உலகெங்கும் ஏப்ரல் 1 அன்று முட்டாள்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால், அது எப்படி உருவானது? யார் உருவாக்கியது? என்பது தொடர்பான சந்தேகங்களுக்கு முழுமையான தீர்வு கிடைக்காவிட்டாலும், பல ஆய்வுகளின் அடிப்படையில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட காரணம் ஒன்று இருக்கின்றது.
அதாவது, 16 ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகளில் ஏப்ரல் 1 அன்று தான் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வந்தது. பிறகு 1562-ல் அப்போது இருந்த போப் 13-ஆம் கிரகோரி, அதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த ஜூலியன் காலண்டரை மாற்றி, கிரகோரியன் காலண்டரை நடைமுறைப்படுத்தினார். அதன்படி ஜனவரி 1-க்கு ஆங்கில புத்தாண்டு மாற்றப்பட்டது.
இருந்தாலும், பல ஐரோப்பிய தேசங்கள் இந்த புதிய புத்தாண்டு தினத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் இதை ஏற்றுகொள்ளத் தொடங்கினர். பிரான்ஸ் 1852 ஆம் ஆண்டிலும், ஸ்கொட்லாந்து 1660 ஆம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நார்வே போன்ற நாடுகள் 1700 ஆம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752 ஆம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டன.
இந்த புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி 1 ஆம் தேதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள், பழைய வழக்கத்தை பின்பற்றி ஏப்ரல் 1-ம் திகதியில் புத்தாண்டு கொண்டாடுபவர்களை ஏப்ரல் முட்டாள்கள் என்று அழைத்தார்கள். இப்படிதான் ஏப்ரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்றாம்.
-manithan.com