இஞ்சி சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சனைகள்

செரிமானப் பிரச்சனை, சளி பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் இஞ்சியை, அதிகம் உட்கொண்டால் வயிறு வீக்கம், வயிற்று பிரச்சனைகள் மற்றும் இதய பகுதியில் எரிச்சல் போன்றவை ஏற்படும்.

ஒரு நாளைக்கு 4 கிராமுக்கு மேல் இஞ்சி சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

கர்ப்பிணிகள், ரத்த கோளாறு உடையவர்கள் இஞ்சியை உணவில் சேர்த்துக்கொள்ளாமல் இருப்பது உடலுக்கு நல்லது என்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

யாரெல்லாம் இஞ்சி சாப்பிடக்கூடாது?

இஞ்சியிலிருக்கும் செரிமானத்துக்கு உதவும் சில சத்துகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு உகந்தது அல்ல. வயிறு சுருங்குதல் அல்லது குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்க அது வழிவகை செய்யும். எனவே கர்ப்பிணிகள் இஞ்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், பீட்டா- பிளாக்கர், இன்சுலின் எடுத்துக்கொள்பவர்கள், இதயக்கோளாறுகளுக்கு சிகிச்சை எடுப்பவர்கள், ரத்தம் உறைதல் போன்றவற்றுக்கான மருந்து எடுத்துக்கொள்பவர்கள் இதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

பித்த நீர் சுரப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பதால் பித்தப்பையில் கல் இருப்பவர்கள் இதைத் தவிர்க்க வேண்டும்.

முழுதாக இஞ்சியை இடிக்காமல் சேர்த்துக்கொள்வது குடலில் அடைப்பை ஏற்படுத்தும். அதனால் அல்சர் இருப்பவர்கள் இஞ்சியைத் தவிர்ப்பது நல்லது.

இஞ்சியில் இருக்கும் நார்ச்சத்துகள், வயிற்றில் PH நிலையை அதிகரிக்கும். மேலும் செரிமானத்துக்குத் தேவையான என்சைம்களை தூண்டியபடி இருக்கும்.

வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும், இது விரைவாக உணவை செரித்துவிடும். எனவே எடை குறைவாக இருப்பவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.

மேலும் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு தயாராக இப்பவர்கள் இஞ்சியை தவிர்ப்பது நல்லது, ஏனெனில் இஞ்சி அதிக ரத்தப்போக்கை ஏற்படுத்தும்.

-lankasri.com