ஒருவரது சுறுசுறுப்பான செயற்பாட்டிற்கு மூளையின் பங்களிப்பும் இன்றி அமையாததாகும்.
அன்றாட செயற்பாடுகளுக்கு அமைவாக மூளைக்கு பயிற்சியை வழங்கி வந்தால் திட்டமிட்ட செயற்பாடுகளை செவ்வனே நிறைவேற்ற முடியும்.
இதனைக் கருத்தில் கொண்டு ஸ்மார்ட் கருவி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
BRAINNO எனும் குறித்த கருவியானது மூளையிலிருந்து பிறப்பிக்கப்படும் அலைகள் மற்றும் இதய துடிப்பு வீதம் என்பவற்றினை ஒரே நேரத்தில் ஸ்மார்ட் கைப்பேசிகளில் காண்பிக்கவல்லது.
இவற்றினை அவதானித்து தேவையான பயிற்சிகளை வழங்குவதன் ஊடாக மூளையின் செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிக்க முடியும்.
இச்சாதனம் தற்போது நிதி திரட்டல் செயற்பாட்டிற்காக Indiegogo தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள குறித்த சாதனத்தின் செயற்பாட்டினை விளக்கும் டெமோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
-lankasri.com