கொழுப்பைக் குறைத்து இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க இரண்டு கார்டியோ பயிற்சிகள் உள்ளது. இதை காலையில் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலனை பெறலாம்.
மவுன்டெயின் க்ளைம்பர் (Mountain Climber)
முதலில் விரிப்பில் முட்டிப் போட்டு, முழங்கை மற்றும் கால் விரல்களை ஊன்றி, தவழும் குழந்தையைப் போன்ற நிலையில் உடலை நேராக வைத்துக் கொண்டு, வலது காலை மட்டும் பின்னோக்கி, முழு உடலின் எடையையும் கை மற்றும் பாத விரல்கள் தாங்குமாறு இருக்க வேண்டும். இதேபோல இடது காலுக்கும் செய்ய வேண்டும்.
பலன்கள்
- இடுப்பு மற்றும் தொடைப் பகுதிகளில் உள்ள சதை குறையும்.
- உடல் முழுவதும் வலிமையாகும்.
- முதுகு வலியைக் குறைக்கும்.
- உடலின் சமநிலைத்தன்மை அதிகரிக்கும்.
ஹை நீ (High Knee)
முதலில் விரிப்பில் நேராக நின்று கைகளை வீசி நடப்பது போன்று இடது காலை இடுப்பு வரை அல்லது இடுப்புக்கு மேல் முடிந்த வரை உயர்த்த வேண்டும். இதேபோல் வலது காலுக்கும் செய்ய வேண்டும்.
பலன்கள்
- இடுப்பு, தொடை, முழங்கால் பகுதியின் தசைகள் வலிமையாகும்.
- உடலில் உள்ள கொழுப்புகள் குறையும்.
- கைகால்களின் இயக்கம் சீராகும்.
-lankasri.com