இந்நாட்டு தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சி மற்றும் அவற்றின் எதிர்காலம் ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தி வரும் தமிழ் அறவாரியம், லிம் லியன் கியோக் கலாச்சார மேம்பாட்டு மையம், கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன அசெம்பிளி மண்டபம், இக்ராம் என்ற மலேசிய இஸ்லாமிய அமைப்பு, பூர்வீக குடிகள் அமைப்பு, மைஸ்கில்ஸ் அறவாரியம் மற்றும் இதர அமைப்புகளும் கூட்டாக இணைந்து இவ்வாண்டின் அனைத்துலகத் தாய்மொழி நாளை நேற்றிரவு கோலாகலமாகக் கொண்டாடின.
பெட்டாவிங் ஜெயா பிஏசி கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுமார் இருநூறு பேராளர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
அரங்கம் நிறைந்து கரவோசைகள் எதிரொலிக்க, தமிழ்மொழி அரசு மொழிகளில் ஒன்றாக வேண்டும் என்ற வேண்டுகோளை தமிழ் அறவாரியத்தின் தலைவர் தனது கொள்கையுரையில் முன்வைத்தார்.
“நாடு விடுதலையடைந்து 60 ஆண்டுகள் எட்டி விட்டன, பல்லினப் பண்பாடு, பன்மொழிக் கொள்கையில் உலக அளவில் நமது நிலை உயர வேண்டும். அனவரும் தேசிய உணர்வு கொண்ட சூழலில், தாய்மொழிக் கல்வியின் மேன்மைக்கு அடுத்த கட்ட நகர்வு அவசியமாகிறது. தமிழ் மற்றும் சீனம் ஆகிய இரண்டு மொழிகளும் அரசு மொழிகளாக உருவாக வேண்டும்”, என்றார் இராகவன் அண்ணாமலை.
இது சார்பாக கருத்துரைத்த தமிழ் அறவாரியத்தின் ஆலோசகர் கா. ஆறுமுகம், சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற முனைப்புகள் இருந்தன. ஆனால், மலாய் தேசியவாதிகள் அதைக் கடுமையாக எதிர்த்தனர். தேசிய மொழியாகவும் அரசு மொழியாகவும் மலாய்மொழிதான் இருக்க வேண்டும் என்ற ஆழமான அரசியல் பின்னணி, தாய்மொழிக் கொள்கையைப் பின்தள்ளியது என்றார்.
“இன்று உலகமயமாதல் அரசாங்கத்தின் கல்விக்கொள்கையில் மாற்றங்களை உருவாக்கியுள்ளது. பலமொழிகளைப் பயில அரசாங்கம் ஊக்குவிக்கிறது, இதை மலேசியக் கல்விப் பெருந்திட்டம் (2013 – 2025) இல் காணலாம்.
“எனவே, பிற மொழிகளின் தாக்கம் தேசிய ஒற்றுமைக்கு மிரட்டலாக அமையும் என்ற ஐயம், உலகமயமாகும் பொருளாதாரக் கொள்கையாலும் அதிநவீன தொழிழ்நுட்ப வளர்ச்சியாலும் விழுங்கப்பட்டு வருவதை உணரலாம்.
“பிரச்சனையற்ற நிலையில் மேம்பாடு அடைந்த அண்டை நாடான சிங்கப்பூர் மற்றும் சுவிட்சர்லாந்து போன்றவற்றில் நான்கு மொழிகள் அரசு மொழிகளாக உள்ளன. மேலும் யுனஸ்கோ அமைப்பு தாய்மொழிகளை அரசு மொழிகளில் ஒன்றாக்குவது பல்லினப் பண்பாட்டு வளர்ச்சிக்கு வித்திடும் என்று கூறுகிறது”, என்று கா. ஆறுமுகம் மேலும் கூறினார்.
உங்களின் இந்த முயற்சி வெற்றி பெற நம் வாழ்த்துக்கள்.
ஐயா நீங்க இன்னும் 1960-களிலேயே இருக்கிறீங்க போல. இது 2017-என்பது தெரியுமா?
நம் இன மக்கள் தொகையை இழந்தோம்…அதனால் கேள்வி கேட்கும் பலத்தை இழந்தோம்..
நம் தமிழ்ப்பள்ளிகளை இழந்தோம்…
அதனால் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கைய இழந்தோம்..அரசு வேலை வாய்ப்புக்களை இழந்தோம்…
கன்னத்தில் அறைபவனையும் ‘கிளிங்’; என்று ஏளனம் செய்வோனையும் மன்னிப்பு என்கிற பாணியில் மானம் மரியாதையை இழந்தோம்…முறுக்கு மற்றும் அதிரசம் (இன்னும் போனால் தோசை, இட்லி) எல்லாம் நமது பலகாரங்கள் எனும் தகுதியை இழந்தோம்…
(விரைவில் சேலை வேட்டி நம் பாரம்பரிய உடை என்பதையும் இழப்போம்) தமிழ்ப்பத்திரிகைகளின் தூய தமிழை இழந்தோம்…
ஊடகங்களின் இலக்கண பிழையற்ற தமிழை இழந்தோம்…
இப்படி எத்தனை எத்தனையோ தோம் தோம் தோம்…இப்போது தும்பை விட்டு வாலை பிடிக்கப் பார்க்கிறோம்… எல்லாவற்றையும் இழந்த நாம் ‘தமிழன்’ என்கிற அடையாளததை உலகுக்கு காட்டிக்கொண்டு இருக்கிறோம்…
உங்கள் முயற்சி காலம் கடந்தாலும் வரவேற்புக்குரியது. இருந்தாலும் இது செவிடன் காதில் ஊதிய சங்குபோல் அமையும்.எல்லா நிலையிலும் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. உரிமையோடு கேட்க நாதியற்ற வாய்ச்சவடால் பன்னாடைகள்தான் அமைச்சரவையிலும் ஆட்சி பொறுப்பிலும் உள்ளனர்.
