உலக மக்களின் தாய்மொழிகளுக்கு அங்கீகாரம் அளித்து அவற்றை மாணவர்களின் முதல் போதனை மொழியாகப் பயன்படுத்தப்படுவதற்கும், வேற்றுமையில் ஒற்றுமை காண்பதற்கும், தாய்மொழி அடித்தளமாக அமைய வேண்டும் என்பதற்காகவும் ஐக்கிய நாட்டு மன்றம் பெப்ரவரி 21 ஆம் தேதியை அனைத்துலகத் தாய்மொழி நாள் என்று அறிவித்தது.
உலக மக்கள் பயன்படுத்தும் அனைத்து தாய்மொழிகளையும் அழிவிலிருந்து காப்பாற்றி அவற்றை பாதுகாக்க வேண்டிய கடமையை ஐநா அதன் உறுப்பிய நாடுகளிடம் அளித்துள்ளது. அந்நாடுகளில் மலேசியாவும் அடங்கும்.
மலேசிய அரசாங்கம் அனைத்துலகத் தாய்மொழி நாள் பற்றி அக்கறை காட்டவில்லை. ஆனால், தாய்மொழியின் முக்கியத்துவம், அதன் பாதுகாப்பு மற்றும் அதன் பயன் ஆகியவற்றில் அக்கறை கொண்டுள்ள தமிழ் அறவாரியம் போன்ற அரசு சார்பற்ற அமைப்புகள் அனைத்துலகத் தாய்மொழி நாளை கொண்டாடி அதனை நாட்டு மக்களின் கவனத்திற்கு கொண்டுவரும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. அதோடு போராடியும் வருகின்றனர். அவர்களுக்கு பாராட்டுகள்.
2002 ஆம் ஆண்டு முதல் ஆரம்பப்பள்ளிகளில் தாய்மொழியில் கணிதமும் அறிவியலும் போதிக்க வேண்டியதின் கட்டாயத்தை வலியுறுத்திய போராட்டம் நடத்தி 2012 இல் வெற்றி பெற்றோம். ஆனால், இன்று மற்றொரு உருவில் அந்தப் பிரச்சனை தலைதூக்கியுள்ளது. ஆங்கிலமொழி மோகமும் தாய்மொழியில் கணிதமும் அறிவியலும் கற்க இயலும் என்ற நம்பிக்கை அற்றவர்களும் இன்று மல்லுக்கட்டிக்கொண்டு தாய்மொழிக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்படுவது வேதனையாக உள்ளது.
அதோடு தமிழ்க் கல்வி பயின்று, அதன் வழி தமிழ்ப்பள்ளிக்கு வரப்பிரசாதமாக செயலாற்றி அதை மேலும் வலுப்பெறச்செய்யும் சூழலில் உள்ள சில தலைமை ஆசிரியர்கள், கணிதம் அறிவியல் பாடங்கள் ஆங்கிலமொழியில் வேண்டும் என வாதிடுவது அதிர்ச்சி அளிக்கிறது.
இவர்களுக்கு என்ன வந்தது என்றுதான் வினவத்தோன்றுகிறது. தமிழ்மொழி மீது நம்பிக்கையற்று விட்டதா? அதில் ஆற்றல் இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார்களா? இவர்கள் இந்தச் சிந்தனையை மாற்றிக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் தமிழ்க் கல்விக்குப் பாதுகாப்பு கிடைக்கும்.
1980-களில் சீன அமைப்புகளின் கட்டமைப்பில் உள்ள அரசாங்க இடைநிலைப்பள்ளிகளுக்கு சீனமொழி கற்காத சீனர்களைத் தலைமை ஆசிரியர்களாக ஏற்க அந்தச் சமூகம் மறுத்தது. அவர்கள் வெகுண்டெழுந்தனர். ஆனால், நமது நிலைமை கோடாரியே காம்பை வெட்டிய நிலைக்கு ஆளாகிவிடக்கூடாது.
ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால் அதன் மொழியை முதலில் அழிக்க வேண்டும். தன் காலத்தில் ஆங்கிலேய ஆதிக்கத்தை பார்த்த மகாகவி பாரதியார் ஒரு பாடலில் “மெல்ல தமிழ் இனி சாகும் என ஒரு பேதை கூறுகிறான்” என்று தனது கலக்கத்தை வெளிப்படுத்தினார்.
