ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்தில் அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளும், குறிப்பாக இருமொழித் திட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ள இந்த 49 தமிழ்ப்பள்ளிகளும், இத்திட்டத்தில் பங்கேற்பதற்கு நிர்ணையிக்கப்பட்டுள்ள தரத்தை அடைந்து விட்டனவா என்று தமிழ் அறவாரியத்தின் தலைவர் அ. இராகவன் நேற்று கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு வட்ட மேசை கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உரையாற்றிய போது கேள்வி எழுப்பினார்.
“தகுதியற்ற பள்ளிகளை, அவை மேலும் நாசமடைவதற்காகவே, தகுதி பெற்றவைகளாக மாற்றிய மாய வித்தைக்காரர் யார் என்று தெரிந்து கொள்ள தமிழ் அறவாரியம் மிக்க ஆவலுடைதாக இருக்கிறது” என்றாரவர்.
இக்கேள்விக்கான பதில் கிட்டத்தட்ட தெரிந்த ஒன்றேயானாலும், அதைப் பகிரங்கமாகக் கூறுவதற்கான ஆர்வம் வெளிப்படாமல் இருந்து வந்துள்ளது.
ஆனால், இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வட்ட மேசை கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு பிரதிநிதி தமிழ் அறவாரியத்தின் தலைவர் தெரிந்துகொள்ள மிக ஆவலாக இருக்கும் அந்த மாய வித்தைக்காரர் பிரதமர்துறை அலுவலகத்திலிருந்து செயல்படும் பிடிஎஸ்டி (PTST), மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான மேம்பாட்டுத் திட்ட வரைவு, தலைவர் டாக்டர் என். எஸ். இராஜேந்திரன்தான் என்று கூறினார். அதில் பிடிஎஸ்டி செயற்குழுவும் சம்பந்தப்பட்டுள்ளது என்ற தகவலை அவர் வெளியிட்டார்.
பெற்றோர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில்தான் தமிழ்ப்பள்ளிகள் இருமொழித் திட்டத்தில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
இத்தகவலை அளித்தவர் பிடிஎஸ்டி செயற்குழு உறுப்பினர்களில் ஒருவரிடமிருந்து பெற்றதாக கூறினார். மேலும் இந்த இருமொழித் திட்டத்திற்கு இந்த பிடிஎஸ்டி-யில் உள்ள முத்துசாமி பகிரங்கமான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தத் தகவலை அளித்ததற்காக அவருக்கு கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த இன்னொரு பிரதிநிதி நன்றி கூறினார்.
ஒட்டு மொத்த தமிழருக்காகவும், தமிழ் மொழிக்காகவும் எது நல்லது என்று முடிவு செய்ய ஒருவர் தனக்குத்தானே கையில் அதிகாரத்தை எடுத்துக் கொண்டு தமிழ் மொழிக்கு சாவு மணி அடிக்கின்றார் போலும். இவர் தகப்பன் சாமியோ!
இது ஒரு சாராரை மட்டுமே குறைகூர்வதாக அமையும். தலைமை ஆசிரியர்கள் இதில் ஆர்வம் செலுத்துவது அருவருப்பை தூண்டுகிறது.
தமிழ் மொழி மீது நம்பிகை அற்ற தலைமை ஆசிரியர்கள் தமிழ் பள்ளியை விட்டு விலக வேண்டும்
எப்பபொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு
திருடன், தான் திருடன் என்று ஒத்துக் கொள்ளார்!
மலேசிய தமிழ் கல்வி மேம்பாட்டிலும் வளர்ச்சியிலும் மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான மேம்பாட்டுத் திட்ட வரைவு, தலைவர் அவர்களின் மேல் முன்பு மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தேன். தமிழ் பள்ளிகள் தேசத் தந்தை, சுதந்திரத் தந்தையென்று இன்றும் நாம் போற்றும் துங்கு அவர்கள் நமக்குத் தந்த சுதந்திர பரிசு; சும்மா நமக்கு தமிழ் பள்ளிகள் கிடைக்க வில்லை. சுதந்திரத்திற்காகப் போராடினோம்; பல தியாகங்களை செய்தோம்; இன்னும் பல உயிர்த் தியாகங்கள் செய்தோம். யாரும் இந்த விலை மதிப்பற்றப் பரிசை நம்மிடமிருந்து தட்டிப் பறிக்க இடம் கொடுக்க லாகாது. தமிழ்ப் பள்ளியில் நம் தாய் மொழி போதனா மொழியாக யிருக்கவேண்டும்; இதற்க்கு மாற்றுக் கருத்தில்லை.