அரசாங்க மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழி விளங்க வேண்டும் என்று மேடையில் பேராளர்கள் முன்னாள் முழங்கி யார் வேண்டுமானாலும் கை தட்டு பெறலாம் ! ஆறு ஆண்டுகள் தமிழ் பள்ளியில் தமிழ் கற்ற தமிழன் , தமிழின் பயன் பாடு எந்த அளவில் இருக்கிறது என்பதை உணரவேண்டும் ! தமிழர்களின் நிறுவனங்களில் தமிழ் இருக்கிறதா கேள்விக்குறிதான் ! குறிப்பாக தமிழர்களின் உணவகங்களிலேயே தமிழ் இல்லை ! வாழை இலை உணவகம் என்று ஆங்கிலத்தில் தானே பலகை சிரித்துக்கொண்டிருக்கிறது ! ஆங்கிலம் வேண்டாம் என்று சொல்ல வில்லை ! தமிழ் ஏன் இல்லை என்பது தான் கேள்வி ! அரசாங்கம் தடை விதித்ததா ? தமிழனுக்கு தமிழனின் காசு வேண்டும் ஆனால் தமிழின் மேல் பற்று இல்லை ! தமிழனுக்கே தமிழின் பயன் பாடு தேவை இல்லாதபோது அரசாங்கத்திற்கு என்ன அக்கறை ! யோகா மையங்களின் விளம்பரம் !! தமிழர் களின் தன்முனைப்பு பயிற்சி விளம்பரங்கள் ! கோவில் அறிக்கைகள் முதல் கொண்டு ஆங்கிலம் தான் ! முருகனுக்கே ஆங்கில வழிபாடு !! தமிழன் தமிழ் பற்று கொண்டு ! தமிழ் எங்கள் உயிர் என்று வாயளவில் உளறுவதை நிறுத்தி கொண்டு உண்மையான பற்றுடன் தமிழை வளர்த்தல் போதும் !! நமது நாட்டில் தமிழ் ரோஜா செடி அதற்கு நாம் தான் பாத்தி கட்டி ! பத படுத்தி ! உரமிட்டு ! தண்ணீர் உட்ட்றி ! வளர்க்க வேண்டும் .!!
நம்மில் ஒவ்வொருவரும் தமிழரை சந்திக்கும்போது தமிழிலேயே உரையாட வேண்டும் என்பதில் தெளிவாக இருப்போம் .குழந்தைகளுடனும் தமிழிலேயே உரையாடுவோம் .இது தமிழின் நிலைத்தன்மைக்கும் வளர்ச்சிக்கும் வித்திடும். அதே சமயத்த்தில் மலாய் ,ஆங்கிலம் ஆகிய மொழிகளையும் நன்கு கற்க வேண்டும் .
இது மிகவும் வரவேற்கத்தக்க கோரிக்கை, இந்தக் கோரிக்கை நிச்சயம் வெற்றியடைய வேண்டும். ஏனென்றால் தற்போதைய காலக்கட்டத்தில் பல தமிழர்களுக்கே தமிழ் படிக்கப் பிடிப்பதில்லை, பேசப் பிடிப்பதில்லை. ஆங்கில மோகம் அந்தளவுக்கு அவர்களை ஆட்டிப்படைக்கிறது?.
