சுறவகாற்குள” தைப்பூச திருநாளை தமிழர்கள் தமிழர் நெறியோடு முன்னெடுக்க வேண்டும்

சுறவகாற்குள” தைப்பூச திருநாளை தமிழர்கள் தமிழர் நெறியோடு முன்னெடுக்க வேண்டும்

மலேசிய நாம் தமிழர் இயக்கம் வேண்டுகோள்

குறிஞ்சி நில மன்னன் தமிழர் இறையோன் முப்பாட்டன் முருகனின் தைப்பூச திருவிழாவை மலேசிய தமிழர்கள் தமது தொன்றுதொட்ட மரபு வழி தங்கள் நேர்த்தி கடனை
தமிழர் நெறியுடன், இறை உணர்வுடன் கொண்டாடி, வளரும் இளைய தலைமுறையினருக்கு சிறந்த அடையாளமாக திகழ வேண்டுமாய் மலேசிய நாம் தமிழர் இயக்கம் கேட்டுக் கொள்கின்றது.

தமிழ் கடவுளான முருகனுக்கு கொண்டாடப்படும் இத்தைப்பூச திருநாளில் நேர்த்தி கடன் செய்யும் பக்தர்கள், முருகனுக்கே உரிய தமிழர் நெறியுடன் காவடிகளை மட்டும் எடுப்பது சிறப்பாகும்.

மற்றும் சாமி என்ற பெயரில் மது புகை போன்ற நடவடிக்கைகளை தவிர்த்து நமது கடவுளின் புனிதத்தை காக்க வேண்டும்.

தைப்பூசம் மற்றும்மின்றி எந்தவொரு பண்பாட்டு விழாவிற்காக வழிபாட்டு தளங்களுக்கு செல்லும் ஆண் பெண் இரு பாலரும் தமது பண்பாட்டு கலாச்சாரம் காக்கும் வண்ணம் தமிழர் நெறியுடன் உடையணிந்து வருவது அவசியமானது.

நமது பண்பாட்டு புரட்சியுடன் ஒழுக்கமாக உடையணிந்து வந்தால் எந்தவித அச்சுறுத்தலுக்கும் (பெண்கள்) பயப்படத் தேவையில்லை.

நமகென்று மரபு, மாண்பு, வழி, வாழ்வியல் என அனைத்தும் பிற இனத்தவர்களை விட சிறப்புமிக்க வரலாற்று நெறிமுறைகள் இருக்க,
அதை சிறுமைப் படுத்தாத வண்ணம் நமது தமிழ் பெண்கள் ஆபாசமின்றி தங்கள் உடையில் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

நமது இளைஞர்கள் சிலர் மது மற்றும் போதைப் பொருள் உட்கொண்டு வழிபாட்டு தளங்களுக்கு வருவதும், மது போத்தல்களை கையில் கொண்டு காலணிகளை அணிந்து காவடிகளுக்கு முன் கூத்தாடுவதும், தயவுசெய்து தவிர்த்து விடுங்கள்.

இத்தகைய செயல்கள் ஒட்டுமொத்த தமிழர் இனத்தையே அவமதிக்கும்.

நமது கடவுள்களை நாமே மதிக்காது நடப்பதினால் தான் மாற்று இனங்கள் நமது கடவுள்களிடம் பயம் இல்லாது சிற்பங்களை உடைப்பது, (சைத்தான்) என இழிவுபடுத்துவது போன்ற செயல்கள் அரங்கேறி வருகிறது என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.

நமது பாரம்பரிய பெருவிழாக்களில் தான் தங்களது குண்டர் கும்பலின் பகைகளை தீர்த்து கொள்ளும் கலாச்சாரத்தை கை விட்டு,
நல்ல முறையில் வழிபாட்டு நெறியில் மானத் தமிழ்ப் பிள்ளையாய் நடந்து கொள்ள வேண்டும்.

சண்டை சச்சரவு இல்லாத, பண்பாட்டு சீரழிவு நடக்காத, பிற இனங்கள் பழிக்காத, குற்றச் செயல்கள் நிகழாத, தமிழினத்தின் மானம் குறையாத, தமிழருக்கே வியாபாரம் எனும் கூற்று மாறாத
இத்தைப்பூச திருநாளை மலேசிய தமிழர்கள் தமிழர் தொன்மையுடன், பண்பாட்டு நெறியுடன், இறைபக்தியுடன் முன்னெடுக்க வேண்டுமாய் அன்புடனும், பணிவுடனும், உரிமையுடனும்
மலேசிய நாம் தமிழர் இயக்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

பண்பாட்டு புரட்சி இல்லாது பண்பாட்டு மீழ்ச்சி நிகழாது

உலக தமிழர்கள் அனைவரும் தமகே உரிய முறையில் உயர்ந்த நெறியில் இந்த தைப்பூச சுறவகாற்குள பெருவிழாவை நேர்த்தியுடனும் பக்தியுடனும் கொண்டாட வேண்டுமாய் மலேசிய நாம் தமிழர் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

NAAM TAMILAR MALAYSIA. BALAMURUGAN
ADVISE ALL TAMIL DEVOTEES TO CELEBRATE THAIPUSAM IN TAMIL MANNER