பல்லி விழுந்த உணவு விஷமா? உண்மை என்ன?

பல்லி விழுந்த உணவை சாப்பிடுவதால், வாந்தி, மயக்கம் ஏற்படும் என்று கூறுவார்கள்.

ஆனால் உண்மையில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்டால் என்னாகும் என்பதை பார்ப்போம்.

பல்லி விழுந்த உணவை சாப்பிட்டால் என்ன நடக்கும்?

பல்லி என்பது கரப்பான் பூச்சி போன்ற ஓர் உயிரினம். பல்லிகளில் ஒரு சில இனங்கள் மட்டுமே விஷமுள்ளவை. ஆனால் நம் வீடுகளில் வளரும் பல்லிகள் விஷமானவை அல்ல.

பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்டால், வாந்தி மற்றும் மயக்கம் ஏற்படும். அதற்கான காரணம் என்னவெனில், பல்லி சுத்தமான இடத்தில் மட்டும் இருப்பதில்லை. அது தோட்டம் முதல் வீட்டின் கழிவறை வரை பல இடங்களில் சுற்றித் திரியக்கூடியது.

அதனால் பல்லியின் உடல், கால்கள் என்று பல இடங்களில் கண்ணுக்குத் தெரியாத லட்சக்கணக்கான கிருமிகள் மற்றும் சிறுநீர் கழிவுகள் போன்றவை அதனுடன் ஒட்டிக்கொண்டிருக்கும்.

அத்தகைய பல்லி உணவில் விழும் போது, அதன் கூடவே உள்ள கிருமிகளும் உணவில் கலந்து விடும். அதனால் அந்த உணவு கெட்டுப்போகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

அப்போது அந்த பல்லி விழுந்த உணவை சாப்பிடும் போது, அதில் உள்ள கிருமிகள் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று மருத்துவம் கூறுகிறது.

அதுவும் பல்லி விழுந்த உணவை சாப்பிடுவதால், ஏற்படும் பாதிப்புகளை விட, அதனால் ஏற்படும் பயத்தினால் தான் அதிக பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.

-lankasri.com