிகளுக்கு கட்டடம் கட்ட கொடுத்தது. சமுதாயத்தை நம் மொழியை அடிமைப்படுத்த அல்ல! நம தமிழ் மொழியின் மேம்பாட்டுக்கு SEDIKIN அல்லது PTST யின் நீண்ட கால திட்டம் என்ன என்பதை இந்த தமிழர் சமுதாயம் அறிய ஆவலாக உள்ளது ? அந்த PTST யின் திட்டமிடல் மஞ்சள் மடல் கிடைக்குமா ?
TN 50 எனும் நாட்டின் புதிய 30 ஆண்டிற்க்கான உருமாற்று திட்டத்திற்கான திட்டத்தில் தமிப்பள்ளிகளில் இன்னும் மதிப்பெண் பரிச்சையை மேயாமல் கற்றல் திறன், தொழில் திறன் கொண்ட இடமாக மாற்ற அதிகாரத்துவ அதிகாரிகள் எடுக்கும் சம்பளத்துக்கு முடிக்கிடக்கும் பூட்டை திறக்க சரியான சாவி செய்ய பயில வேண்டும். வெறும் விழா எடுக்கவும் பூஜை போடும் காலங்கள் மாற வேண்டும்.
நாட்டில் இன்னும் 200 தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் பலர் பள்ளிகள் இல்லை. மலாயையும் , ஆங்கிலமமும் அங்கே ஆரபிக்க இந்த அறிவாளிகளுக்கு ஏன் எட்டவில்லை. எல்லாப்பள்ளிகளுக்கும் பாலர் பள்ளிகள் அவசியமென்று அரசும் கல்வி அமைச்சும் அறிவித்து ஆண்டுகள் பல சமாதியானது. நாட்டின் பல்லின சமத்துவத்தை கருத்தில் கொண்டு COMMON SCHOOL SYSTEM உருவாகும் வரை நாம் போராட வேண்டியதுதான். இதில் சந்தர்ப்ப வாதிகள் கல்விக்கு வியூகம் செய்யுமுன் தமிழ் மொழிக்கு வறட்சி உண்டாக்காமல் இருந்தால் போதும்.
பொன் ரங்கன்
தமிழர் சங்கம் மலேசியா
தமிழர் தேசியம் மலேசியா
செ. உறுப்பினர்
4 / 2 / 2017
2013 றில் கீழே இப்படியெல்லாம் குத்துதே குடையுதே என்று கல்வி அமைச்சை வசைப்பாடிய திரு அண்ணமலை . இன்று DLP கு கொக்கரிக்க காரணம் என்ன ? டல்ப் யை வைத்து இந்த தமிழ் இனத்தின் மொழியை ஒழிக்க திட்டமிட்டுள்ள கையகம் இவருக்கு புரியாமல் போனது என்ன காரணம்.
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே –
கோவிந்தசாமி அண்ணாமலை
Monday, Jul 8, 2013 2:40 pmமக்கள் கருத்து26 comments
govinthasamy annamalaiநமது கல்வி அமைச்சர் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது கூறியவை இவை
* கல்வி சார்ந்த விவகாரத்தில் அரசாங்கம் இந்திய மாணவர்களை ஏமாற்றவில்லை.
* கடந்த ஆண்டு 1500 இடங்கள் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டது. இந்த ஆண்டும் அதே போல 1500 இடங்கள் பூர்த்தி செய்யப்படும்.
* இந்திய மாணவர்களின் கோட்டாவை பூர்த்திசெய்வதற்காக 92 முதல் 95 விழுக்காடாக இருக்கும் விண்ணப்பத்தகுதியை குறைக்க வேண்டிய நிலைக்கு கல்வி அமைச்சு ஆளாகியிருக்கின்றது.
* மாணவர்கள் எண்ணிக்கை குறைத்துள்ளதற்கான காரணம் பெரும்பாலான இந்திய மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை.
* சரியானவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் வின்ணப்பங்களை சல்லடை செய்துள்ளோம். அதில் பெரும்பான்மையோர் விண்ணப்பத் தகுதியை பூர்த்தி செய்திருக்கவில்லை என்பதுதான் உண்மை.
* ஆனால் கொடுத்த வாக்குறுதிகளை நிறவேற்றுவதற்காகவும் கோட்டாவை பூர்த்தி செய்வதற்கு ஏதுவாகவும் கல்வி அமைச்சு செயல் பட்டுக்கொண்டிருக்கின்றது.
