கிவி பழத்தில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம், ஃபோலேட் அமிலம் ஜிங்க் அமிலம், போலிக் அமிலம், விட்டமின் E, C, ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.
இத்தகைய சத்துக்களை உள்ளடக்கிய கிவி பழத்தை தினமும் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயில் இருந்து விரைவில் விடுபடலாம்.
மேலும் கிவி பழம் கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியம் மற்றும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவும் மிகச் சிறந்த பழமாக உள்ளது.
கிவி பழமானது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பல்வேறு நோய்கள் மற்றும் செல்களின் சிதைவிற்கு காரணமாக அமையும் ரேடிக்கிள்ஸின் வீரியத்தை அழித்து உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
நுரையீரலின் செயல்திறனை அதிகரிக்க உதவும் இந்த கிவி பழம், மூச்சுத்திணறல் மற்றும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகச்சிறந்த உணவாக பயன்படுகிறது.
18 வகையான கனிகளில், கிவி பழம் மட்டும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த சிறந்த கனி என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
உடல் ஆரோக்கியமாக இருக்க 9 வகையான சத்துக்கள் மிகவும் அவசியம். அத்தகைய சத்துக்கள் அனைத்துமே கிவி பழத்தில் உள்ளதால், கனி வகை உணவியல் குறியீட்டில் 16 என்ற எண்ணை கிவி பழத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
எனவே சத்துக்கள் நிறைந்த கனி வகைகளில் முதல் இடம் வகிப்பது கிவி பழம் தான். அதற்கு அடுத்தப்படியாக பப்பாளி, தர்பூசணி, ஸ்ட்ரா பெர்ரி, மாம்பழம், ஆரஞ்சு போன்ற பழங்களை சத்துக்களின் அடிப்படையில் ஆய்வாளர்கள் வகைப்படுத்தி உள்ளனர்.
-lankasri.com