அதைத் தடுப்பதற்கான வழிமுறையாக, “எட்டுத் திக்கும் செல்வோம் கலை செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்கு சேர்ப்போம்!” என்று தமிழில் ஆற்றல் கொண்ட படைப்புகளும் சிந்தனைகளும் உருவாக்கப்பட வேண்டும் என்ற ஆவேசத்தை தமிழ் மக்களுக்கு விட்டுச் சென்றார்.
மொழிதான் கடந்தகால உலகத்தை நம் கைகளில் தந்துள்ளது; நமது உலகை வருங்கால சந்ததிகளிடமும் சேர்க்க உள்ளது. எனவே, நாம் இருப்பதையும் இழப்பது மடமையாகும். இருப்பதைக் கொண்டு மேன்மைக்கு வித்திடும் ஆற்றல்களுக்காகச் செயல்படுவதே தமிழுக்குச் செய்யும் தொண்டாகும்.
தமிழ் சோறு போடுமா என்று கூறும் ஈனங்களை என்ன என்று சொல்ல. அத்துடன் தமிழ் பெயர்களை வைக்காமல் இஷுபுஸு பெயர்கள் வைத்தால் தான் பெருமை என்ற எண்ணம் இப்போது பலருக்கு இருக்கின்றது. இந்த மட்ட ரக புத்தி இருக்கும் வரை தமிழுக்கு இழுக்கே. தன் தாய்க்கு மரியாதை கொடுக்க தெரியாத ஈனங்கள் எப்படி தாயின் மொழிக்கு மரியாதை கொடுப்பான்கள்?
அழகே தமிழே அழகிய மொழியே எனதுயிரே…வாழ்த்துகள்.
1. நாம் தமிழர்கள்; தமிழ் நம் தாய் மொழி; பேறிஞர் அண்ணா அவர்களும் தமிழர்களை தன் சகோதரர்களாக ஏற்றுக் கொள்ளும் அனைவரும் தமிழர்களென்று நம்மிடம் அடையாளம் காட்டியுள்ளார்; அந்த வகையில் தமிழர்களென்றால் நம்மோடு சகோதரர்களாக சேர்ந்து வாழும் மற்றவர்களையும் குறிக்கும். தமிழைக் காப்பதும் வளர்ப்பதும் நம் அனைவரின் கடமை. உடலுக்கு உயிர்ப் போன்று தமிழினத்திற்கு நம் தாய் மொழியே உயிர்; அதை இழந்தாலும் அல்லது நம் தாய் மொழியின் வலிமைக் குன்றினாலும் கால ஓட்டத்தில் நம் இனத்தின் அடையாளத்தை நாம் தொலைத்துவிடுவோம். ஆகவே நம் தாய் மொழியைக் காப்பது நம் அனைவரின் கடமை.
நாம் எதையும் இழக்கத் தேவையில்லை; நம் மொழியைக் காப்பாற்ற இன்னும் ஆயிரம் பேர்களுள்ளனர். நாமெல்லோரும் தமிழ் மொழியின் அருமைத் தெரியாத வடிக் கட்டின மூடர்கள். ஒருக் காலத்தில் நானும் இந்த மூடகற்ப் போன்ற எண்ணத்தில்தான் வாழ்ந்தேன். இப்படிப் பட்ட நாம் மாந்தராய்ப் பிறந்ததே தப்பு; அரியத் தமிழ்; அரியத் தமிழென்று சொல்கின்றோமே! அது என்னவென்று நமக்குத் தெரியுமா? மற்ற மொழிகளில் இந்த அரியச் செய்திகள் இருக்கின்றதாவென்று தெரியவில்லை. நாம் பிறப்பெடுத்ததே இந்த அரியத் தமிழில் பொதிந்துள்ள உண்மைகளை, இந்த மெய்ஞ்ஞான அறிவை அறியத் தானென்று நமக்கு இன்னும் ஏன் புலப்படவில்லை! தமிழ் மெய்யறிவு மொழி; மெய்ஞ்ஞான மொழி; சைவ சித்தாந்த மொழியென்று போற்றுகின்றோம். திருவாசகம் கண்டத் தமிழ்; அரியத் திருமுறைகள் தந்தத் தமிழ்;. இந்தக் காலத்திலும் இந்தச் சொற்களெல்லாம் நமக்கு என்ன அரியச் சேதிகள் சொல்லுகின்றனவென்று இன்னும் அறியாத மூடர்களாக நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம். இப்படியொரு நாளை ஐநா அறிவித்ததற்கும் அதை நம் மக்களுக்கு செய்தியாக சொல்லி தாய் மொழி விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு தமிழ் அறவாரியத்திற்கும் மற்றும் தமிழ் நாளிதழ்களுக்கும் நன்றிச் சொல்ல நாம் கடமைப் பட்டுள்ளோம். இனி வரும் காலங்களில் நம் பெற்றோர்கள் நம் தாய் மொழிக்கு முக்கியத்துவமும் மரியாதையும் கொடுக்கும் வகையில் தங்களின் பிள்ளைகளை தமிழ் பள்ளிக்கு அனுப்புவார்களென்று நம்பிக்கைக் கொள்வோம்!.
