மனித தலை முடியினை இப்படியும் பயன்படுத்தலாம் என்று தெரியுமா?

hairதலை முடியானது பொதுவாக வெயிலில் இருந்து பாதுகாக்கவும், அழகை தருவதற்காகவும் மட்டுமே இருப்பதாக அறிந்து வைத்துள்ளோம்.

ஆனால் அவற்றையெல்லாம் தாண்டில் வேறு சில பயன்பாடுகளையும் தரக்கூடியதாக இருக்கின்றது. இதில் மற்றொரு பயனாக எண்ணெக் கசிவுகளை நீக்க பயன்படுத்த முடியும் என அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சந்தர்ப்பங்களில் நிகழுக்கூடிய எண்ணெய்க் கசிவுகளை அகற்றுவதற்கு செயற்கை பொருட்களே இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்தன.

ஆனால் அவுஸ்திரேலியாவின் University of Technology Sydney (UTS) ஐ சேர்ந்த Rebecca Pagnucco மேற்கொண்ட ஆய்வில் இயற்கையான தலை முடியினையும் பயன்படுத்த முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.

இவர் தனது முதுகலைமானிப் பட்டப் படிப்பின் இறுதியிலேயே இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளார்.

எண்ணெய் கசிவுகளினை அகற்ற பிளாஸ்டிக் போன்ற செயற்கை பதார்த்தங்களை பயன்படுத்துவதனால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளை கருத்தில் கொண்டே இந்த ஆய்வினை அவர் மேற்கொண்டுள்ளார்.

இந்த ஆய்வின் ஊடாக தலை முடியானது அதன் எடையிலும் 3 தொடக்கம் 9 மடங்கு எடைகொண்ட எண்ணெயினை அகத்துறுஞ்சக்கூடியது என்பதையும் அவர் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார்.

-lankasri.com