தங்கத்தை கக்கும் ஆச்சரிய பக்டீரியா: கலக்கிய ஆய்வாளர்கள்

தங்கம் என்றாலே சுரங்கம் போன்ற இடங்களில் தான் கிடைக்கும் என்பது பலரும் அறிந்த விடயம்.

ஆனால் ஒரு வகையான பக்டீரியாவிலிருந்து கூட தங்கத்தை எடுக்க முடியும் என கூறி ஆச்சர்யப்படுத்துகின்றனர் மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள்.

Cupriavidus metallidurans என்றழைக்கப்படும் பக்டீரியா தான் தங்கத்தை கொடுக்கிறது. விஷத்தை தங்கமாக மாற்றும் முயற்சி தான் இது. தங்க அயனிகள் தண்ணீரில் கரையும் போது பக்டீரியா விஷமாக மாறி போகிறது.

இதிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள delftibactin A என்ற புரதத்தை அது உருவாக்குகிறது.

இது ஒரு கவசமாக செயல்பட்டு விஷம் கலந்த அயனிகளை, பாதிப்பு இல்லாத தங்கத் துகள்களாக மாற்றி தனது செல்களின் வெளியே குவித்து விடுகிறது.

இதுகுறித்த ஆராய்ச்சிக்காக கஸெம் காஷெஃபி மற்றும் ஆடம் பிரவுன் என்ற ஆராய்ச்சியாளர்கள் தனி பரிசோதனை கூடத்தை உருவாக்கியுள்ளார்கள்.

காஷெஃபி கூறுகையில், கோல்டு குளோரைடு வாங்கவும் பணம் செலவாகும் என்றாலும் ஒன்றுக்கும் உதவாத அதிலிருந்து தங்கத்தை உருவாக்குகிறது இந்தப் பக்டீரியா.

பரிசோதனை கூடத்தில் பக்டீரியாவை வைத்துவிட்டு, கோல்ட் குளோரைடை உள்ளே செலுத்தினால் ஒரு வாரத்தில் அது அனைத்தையும் தங்கமாக மாற்றி விடுகிறது என இவர் கூறுகிறார்.

இந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து செய்வதனால் பின்னாளில் இந்தப் பக்டீரியாவை கொண்டு தண்ணீரில் கரைந்த தங்கத்தைப் பிரித்து எடுக்க முடியும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

-lankasri.com