இன்று பின்னேரத்தில் புத்ராஜெயாவில் இருமொழித் திட்டத்தை (டிஎல்பி) எதிர்க்கும் மே 19 இயக்கத்தினர் பேரணி நடத்தினர். நாட்டின் பல பாகங்களிலிருந்து வந்து அங்கு குழுமிய சுமார் 800 மே 19 இயக்கத்தினர் டிஎல்பிக்கு எதிரான கருத்துகளைப் பறைசாற்றும் பல்வேறு பதாகைகளையும் போராட்ட வாசக அட்டைகளையும் ஏந்தி நின்று போர்க்குரல் எழுப்பினர். “டிஎல்பி வேண்டாம், வேண்டாம், வேண்டாம்” என்று உரக்கக் குரல் எழுப்பிக்கொண்டே இருந்தனர். இடையிடையே மே 19 இயக்கத்தின் பிரதிநிதிகள் டிஎல்பியினால் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஏற்படப்போகும் பாதிப்புகள் பற்றியும் தமிழ்மொழி சிதைவுற்று அழிந்து போகும் நிலை பற்றியும் எடுத்துக்கூறினர்.
புத்ராஜெயாவில் குழுமியிருந்தவர்களில் கணிசமான பெண்களும் இளைஞர்களும் அடங்குவர். அரசியல்வாதி பகாங் சட்டமன்ற உறுப்பினர் கமாட்சியும் அங்கிருந்தார். தேர்தல் காலத்தில் சுற்றிச் சுற்றி வரும் அரசியல்வாதிகளில் வேறு எவரும் அங்கு காணப்படவில்லை.
சரியாக பிற்பகல் மணி 3.15க்கு மே 19 இயக்கத்தின் பேரணி கல்வி அமைச்சை நோக்கி நகர்ந்தது. மீண்டும் இடைவிடாத போர்க்குரல் “டிஎல்பி வேண்டாம்” என்று முழங்கிக் கொண்டிருந்தவர்களின் மத்தியில் காணப்பட்ட இளைஞர்களில் பலர் “மீசையை முறுக்கு, டிஎல்பியை நொறுக்கு” என்று முழங்கத் தொடங்கினர். இது சற்று வேகமாகப் பரவியது. இதனுடன் “புல்லுருவிகளைப் பிடுங்கு” என்ற குரலும் ஒலித்தது.
பேரணி கல்வி அமைச்சை வந்தடைந்ததும் போர்க்குரல் மேலும் வலுவடைந்து தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது. சிறிது நேரத்திற்குப் பின்னர் கல்வி அமைச்சின் பணியாளர்கள் சிலர் வெளியில் வந்து மே 19 இயக்கத்தின் பிரதிநிதிகள் சிலரோடு கிட்டத்தட்ட முப்பது நிமிடங்களுக்கு ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். இடையிடயே அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இயக்கப் பிரதிநிதிகள் அங்கிருந்தவர்களின் போர்க்குரலை நிறுத்தி அமைதியாக இருக்குமாறு அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்தனர்.
பின்னர், மே 19 இயக்கத்தைப் பிரதிநிதித்து ஆர். பாலமுரளி, டாக்டர் செல்வம், ப. பராசக்தி மற்றும் டாக்டர் கோபால் பெருமாள் ஆகியோர் அமைச்சுக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். அரை மணி நேரத்திற்குப் பின்னர் திரும்பி வந்த அந்நால்வரும் அமைச்சின் அலுவலகத்தில் நடந்ததைச் சுறுக்கமாகக் கூறினர்.
இன்று வெள்ளிக்கிழமையாதலால், கல்வி அமைச்சர் ஊரில்லை. துணைக் கல்வி அமைச்சர் எங்கோ போய்விட்டார். ஆக, மே 19 இயக்கத்தின் பிரதிநிதிகள் நால்வருக்கும் மக்கள் பிரதிநிதிகளைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டவில்லை. அவர்களைச் சந்தித்த அரசு ஊழியர்களிடம் டிஎல்பி விவகாரம் குறித்து மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தனர். மேலும், பெப்ரவரி 7 இல், கல்வி அமைச்சின் துணைத் தலைமைச் செயலாளரிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மற்றும் அதற்கு அவர் அளித்திருந்த பதில் ஆகியவற்றை சுட்டிக் காட்டி, இந்த டிஎல்பி விவகாரத்துக்கு மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியாக பாலமுரளி கூறினார்.
