பற்களில் படிந்திற்கும் மஞ்சள் கறையை போக்க இயற்கை முறையில் உள்ள அற்புதமான வழி இதோ!
பற்கள் பளிச்சிட என்ன செய்ய வேண்டும்?
முதலில் டூத் பிரஷை ஈரப்படுத்தி, அதில் கால் பங்கு மஞ்சளை தொட்டு மென்மையாக பிரஷ் செய்ய வேண்டும்.
பின் 5 நிமிடங்கள் அந்த மஞ்சள் பற்களில் இருக்குமாறு, ஊறவைத்து, நீரால் வாயை நன்றாக கொப்பளிக்க வேண்டும்.
அதன் பிறகு சாதாரண பல் பொடி அல்லது டூத் பேஸ்ட் பயன்படுத்தி மீண்டும் பல் துலக்க வேண்டும்.
ஒரு வாரம் தொடர்ந்து இதை பின்பற்றி வந்தால், பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கறை எளிதாக போய்விடும்.
மற்றொரு முறை
பற்களில் உள்ள மஞ்சள் கறையை போக்க 1/4 டீஸ்பூன் மஞ்சள் பொடியை 1/4 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து, டோத் பேஸ்ட் போல குழைத்து, பற்களை துலக்கினால், வாய் துர்நாற்றம் மற்றும் பற்களின் மஞ்சள் கறை நீங்கிவிடும்.
-lankasri.com