முதலில், சென்ற ஆண்டு 1,500 இடங்கள் பூர்த்தி செய்யப்பட்டு விட்டது என்ற கல்வி அமைச்சர் கூறியது இன்று வரை உறுதிப்படுத்தப் படாமலேயே இருக்கின்றது .
இன்னுமொறு குற்றச்சாட்டும் கல்வி அமைச்சர் சொன்ன செய்தியில் இருக்கின்றது. அதாவது தகுதியுள்ள இந்திய மாணவர்கள் குறைவாக இருப்பதால் , நுழைவுத் தகுதியைக் குறைத்து அதிக இந்திய மாணவர்கள் சேருவதற்காக கல்வி அமைச்சு செயல் பட்டுக்கொண்டிருக்கின்றதாம்.
இதில் விந்தையென்னவென்றால், கல்வி அமைச்சு மிகவும் உயர்ந்த தேர்ச்சி அடைந்த மாணவர்களை மட்டுமே மெட்ரிகுலேசனில் சேர்க்கும் இலக்கைக் கொண்டுள்ளது என்பதுதான்.
உண்மையில் மெட்ரிகுலேசன் என்பது 2 பிரிவுகளாக செயல் படுகிறது என்பது எத்தனை வாசகர்களுக்கு தெரியும்?
ஒன்று 1 வருட படிப்பு , மற்றொன்று 2 வருட படிப்பு. 2 வருட படிப்பு என்பது பூமிபுத்ரா மாணவர்களுக்கெனவே ஒதுக்கப்பட்டுள்ளது. 1 வருட படிப்பில் பூமி புத்ரா/ பூமிபுத்ரா அல்லாத மாணவர்கள் பயிலாலாம். SPM நன்கு தேர்ச்சி பெறாத மலாய் மாணவர்களுக்கு அவர்கள் மட்டுமே இந்த 2 வருட படிப்பை பயிலமுடியும்.
கல்வி அமைச்சர் பேசிய பேச்சிலிருந்து, இந்திய மாணவர்கள் மட்டுமே மெட்ரிகுலேசனில் சேர தகுதியான மதிப் பெண்களைப் பெற்றிருக்கவில்லை, ஆகவே அவர்களுக்காகவே இந்த தகுதி தளர்த்தப் படுகிறது என்கின்ற ஒரு குற்றச்சாட்டு தெரிகிறது. உண்மையில் இந்த தகுதித் தளர்வு மாலாய்க்கார மாணவர்களுக்கு ஏற்கனவே உள்ளது என்பதனை அவர் சொல்லவில்லை..
ஆகவே மெட்ரிகுலேசன் என்பது சிறந்த மாணவர்களுக்கென உருவாக்கப்பட்டதல்ல மாறாக மலாய் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல ஒரு குறுக்கு வழியாக உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகின்றது. STPM தேர்வு கடிமானதாலும் அது பொது பரிட்சை என்பதாலும் , அதிகமான மலாய் மாணவர்கள் அந்தப் பரீட்சையில் தோல்வி காண்பதாலும் அரசாங்கம் மெட்ரிகுலேசன் கல்வி வழி , அவர்களை பல்கலைக் கழகத்திற்கு அனுப்புகிறது என்பதுதான் உண்மை.
அந்த சலுகை துன் மஹாதீர் அவர்களின் கருணையால் நமக்கும் இடையில் வழங்கப் பட்டது. நிலவரம் இப்படி இருக்க கல்வி அமைச்சர் நமது இந்திய மாணவர்கள் அதற்குறிய தகுதியைக் கொண்டிருக்கவில்லை , ஆகவே நுழைவுத் தகுதி தளர்த்தப் படுகிறது என்று கூறி நமது மாணவர்கள் மட்டுமே குறைபாடு உள்ளவர்களென்று குறி வைத்து மட்டம் தட்டுகிறார்.
பரவாயில்லை , போகட்டும் அவர் சொல்வது போல இந்திய மாணவர்கள் போதிய தகுதிகளைப் பெற்றிருக்க வில்லை என்ற வைத்துக் கொள்வோம் . இப்படி தகுதி குறைந்த இந்திய மாணவர்களையும் அந்த 2 வருட படிப்பில் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதானே ? இந்திய மாணவர்களுக்கு உதவேண்டும் என்று 1500 இடங்களை ஒதுக்கிய நீங்கள் அதைச் செயல் படுத்த உங்களிடம் வழி (2 வருடம் படிப்பு) இருந்தும் ஏன் அப்படிச் செய்யவில்லை ?
