தாமரையின் மலர், இலை, தண்டு, வேர்க்கிழங்கு ஆகிய அனைத்தும் பல்வேறு நன்மைகளைக் கொண்டது.
அதிலும் செந்தாமரை மற்றும் வெந்தாமரை ஆகிய இரண்டுமே மருத்துவத்தில் அதிகமாக பலன் தருபவை.
தாமரை மலரின் பலன்கள்?
- தாமரை மடல்களை நீரில் போட்டு சூட வைத்து, அந்த நீரை தினமும் குடித்து வந்தால், உடல் சூடு குறைந்து குளிர்ச்சியாகும்.
- அரைத்த தாமரைப்பூவை, பாலில் போட்டு கருவுற்ற தாய்மார்கள் தினமும் குடித்து வந்தால், செரிமானம் சீராகி, பசி உணர்வுகள் உண்டாகும்.
- தாமரை மடல்களை, காயவைத்து தூளாக்கி, அதை தினமும் பாலில் பனங்கற்கண்டு கலந்து சாப்பிட்டு வந்தால், உயர் ரத்த அழுத்தம் குறையும்.
- தாமரை மடல்களை நீரில் காய்ச்சி, குடிநீராக குடித்து வந்தால், அலர்ஜிகள் நீங்கும்.
- உலர்ந்த தாமரை மடல்களை, நீரில் போட்டு குடித்து வந்தால், இதயம் தொடர்பான நோய்கள் குணமாகும்.
- தாமரை மடல்களை, நீரில் போட்டு அதில் சிறிது பனை வெல்லம் சேர்த்து குடித்து வந்தால், நீர்சுருக்கு, சிறுநீர்த்தாரை எரிச்சல் போன்றவை குணமாகும்.
- தாமரை மடல்களை, சிறிதளவு நீரில் ஊறவைத்து, காலையில் குடித்து வந்தால், நாள்பட்ட இருமல் குணமாகும்.
தாமரை விதைகளின் பலன்கள்?
- தாமரை விதைகளை அரைத்து, அதை தேனுடன் நாக்கில் தடவி வந்தால், விக்கல் மற்றும் வாந்தி சரியாகி, உடல் சூடு தணியும்.
- ஆண்மைத்தன்மையை அதிகரிக்க, தாமரை விதைகளை அரைத்து, பாலில் கலந்து தினமும் குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
- தாமரை விதையில் உள்ள சத்துக்கள், உடலின் ரத்தக் குழாய்களை விரிவாக்கி, மன அழுத்தத்தைக் குறைத்து, தூக்கமின்மை பிரச்சனை வராமல் தடுக்கிறது.
தாமரை இலையின் பலன்கள்?
- தாமரைத் தண்டின் கணுப் பகுதிகளை பெண்கள் சாப்பிட்டு வந்தால், அவர்களின் கருப்பை ரத்தப்போக்கு பிரச்சனை குணமாகும்.
- வெல்லத்துடன் தாமரை தண்டை கலந்து சாபிட்டால், ரத்த வாந்தி, மற்றும் சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறும் பிரச்சனை குணமாகும்.
- தாமரைப்பூ, இலை, தண்டு மற்றும் கிழங்கை ஆகியவற்றின் சாறெடுத்து, அதற்கு இரு மடங்கு நல்லெண்ணெய் கலந்து நன்கு சுட வைத்து, அதை தினமும் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால், கண்பார்வை அதிகரிக்கும்.
- தாமரைப்பூவுடன் அதிமதுரம், நெல்லிக்காய், மருதாணி இலை ஆகியவற்றை பாலுடன் அரைத்து, தேங்காய் எண்ணெயில் காய்ச்சி, அதை தினமும் தலையில் தடவி வந்தால், முடி உதிர்தல், இளநரை பிரச்சனை நீங்கும்.
-lankasri.com