இஞ்சி டீ குடிப்பது உடலின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது நம் அனைவருக்குமே தெரியும்.
ஆனால் அதுவே அளவுக்கு மீறினால், பல்வேறு உடல் ரீதியான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா?
இஞ்சி டீயை அதிகமாக குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள்
- ஒரு நாளைக்கு இஞ்சி 4 கி அளவிற்கும் அதிகமாய் சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால், அது Bile உற்பத்தியை அதிகரிக்கச் செய்துவிடுமாம்.
- இஞ்சியை அதிகமாக சாப்பிடும் போது, அது அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்து, நெஞ்செரிச்சல், வயிற்று வலி பிரச்சனைகளை எற்படுத்தும்.
- உடல் சென்சிடிவாக இருப்பவர்கள் இஞ்சி டீயை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அது அலர்ஜியை ஏற்படுத்தும்.
- அன்றாடம் அதிகமாய் இஞ்சி டீ குடித்தால், நாக்கில் அரிப்பு, எரிச்சல், வாய்ப்புண், வயிறு எரிச்சல் ஆகியவை ஏற்படும்.
- இஞ்சி டீ ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மைக் கொண்டது. எனவே குறைவான ரத்த அழுத்தம் மற்றும் ரத்தப்போக்கு பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சி டீ குடிப்பதை தவிர்ப்பது நல்லது.
இஞ்சி டீயை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?
- வயிற்றில் அல்சர் பிரச்சனை, சிறுகுடல் பாதிப்பு உள்ளவர்கள் இஞ்சி டீயை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
- கர்ப்பிணிகளும் இஞ்சி டீயை எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில் அது அவர்களின் கர்ப்பப்பையை இறுகச் செய்து, பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.
- பலவீனமான கர்ப்பிணிகள் மற்றும் அறுவை சிகிச்சை செய்தவர்கள் இஞ்சி டீயை அதிகமாக எடுத்துக் கொண்டால், அது உதிரப்போக்கை அதிகப்படுத்திவிடும்.
- நோய்கள் மூலம் பாதிக்கப்பட்டு, அதற்கு மருந்துகளை சாப்பிட்டு கொண்டிருக்கும் போது, இஞ்சி டீயை குடிக்கக் கூடாது. ஏனெனில் அது மருந்துக்களுடன் வினைபுரிந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
- -lankasri.com