அன்ரோயிட் சாதனங்களின் ஊடாக தகவல் திருடப்படுவதை தடுக்கலாம்!

smart phpneஇன்று அனைவரது கைகளிலும் ஸ்மார்ட் கைப்பேசிகள் தவழ்ந்து வருகின்றன.

இதனை சாதகமாகப் பயன்படுத்தி ஒவ்வொருவரின் தனிப்பட்ட தகவல்களையும் இலகுவாக திருடக்கூடியதாக இருக்கின்றது.

இதற்காக இணையத்தளங்களை ஹேக்கர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

பல்வேறு இணைய விளம்பரங்களை உருவாக்கி அவற்றின் ஊடாக சில வகையான மென்பொருட்களை தானாகவே நிறுவச் செய்து கைப்பேசியில் உள்ள தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு வருகின்றன.

இச் செயற்பாட்டினை அன்ரோயிட் சாதனங்களில் மேற்கொள்வது இலகுவானதாக காணப்படுகின்றது.

எனவே இப்பிரச்சினையிலிருந்து பாதுகாப்பு தரக்கூடிய இணைய உலாவியினை Mozilla நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

கடந்த வருடம் இவ்வாறான பாதுகாப்புடன் கூடிய இணைய உலாவியினை iOS சாதனங்களுக்காக அறிமுகம் செய்திருந்தது.

இதன் ஊடாக சமூக வலைத்தளங்கள் மற்றும் இலத்திரனியல் வர்த்தகங்களில் ஈடுபடும்போது தகவல்கள் திருடப்படுவதை தவிர்க்க முடியும்.

இவ் உலாவியின் பிரான செயற்பாடாக விளம்பரங்களை கட்டுப்படுத்துதல் காணப்படுகின்றது. குறித்த இணைய உலாவி எவ்வாறு செயற்படுகின்றது என்பதனை வீடியோவில் காண முடியும்.

-lankasri.com

https://youtu.be/NZOpi7w7RMM