பாசிப்பயிறு, நரிப்பயிறு, காராமணி பயிறு, தட்டைப்பயிறு, பயற்றங்காய் மற்றும் மொச்சைப் பயிறு போன்றவை பயிறு வகைகளில் சத்துக்கள் நிறைந்தவை ஆகும்.
பயறு வகைகளில் விட்டமின்கள், B காம்ப்ளெக்ஸ், ரிபோபிளேவின், புரதச்சத்து, மாவுச்சத்தும் போன்றவை அதிகமாக அடங்கியுள்ளது. பயிறு வகைகளிலேயே சோயா பயற்றில் தான் 48 சதவிகிதம் புரதம் மற்றும் 30 சதவிகிதம் மாவுச்சத்துக்களும் உள்ளது.
பயறு வகைகளை எப்படி சாப்பிட்டால் நல்லது?
- பச்சைப் பயறு மற்றும் தட்டைப் பயறுகளில் புரதச்சத்து அதிகம் உள்ளது. எனவே இவ்வகை பயிறுகளை முளைக்கட்டி சாப்பிட்டு வந்தால், நல்ல பயன்களை பெறலாம்.
- முளைக்கட்டிய பயறுகளில் அஸ்கார்பிக் அமிலம், விட்டமின் C போன்றவை அதிகம் உள்ளது. எனவே இந்த பயிறுகளை சாப்பிடுவதால், வாயுத்தொல்லை, செரிமானம் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
- முளைக்கட்டிய பயறுகளில் விட்டமின்கள் அதிகமாக இருப்பதால், அந்த முளைக்கட்டிய பயிற்றை பச்சையாகவே சாப்பிடலாம் அல்லது பொரியல் செய்தும் சாப்பிடலாம்.
- பயற்றம் பருப்பை வேகவைத்த நீரில் உப்பு, காரம் சேர்த்து, மெலிந்த உடலமைப்பு உள்ளவர்கள் தொடர்ந்து குடித்து வந்தால், உடல் சோர்வு நீங்கி, உடலின் வலிமை அதிகரிக்கும்.
- பயிறு வகை உணவுகளை வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், குழந்தைகளின் உடல் வலிமை மற்றும் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
- -lankasri.com