அதிக ஞாபக மறதி மற்றும் பதட்டம் போன்ற பிரச்சனைகளை குறைக்க தினமும் இந்த சுவாசப் பயிற்சிகளை பின்பற்றுங்கள்.
சுவாசப் பயிற்சி – 1
நேராக நிமிர்ந்து நின்று கைகளை முன் நீட்டிக் கொண்டு மூச்சை உள்ளிழுத்த படி, கைகளை அகட்டி, மார்பை விரிக்க வேண்டும்.
அதன் பின் மூச்சை வெளியே விட்ட படி, பழைய நிலைக்கு வந்து, 15- 20 முறை இந்த பயிற்சியை செய்ய வேண்டும்.
சுவாசப் பயிற்சி – 2
கை விரல்களை கோர்த்துக் கொண்டு நேராக நின்று மூச்சை உள்ளிழுத்து, கொண்டு உள்ளங்கையை வெளியே பார்த்த படி, கைகளை இழுத்து நீட்டி, மூச்சை வெளியே விட்டபடி, பழைய நிலைக்கு வந்து, 15-20 முறை செய்ய வேண்டும்.
இதேபோல் கைகளைத் தலைக்கு மேலே உயர்த்தி, பிறகு கீழே கொண்டு வந்து, மூச்சை உள்ளிழுத்து, மேலே உயர்த்தி மூச்சை வெளிவிட்டு கீழே இறக்க வேண்டும்.
சுவாசப் பயிற்சி – 3
நேராக நின்று மூச்சை உள்ளிழுத்த படி கைகளை மேலே உயர்த்தி, அதே நேரத்தில் குதிகால்களையும் உயர்த்தி கால் விரல்களில் நிற்க வேண்டும்.
பின் மெதுவாக மூச்சை வெளியே விட்ட படி, கைகளைக் கீழிறக்கி, குதிகால்களை கீழே வைத்து சமநிலைக்கு கொண்டு வர வேண்டும்
குறிப்பு
மேலே கொடுக்கப்பட்டுள்ள சுவாசப் பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால், கோபம், படபடப்பு குறைந்து, மூளையின் திறன் மற்றும் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
-lankasri.com