மருத்துவக் குணங்கள் நிறைந்த பூண்டை சாப்பிடாமலேயே அதனுடைய நன்மைகளை பெறலாம்.
பூண்டை சாப்பிடாமல் பலனை பெறுவது எப்படி?
காலையில் எழுந்ததும் ஒரு பல் பூண்டை எடுத்து வாயில் போட்டு கன்னப் பகுதியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கன்னப் பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு பூண்டை சுழற்றி 30 நிமிடங்கள் வைத்துக் கொள்ள வேண்டும்.
30 நிமிடத்திற்கு பின் வாயில் உள்ள பூண்டை துப்பி விட்டு பற்களை நன்றாக துலக்கி, சிறிதளவு புதினா இலைகளை வாயில் போட்டு மெல்ல வேண்டும். இதனால் வாயில் இருக்கும் பூண்டின் வாசனை போய்விடும்.
பூண்டை வாயில் வைப்பதால் ஏற்படும் நன்மைகள்?
- பூண்டின் மருத்துவ குணங்கள் உடலுக்குள் சென்று நிணநீர் மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்படும்.
- உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாகுவதுடன், வாய் துர்நாற்றம் ஏற்படாமல் தடுக்கப்படும்.
- உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து பசியின்மை, காய்ச்சல், சுவாசக் கோளாறுகள் மற்றும் ரத்தசோகை போன்ற பிரச்சனைகள் குணமாகிறது.
- வறட்டு இருமல் பிரச்சனை குணமாகுவதுடன், சிறுநீரகத்தில் கற்கள் வராமல் தடுக்க உதவுகிறது.
குறிப்பு
பூண்டு சாப்பிடுவதால் அலர்ஜி ஏற்படுபவர்கள் மற்றும் வாய்ப்புண் பிரச்சனை உள்ளவர்கள் இந்த முறையை பின்பற்றக் கூடாது.
-lankasri.com