– ஞாயிறு நக்கீரன், ஜூலை 20, 2017.
பல இனம், பல சமயம், பல மொழி, பல பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட இந்த மலையக மண்வாழ் மைந்தர்களில் ஒரு சாரார் மட்டும் அரச அணுகூலத்தைத் தடையின்றி காலம் உள்ளளவும் கார் உள்ளளவும் பெற்றுக் கொள்ள ஏதுவாக ‘மண்ணின் மைந்தர்’ என்னும் தகுதி வழங்கப்படுவதற்கு அரசியல் சாசன ரீதியில் உரிமை இருப்பதாகவும் அதைப்பற்றி ஒருவரும் ஒருபோதும் கேள்வி எழுப்பக்கூடாதென்றும் அப்படி கேள்வி எழுப்ப முனைபவர்கள் பழைய வரலாற்றை ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டும் என்றும் தேசிய முன்னணியின் பெரிய அண்ணனான அம்னோ சார்பில் அவ்வப்பொழுது சொல்லப்படுவதுண்டு.
இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், நோ ஓமாரைப் போன்றவர்கள் வந்தேறிகள் என்று அவ்வப்பொழுது சொல்லி வைப்பதுடன் ‘மே 13-ஐ மறந்து விடாதீர்கள்’ என்று எச்சரிப்பதும் அடிக்கடி நடக்கும்.
இப்படிப்பட்ட நிலையில், இந்தியாவில் இருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து வந்து பல நூற்றாண்டுகளாக தங்களின் வாழ்வை இந்த மலையக மண்ணுடன் ஐக்கியப் படுத்திக் கொண்ட மக்களில் ஒரு பிரிவினருக்கு மட்டும் மண்ணின் மைந்தர் தகுதி வழங்க முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும் அது குறித்து அரசிதழில் வெளியிடுவதா அல்லது நிர்வாக நடைமுறையின்படி அறிவிப்பு செய்வதா என்பது குறித்து ஆலோசிக்க வேண்டியுள்ளது என்ற பொருள்படும்படியும் பிரதமர் அறிவித்திருப்பது, அவரின் ‘ஒரு கண்ணுக்கு வெண்ணையும் ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பும்’ என்ற பாரபட்சப் போக்கை வெளிப்படுத்துகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இயற்கை வள நாடாக விளங்கிய அதே நேரத்தில் வேளாண்மை வள நாடாகவும் திகழ்ந்தது, மலாயா. அந்தக் காலக் கட்டத்தில் பொருளாதார வளர்ச்சிக்காக ‘டின்’ என்னும் உலோக உற்பத்தியையும் ரப்பர் உற்பத்தியையும் நாடு நம்பி இருந்தது. அந்த நேரத்தில், மலாயா இந்தியர்களில் 90 விழுக்காட்டினருக்கும் மேலாக மலாயாத் தமிழர்கள்தான் இருந்தனர்; குறிப்பாக தோட்டப் பாட்டாளிகள் திகழ்ந்தனர்.
உலக சந்தையில் ரப்பருக்கு வாய்ப்பு மந்தமடைந்தபோது, செம்பனை உற்பத்தியை பொருளாதார மேம்பாட்டிற்கு பற்றுக் கோடாக நாடு கொண்டபோது செம்பனை பயிர் வளர்ப்பிலும் செம்பனை உற்பத்தியிலும் தமிழ்த் தொழிலாளர்கள் முற்றும் முழுதும் ஈடுபட்டனர்.
அன்றைய மலாயாவில் நாட்டின் வட புலத்தில் இருந்து தென்புலம் வரை மலாயாத் தமிழர்கள்தான் தோட்டத் தொழிலாளர்களாக பாடுபட்டனர். இதற்காக, காட்டையும் மேட்டையும் திருத்தி, இந்த மண்ணின் வளப்பத்திற்காக இரத்தத்தையும் வியர்வையும் சிந்தி ஓடாய்த் தேய்ந்தவர்கள் தமிழ்ப் பாட்டாளியினர்தான். தங்களின் வாழ்க்கை நிலையும் ஓடாகத்தான் இருந்தது; அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இந்த மண்ணின் வளப்பத்திற்கும் வளர்ச்சிக்கும் பாடுபட்டவர்கள் தமிழர்கள் என்றால் அதில் மிகையில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக, நாடு விடுதலை அடைவதற்காக எத்தனையோ வழியில் தங்களின் வாழ்வையும் எதிர்காலத்தையும் ஈகம் செய்தவர்கள் மாலாயத் தமிழர்கள். இந்தியா சுதந்திரம் அடைந்ததால் இன்னும் ஊக்கம் பெற்று மலாயா விடுதலை இயக்கத்திலும் போராட்ட களத்திலும் ஈடுபட்டவர்கள் மலாயாத் தமிழர்கள்.
