பொதுவாகவே பூண்டு அதிக மருத்துவ குணம் உடையது. வாயு கோளாறு போன்ற பிரச்சனைகளை சரி செய்யும் தன்மை கொண்டது.
பூண்டு எண்ணெயினை சருமத்தில் தேய்க்கும் போது பூஞ்சை தொற்று, மரு போன்றவை இருந்தால் அவற்றை நீக்குகிறது.
ஆனால் சில நோய் பாதிப்புகள் உள்ளவர்கள் கட்டாயம் உணவில் பூண்டினை சேர்த்து கொள்ளக்கூடாது. இது அதிக பாதிப்பை உண்டாக்கிவிடும்.
பூண்டினை சாப்பிடக்கூடாதவர்கள்
கல்லீரல் பிரச்சனை உடையவர்கள் பூண்டினை சாப்பிடும் போது உணவு செரிக்க உதவும் அமிலம் சுரப்பு குறைந்து செரிமான பிரச்சனையினை உண்டாக்குகிறது.
வயிற்று போக்கு பிரச்சனை உள்ளபோது பூண்டினை சாப்பிட்டால் வயிற்று போக்கு தீவிரமாகிவிடும்.
அறுவை சிகிச்சை செய்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்தே பூண்டு சாப்பிடுவதை கட்டாயம் தவிர்த்தல் வேண்டும்.
கர்ப்பிணி பெண்களும் பாலூட்டும் தாய்மார்களும் கட்டாயம் பூண்டு சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.
குறைந்த இரத்த அழுத்தம் உடையவர்கள் பூண்டு சாப்பிடக்கூடாது. இதனால் இரத்த அழுத்தம் மேலும் குறையும்.
கண்களில் நோய் தொற்று உள்ளவர்கள் பூண்டு சாப்பிடுவதால் நோய் தொற்று அதிகமாகிறது.
-manithan.com