சிறந்த மாணவர்கள் ஒரு வருட படிப்பிற்கும் , தகுதி குறைந்த மாணவர்கள் 2 வருட படிப்பிற்கும் தேர்வு செய்யப்பட்டு கோட்டாவை நிரப்பி இந்தியப் பெற்றோர்களின் மனதையும் குளிர வைத்திருக்கலாமே ? பிரச்சனைகள் இந்த அளவு பூதகரமாக வெடித்து மக்கள் அரசாங்கத்தின் மேல் உள்ள நம்பிகை மேலும் குறையாமலாகிலும் இருந்திருக்குமே !
மலேசிய அரசாங்கம் இந்தியர்கள் மேல் உள்ள கரிசனம் இவ்வளவுதான் என்று இவ்விடயத்தில் தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது. நாடாளும் அரசியல் வாதிகள்,ம.இ.க, ஐ.பி.எப், கெராக்கான் உட்பட இந்த அரசை பரிவுமிக்க அரசு , மக்களுக்கு முன்னுரிமைக் கொடுக்கும் அரசு என்றெல்லாம் புகழ்ந்து பேசுவார்கள். ஆனால் அடிமட்ட தமிழனின் உரிமைகள் பறிபோகும் போது இந்த அரசியல்வாதிகளின் செயல் என்றுமே முழுமையாக இருந்ததில்லை.
இது வருடா வருடம் வானத்தில் எழும் புகை மூட்டம் போல வந்து போகின்ற ஒன்றுதான். பேற்றோர்களும் மாணவர்களும் ஆய் ஊய் என்று ஓரிரண்டு மாதம் கத்துவார்கள் , பின்பு எல்லாம் அடங்கி ஓய்ந்து , இடம் கிடைக்காத மாணவர்கள் நொந்து வெந்து அரசாங்கத்தை வைது, விதி வழி என்று கிடைத்த துறையை பெற்றுக்கொண்டு போய்க்கொண்டே இருப்பார்கள்.
பெரும்பாலான இந்தியர்களை இது பாதிக்க வில்லை என்பதனால் அவர்களும் இதை வெகுவாக கண்டு கொள்வதில்லை.
இதைப்பற்றி அக்கறை எடுத்துக் கொள்வதெல்லாம் சில அரசுசாரா அமைப்புகளும் ஒரு சில எதிர்க்கட்சி தலைவர்கள் மட்டுமே ! அந்த வகையில் மலேசிய இந்தியக் கல்வி சமுக விழிப்புணர்வு கழகத்தின் தலைவர். ஆ.திருவெங்கேடம் அவர்களின் பங்கு அளப்பறியது .
அவருடன் சேர்ந்து எதிர்க்கட்சியில் உள்ள மாண்புமிகு குலசேகரனின் அரசுக்கு கொடுக்கும் குடைச்சலும் பாராட்டக் கூடிய ஒன்று. . இவர்கள் பத்திரிகைகளில் மூலமும் , ஆர்ப்பாட்டங்கள் மூலமும் கொடுக்கின்ற அழுத்தங்களால் இந்த அரசு சிறிது அசையத் தொடங்கியுள்ளது.
அதன் விளைவே கல்வி அமைச்சர் நாடாளுமன்றத்தில் கொடுத்த விளக்கம். அதன் பின்னரே துணைக் கல்வி அமைச்சர் திரு கமலநாதன் அவர்கள் இந்திய மாணவர்கள் எத்னைப் பேருக்கு கிடைத்துள்ளது என்பதனை கேட்பவர்களுக்கு காண்பிபேன் ஆனால் பத்திரிகைகளில் வெளியிடமுடியாது என்று எதோ அவருடைய அப்பன் வீட்டுச் சொத்தை அள்ளிக் கொடுப்பது போல் அறிக்கை விட்டுள்ளார்.
மெர்ட்ரிகுலேசனில் மாணவர் சேர்ப்பு முடிந்து எறக்குறைய 6 வாரங்கள் மேல் ஆகியும் , நமது மாணவர்களின் என்ணிக்கை மட்டும் இன்னும் தெளிவாகத் தெரியாத பட்சத்தில் , இனிமேலும் இடம் கொடுத்து நம் மாணவர்கள் என்னதான் செய்யப் போகின்றார்களோ என்ற சலிப்பும் நம் மனதில் தோன்றாமல் இல்லை.