எனவே, இந்த மண்ணில் பிறந்த தமிழர்கள் அனைவருக்கும் மண்ணின் மைந்தர் என்ற தகுதியை சமய எல்லையைக் கடந்து வழங்கினால், அது பிரதமர் பிரகடனப்படுத்தியுள்ள ‘ஒரே மலேசியக் கொள்கை’க்கு பொருத்தமாக இருக்கும்.
அருமையான கட்டுரை!!!
#இந்த மண்ணில் பிறந்த தமிழர்கள் அனைவருக்கும் மண்ணின் மைந்தர் என்ற தகுதியை சமய எல்லையைக் கடந்து வழங்கினால், அது பிரதமர் பிரகடனப்படுத்தியுள்ள ‘ஒரே மலேசியக் கொள்கை’க்கு பொருத்தமாக இருக்கும்.#
சமயம் ஒன்றே ‘மண்ணின் மைந்தர்’ தகுதியை நிர்ணயிக்குமானால் அது சட்டம் அல்ல சதிராட்டம். அரசியல் பலம் உள்ளவன் இல்லாதவனை மட்டம் தட்டும் சட்டம். அதற்கு ஏங்கி ஒரு கூட்டம் அலைமோதினால் அவருக்கு ஏது தன்னைத் தமிழர் என்று சொல்லிக் கொள்ளக் கூடியது தகுதி?
தமிழ் நாடே அவர்களுக்கு சொந்தம் இல்லை . தமிழனுக்கு ஏது நாடு? அவர்கள் வந்தேறிகள்தான்
ஐயோ! கண்ணில் ஒத்திக் கொள்ளலாம், கட்டுரை! மற்றபடி ம.இ.கா. காரன் கூட கண்டுக்க மாட்டான்!
அறிவு பூர்வமாக ஒன்றும் நடக்காது. நாம் என்ன கூறினாலும் வரும் காலம் ஒரு கேள்வி குறியே நமக்கு.
மதம் மாறிகள் ” பூமி புத்ரா ” ஆக முடியும் என்றால், பங்களா போன்ற வந்தேறிகள் “பூமி புத்ரா ” ஆகி விடுவார். இங்கே பிறந்த நம் இந்தியர் கதி…? என்ன மடமை …??
1. கயவன் அவர்களே – தமிழ்நாடு தமிழனுக்குச் சொந்தமில்லையென்பது மறுக்க முடியாத உண்மை. தமிழர்கள் மட்டும் அன்று சுதந்திர இந்தியாவிலிருந்துப் பிரிந்து தனி நாடு அமைத்திருந்தால், இன்றைக்கு நம் தமிழை உலகம் அறிந்திருக்கும்;
மதங்களுக்கெல்லாம் தாய் சமயமாகவும் மிகத் தொன்மையாகவும் விளங்குகின்ற நம் சைவ சித்தாந்தக் கோட்ப்பாட்டை இவ்வுலகம் இன்னும் அறிந்திருக்கும். இன்று சுதந்திர இந்தியாவில் மத்திய அரசு தமிழர்களின் உணர்வுகளுக்கெதிராக ஏதோவொரு உள்நோக்கத்தோடு நடந்துக் கொள்வதையெல்லாம் பார்க்கும் போது அன்று தமிழர்கள் சுதந்திர இந்தியாவோடு இருப்போமென்ற எடுத்த முடிவு மிகப் பெரியத் தவறாகிவிட்டது!