நாம் இன்று தமிழைப்பற்றி இவ்வாறு கூறுகின்றோம் ஆனால் தமிழ் நாட்டு திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் இங்குள்ள வானொலிகளிலும் பேசப்படும் தமிழ் என்ன தமிழா? கேட்கவே காது வலிக்கிறது- என்னால் தாங்க முடியவில்லை. சாதாரண நல்ல தமிழில் பேசுவது அவ்வளவு சிரமமா? தாய் மொழி பேச கசக்கிறதா? ஒரு வாக்கியத்தில் பாதிக்குமேல் ஆங்கில வார்த்தைகள்- என்னே கேவலம்? வெள்ளைக்காரன்கள் எத்தனை தமிழ் வார்த்தைகள் ஒரு வாக்கியத்தில் உபயோகப்படுத்துகின்றனர்? ஏன் இவ்வளவு தாழ்வு மனப்பான்மை நம்மவர்களுக்கு– அதிலும் தமிழ் நாட்டில் கேட்கவே வேண்டாம். அங்கு தமிழ் திரைப்படங்களில் காண்பிக்கும் தமிழ் பள்ளிகள் போலும் தமிழ் ஆசிரியர்கள் போலும் இருந்தால் கடை சேருவது கடினமே.
நாம்தான் தாய்மொழி என்று வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொள்கிறோம். இன்னொரு பக்கம் உள்ள தமிழர் தாய்மொழியாவது தந்தை மொழியாவது எந்த மொழியும் வேண்டாம் என்று கூறி ஆங்கிலத்தையே வாயில் அப்பிக் கொள்கின்றனர். அவ்வகையோரிடம் தாய்மொழியைப் பற்றி பேசுங்கள். பயன் ஏற்படட்டும்.
1. நாம் இனிமேல் எதையும் இழக்கத் தேவையில்லை; மீண்டும் சொல்கின்றேன். இதுநாள் வரை நம் உரிமைகளை நாம் இழந்ததை மறுக்க வில்லை; இந்தத் தொடர்க் கதைக்கு நாம் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். தேசிய அளவில் நாமொரு வலிமையான வாக்கு வங்கியை உருவாக்கிக் கொள்ள வேண்டும்; அவசியம் தேவை; இத்தனைக் காலமும் நாம் மற்றவர்களை நம்பி வாழ்ந்ததுப் போதும்; ஏமாந்ததும் போதும். 2. நாடு சுதந்திரம் அடைந்தக் காலத்திலிருந்து இதுநாள் வரை மாற்ற முடியாததை மாற்றியதே நம் மக்கள்தான். இன்று இந்த நாட்டில் பல்வேறு மாற்றங்கள் உருவாகியிருப்பதற்கும் நாம்தான் காரணிகள். இது மறுக்க முடியாத வரலாறு உண்மை. 3. தேசிய அளவில் நாம் வலிமையான வாக்கு எண்ணிக்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்; வலிமையான வாக்கு வங்கியை உருவாக்கிக் கொள்வோம்; வாக்களிப்பதற்கு குறைந்த வயது 21. அருகிலுள்ள தபால் நிலையம் சென்று நாம் பதிவுச் செய்துக் கொள்வது நன்று; தகுதி நாம் மலேசியர்களாக இருக்க வேண்டும்; நாம் அனைவரும் இந்த விஷயத்தில் இதுநாள் வரை சரியான அக்கறைக் காட்டவில்லையென்பதே என் தனிப் பட்டக் கருத்து. இனிமேலும் தாமதிக்க வேண்டாம்; எல்லோரும் இதில் அவசியம் அக்கறைக் கொள்ள வேண்டும். வரப் போகின்ற பொதுத் தேர்தலிலாவது நாமெல்லோரும் அவசியம் வாக்களிக்க வேண்டும். நம் வாக்கு வங்கியின் வலிமையை, அரசியல் சக்தியை மற்ற அரசியல் கட்சிகள், மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட ஆட்சியாளர்கள் உணரவேண்டும்; உணரச் செய்யவும் வேண்டும்; செய்வோம். சந்தேகங்கள் ஏதாவது இருந்தால் கேளுங்கள்; நாட்டின் நலன் கருதியும் நம் வீட்டின் நலன் கருதியும் முடிந்தால் சொல்லுகின்றேன்; நாம் அனைவரும் ஒன்றுப் பட்டால் உண்டு வாழ்வு; ஒற்றுமையில்லையேல் தாழ்வு; இந்த ஒன்றுப் படும் உண்மையை உணர்ந்துக் கொள்வோம்.