ஒற்றுமையாக தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கும் , தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் கரம்கோர்த்த நம் நாட்டின் இந்தியர்களை , இந்த இருமொழித் திட்டம் கூறுபோட்டதை எண்ணி மனம் நோகின்றேன். பிரித்தாளும் கொள்கைக்கு ஏதுவாக அமைந்த இச்சூழலுக்குக் காரணம் யாவர்? இவ்விரு மொழித்திட்டத்தால் தமிழ்ப்பள்ளிகளில் தமிழாசிரியர்களின் எண்ணிக்கை குறைவதற்கு வாய்ப்பு அதிகமாக இருப்பது தெளிவு. மலாய்க்கார மற்றும் சீன ஆசிரியர்களும் தமிழ்ப்பள்ளிகளில் அதிகமாக பணியமர்த்த வாய்ப்பு அதிகம் என்பது என் கருத்து. 523 தமிழ்ப்பள்ளித் தமிழ்த் தலைமையாசிரியர்களின் எண்ணிக்கையும் குறையலாம் என்பதும் என் கருத்தில் அடங்கும். இருமொழித்திட்டத்தின் வழி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சிறந்த நிலையை அடைவார்கள் எனின் , ஏன் 523 தமிழ்ப்பள்ளிகளையும் இத்திட்டத்தில் இணைக்கவில்ல? ஒருகால் அது எதிர்கால திட்டமோ ?
எதை எப்போதுச் செய்ய வேண்டுமோ அதை அப்போதே செய்ய வேண்டும்; நமக்கு நம் தாய் மொழி முக்கியம்; கல்வி முக்கியம்; அரசுத்துறைகளில் வேலை வாய்ப்புக்கள் முக்கியம்; சுதந்திரமான தொழில்கள் செய்து வளமோடு வாழ்வது முக்கியம்; சுதந்திரமான எண்ணங்கள், பேச்சுரிமை முக்கியம்; மனித உரிமைகள் முக்கியம்; இதையெல்லாம் முடிவுச் செய்வது யார்? மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான்; அவர்களைத் தேர்வுச் செய்வது யார்? நாம்தானே; நமக்கு வாக்குரிமை இருந்தால்தானே அப்படிப் பட்ட நல்லவர்களை தேர்ந்தெடுக்க முடியும். தேசியளவில் நாம் வலிமையான வாக்குரிமை வங்கியை வளர்த்துக் கொண்டோமா? இதுநாள் வரையில் இல்லவேயில்லை; வீதியில் அமர்ந்துக் கொண்டு ஒன்றுக்கும் உதவாத வீணான அரசியலைப் பேசிக் கொண்டிருக்கின்றோம்; இதை ஒவ்வொரு நாளும் நாம் பார்த்துக் கொடுத்தான் இருக்கின்றோம்; நம் எண்ணங்கள் மாறவேண்டும்; நல்லக் கலாச்சாரங்கள் நம்மிடையே வளரவேண்டும்; அப்போதுதான் நம்மிடம் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உடனே இப்போதே முடிவெடுங்கள்; இதுநாள்வரை வாக்காளராக பதிவுச் செய்துக் கொள்ளாமலிருந்தால் தபால் நிலையம் செல்லுங்கள்; உடனே பதிவுச் செய்துக் கொள்ளுங்கள்; தகுதி மலேசியானாக இருக்க வேண்டும்; வயது 21. மற்றவர்களுக்கும் தூண்டுக் கோளாகயிருங்கள்; அரசு சார்பற்ற நிறுவனங்கள் தங்கள் உறுப்பினர்களயும் மற்றவர்களையும் வாக்காளர்களாக பதிவுச் செய்ய ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான் நம் போராட்டங்களுக்கும் மரியாதை; நமக்கும் மரியாதை; தேவையில்லாமல் வெறும் போராட்டங்கள் மட்டும் பண்ணிக் கொண்டிருந்தாள் போதாது; அதனால் முழுப் பயன்களை அடைய முடியாது; நம்மிடம் அடிப்படை அரசியல் செல்வாக்கும் பலமும் வேண்டும்; உடனே செய்யுங்கள்; அதையும் இன்றேச் செய்யுங்கள்; நன்றி; வணக்கம்.
