வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்து அந்நீரை வெறும் வயிற்றில் குடித்து வருவதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெறலாம்.
கொலஸ்ட்ரால்
வெந்தயத்தில் ஸ்டெராய்டல் சாப்போனின்கள் என்ற நிறமி இருப்பதால், இவை நம் உடலில் உள்ள அதிகப்படியான கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
சர்க்கரை நோய்
சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெந்தய தண்ணீரை தினமும் குடித்து வந்தால், சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்பட்டு சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது.
இதய நோய்
வெந்தயத்தில் பொட்டாசியம் இருப்பதால், இவை சோடியத்தின் செயல்பாடுகளை குறைத்து மன அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை ஆகியவற்றால் இளம் வயதிலேயே உண்டாகும் இதய நோய் பிரச்சனைகள் தடுக்கின்றது.
தொண்டைப்புண் மற்றும் காய்ச்சல்
வெந்தய தண்ணீர் மற்றும் சிக்கன் சூப்பில் வெந்தய பொடி செய்து அதனோடு சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப்புண் மற்றும் காய்ச்சலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
உடல் எடை குறையும்
உடல் எடையால் கஷ்டப்பட்டு வருபவர்கள், தினமும் காலை எழுந்து வெந்தய தண்ணீர் மற்றும் சிறிதளவு வெந்தயத்தை மென்று சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்தால் பசி கட்டுப்படுத்தப்பட்டு, உடல் எடை விரைவில் குறையும்.
தாய்ப்பால் சுரப்பு
வெந்தயத்தில் டையோஸ்ஜெனின் இருப்பதால், இவை தாய்ப்பால் சுரப்பை தூண்டுகிறது. எனவே தாய்மார்கள் தினமும் உணவில் வெந்தயத்தை சேர்த்துக் கொண்டால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
மாதவிடாய்
பெண்கள் மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி, தசைப் பிடிப்பு போன்ற பிரச்சனைகளால் அவஸ்தைப்படுகிறார்கள். இதனால் தினமும் வெந்தயத்தை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
குடல் புற்றுநோய்
நம் உடம்பில் தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை அழிக்கும் நார்ச்சத்துகளான சாப்போனின்கள் வெந்தயத்தில் இருப்பதால், இவை குடற் புற்றுநோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.