ம.இ.கா. மணிமன்றம் போன்ற இயக்கங்கள் செய்ய வேண்டிய வேலை. ஒரு காலத்தில் நான் ம.இ.கா. வில் இருந்த போது வீடு வீடாக சென்று வாக்காளர்களை பதிந்தோம். இப்போது நாம் எதிர்கட்சிக்கு ஓட்டுப் போடுவோம் என்பதால் இப்போது இயக்கங்கள் செய்வதில்லை! சும்மா உட்கார்ந்து கொண்டே செனட்டர் ஆக வேண்டும், இயக்குனர் ஆகவேண்டும் என்று நினைக்கிறார்கள்! அதுவும் நடக்கிறது!
1. இப்படி அடிக்கடி லோக்கப்பில் ஏற்படும் மரணங்களுக்கு நியாயம் நமக்கு கிடைக்க வேண்டும்; இதில் மாற்றுக் கருத்தேமில்லை. 2. . . .
2. “வீடுப் புகுந்து திருடியதாகச் சந்தேகப் படும்” – இது யோசிக்க வேண்டிய விஷயம். 2. பிள்ளையைப் பெற்றவர்களுக்கு தன் பிள்ளைகள் எங்கு செல்கின்றார்கள், என்ன செய்துக் கொண்டிருக்கின்றார்கள் இவையெல்லாம் பெற்றவர்கள் கண்காணிப்பதில்லையா? ஆரம்பத்திலே கண்காணித்திருந்தால் தேவையில்லாத இந்த சம்பவங்களேன் , லோக்கப் மரணங்களேன்? நம்மில் பலப் பெற்றோர்கள் இன்றும் பொறுப்பில்லாமல் இப்படித்தான் வாழ்கின்றார்கள்; பள்ளிச் செல்லும் சிலப் பிள்ளைகள் குறிப்பாக இடைநிலைப் பள்ளிப் பிள்ளைகள் ஒழுங்காக பள்ளிச் செல்வதில்லை.; இவையெல்லாம் பெற்றோர்களுக்குத் தெரியாதா? ஆசரியர்கள் எத்தனை நாட்களுக்குத்தான் பொறுத்துக் கொள்ள முடியும்; கண்டிக்க முடியும். பிரச்சனைகள் முற்றிப் போனப் பிறகு பின் வருந்துவது வீண்.? 3. மேலும் தன் பிள்ளைகளை கண்காணிப்பது ஒவ்வொருப் பெற்றோரின் கடமை; சுற்றித் திரியும் தங்கள் பிள்ளைகளை என்ன எதுவென்று கொஞ்சமும் கேட்பதில்லை. என்றாவதொரு நாள் நமக்கு வேண்டப் படாதவர்கள் அல்லது காவற்த் துறையினரே நம் வீட்டுக் கதவைத் தட்டுகின்ற நிலை ஏற்படலாம்; அதிர்ச்சியாகவுமிருக்கலாம்; அப்போது அது காலம் கடந்தச் செயலாகயிருக்கும். நாம் பொறுப்போடிருந்து எல்லாவற்றையும் முளையிலேயே கிள்ளியெறிந்தாள் நாம் எதிர்நோக்கும் பலச் சிரமங்களையும் தவிர்க்கலாம்; பொன்னான நேரங்களையும் மிச்சப் படுத்தலாம்.. இந்தவுண்மையை ஒவ்வொருவரும் இனிமேலாவதுயுணர்ந்து செயல்படுவோம்
