33 வருடங்களுக்கு முன்பு தனது பெற்றோரால் வெறுக்கப்பட்ட சிறுவன், இன்று அனைவருக்கும் முன்னுதாரணமாக வாழ்ந்து வருகிறான்.
அமெரிக்காவை சேர்ந்த Jono Lancaster என்ற சிறுவன் கடந்த 33 ஆண்டுகளுக்கு முன்னர், Treacher Collins syndrome குறைபாட்டுடன் பிறந்துள்ளான்.
இதனால் இவனது கண்கள் மற்றும் வாய் போன்றவை கோணலாக அமைந்து பார்ப்பதற்கு இவனது தோற்றம் அவலட்சணமான முறையில் அமைந்திருந்தது.
தனது மகனின் அவலட்சணமான தோற்றத்தை பார்த்த பெற்றோர், Jono பிறந்த 36 மணி நேரங்களுக்குள் அவனை குழந்தைகள் காப்பகத்தில் சேர்ந்துவிட்டு சென்றுள்ளனர்.
குழந்தைகள் காப்பகத்தில் இருந்து Jean Lancaster என்ற பெண்மணி Jono – வை தத்தெடுத்து வளர்த்துள்ளார்.
பள்ளி செல்ல ஆரம்பித்தபோது தான், Jono தனது குறைபாட்டை முழுமையாக உணர ஆரம்பித்தான், ஏனெனில் தனது உருவ அமைப்பால் பிற சிறுவர்கள் மத்தியில் இருந்து வேறுபட்டு காணப்பட்டான்.
தன்னுடன் படிக்கும் சிறுவர்கள் தன்னை உதாசீனப்படுத்திய போது மிகவும் வேதனையடைந்த jono, தன்னை விட வயதில் சிறியவர்களாக இருக்கும் குழந்தைகளிடம் சென்று தனது மனதை தேற்றிக்கொள்ள ஆரம்பித்தான்.
சிறு வயதில் ஏற்பட்ட அந்த பழக்கமே தற்போது ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியராக உருவெடுத்துள்ளார்.
மேலும், தனது வளர்ப்புத்தாயின் உதவியுடன் விளையாட்டு அறிவியல் மற்றும் உடற்பயிற்சி பயிற்சியாளர் படிப்பினை வெற்றிகரமாக நிறைவு செய்த இவர், உடற்பயிற்சி மையம் ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
அங்கு வைத்துதான் லாரா என்ற பெண்ணுடன் இவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது, தற்போது இவர்கள் பிசியான காதல் ஜோடியாக இருக்கின்றனர்.
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாடம் எடுக்கையில் தனது குழந்தை பருவத்தை நினைவு கொள்வதாக Jono கூறியுள்ளார்.
எனது அவலட்சணமான தோற்றத்தை கண்டு என்னை பெற்றெடுத்த தாய் விட்டு சென்றாலும், என்னை வளர்த்த தாய்க்கு நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் என கூறுகிறார்.
-lankasri.com