ஹாஹாஹா என்ன ஒரு அறிவு ஜீவிதம் ! 1929 தான் பிரிட்டன் பேராக்கில் ஆளுமை ஒப்பந்தம் போட்டான். பிறகு அவனே 1957 சுதந்திரம் தரும் பொழுது: மண்ணின் மைந்தர்கள் மற்றும் இஸ்லாம் நாட்டின் இறைவழி என்று உறுதி படுத்தி , பிறகு நாட்டில் உள்ள மற்றவர்களை நாட்டின் பிரஜைகள் (WARGANEGARA) என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளான். மேலும் 1965 ஆகஸ்ட் லில் சிங்கப்பூர் பிறந்தவுடன் , மலேஷியா – பிரிந்தான் சுதந்திரம் இயல்பாகவே முறிந்தது . இருப்பினும் , 2 / 3 பெரும்பான்மை பார்லிமென்டின் உள்ள பொழுது மகாதீர் இந்தியர்களையும் சீனர்களும் நாட்டின் பிரஜைகள் என்று உறுதி செய்தார் . இந்தியர்களுக்கு செய்த அனைத்தையும் திருடியது சாமி வேலு. ஒத்து ஊதியது மா இ கா ஜாலராக்கள் ! நாளைக்கே 2 / 3 பெரும்பாண்மையில் நாட்டில் உள்ள அணைத்து இந்தியர்களின் பிரஜா உரிமையை பறிக்க முடியும் ! மேலும் நாட்டின் பொருளாதார சுமை தலையை சுற்றுகிறது ! ‘மண்ணின் மைந்தர்கள்’ குடியுரிமை வாங்கி , நாட்டின் கடனை கட்டவா ?
2. abraham terah அவர்களே இந்த நல்ல நேரத்தில் ம.இ.கா.வைப் பற்றி ஒன்றும் பேசவேண்டாம்; அவர்களால் இனிமேல் நமக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை; நம் சமுகத்தின் நலன்களை பாதிக்கின்ற ஒவ்வொன்றையும் அவ்வப்போது சொல்ல வேண்டிய இடத்தில் அவர்களே சொல்லியிருந்தால் இன்றைக்கு இவ்வளவுப் பெரிய இழப்புக்ககளை நாம் சந்தித்திருக்க மாட்டோம். முன்னாள் தலைவர் மாணிக்கா அவர்களின் மறைவோடு நம்மைப் பீடைகள் பிடித்து விட்டது. யாரை நம் மக்கள் நலன்கள் கருதி அந்த வேண்டாதவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென்றுயெண்ணி மத்திய செயலவை உறுப்பினர்களிடமிருந்து அந்த அதிகாரத்தை மாணிக்கா அவர்கள் வாங்கினாரோ, அவர் மறைவிற்குப் பிறகு அவரிருந்த இடத்திற்க்கே வந்தவர்க் கைக்கே அந்த அதிகாரம் போய்விட்டது. மாணிக்கா காலத்தில் அமைச்சரவையில் குறைவான எண்ணிக்கையில் அமைச்சர்களிருந்தும் நமக்கு இரண்டு முழு அமைச்சர்கள். இன்று 37 அமைச்சர்களிருந்தும் நமக்கு ஒரேயொரு அமைச்சர்தான். இதெல்லாம் நமக்கு பெரிய இழப்புத்தானே! இன்னும் அடுக்கிக் கொண்டேப் போகலாம்!
சுப்பிரமணியம் சார்! இங்குள்ள பல பங்களா’ க்கள் இங்குள்ள பெண்களைத் திருமணம் செய்து கொண்டு பூமிபுத்ராக்கள் ஆகிவிட்டார்கள்! அவர்கள் வாழ்த்துங்கள்!
தமிழ் நாடு தமிழர்களுக்குச் சொந்தமில்லாது போனதற்குக் காரணம் கயவர்தான்.
தமிழ் நாடு தமிழர்களுக்குச் சொந்தமில்லாது போனதற்குக் காரணம் படிக்காமலே காலமெல்லாம் ஆட்டு மந்தைகளை போல் வாழும் மக்களாலே. இவர்களுக்கு தலைவன் மட்டும் சரியாக இருக்க வேண்டும், மக்கள்கள் சரியாக இருக்க மாடடார்கள் ! ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடி புலவனின் இறுதி சடங்கில் மேய்ந்த ஈக்கள் அதிகம், மனிதர்கள் வரவில்லை ! நாய்க்காவது நன்றி இருக்கும், மிருகங்களை போல் இன பெருக்கம் மட்டும் செய்யும் இவர்கள், தேர்தலில் லஞ்சம் வாங்காமல் ஒட்டு போட்ட்து உண்டா ? 8 கோடி மக்களில் , வெறும் 450 லட்சம் வாக்குகள்தான் போடா பட்ட்து நாம் தமிழர் கட்சிக்கு ! இது 1% க்கும் குறைவு ! காரணம் , கல்வி இல்லாமை , தாய்நாட்டின் மீது அன்பு இல்லாமை ! இவர்கள் நாட்டில் எல்லாம் மாற வேண்டும் ஆனால் மக்கள் மாற மாட்டார்கல் !
