பழங்களில் உள்ள ஆபத்துக்கள் தெரியுமா?

பழங்கள் மீது மெழுகு பூசுதல், இனிப்புக் கரைசல் நிறமிகளை சேர்த்தல், கல் அல்லது கார்பைடு மூலம் பழுக்க வைத்தல் இது போன்றவை பழங்களின் செயற்கை முறை தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.

இவ்வாறான செயற்கை தயாரிப்பில் உள்ள அனைத்து விதமான பழங்களுமே நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானவை.

மேலும் பழங்களில் பட்டாசு தயாரிக்க பயன்படும் வேதிப்பொருளில் உள்ள பாஸ்பரஸ், அசிட்டிலின் போன்ற நச்சுக்களை கூட சேர்த்து காய்களை பழுக்க வைக்க பயன்படுத்துகின்றனர். எனவே இத்தகைய கலப்படம் நிறைந்த பழங்களை கண்டறிய சில எளிய வழிகள் பற்றி பார்ப்போம்.

பழங்களில் உள்ள கலப்படத்தை கண்டுபிடிப்பது எப்படி?
  • பழத்தின் மேற்பரப்பை பஞ்சினால் தேய்த்து, அதை தண்ணீர் அல்லது தாவர எண்ணெயில் ஊற வைக்க வேண்டும். அதில் கலப்படம் இருந்தால், அந்த பஞ்சின் நிறம் மாறும்.
  • பழத்தின் ஒரு துண்டை ஒரு டம்ளர் தண்ணீரில் 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். கலப்படம் இருந்தால், அதை பார்க்கும் போது அந்த தண்ணீரின் நிறம் மாறி இருக்கும்.
  • ஆப்பிள் பழத்தின் மேற்பரப்பில் ஒரு பிளேடு கொண்டு தேய்த்தால், அதன் தோலில் மெழுகு இருப்பதை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.
  • பழங்கள் வாங்கும் சந்தைகளில் அனைத்து பழங்களும் ஒரே சீரான வடிவம், அளவு மற்றும் வண்ணங்களில் காணப்பட்டல், அது பெரும்பாலும் கலப்படம் நிறைந்தவை.
  • கலப்படம் செய்து பழங்களை நீண்ட நாட்கள் வைத்து பராமரிப்பதால், குறிப்பிட்ட பழங்களை வாங்கும் போது, அதன் சீசன் நேரங்களில் மட்டுமே வாங்க வேண்டும்.
  • திராட்சை பழம் வாங்கும் போது, அதில் கலப்படம் இருந்தால், அதை நீக்க, உப்புநீர் அல்லது வினிகர் கரைசலில் கழுவ வேண்டும். இதனால் திராட்சை பழத்தில் உள்ள ரசாயனம் நீங்கிவிடும்.
  • ஆப்பிள் பழத்தை வெந்நீரில் சில நிமிடங்கள் ஊறவைத்து, பின் அதை கழுவினால் அதன் வெளிப்புறத்தில் உள்ள மெழுகு கரைந்து போய்விடும்.
  • வாழைப்பழம், பப்பாளி போன்ற பழங்களை சாப்பிடும் போது, அதன் தோல்களை நீக்கிய பின் உண்பதே சிறந்தது. இதனால் நம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.
  • -lankasri.com