மே 19 இயக்கத்தின் பிரதிநிதிகள் கொடுத்த இரண்டாவது கோரிக்கையை ஒரு துணை அமைச்சரின் பணியாளர் பெற்றுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடக்கத்தில், அதாவது 2016 இல், டிஎல்பி திட்டத்தில் பங்கேற்ற மனுச் செய்திருந்த 30 தமிழ்ப்பள்ளிகளும் அத்திட்டத்தில் பங்கேற்பதற்கு நிர்ணையிக்கப்பட்ட நான்கு அடைவுநிலைகளை எட்டாததால், அவற்றின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ஆனால், நிராகரிக்கப்பட்ட அந்தத் தமிழ்ப்பள்ளிகளும் அடுத்த ஆண்டில் (2017) டிஎல்பி திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டன. இதன் பின்னணியில் இருந்தவர் யார், டாக்டர் இராஜேந்திரனா என்ற கேள்விக்கு பதில் அளித்த பாலமுரளி, இதற்கு உறுதியான பதில் அளிப்பது இப்போது சாத்தியமில்லை என்று கூறினார்.
உலகம் எங்கள் தமிழ் மொழியை மதிக்கிறது. ஆனால் தமிழுணர்வில்லா இந்தியன் அரசியல் பிச்சாண்டிகள் எங்கள் கண்களில் மண் தூவியது
அவர்கள்
கனவை பொய்யாக்குவோம்.இன்று மே19 நாள் மலேசியத்தமிழ் போராளிகளின் வெற்றி நாள் புத்ரா ஜெயா. நாள். 19/5/2017 மதியம் 2.30 மணியோடு எதிரியின் தமிழ் சதி தனித்தமிழர் மதியால் விடைபெறும்.
ஆனால், நிராகரிக்கப்பட்ட அந்தத் தமிழ்ப்பள்ளிகளும் அடுத்த ஆண்டில் (2017) டிஎல்பி திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டன. இதன் பின்னணியில் இருந்தவர் யார், டாக்டர் இராஜேந்திரனா என்ற கேள்விக்கு பதில் அளித்த பாலமுரளி, இதற்கு உறுதியான பதில் அளிப்பது இப்போது சாத்தியமில்லை என்று கூறினார்.
“இந்தியர் புளுபிரிண்ட்” – தலைமை இயக்குநராக என்.எஸ்.இராஜேந்திரன் நியமனம்! – http://www.selliyal.com/archives/149612
அடுத்து வரக்கூடிய தலைமுறைக்கு,” தமிழை விதைப்போம்-
மொழியை வளர்ப்போம்”. விரைவில் தமிழர் வெல்வது உறுதி.
ஹஹஹஹஹஹா
! இதிலிருந்து தெரிய வேண்டும் அரசு அமைச்சன் முதல் எல்லோரும் எவ்வளவு கடுமையாக நாட்டுக்கு உழைக்கின்றனர் என்று. இன்றைய நிலையில் எந்த அலுவலகங்களிலும் தலைகள் இருப்பதில்லை-காணவும் முடியாது– காரணம் கூட்டம்/சந்திப்பு நடக்கிறது என்று சொல்வான் கள்–ஆனால் கோல்ப் பந்து விளையாட்டு திடலில் அல்லது சொந்த விவகாரத்தை நடத்த காணாமல் பொய் இருப்பான்/இருப்பாள். என்ன சொன்னாலும் ஒன்றும் நடக்காது. எல்லாவற்றையும் தட்டி கழிப்பதே நடக்கும். எனக்கு இதில் பல அனுபவங்கள் இருக்கிறது.
எனக்கு ஒன்று தெரிய வேண்டும்– இப்படி ஒரு நிலை 1957 ல் நடந்திருக்குமானால் எவ்வளவு பேர்கள் அதில் பங்கேற்றிப்பர்?
டாக்டர் ராஜேந்திரன் நல்ல மொழிப்பற்றாளர். இப்போது அவரது பதவியின் காரணமாக அந்தப்பற்று சுருங்கி விட்டது. பதிவு ஓய்வுப்பெற்ற பின் அது மீண்டும் புத்துயிர் பெறும்! அப்போது அவர் வீரத்துடன் போராடுவார்! எல்லாருமே இப்படித்தான். பதவி ஓய்வு பெற்றபின் தான் வீரம் வருகிறது! என்ன செய்யலாம்? இப்போது அவருக்கு கூடுதலான பதவிகளும் வருகின்றன. அவர் கெட்டுப் போவதை அவர் குடும்பம் விரும்பாதே! அவருக்கு இக்கட்டான நிலை தான்!