படிக்காமல் அல்ல படிப்பற்கு வாய்ப்பு வழங்காமல் தமிழரை குலம் பிரித்துப் பார்த்த மேட்டுகுடி மாக்கள்தான் காரணம்.
தமிழனுக்கு இன்று எங்கும் தலைவன் இல்லை …வரலாற்றதில் பல முறை இது நடந்து உள்ளது ..ஒரு கடடத்தில் இனமே காணாமல் போனது …ஒரு தலைவன் நிச்சயம் வருவான் …இந்தி திணிக்கும் மோடிக்கு வாழ்த்துக்கள் …எல்லா தென் நாடுகளும் எதிர்க்கின்றன ..சீனா டெல்லிக்கு அடுத்தபடி உதவி தூதரகம் சென்னையில் திறக்க உள்ளது அங்கு நூற்றுக்கணக்கன தமிழ் எழுத பேச தெரிந்த சீனர்கள் வேலை செய்வார்கள் ..விரைவில் வாண வேடிக்கை பார்க்கலாம் ..2007 சீனா கொடுத்த நடப்பு கரத்தை தட்டியது ஈழ தமிழர்கள் செய்த வரலாற்று பிழை ..எதிரிக்கு எதிரி என் நண்பன் ..
முதலில் உலக பொருளாதாரம் புரிய வில்லை தமிழர்களுக்கு ! 18 ஆம் நூற்றாண்டுகளில் அட்லாண்டிக் பெரும்கடலில் 7 ஆண்டுகள் பாடு பட்டு CABLE போட்ட்து அமெரிக்காவும் பிரிட்டனும். பிறகு 20 நிமிடங்களில் மின்னியல் தொலைதொடர்பு துண்டிக்க பட்ட்து, சிறு தவறுதல்னால். இதை இங்கே ஏன் பதிவு செய்கிறேன் என்றால் , தமிழர்களின் அறிவியல் கண்டு பிடிப்பு , 20 ஆம் நூற்றாண்டில் மிக குறைவு ! அப்படியே கண்டு பிடித்தாலும் , மரியாதை கிடைக்காது ! ஈமெயில் கண்டு பிடித்த சிவா ஐயாதுறை , அதனை MICROSOFT குக்கு 400 மில்லியன் USD க்கு விட்ட்று விட்டார். இப்படி எல்லா படைப்புகளுக்கும் விலை இருக்கிறது , ஆனால் ஜாதியை கட்டி கொண்டு திரியும் தமிழர்களிடம் புதுமை இல்லை ! எனவே , உலக பொருளாதாரம் புரியாதவர்கள் குறை மட்டும் சொல்ல்லி கொண்டு , ஒரு தலை வருவான் என்று காத்திருக்கிறீர்கள். சீமான் அவர்களே சொல்கிறார், தமிழ் நாட்டில் தடுப்பணை கட்டிட , மேலைநாடுகளிடம் பணம் கேப்போம் என்று ! தமிழன் முன்னேறாததற்கு காரணம் , ஒரு நல்ல அரசியல் கொள்கை இல்லை அங்கே ! அடுத்தவன் மீது பழி போட்டு போட்டு , வாயாலே வடை சூடுபவர்கள் ஏராளம் ! ஆனால் எதுவும் மாறாது ! சினிமாவிலும் , சாராயத்திலும் மூழ்கி கிடைக்கும் சமூகம் , என்றும் இப்படித்தான் இருக்கும் ! சுயநலம் போக்கி , 20 ஆண்டுகள் ஒட்டு மொத்த தமிழர்களின் சம்பளங்களை சீமானிடம் தாருங்கள் ! குறைந்தது தற்சார்பு பொருளாதார கொள்கையாவது மிஞ்சும் ! 1944 உலக 2 ஆம் போரில் தோற்ற ஜெர்மானியர்கள் , 300 டிரில்லியன் கப்பம் கட்டிட வேண்டும் அமெரிக்காவுக்கு . அதுவும் 300 ஆண்டுகளில் . இப்பொழுதுதான் 70 ஆண்டுகள் முடிந்திருக்கிறது ; இன்னமும் 230 ஆண்டுகள் கட்டிட வேண்டும் . எனவே பொருளாதார அடிப்படை தெரியாமல் பேச கூடாது !