பல மாபெரும் நகரங்கள் தற்போது கடலுக்குள் அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கிறது

இந்த உலகில் முற்காலத்தில் சிறப்பாக செயல்பட்ட பல மாபெரும் நகரங்கள் தற்போது கடலுக்குள் அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கிறது. அப்படி கடலில் மூழ்கிய அண்மையில் கண்டுப்பிடிக்கப்பட்ட 3 தொன்மையான நகரங்களை பற்றி இங்கு காணலாம்.

1) தி ப்ரமிட்ஸ் ஆப் யோனாகுனி


ஜப்பானை சேர்ந்த யோனாகுனி என்ற கடல் பகுதியில் உயர்த்தர பாறைகளை கொண்டு உருவாக்கப்பட்ட சுமார் 76 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட பிரமாண்ட பிரமிடுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. 1987 ஆம் ஆண்டு இந்த கடல் பகுதியில் சில அறிய வகை சுறா மீன்களை பற்றிய ஆராய்ச்சியில் இருக்கும் பொழுது கடல் பாசிகளால் சூழப்பட்ட இந்த மாபெரும் பிரமிடுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


இதில் ஆச்சர்யப்படும் விடயம் என்னவென்றால் இந்த பிரமிடுகள் சுமார் 10000 ஆண்டுகள் பழமையானதாகவும் இந்த நகரம் கடல் சீற்றத்தால் அழிந்திருக்கும் என்று நம்பப்படுகிறது.

2) கிளியோபாட்ரா அரண்மனை


எகிப்து நாட்டில், கடலுக்கு அடியில், 1,600 ஆண்டுகளுக்கு முன், புதையுண்டதாக கருதப்பட்ட கிளியோபாட்ரா வாழ்ந்த அரண்மனை கடலுக்குள் கண்டுப்பிடிக்கப்பட்டது . நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களால், இந்த அரண்மனை புதைந்து விட்டதாக கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

பலவித சிலைகளும், சிவப்பு கிரானைட் தூண்களும், அரிய பொருட்களும் இதில் அடக்கம். கிளியோபாட்ராவின் மகனின் சிலையும், கடவுள்களின் சிலைகளும் காணப்படுகிறதாம்.

இங்கு புதையல்களும் இருக்க வாய்ப்புள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அரண்மனையில் வைக்கப்பட்ட பல பொருட்கள், வைத்தது வைத்தது போன்றே இருப்பது, ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.



3) போர்ட் ராயல்


கி.பி 1518 நூற்றாண்டில் ஸ்பானிஷ் காரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட போர்ட் ராயல் நகரமானது முற்காலத்தில் ஜமைக்காவில் உள்ள கரிபியன் கடல் பகுதியில் மிக திவரமாக செயல்பட்டு வந்தது. கடல் கொள்ளை, சாராயம், விபச்சாரம் என அனைத்து கொடுமைகளுக்கும் பெயர் போன நகரம் இது.

1692 ஆம் ஆண்டு வந்த நிலநடுக்கமானது போர்ட் ராயலை முற்றிலுமாக கடலுக்குள் மூழ்கடித்தது இதனால் இங்கு வாழ்ந்த சுமார் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டோர் நீரில் மூழ்கி இறந்தனர்.


ஜமைக்காவின் முக்கியமான நகரமான இது தற்போது 40 அடி ஆழத்தில் கடலுக்குள் உறங்கிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் இங்கு நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் மிக அற்புதமான பொருட்கள் இந்த தொன்மையான நகரத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டது.

-manithan.com