தேனை சூடு செய்து சாப்பிட்டால் என்ன நடக்கும்? கட்டாயம் படியுங்கள்

உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கக் கூடிய தேனை சூடு செய்து குடித்தால் எவ்வளவு பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது உங்களுக்கு தெரியுமா?

தேனை சூடு செய்து சாப்பிட்டால் ஏற்படும் விளைவுகள்

  • தேனை சூடு செய்யும் போது, அதில் உள்ள சத்துக்கள் நமது உடலின் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் மாறுவதுடன், செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
  • தேனை சூடு செய்யும் போது, அதில் உள்ள Hydroxy methyl furfuraldehyde எனும் கெமிக்கல் விஷத்தன்மை கொண்ட பொருள் புற்று நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கச் செய்கிறது.
  • தேனை சூடு செய்யும் போது, அதில் பெராக்ஸைடுகள் உருவாகி, அது நமது உடல் நலத்திற்கு தீங்கை ஏற்படுத்துவதுடன், சளி அல்லது அடைப்பு போன்ற பிரச்சனைகளை உண்டாக்குகிறது.
  • தேனை சூடு செய்து உட்கொண்டு வந்தால், அது நமது உடல் முழுவதும் நச்சுத்தன்மை அதிகரித்து, பல்வேறு உடல் ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது.

குறிப்பு

பிரெட் போன்ற உணவில் தேன் தடவிய பின் சூடு செய்துக் சாப்பிடக் கூடாது. மேலும் சூடான நீரில் தேனை கலந்து குடித்தாலும், அது மிதமான சூட்டில் இருக்கும் போது உட்கொள்வது நல்லது.

-http://news.lankasri.com