வாழ்க்கையின் அடுத்த நொடியில் யாருக்கும் எந்த பிரச்சனையும் ஆபத்தும் நேரலாம். அப்படியான சில ஆபத்தின் போது நம்மை தற்காத்து கொள்வது எப்படி?
தீப்பிடித்த கட்டிடத்தின் உள்ளே மாட்டிக் கொண்டால்
செய்ய வேண்டியது
தரையில் குனிந்து அமர வேண்டும். முடிந்த வரை கட்டிடத்திலிருந்து உடனடியாக வெளியேறி விட வேண்டும்.
செய்ய கூடாதது
கட்டிடத்தின் உள்ளேயே வெகு நேரம் இருக்க கூடாது. மின் சாதனங்கள் தீப்பற்றி எரிந்தால் அதன் மேல் தண்ணீர் ஊற்றி அணைக்க முயலக் கூடாது.
மூச்சு விட முடியாதபடி அடைப்பு ஏற்பட்டால்
செய்ய வேண்டியது
- கையை விலா எலும்பு கீழ் மற்றும் வயிற்றின் தொப்புளுக்கு மேல் வைக்க வேண்டும்.
- பின்னர், கையை நன்றாக வைத்து அழுத்த வேண்டும்.
- பின்னர் ஒரு நாற்காலியின் பின்புறம் நின்று கொண்டு வயிற்றால் அதை அழுத்த வேண்டும்.
- பின்னர் கீழே தண்டால் எடுக்கும் நிலையில் கையை வைத்து தரையில் அழுத்தி பின்னர் மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.
- பின்ன தலையை மட்டும் தூக்கி மார்பு பகுதி தரையில் படும் படி இருந்தால் பிரச்சனை குறையும்.
செய்ய கூடாதது
மூச்சு விட சிரமபடும் சமயத்தில் பேச கூடாது, எதையும் குடிக்க கூடாது, மிக அதிகமாக மூச்சை உள்ளிழுக்க கூடாது.
மூக்கில் வரும் இரத்தம் நிற்க
மூக்கில் இரத்தம் வரும் போது தலையை கீழே இறக்கும் நிலையில் உட்கார வேண்டும். தலையை மேல் நோக்கி பார்க்க கூடாது.
சிறிய அளவில் உடலில் இரத்தம் வந்தால்
- முதலில் தண்ணீரில் கழுவ வேண்டும்.
- பின்னர் ஹைட்ரோஜன் பெராக்சைடை தடவ வேண்டும்.
- பின்னர் அடிபட்ட இடத்தில் பேண்டேஜ் ஒட்ட வேண்டும்.
அதிகமாக இரத்தம் உடலிலிருந்து வந்தால்
- அடிபட்ட இடத்தில் முதலில் பேண்டேஜ் போட வேண்டும்
- பேண்டேஜ் உறுதியாக இருக்கும்படி அழுத்த வேண்டும்
- பின்னர் உடனே மருத்துவமனை செல்ல வேண்டியது அவசியமாகும்
நீரிழப்பு பிரச்சனை ஏற்பட்டால்
உடலில் போது தண்ணீர் இல்லாத போது நீரிழப்பு பிரச்சனை ஏற்படும். இந்த சமயத்தில் 1 லிட்டர் தண்ணீர் 1 ஸ்பூன் உப்பு 2 ஸ்பூன் சர்க்கரை 1/2 ஸ்பூன் பேக்கிங் சோட கலந்து குடிக்க வேண்டும்.
அல்லது
ஆரஞ்சு பழச்சாறு 1/2 ஸ்பூன் உப்பு 1 ஸ்பூன் பேக்கிங் சோடா கலந்து குடிக்கலாம்.
மின்னல் தாக்குதலிலிருந்து தப்பிக்க
செய்ய வேண்டியது
குழி போன்ற உயரம் குறைவான இடத்தில் உட்கார வேண்டும்.
மரம் அருகில் இருக்கலாம். ஆனால் தனியாக இருக்கும் மரத்தின் அருகில் நிற்க கூடாது.
செய்ய கூடாதவை
மின்னல் சமயத்தில் செல்போன் உபயோகபடுத்த கூடாது, மின்கம்பம் அருகில் நிற்க கூடாது.
சிறிய தீக்காயம் ஏற்பட்டால்
வீக்கம் ஏற்படுதுவதற்குள் காயம் அருகில் இறுக்கமான துணி கட்டியிருந்தால் அவிழ்த்து விட வேண்டும்.
வெப்ப தீக்காயம் ஏற்பட்டால்
காயம் பட்ட இடத்தை 10 நிமிடம் தண்ணீரில் வைக்க வேண்டும். பின்னர் சுத்தமான பேண்டேஜ் போட்டு கட்ட வேண்டும்
கத்தி போன்ற கூரான பொருட்கள் உடலில் குத்தினால்
உடனே ஆம்புலன்ஸ் உதவியை நாட வேண்டும், உடலில் சொருகியிருக்கும் கத்தியை நாமே எடுக்க கூடாது.
மயக்கம் போட்டு யாராவது விழுந்தால்
செய்ய வேண்டியவை
பாதிக்கப்பட்டவரின் அருகில் சென்று அவர் நிலையை பார்க்க வேண்டும். பின்னர் ஆம்புலன்ஸ் மருத்துவ சிகிச்சைக்கு போன் செய்ய வேண்டும்.
செய்ய கூடாதவை
பாதிக்கபட்டவரை வேடிக்கை பார்த்து கொண்டு அவசர உதவியை அழைக்க மறக்க கூடாது.
-lankasri.com