நாய் கடித்து விட்டதா? உடனடியாக இதை செய்திடுங்கள்

தெரு நாய் கடித்தால் தான் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். வீட்டு நாய் கடித்தால் தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தேவையில்லை என்பது சரியா? என்று கேட்டால், அதற்கு சரியில்லை என்பதே உண்மை.

தெரு நாய் கடித்து விட்டால் என்ன செய்வது?

தெரு நாய் கடித்துவிட்டால், அதற்கான ‘ARV’ எனும் ரேபீஸ் தடுப்பூசியை நாய் கடித்த உடனே கண்டிப்பாகப் போட்டுக் கொள்ள வேண்டும். நாய் கடித்த அன்று முதல் 3, 2, 7, 14, 28 போன்ற நாட்களில் 5 ஊசிகளை போட்டுக் கொள்ள வேண்டும்.

காயம் கடுமையாக இருந்தால், 6-வது ஊசியை 90-வது நாளில் போட்டுக் கொள்ளலாம். முடிந்தவரை காயத்திற்கு கட்டு போடுவதையும், தையல் போடுவதையும் தவிர்ப்பது நல்லது.

ஒருவேளை தையல் போடும் அளவுக்கு காயம் மிகப் பெரிதாக இருந்தால், அந்த காயத்தைச் சுற்றிலும் ரேபீஸ் தடுப்புப் புரதம் (Rabies immunoglobulin) எனும் ஊசியைப் போட வேண்டியது மிகவும் முக்கியம்.

வீட்டு நாய் கடித்து விட்டால் என்ன செய்வது?

வீட்டு நாய்க்கு முறைப்படி முன்னதாக ரேபீஸ் தடுப்பூசி போட்டிருந்தால், கூட, அந்த நாயால் கடிபட்டவர் ரேபீஸ் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும். நாய் கடித்த அன்று முதல் 3, 7 போன்ற நாட்களில் என்று 3 ஊசிகளை போட்டுக் கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் அந்த நாயை 10 நாட்களுக்குக் கண்காணிக்க வேண்டும். நாயின் குணத்தில் எவ்வித மாறுதலும் தெரியவில்லை என்றால், இந்த மூன்று தடுப்பூசிகளுடன் நிறுத்திக் கொள்ளலாம்.

ஒருவேளை அந்த நாயிடம் வெறிநாய்க்கு உரிய மாறுதல்கள் தெரிய வந்தால், நாய் கடித்த 14 மற்றும் 28-வது நாட்களில் ஊசிகள் போட வேண்டும்.

-lankasri.com