கறிவேப்பிலையைக் கொண்டு நம் உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.
அதிலும் வெறும் வயிற்றில் மூன்று மாதம் தொடர்ந்து கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால், ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம்.
கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
- நாள்பட்ட ரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள் உலர்ந்த கறிவேப்பிலையை பொடி செய்து, அதை சுடுநீர் அல்லது பாலுடன் கலந்து குடிக்க வேண்டும்.
- கறிவேப்பிலையை சாறு எடுத்து, அந்த சாற்றினை குடித்து வந்தால், அது பார்வை கோளாறுகளைத் தடுப்பதோடு, முதுமையில் ஏற்படும் கண்புரை நோயின் தாக்கத்தை குறைக்க உதவுகிறது.
- சிறிது கறிவேப்பிலையை வெயில் நிழலில் உலர்த்தி, அதை பொடி செய்து, அதில் 1 டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியுடன், தேன் கலந்து 5 நாட்கள் சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
- வயிற்றுப்போக்கு பிரச்சனை உள்ளவர்கள் 20 கறிவேப்பிலை இலைகளை அரைத்து சாறு எடுத்து, அதனுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து குடித்து வர வேண்டும்.
- தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை இலைகளை மட்டும் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உடல் பருமன் மற்றும் நீரிழிவு பிரச்சனைகள் தடுக்கப்படும்.
- கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் காலைச் சோர்வை தடுக்க, 10 கறிவேப்பிலை இலைகளை அரைத்து சாறு எடுத்து, அதனுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும்.
- குமட்டல் மற்றும் வாந்தி பிரச்சனைகள் இருந்தால், கறிவேப்பிலையை அரைத்து, அதை மோருடன் கலந்து குடித்து வந்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.
- செரிமான கோளாறு பிரச்சனைகள் இருந்தால், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் புதினா ஆகியவற்றை அரைத்து அதன் சாறு எடுத்து குடித்தால், செரிமான பிரச்சனைகள் குணமாகும்.
- சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் கறிவேப்பிலை ஜூஸ் மற்றும் ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து கலந்து, குடித்து வந்தால், சிறுநீரக தொடர்பான பிரச்சனைகள் குணமாகும்.
- பூச்சிக்கடியைக் குணப்படுத்த கறிவேப்பிலை மரத்தில் உள்ள பழங்களை அரைத்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்.
- -lankasri.com
Best wishes to Malaysia kini