abraham terah அவர்களே, நீங்கள் சொல்வது உண்மைதான்; அதுவொருக் காலத்தில்; வருடத்திற்கு ஒரு முறைதான் தேர்தல் ஆணையம் புதிய வாக்காளர்ப் பதிவுகளை செய்வார்கள்; அப்போது நாம் மஇக மற்றும் நீங்கள் சொன்ன இந்த இயக்கங்களின் உதவிகள் தேவைப் பட்டது; இப்போது தகவல் தொழிற் நுட்பங்கள் வசதிகள் நிறைந்தக் காலம். நிறையத் கைத் தோலைப் பேசி வசதிகளுள்ளக் காலம். அருகிலிருக்கும் தேர்தல் ஆணைய அலுவலகம் அல்லது தபால் நிலையங்களில் பதிவுச் செய்துக் கொள்ளலாம். பொதுவாக. தபால் நிலைய வசதிகள் எல்லா ஊர்களிலுமுண்டு. புதிய வாக்காளர்களாக நாம் மட்டும் பதிவுச் செய்துக் கொண்டால் மட்டும் போதாது; மற்றவர்களும் பதிவுச் செய்துக் கொள்வதற்கு சுடர் விளக்குப் போன்று தூண்டுக் கோளாக நாம் அமைய வேண்டும். அதற்க்கு நம் கைத் தோலைப் பேசிகள் உறுத் துணையாகயிருக்கும். பொதுத் தேர்தல் எந்நேரமும் நெருங்கி வரும் வேளையில் நாம் காலம் தாமதிக்காமல் பதிவுச் செய்துக் கொண்டால் நன்று. கடைசி நேரத்தில் பதிவுச் செய்வது ஒருவேளை வர போகின்றப் பொதுத் தேர்தலில் நாம் வாக்களிக்க முடியாமல் போகலாம்; தேர்தல் ஆணையம் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒவ்வொருப் பதிவேட்டை தயார் செய்து சரிசெய்துக் கொள்கின்றார்கள். அந்தப் பதிவேட்டை அவர்கள் சரி செய்தப் பிறகுதான் நாம் வாக்களிக்க முடியும்; ஆதலால் தேர்தல் ஆணையம் செய்யும் நற்ப் பணிகளோடு அவர்களுக்கு உறுதுணையாக நாமும் நம் பணிகளை செய்வோம்.; “நாமும் நல்லாயிருக்கணும்; நம் வீடும் நல்லாயிருக்கணும்; நம்ம நாடும் இன்றுப் போல் என்றும் நல்லாயிருக்கணும்; அதற்காக தவறாமல் பதிவுச் செய்துக் கொண்டு வாக்களியுங்கள்.”
மொழிகளின் முக்கியதுவமிக்க நாளிலும், அரசியலை கலக்கிறார்கள் பலர் …. அதுவும் வெறும் 7 % இருக்கும், சிறுபான்மையில் இருக்கும் சிறுபான்மை இனம் அரசியல் ஓட்டு வங்கியாக மாறவேண்டுமாம் …. ஒரே காமிடியப்பா காமிடியப்பா …. ஒட்டு போடுவது என்பது ஒருவரின் ஜனநாயக உரிமை ….. இன்னொருவருக்காக போடுவது இல்லை… மாஇக்காவில் இருக்கும் 600 ,000 உறுப்பினர்களில் 50 % மேல் இன்னமும் வாக்காளர்களாக பதிய வில்லையாம் … ஒருமுறை பிரதமர் பிழிந்தெடுத்தார் ம இ கா மண்டோர்களை …. இந்திய குடும்பங்களில் 2002 ஆம் ஆண்டு 5200 இருந்த விவாகரத்து வழக்குகள், 2012 ஆண்டு வாக்கில் 56 000 வரை உயந்துள்ளது ….. தனித்து வாழும் தாய்மார்கள் என்று 50 ,000 இந்திய பெண்கள் உள்ளனர் …. மேலும் தல 3 குழந்தைகள் விகிதம் என்று 150000 குழந்தைகள் தந்தை இல்லாமல் வளர வேண்டிய காலத்தில் , இன்னமும் அடிப்படை பிரச்சனையை நாம் கண்டறிய வில்லை என்றுதான் சொல்ல வேண்டும் . மொழி மட்டுமே போதும் என்று வாய்கிழிய கத்தினாலும், மொழியை அன்னையர்கள்தான் விதைக்க முடியும், அதுவும் நல்ல இல்லறம் வழியாக. தடம் புரண்ட குடும்பத்தில் மொழி பற்று விதைக்கா இயலாது …..