புதிதாக செய்தி ஒன்று விட்டிருக்கின்றார் துணக் கல்வி அமைச்சர் மாண்புமிகு கமலநாதன் அவர்கள். 1142 மாணவர்கள் மெட்ரிகுலேசனில் பதிந்து கொண்டிருக்கின்றார்களாம் ,. மீதம் 358 இடங்களை இந்திய மாணவர்களுக்கு ஒதுக்கும்படி துணைப் பிரதமர் அலுவலகத்தில் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாம் .
அப்படியென்றால் ,துணப்பிரதமர் நாடாளுமன்றத்தில் , 1500 இடங்கள் இந்தியர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்று சொன்னாரே . அது பொய்யா ? கல்வி சார்ந்த விவகாரத்தில் அரசாங்கம் இந்திய மாணவர்களை ஏமாற்றவில்லை என்று சொன்னதும் பொய்யா?
துணைப் பிரதமர் 1500 இடங்கள் என்று அறிவித்தப் பின்னர் அதை அமுல் படுத்துவதுதானே அரசாங்க அதிகாரிகளின் வேலை. அதற்குண்டான வழி முறைகள் ஏற்கனவே இருக்கின்றனவே ?
இப்பொழுது கமலநாதன் அவர்கள் 358 இடங்களுக்கான பட்டியலொன்றைச் சமர்ப்பித்திருகின்றேன் என்றால் , அமைச்சின் அதிகாரிகள் துணப்பிரதமர் உத்தரவை செயலாக்கம் காணத் தவறிவிட்டனர் , ஆகையால் நமது துணைக் கல்வி அமைச்சர் அதனை பூர்த்தி செய்ய கல்வி அமைச்சர் அலுவலகத்தை நாடி இருக்கின்றார்.
அப்படியென்றால் ,அரசு சொன்ன வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று தானே அர்த்தம். அரசு அதிகாரிகள் செய்ய வேண்டிய வேலைகளை கமலாநாதன் ஏன் செய்து கொண்டிருக்கிறார் ?
பத்திரிக்கை நிருபர்களிடம் எந்த பட்டியலைக் காண்பித்தார் ? அதில் என்ன இருந்தது ? யாராவது பார்த்து அதன் உள்ளடக்கத்தை உறுதி செய்யதார்களா? பட்டியலை நிருபர்களிடம் காண்பித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா ?
அதை பத்திரிகைகளில் அல்லது இணையத்தில் வெளியிட வேண்டியதுதானே ? மக்களே தீர்மானிக்கட்டும் அதில் எவ்வளவு உண்மை இருக்கிறதென்று. ஏன் இந்த கண்ணாம் பூச்சி விளையாட்டு ?
மெட்ரிகுலேசன் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு 6 வாரங்கள் ஆகிவிட்டன. நாட்கள் ஒவ்வொன்றாக நகர நகர இழப்பு நமது மாணவர்களுக்குத்தான் என்பதனை கமலாநாதன் உணருவாரா ? இந்த இழப்பிற்கு ஈடு செய்ய அவரால் என்ன செய்யமுடியும்?. இன்னும் எத்தனை காலம்தான் நாம் ஏமாந்து வாழவேண்டும் ?
அரசு எப்பொழுது மக்கள் எல்லோரும் தனக்குரியர் என்று கருதுகின்றதோ அன்று தான் நமக்கு விடிவெள்ளி போலும் .
கோவிந்தசாமி அண்ணாமலை
தஞ்சோங் மாலிம்
7-07-2013
SHARE THIS STORY :
வணக்கம் திரு பொன்ரங்கன் அவர்களே !
நான் அன்று எழுதியதை இன்றும் அச்சுக் குலையாமல் அப்படியே பதிவிறக்கம் செய்தமைக்கு நன்றி. நானே மறந்து போன ஒன்றை நீங்கள் நினைவில் வைத்துள்ளீர்கள் . உங்கள் அபார ஞாபக சக்திக்கு என் பாராட்டுக்கள்.
