சோயா சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள் தெரியுமா?

001சோயா மிகச் சிறந்த புரோட்டீன் உணவு தான், ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் சோயாவில் அதிக மரபணு மாற்றம் செய்யப்படுகிறது.

எனவே அதனை அதிகமாக சாப்பிடுவதால், பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

சோயா சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்

 

  • பொதுவாகவே சோயா தைராய்டு ஹார்மோனின் அளவை குறைக்கும், எனவே அதிகப்படியான சோயாவை எடுத்துக் கொள்ளும் போது ஹைபோதைராய்டு பிரச்சனையை உண்டாக்குகிறது.

 

  • தாவரங்களில் இயற்கையாக சுரக்கும் ஃபைடோ ஈஸ்ட்ரோஜன் சத்து சோயாவிலும் உள்ளது. எனவே சோயாவை இளம் வயதினர்கள் அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது, அது இயல்பானதை விட அதிகளவு ஈஸ்ட்ரோஜனை சுரக்கச் செய்கிறது, இதனால் உடலில் அதிக பக்கவிளைவுகளை உண்டாக்கிவிடும்.

 

  • உணவின் தரம், நிறம், அளவு ஆகியவற்றை கவரத்தக்கும் விதத்தில் சோயாவில் மரபணு மாற்றம் செய்யப்படுவதால், நம் உடம்பில் தேவையில்லாத கலோரிகளை அதிகப்படுத்துகிறது.

 

  • மரபணு மாற்றப்பட்ட சோயாவை அதிகமாக சாப்பிடுவதால், நம் உடம்பில் உள்ள ஜீன்கள் தடுமாறுவதுடன், உடலுக்கு தேவையான மினரல் உறியப்படுவதை தடுக்கிறது. அதோடு ஜீரண சக்தியை குறைப்பதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது.

-lankasri.com