Dhilip 2, உங்களுக்கே என் ஓட்டு, இந்த மாதிரி சிந்திக்க முடிந்தவர்கள் தான் சமுதாயத்துக்கு தேவை..
1. மொழி முக்கியத்துவ நாளாம்; சிறுப்பான்மை இனமாம்; அரசியல் வோட்டு வங்கி; இப்படி நம்மவர்கள் தங்களைத் தாங்களே கேலிச் செய்யும் இழிவான நிலை. எதையோச் சொல்லப் போய் எதை எதையோ பிதற்றுகின்றார்கள்; இவர்கள் அரசியலில் போதிய சிந்தனையும் தெளிவுமில்லாதவர்கள், கொஞ்சமும் சுயமரியாதை யில்லாதவர்கள் பேசும் பேச்சுது. நினைக்கவே மிகவும் வருத்தமாகவும், வேதனையாகவு முள்ளது; 2. இப்போது எதை பற்றியும் விளக்கிச் சொல்வதற்கு காலமும் நேரமும் நமக்கு இடம் தரவில்லை; அரசியலில் இந்த ஆண்டு அதுவும் இம் மாதம் நமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாதம். அரசியல் கட்சிகள் வரப் போகின்ற பொதுத் தேர்தலில் தாங்கள் வெற்றிப் பெற என்னச் செய்ய வேண்டுமோ அதைச் செய்துக் கொண்டிருக்கின்றார்கள்; நாமும் நம் பங்காக நம் கடமையைச் செய்வோம். 3. அநேகமாக பொதுத் தேர்தல் வரும் செப்டம்பர் மாத முடிவில் நடை பெறலாம். 40 லட்ச புதிய வாக்காளர்கள், வாக்களிக்கக் தகுதிகளிருந்தும் இன்னும் பதிவுச் செய்துக் கொள்ள வில்லை; நாட்டில் நல்லாட்சி மலரவும், நல்ல மாற்றங்களை கொண்டு வரவும் இப் புதிய வாக்காளர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப் படுகின்றது. இவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம்; ஆகவே நாமும் நம் பங்கிற்கு யான் ஏற்க்கெனவே கோரியிருந்தப் படி, தகுதியுள்ள அனைவரையும் மிகத் தாழ்மையாகக் கேட்டுக் கொள்கின்றேன். அருகிலுள்ள தபால் நிலையம் செல்லுங்கள்; புதிய வாக்காளர்களாக பதிவுச் செய்துக் கொள்ளுங்கள்; வாக்களிக்க தகுதியான வயது 21. மற்றவர்கள் வாக்களிக்கவும் நாம் தூண்டுக் கோளாக அமைய வேண்டும். தேசியளவில் நம்மில் கணிசமான எண்ணிக்கையாளர்கள் இன்னும் பதிவுச் செய்துக் கொள்ளவில்லை யென்பதே என் தனிப் பட்டக் கருத்து; இதுவும் உண்மைதான். தேசிய அளவில் நாம் இனிமேலாவது அதிக முக்கியத்துவம் பெற வேண்டும்; அரசியலில் மற்றவர்களின் மதிப்பையும் மரியாதையும் நாம் சம்பாதிக்க வேண்டும். இதுக் காலம் வரை இதில் நாம் சரியான அக்கறைக் காட்டவில்லை; நம்மிடமுள்ள ஆற்றலை நாம் சரியாக இன்னுமறியவில்லை. இதுநாள் வரை நமக்கேற்பட்ட இழிவு நிலையை நாம்தான் மாற்ற வேண்டும்; இனிமேலாவது மாறுவோம்; நன்றே நடக்கட்டும்!.