ஐயா, ஒரு சிறிய உதாரணம் கொடுக்கிறேன்… மலாக்கா மாநிலத்தில் இடைநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக எத்தனை இந்தியர்கள் பதவி வகித்து வந்தனர்?? இப்போது, தகுதி பெற்ற இந்திய ஆசிரியர் இருந்தும் கூட, இத்தலைமையாசிரியர் பதவியில் அமர்த்தாமலிருப்பது என்ன விந்தையோ?? கேவலம் என்னவெனில், மாநில ம இ கா தலைவர், நமது ம இ கா தேசியத்தலைவர் டத்தோ சுப்ரமணியம் பிரதிநிதிக்கும் மலாக்கா மாநிலத்திலேயே இக்கேடு என்றால், இந்திய ஆசிரியர்களின் நிலையும் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலமும் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்…
ம இ கா தேசியத்தலைவர்ப் பற்றி இனியாரும் பேச வேண்டாம். பேசுவது வீண்; இதனால் நம் சமுகத்திற்கு இனிமேல் எந்தப் பயனுமில்லை; நம் நம்பிக்கைக்குரிய கடைசித் தலைவராகயிருந்தவர் டான் ஸ்ரீ மாணிக்கவாசகம்; அவர்க் காலத்தில் இரு முழு அமைச்சர்கள்; ஆனால் இன்றுநிலைமை எல்லா நிலைகளிலும் மிகவும் படுமோசமாகவுள்ளது.! அன்று அவரின் திடீர் மறைவு நமக்கெல்லாம் மிகப் பெரிய பேரிழப்பு; அவர் மறைந்து 37 வருடங்களாகியும், நம்மைப் பிடித்தப் பீடை இன்னும் நீங்கவில்லை. இனிமேல் நம் பாதையை, லட்சியத்தை நாம்தான் வகுத்துக் கொள்ள வேண்டும்; அதனால்தான் எல்லோரிடமும் மன்றாடிக் கேட்டுக் கொள்வதெல்லாம் இப்போது ஒன்றேவொன்றுதான். தேசியளவில் நம் வாக்கு வங்கியை, வலிமையை நாம் இனிமேலாவது வளர்த்துக் கொள்ளவேண்டும்; அதிகரித்துக் கொள்ளவும் வேண்டும். நடைப் பெறப் போகும் பொதுத் தேர்தலில் நம் வாக்கு வலிமையை மற்றவர்கள் உணரும்படி செய்யவேண்டும். புள்ளி விவரங்கள் படி நம்மில் சுமார் 4 லட்சம் பேர்கள் இன்னும் பதிவுப் பெறவில்லையென்பது தெரிய வந்துள்ளது. முதலில் இந்தக் குறைப் பாட்டை நாம் சரிச் செய்வோம். இதுதான் இப்போது நாமெல்லோருக்கும் நல்லது. ம இ க வினர் செய்யவேண்டிய வேலைகளைதான் உங்களிடம் சொல்கின்றேன். அவர்கள் நிச்சயம் செய்ய மாட்டார்கள்.
ம.இ.க.வை நம்புவது, மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போல் ஆகும்.உதாரணத்துக்கு சிலாங்கூர் செரண்டா தமிழ் பள்ளியும் கமலநாதனும். அன்று ட.ஸ்ரீ.உ. சாமி வேலு தமிழ் பள்ளிகளுக்கு ஆதரவாக ஓலமிட்டார், இன்று தமிழ் பள்ளிகள் பெயர் வாக்கு சேகரிக்க மட்டும் ம.இ.க. வுக்கு தேவை.
தமிழ் பற்று தமிழனுக்கு மட்டும்தான்! ஆகையால் மீண்டும் ஒரு நல்ல தமிழ் தேசிய தலைவன் ஆட்சியில் இருப்பதை உறுதி செய்யுங்கள்! இப்போது உள்ள சூழ்நிலையில் நல்லவனை தேடுவது சிறிது கடினம்தான் இருப்பினும் முயற்சி செய்வோம்!!!