ஆனால், நீங்கள் இப்பொழுது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட நினைப்பதாக எனக்கு தோன்றுகிறது. மெட்ரிகுலேஷனுக்கும் டி எல் பிக்கும் என்ன சம்பந்தம் ? அது வேறு விஷயம், இன்று நாம் விவாதிக்கும் விஷயம் வேறு . இரண்டிலுமே என்னுடைய நிலைப்பாடு ஒன்றுதான். இந்திய மாணவர்களின் கல்வி வழி முன்னேற்றம் அடைய வேண்டுமென்பதுதான். அன்று மெட்ரிகுலேஷனில் அதிகமான இந்திய மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தேன் , இன்று அதே இந்திய மாணவர்கள் கல்வியில் போட்டித்தன்மை உடையவர்களாக இருக்க வேண்டும் என்று எழுதுகிறேன். என்னுடைய நிலைபாட்டில் நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். நீங்கள் தமிழ் மேல் உள்ள அதிதீத பற்றால் சிறிது குழம்பி போய் இருக்கின்றீர்கள் என்று நினைக்கிறேன். அன்று மெட்ரிகுலேஷனுக்காக துணை அமைச்சர் அதிகம் செய்யவில்லை என்று சாடினேன். அது உண்மையென பலரைப் போல எனக்கும் பட்டது . ஒரு இந்தியன் அதுவும் தமிழன் என்ற முறையில் என் சமுதாயத்திற்கு நான் செய்ய நினைத்ததை எழுத்தால் வடித்தேன். அது அன்று, இன்று டி எல் பி விஷயத்தில் துணை அமைச்சரை சாட என்ன இருக்கிறது ? உங்களைச் சார்ந்த கூட்டம் டி எல் பி யை எதிர்ப்பதைப்போல் அதை ஆதரிக்கவும் ஒரு கூட்டம் இருக்கிறது . அந்தக் கூட்டம் கல்வி இயக்குனரிடம் டி எல் பி தமிழ் பள்ளிகளுக்கும் தேவை என்றது. அதன் பின் முறையாக பெற்றோர்களின் விருப்பதிற்கிணங்க டி எல் பி 47 தமிழ்ப்பள்ளிகளில் நடத்தப்படுகிறது. இதற்கு நான் ஏன் துணை அமைச்சரை சம்பந்தப்படுத்த வேண்டும் ? அரசு எந்த திட்டத்தை கொண்டுவந்தாலும் அதை எதிர்ப்பதே உங்களுடைய கடப்பாடாக இருக்கும் போலிருக்கிறது. என்னுடைய நிலைப்பாடு அதுவல்ல. போட்டிகளும் சவால்களும் நிறைந்த இந்தக் காலக்கட்டத்தில் தமிழ் மாணவர்கள் டி எல் பி வழி பயன்அடைவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதோடு இத்திட்டத்தினால் தமிழ்ப் பள்ளிகளுக்கு பல சிக்கல்கள் வரும் என்று நானும் உணர்கிறேன். பிரச்சனைகளை களைவதற்காகன முயற்சியில் இறங்குவதுதான் உசிதமே தவிர ஒரே அடியாக டி எல் பி யே வேண்டாமென்று அடம் பிடிப்பது தமிழ்ப்பள்ளியையே தங்களின் முதன்மைத் தேர்வாக கொண்ட 50% இந்திய மாணவர்களுக்கு செய்யும் தீங்காகும் என்பது என் கருத்து.
கோவிந்தசாமி அண்ணாமலை …
1. இத்திட்டத்தினால் தமிழ்ப் பள்ளிகளுக்கு பல சிக்கல்கள் வரும் என்று நானும் உணர்கிறேன். பிரச்சனைகளை களைவதற்காகன முயற்சியில் இறங்குவதுதான் உசிதம் என்றால் என்ன உமது அர்த்தம்? முதலில் எதிரி நம் முதுகில் குத்தட்டும் பிறகு அந்தக் காயத்துக்கு மருந்து போட்டுக் கொள்ளலாம் என்று சொல்கிறீர்களா?
2. ஒரே அடியாக டி எல் பி யே வேண்டாமென்று அடம் பிடிப்பது தமிழ்ப்பள்ளியையே தங்களின் முதன்மைத் தேர்வாக கொண்ட 50% இந்திய மாணவர்களுக்கு செய்யும் தீங்காகும் என்பது என் கருத்து, அப்படியானால் இதுவரை தமிழ்ப்பள்ளிகளில் படித்த அனைவரும் தீங்கு இழைக்கப்பட்ட்வர்களா?
3. ரசாக் கல்விக் கொள்கை ஏற்புடைதாகத்தானே இத்தனை காலமும் இருந்தது? இப்போது உங்களைப் போன்றவர்கள் டி.எல்.பி.க்கு ஆதரவுக் கரம் நீட்டுவது ஏன்? இது எஞ்சிய 50% இந்திய மாணவர்களுக்கு செய்யும் தீங்காகாதா?
பாதகங்களை விட சாதகங்கள் அதிகம் என்பதால் அப்படி சொன்னேன். ஆங்கிலம் வழி அறிவியல் கணிதம் கற்பதனால் இடை நிலைப்பள்ளிகளில் சுலபமாக இந்திய மாணவர்கள் தேசியப்பள்ளிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு இணையாக அந்த இரு பாடங்களிலும் சிறப்பாக சாதிக்க முடியும்.
வருகின்ற வாய்ப்பை பயன் படுத்த தவறினால் அதனால் பாதிக்கப்படுவது தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் 50% மாணவர்கள். மாணவர்கள் சுயமாக முடிவு செய்ய இயலாத பட்சத்தில் பெற்றோர்கள் அந்த முடிவை செய்துள்ளார்கள். அவர்களின் சொந்த முடிவில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. உடன் படாதவர்கள் டி எல் பி இல்லாத பள்ளிகள் கல்வியைத் தொடர வாய்ப்பு உள்ளது.
மிஸ்டர் ஜோக்கர் கேட்ட ஜோக்கான கேள்விக்கு பதில் இதுதான்.ராசாக் திட்டத்தை நீங்களோ நானோ கொண்டுவந்தது அல்ல அது அராசாங்கதின் கொள்கை . டி எல் பி யும் அரசாங்கதின் திட்டம் .முன்னதிற்கு ஆதரவு பின்னதற்கு எதிர்ப்பா? என்ன லாஜிக்கோ !
கோவிந்தசாமி அண்ணாமலை wrote on 7 February, 2017, 9:51
சார் உங்கள் DLP கட்டுரைக்கான என் கேள்விகளுக்கு பதிலை
காணோம் …பூசி மொழுகி DLP எதிர்ப்புக்கு கருப்பு சாயம் பூசிவிடீர்கள்.
இன்று SK பள்ளிகளில் படிக்கும் தமிழ் மாணவர்களின் தமிழை கேட்டதுண்டா ? PT பாரங்களில் தமிழ் பாடங்கள் இல்லாத தமிழ் மாணவர்கள் தவிப்பு அறிவீர்களா ? தமிழ் பள்ளிகள் தமிழ் படங்களாகவே இருக்க வேண்டும் என்பதில் உங்களுக்கு என்ன கடுப்பு ? ஆங்கில மலாய் அடிப்படை சிறப்பா இருக்க அதிகம் நேரம் மொழி வளத்தை வளர்க்கும் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா ? DLP ஒரு இனத்தின் மீதான மொழி மோசடி .அழிப்பு .. “மன நலம் மண் உயிக்கு ஆக்கம் இனம் நலம் எல்லாப்புகழும் தரும்? ..வேண்டாம் என்கிறீர்களா ? மொழி இல்லாத இனமா > திருவண்ணாமலை சிவனுக்கே வெளிச்சம் .ஓம் நம சிவாயர் !!!!!!
அரசாங்கம் கொண்டு வந்ததோ ஆட்டுக்குட்டி கொண்டு வந்ததோ…நியாயம் என்று பட்டால் ஆதரவு…சரியெனப்படாவிட்டால் எதிர்ப்புதான்,…எனவே இந்த லாஜிக் உங்களுக்கு (கோவிந்தசாமி அண்ணாமலை) புரிய வேண்டிய அவசியமோ கட்டாயமோ இல்லை. இல்லை. புரிந்தும் நல்லது எதுவும் நடந்து விடப் போவதும் இல்லை. எங்கள் தமிழ்ப்பள்ளிகளை தமிழ்ப்பள்ளிகளாகவே வாழ விடுங்கள் என்று தான் அரசாங்கத்திடம் கோரிக்கையும் இந்த எதிர்ப்பும்..! யாரோ சிலருக்கு அந்த டி.எல்.பி. கொள்கை பிடித்திருக்கிறது என்றால் தாராளமாக தமிழ்ப்பள்ளி அல்லாத பள்ளிகளில் இணந்து கொள்ளலாம். யாரும் தடுக்கவில்லை. அன்று மெல்ல மெல்ல ஆங்கிப்பள்ளிகள் அகற்றப்பட்டதனால் இன்று ஆங்கில மொழி அறிவும் எந்த அளவுக்கு தாழ்ந்து விட்டது (அல்லது ‘உயர்ந்து விட்டது..!) எனும் உண்மையை அறிந்து பயப்படும் எந்த பெற்றோரும் இந்த திட்டத்துக்கு ஆதரவு தர தயங்குவார்கள்.