Palanisamy T அவர்களே, நேரடியாக விசயத்திற்கு வருகிறேன் ! மலேசியாயாவில் இந்தியர்களின் எண்ணிக்கை 10 % ற்கும் குறைவாக குறையும் பொழுது , மா இ கா வோ அல்லது வேறு எந்த ஒரு கட்சியோ நம் நிலைமையை நமக்கு விளக்க வில்லை; மாறாக மாண்டோர் வேலை பார்த்து அவர்களுக்கு வேண்டியவைகளை பெற்று கொண்டனர். ஒரு தருணத்தில் HINDRAF உதய குமார் போன்றோர்கள் இந்திய சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு நம் அறியாமையே காரணம் என்று விளக்கி பொழுதுதான் நாம் புரிந்து கொண்டோம், நாம் ஏமாற்ற பட்டுள்ளோம் என்று! அதற்காக நம் இந்திய சமூகம் தந்த விலை HINDRAF ஒத்துமை!. பிறகு அரசாங்கம் 30 லட்சம் இருக்கும் ஒரு சிறுபான்மை பிரிவினரை , 45 லட்சம் அந்நிய தொழிலாளர்களை கொண்டு சரி கட்டிட பார்த்தது….முடிய வில்லை என்றதும் மேலும் 15 லட்சம் வங்காளதேசிகளை இறங்குவேன் என்று மிரட்டி பார்த்தது. இதன் உட்ப்பொருள் யாதெனில்: அவை நாம் வேட்ட்று இனத்தவர்கள் அதிகம் இருக்கும் நாட்டில் செல்ல காசாகி விட்டொம் என்று பொருள். நம் இந்தியர்களின் 30 லட்சம் மக்களில் 15 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே என்பதுதான் உண்மை. சரி, கண் கெடட பிறகுதான் நாம் சூரிய நமஸ்காரம் செய்வோம் என்பது வழி வழியாய் வந்தது தான் ….. என்ன செய்வது ? இந்தியர்களின் பொறாமை அப்படி …. இப்பொழுது அரசியல் பூர்வமாக சிந்தித்தால், அது வாக்காளர்களாக பதிவதால் இல்லை ! மாறாக இந்தியர்கள் மெது மெது வாக பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலத்திற்கு மாறி, நாமும் ஒரு ஒட்டு வங்கிகளாக மாற வேண்டும். உதிரி பூவாக இருக்கும் நாம் சிலாங்கூர் , கோலாலம்பூர் , ஜோகோர் , மற்றும் பினாங்கு மாநிலங்களுக்கு பெருமளவில் குடிபெயர வேண்டும். அப்பொழுது மாலையா தொகுக்கப்படலாம். பிறகுதான் வாக்காளர்களாக பதிய வேண்டும். இதன் வழி, நாம் நம் ஆளுமையை மாநில அளவில் தக்க வைத்து கொள்ளலாம். மத்திய அளவில் இனி செல்லாது என்பது நிதர்சன உண்மை ……வாயிருக்கு என்பதனால் வடை சுட்டு விற்க கூடாது சார் ……
1. Dhilip 2 அவர்களே, இப்போது எதையும் உங்களோடு சொல்லும் நிலையில் வாதம் செய்யும் நிலையில் நானில்லை; நாம் இப்போது செய்யவேண்டிய அறியப் பணியொன்று உண்டென்றால் அதுதான் இந்தக் காலக் கட்டத்தில் அதுவும் இம்மாதத்திற்க்குள் நம் மக்களின் வாக்களர்களின் எண்ணிக்கையை எவ்வளவு உயர்த்திக் கொள்ள முடியுமோ அந்த அளவிற்கு உயர்திக் கொள்ள வேண்டும்; தமிழ் நாளிதழ்களும் இதற்க்கு இப்போது அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. நாமும் நம் பங்கிற்கு தகவல் சாதனங்களின் மூலம் அதுவும் நம் கைத் தொலைப் பேசிகள் மூலம் மற்றவர்களிடம் பேசியோ அல்லது செய்திக் குறிப்பிகளை அனுப்பியோ மற்றவர்களை வாக்காளர்களாக பதிவுச் செய்துக் கொள்வதை ஊக்கிவிக்க வேண்டும்; பதிவுச் செய்யும் வயது 21. தகுதி மலேசியர்களாக இருத்தல் வேண்டும்; அருகிலுள்ள தபால் நிலையங்கள் சென்று உடனே பதிவுச் செய்துக் கொள்ளலாம். மிகச் சுலபமான வேலை; உங்களால் முடிந்த மட்டும் இதைச் செய்யுங்கள்; மற்றவர்களையும் இந்த அறியப் பணிகளை செய்யத் தூண்டுக் கோளாகயிருந்தால் இன்னும் சிறப்பு; வேறு எதை பற்றியதும் சிந்திக்க வேண்டாம். மேலும் உங்களின் எழுத்துக்களை நேசிக்கின்றேன்; உங்களின் சமுகப் பற்றையும் பணிகளையும் பாராட்டுகின்றேன். தொடர்ந்து உங்கள் பணிகளைச் தொடர்ந்துச் செய்யுங்கள். செய்ய வேண்டிய முக்கியப் பணிகளை – அதுவும் இந்த வாக்காளர்ப் பதிவுப் பணிகளை – அந்தக் காலக் கட்டத்தில் அப்போதே செய்து முடிக்க வேண்டும்; அப்போதுதான் அடுத்து வரும் பொதுத் தேர்தலில் நம்மவர்கள் அதிக அளவு வாக்களிக்க முடியும். பணிகளை தொடர்ந்துச் செய்வோம். நன்றி.
Palanisamy T அவர்களே, எனக்கென்று நான் எதையும் கேட்ட்தில்லை சார் அரசியல் ரீதியாக. ஆனால் அவன் சொல்றான் இவன் சொல்றான்னு சொல்லிக்கிட்டு, இலக்கில்லாத ஒரு பயணத்தை நான் ஆதரிப்பதில்லை சார். மாலுமி இல்லாத கப்பலில் பயணம் செய்வது என்பது இலக்கில்லாத பயணம்; அதில் எப்பொழுதுமே விடியலை காண முடியாது! தமிழ் பத்திரிக்கைகள் சொல்கிறார்கள் என்றால் அவர்களுக்கு விளங்காத ஒன்று மேற்கத்திய நாடுகளின் வளர்ச்சி மற்றும் புரட்சி, அவர்களின் வியாபாரத்தை வைத்து அவர்கள் சிந்திக்கிறார்கள். அவ்வளவே! தங்களுக்கும் தெரியாது அடுத்தது என்ன வென்று நான் சொல்கிறேன். ஒருமுறை ஒரு முகவரியில் நீங்கள் வாக்காளராக பதிந்தால், அதை காரணம் இல்லமால் மற்ற முடியாது என்று ஒரு தீர்மானம் காபினெட்டில் நிறைவென்றினால், பிறகு வளர்ச்சி அடையாத மாநிலத்திற்குள்ளேயே இந்தியர்கள் சிக்கி கொள்ள வேண்டியதுதான். மேலும் நமது ஒட்டு செல்ல காசாகிவிடும் காரணம் அந்நியர்களின் ஒட்டு நம் ஓட்டுகளை சர்வ சாதாரணமாக முழுங்கி விடும். பல கோணங்களில் சிந்திக்க வேண்டிய தருணத்தில், அவன் சொல்றான் இவன் சொல்றான் என்கிறீர்களே, நீங்கள் சொல்லுங்கள், ஏன் அரசாங்கம், ஆளும் கட்சி பலவீனமாக இருக்கும் இடங்களில், ‘army ‘ ஒட்டு போடுகிறார்கள் ? மலேசியாயாவில் அதிக அளவில் இந்தியர்களின் ஒட்டு இருந்த இடம்: புந்தோங், பேராக். எப்படி அங்கே ஓராங் அஸ்லி (orang asli ) 4000 குடும்பங்கள் அமர்த்த பட்டன ? இப்படி நம் ஓட்டுகளை நாமே உதிரிகளாக சிதற விட, நம் வாயையே வடை சுட பயன் படுத்துவதுதான் இந்த மலேஷியா தமிழ் நாளிதழ்கள் …….