ஒன்பது மணிநேரம் தூங்கினால் இந்த ஆபத்து நிச்சயம்

ஒவ்வொரு நாளும் மிகக் குறைந்த அல்லது மிக நீண்ட நேரம் தூங்குவதை நாம் தவிர்ப்பது மிகவும் அவசியம்.

ஏனெனில் உடல் மற்றும் மூளைக்கு ஓய்வு நேரமாக நாம் கொடுக்கும் தூக்கமானது, அதிகம் அல்லது குறைவான நேரமாக இருந்தால், பல நோய்களை சந்திக்க நேரிடும்.

நீண்ட நேரம் உறங்குவதால் பாதிக்கும் நோய்?

ஒரு நாளைக்கு ஒன்பது மணி நேரத்திற்கு மேல் அதிக நேரம் தூங்கினால், டிமென்ஷியா என்ற நோய் நம்மை பாதிக்கும்.

மேலும் அதிக நேரம் தூங்குவதால், மூன்றில் ஒரு பகுதி வயதானவர்கள் மட்டும் அல்சீமர் நோய் மற்றும் டிமென்ஷியா நோய் பாதிப்பினால் உயிரிழந்துள்ளதாக கூறுகின்றனர்.

1948-ல் தொடங்கப்பட்ட ஆய்வு ஒன்றில் அதிக நேரம் தூங்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, கார்வாஸ்குலர் இருதய நோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கும் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

மணிநேரக் கணக்கில் தூங்குவதை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில், ஒரு நாளைக்கு ஒன்பது மணிநேரம் தூங்குபவர்களுக்கு, அல்சீமர் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு பத்து வருடத்தில் இரட்டிப்பாக அதிகரிக்கும் என்பதை தெரிவித்துள்ளனர்.

மேலும் நீண்ட நேரம் தினமும் தூங்குவதால், மூளையின் செயல்பாடு மற்றும் சிந்திக்கும் திறன் குறையும் என்று ஆய்வுகள் கூறியுள்ளது.

-lankasri.com