தமிழ் கே.எப்.சி வாங்கித் தருமா ? மெக் டோனால்ட் கூட்டிப்போகுமா ? என அறிவார்ந்த கேள்விகள் வேறு ? மொழிப்பற்று நிறைந்த ஒரு சிலரைத் தவிர்த்து இங்கே பலருக்கு தமிழ் தேவையில்லை !! ஏனென்றால் அதனால் எந்த ஆதாயமுமில்லை என்ற எண்ணம் அவர்களுக்கு !! ஆனால இதே தமிழ்மொழிக்கு இப்படி அரசு மொழி எனும் நட்சத்திர அந்தஸ்த்து உண்டாகட்டுமே, இந்நாட்டிலுள்ள அனைத்து இனத்தவரும் அவரவர் தாய்மொழியை (மலாயர்களுக்கு – மலாய் , சீனர்களுக்கு – மாண்டரீன், இந்தியர்களுக்கு – தமிழ்மொழி ) கட்டாயம் பயின்றே ஆக வேண்டும் என்று ஒரு சட்டம் பிறப்பிக்கப்படட்டுமே(சிங்கையைப் போல்), அப்போது பாருங்கள் தமிழர்களை முந்திக்கொன்டு சீக்கியர்களும், கிருஸ்த்துவர்களும், இந்திய முஸ்லீம்களும், தெலுங்கு, மளையாள மக்களும் கட்டாயம் தமிழ்மொழியையே நாடிவருவர், அது அரசியல் அனுகூலமல்லவா ? அடுத்து இந்நாட்டில் தொழில் புரிபவர்கள் அனைவரும் அவரவர் சார்ந்த தாய்மொழி கட்டாயம் பயின்றிருக்க வேண்டும் எனும் சட்டம் வரட்டுமே , அது பொருளாதார அனுகூலம். யாரையும் தமிழை படியுங்கள் என்று சொல்ல வேண்டிய அவலம் அதன்பின் தமிழுக்கு நேராது. யாவரும் அரசியல், பொருளாதார லாபம் கருதி தமிழ்ப்பள்ளிகளுக்கு வந்துவிடுவர்.
அனைவரும் ஒன்றுபடவேண்டும், இனம், மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு மேம்படவேண்டும். அதற்கு நாம் அனைவரும் உறுதுணையாய் இருப்போம். நடக்குமா ? நிறைவேறுமா ? எனும் எதிர்மறை கருத்து இங்கெதற்கு ? நிச்சயம் இந்தக் கோரிக்கை நிறைவேறும். நமது நல்வாழ்த்துக்கள் 🙂
குறைமேல் குறையும் நிறை மேல் நிறையுமாய் பதிவு செய்யப்படும் அனைத்து ஆதங்களையும் ஒரு சேர்த்து தாய்மொழி தமிழ் மொழியை நிலைகொள்ள ஆதரவு கரம் நீட்டுவோம்!! மொழி அழிந்தால் இனம் அழியும் என்பது காலத்தின் கட்டாயம்!!! கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் வேண்டாம் அன்பர்களே!!! நல்ல முயற்சிக்கு ஆதரவு கரம் நீட்டுவோம் வாரீர்!!!
நம்மிடையே கருத்து வேறுபாடுகள் நிறையவே இருக்கலாம். இருக்கத்தான் வேண்டும். காரணம் நாம் அனைவருமே புத்திசாலிகள்! அதையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு நம் சார்பில் ஒரு அறிஞர் குழு அரசாங்கத்திற்குப் பரிந்துரை செய்கிறது. அதனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். வேறு வகையான விதண்டாவாதம் வேண்டாம்!
தமிழர்கள் தங்களின் உரிமையை நிலைநாட்டிட மக்கள்தொகையில் கவனம் செலுத்தவேண்டும்.
குறைந்தது 3 பிள்ளைகளாவது பெற்றுக்கொள்ளவேண்டும்.
தமிழர்கள் குறைந்தது 6 குழந்தைகள் பெற்று கொள்ள வேண்டும்–ஆனால் நம்மவர்களுக்கு குடும்பத்தை விட குடியே முதன்மை ஆகி விட்ட நிலையில் நம் பிள்ளைகளுக்கு என்ன ஆதரவு கிடைக்கும்? அவன்களுக்கு எல்லாமே இனாமாக கொடுத்து சோம்பேறிகளாக்கி நம்மை அடிமை நிலைக்கு தள்ளிவிட்டனர்.
இந்துக்களுக்கோ நாம் இருவர் நமக்கு இருவர் ஆனால் அவர்களுக்கோ (இ..யர்கள்) நாம் ஐவர் நமக்கு பன்னிருவர், இப்படியே போனால் இஸ்லாமியர்கள் இந்துக்களை மிஞ்சி விடுவர் என இப்போதைய இந்திய பிரதமர் மோடி ஒரு காலத்தில் இந்தியாவில் பிரச்சாரம் செய்ததில் எவ்வளவு உண்மை அடங்கியிருக்கிறது.
தேவை, பிள்ளைகள் அதிகம் பெற்றுக் கொள்ளுவதல்ல! இந்திய சமூகத்தில் பிரித்து பிரித்து அக்கு வேறாக ஆணி வேறாக பாருங்கள். சீக்கிய சமூகம் சிறப்பாகத்தான் வாழ்கிறார்கள். குஜாராத்தி சமூகம் சிறப்பாகத்தான் வாழ்கிறார்கள். மலையாள சமூகம் சிறப்பாகத்தான் வாழ்கிறார்கள். தமிழர் சமூகத்தை எடுத்துக் கொண்டால் …… ஜாதி அடிப்படையில் சொல்ல வேண்டி வரும். நகரத்தார் சமூகம் சிறப்பாகத் தான் வாழ்கிறார்கள். இன்று கல்வியில் சிறந்து விளங்குபவர்கள் யார்? தொழிலில் முன்னணியில் இருப்பவர்கள் யார்? ஒன்று மட்டும் சொல்லுவேன். நாம் குடிகார்க் கூட்டம். அது தான் நமது பலவீனம்!