அரசங்க துறையில் உள்ளவர்கள் ,அரசங்க சட்ட விதிமுறைக்கு கட்டுபட்டு நல்ல சேவைகளை மக்களுக்கு செய்யலாம் ,அது அவர்களின் கடமை ஆனால் ஓர் இனத்தின் உரிமை ,அடிப்படை தேவையை அரசாங்கத்திடம் கேட்டு போராடுவது மக்கள் பிரதிநிதியாக இருக்கும் அரசியல் வாதிகள் ..இதை அரசாங்க ஊழியரிடம் எதிர்பார்பது இயலாத ஒன்று .
சிறப்பாக நடைபெற்ற பேரணி . கலந்து கொண்டதில் ஒரு திருப்தி. தமிழர்களின் உணர்வுக்கு இது ஒரு சான்று. ஏற்பாட்லாளர்களுக்கு நன்றி
இந்நாட்டில் தமிழர்களிடையே மொழிப்பற்றையும் இனப்பற்றையும் ஊக்குவிக்கவும் மொழி விழிப்புணர்வை ஏற்படுத்தவும் (ஆரம்பமாக) ஆண்டுக்கு ஓரிரு முறை ‘தமிழர் நாள்’ அனுசரிக்க முயற்சிகள் எடுக்க தமிழ்ப்பற்றாளர்களும் தமிழ்க் காப்பாளர்கள் என்று சொல்லிகொள்பவர்களும் முன் வர வேண்டும். இதன் வழி வீடுகள் தோறும் பிழையற தமிழ்ப் பேசவும், தமிழ் உணர்வை ஏற்படுத்தவும் பல்வேறு இயக்கங்களை செயல்படுத்தலாம். இல்லாவிட்டால் ‘தடவை’ என்பதை தாட்டி எனவும், வாட்டி எனவும், மாதிரி என்பதை ‘மாரி’ எனவும் தற்போது ஊடகத்தார் பலரும் உச்சரிப்பதைப் போல எதிர்காலத்தில் ‘தமிழ்’ என்பதே மறந்தும் மறைந்தும் விடும். ஒருநாள் இங்கே ‘கடைசித் தமிழன்’ உருவாகும் நிலை கூட ஏற்படலாம். இனத்தை ஒழிக்கவும், மொழியை அழிக்கவும் ‘அதிகாரக்’ ஒரு கூட்டம் அலைகிறது. அந்தக் கூட்டத்துக்கு நமது ‘ஆட்டு’ மந்தைகள் துணைபோகின்றன.
1944 வாக்கில் தோட்ட துண்டாடலை எதிர்த்த வீர சேனன் மற்றும் கணேசன் என்ற தியாகிகளை அன்ரே மறந்தது இந்த சமுதாயம் ! பிறகு இந்தியனை காப்பாத்துறேன் பேர்விழி என்று துன் சம்பந்தன் சொன்னதும் , அவர் காலடியில் விழுந்து , மா இ கா என்னும் கட்சியில் ஐக்கியனான இந்திய மக்கள் , உண்மையை மறந்தே மறந்து போனது …. ! வீர சேனன் கோவாவில் தூக்கிலிட பட்டதற்கும், கணேசனை இந்திய பெரும்கடலிலே கொன்று வீசியதற்கும், கவைப்படாத சமூகம் இந்த மலேஷியா இந்திய சமூகம் ! இவர்கள் கூச்சலிட்டு விடடாள், உடனே எல்லாம் சரியாகி விடும் என்று சில மண்டோர்கள் சொல்ல , பழைய ஒப்பாரி … முதலில் தமிழ் பள்ளி தலைமையாசிரியர்கள் இதற்க்கு ஒத்துழைப்பு தந்து , தமிழ் பள்ளி தலைமையாசிரியர்கள் அறிக்கை விட வேண்டும் . ஆனால் அவர்களோ மணியாட்டி கொண்டிருக்கையில் , தமிழே தெரியாத சாராரிடம் ஒப்பாரி ! மாட்டின் மடியை தடவி கொடுத்து பால் கறக்க வேண்டும் ! கொம்பை பிடித்து ஆடுவதனால் , மாடு பால் கறந்து விடுமா என்ன ?
பொன் ரங்கன் நீங்கள் சொல்லுவது சரி, உங்கள் உலக பாதுகாப்பு இயக்கம் என்ன பருப்பு கடை கிறதா …..வசூல் வேட்டை ஆரம்பம் ….தமிழ் அறவாரியம் போதும் முதலில் 3வது மாநாட்ட்டை நடத்தவும்