காராமணியில் B காம்ப்ளக்ஸ், கனிமச்சத்துக்கள், இரும்புச்சத்து விட்டமின் K, C மாவுச்சத்து, புரதச்சத்து, மக்னீசியம், தாமிரம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற பல சத்துக்கள் ஏராளாமாக நிறைந்துள்ளது.
எனவே இதை காலை, மாலை, இரவு ஆகிய மூன்று வேளைகள் சாப்பிட்டு வந்தால், பல்வேறு நன்மைகளை பெறலாம்.
காராமணியின் மருத்துவ நன்மைகள்
- தினமும் காரமணியை உணவில் சேர்த்து வந்தால், அது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, உடலை சுத்தமாக்கும்.
- காராமணியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுக்கள் புற்றுநோய் செல்களை அழிப்பதுடன், வயிற்றுப் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.
- காரமணியில் கொழுப்புச்சத்து குறைவாக உள்ளது. எனவே இந்த காராமணியை காலை மற்றும் மதியம் சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் எடையில் நல்ல பலனைக் காணலாம்.
- காரமணியில் உள்ள விட்டமின் K மூளையின் செயல்பாட்டை சீராக்கி, எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த உணவாக உள்ளது.
- சிறுநீரக பிரச்சனை மற்றும் வயிற்று உபாதைகள் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த காரமணியை அதிகமாக உணவில் சேர்த்து கொண்டால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.
- காரமணியில் ஃபிளாவனாய்டுகள் அதிகமாக நிறைந்துள்ளதால், இது இதயம் தொடர்பான நோய்களை குணமாக்குவதுடன், பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களுக்கு தீர்வளிக்கிறது.
- காரமணியில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இது முகச்சுருங்களை நீக்கி, தோல்களை மென்மையாக்கி, முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
- -lankasri.com