மலேசியர்கள் அனைவரும், 14-வது பொதுத் தேர்தலுக்கான (ஜிஇ14) நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஜிஇ14 நெருங்கிவரும் வேளையில், மலாய் இனத்திற்கான அம்னோவின் ஆதரவையும் போராட்டங்களையும் மலாய்க்காரர்கள் மறந்துவிட மாட்டார்கள் என, ஆளுங்கட்சியின் தலைமையான அம்னோ கூறியுள்ளது.
டிஏபி-யில் சலித்துபோன சீனர்கள், ஜிஇ14-ல் மீண்டும் மசீச வேட்பாளர்களை ஆதரிப்பர் என்று மலேசிய சீனர் சங்கம் அறிவித்துள்ளது.
அதேவேளை, இந்தியர்கள் தங்கள் பின்னால் உள்ளனர், ஜிஇ14-ல், அவர்களில் 80 விழுக்காட்டினர் தங்கள் வேட்பாளர்களை ஆதரிப்பார்கள் என்று மார்தட்டி கொண்டுள்ளது ம.இ.கா.
இதற்கிடையில், பக்காத்தான் ஹராப்பான் மாற்று கருத்தைக் கொண்டுள்ளது. பெர்சத்துவும் அமானாவும் மலாய்க்காரர்களின் செல்வாக்கைப் பெற்றுள்ளதால், பாஸ் ஆதரவாளர்களான மலாய்க்காரர்களை ஈர்க்கக்கூடிய சக்தியைக் கொண்டுள்ளதாக ஹராப்பான் கூறுகிறது.
அதேசமயம், பிகேஆர் மற்றும் டிஏபி-உம், நகர்ப்புற வாக்காளர்களை, குறிப்பாக சீன வாக்காளர்களைக் கவரமுடியும் என்ற கருத்தைக் கொண்டுள்ளன.
இதன்வழி, பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களும், இதுவரை பாரிசான் நேசனல் பயன்படுத்திய ஒரே சூத்திரத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
பாரிசான் மக்களை இனவாரியாக பிரித்தாளுகிறது என இதுவரை குற்றஞ்சாட்டி வந்த லிம் கிட் சியாங் போன்ற மூத்தத் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற இறுதியில் பிஎன் வழியை ஏற்றுக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.
இங்கு ஒரு விஷயம் புலப்படுகிறது, ‘மலேசியா மலேசியர்களுக்கானது’ என்ற கூற்று நம் நாட்டிற்கு ஏற்றது அல்ல என்பதை, இறுதியாக கிட் சியாங் ஒப்புக் கொண்டாக வேண்டும்.
எழுத்தாளரின் கருத்து சரியாக இருந்தால், பக்காத்தான் அரசாங்கத்தை உருவாக்குவதற்கான விருப்பம் வெற்றி பெறாது.
இங்கு இன்னொரு பிரச்சனை என்னவென்றால், மலாய்க்காரர்கள் ஹராப்பானுக்கு ஆதரவளிக்க மாட்டார்கள், அவர்கள் மலாய்த் தலைவர்கள் அல்லது அம்னோ தலைமையிலான பி.என்.-னுக்கே ஆதரவு கொடுப்பர்.
இந்தச் சூழ்நிலையில், சீனர்கள் ஹராப்பான் அல்லது டிஏபி-க்கு ஆதரவளிக்க முடிவெடுத்துள்ளனர். புத்ராஜெயாவைக் கைப்பற்ற வேண்டும் எனும் டிஏபி-யின் கனவு, மலாய் வாக்காளர்களின் ஆதரவு இன்றி நிறைவேறுமா?
அதேவேளை, இந்தியர்கள் உறுதியாக ஹராப்பானுக்கு வாக்களிக்க மாட்டார்கள். தங்களை பிரதிநிதிக்கும் ம.இ.கா.-வுக்கு ஆதரவாக இருக்க அவர்கள் முடிவெடுத்துள்ளனர், இது மறுக்க முடியாத உண்மை.
அனைத்து மட்டங்களிலான, மலேசிய சமுதாயத்தின் நலனுக்காக டிஏபி உருவாக்கப்பட்டது. பக்காத்தானில் மற்ற கட்சிகளுடன் ஒப்பிடும்போது, டிஏபி பழமையான கட்சியாகும். பக்காத்தானில் இருக்கும் உறுப்புக் கட்சிகளில் மக்களின் நம்பிக்கைக்குரியக் கட்சி டிஏபி என்று கூறலாம்.
வேண்டுமோ, இல்லையோ, ஜிஇ14-ல் ஆட்சியைக் கைப்பற்ற பாரிசான் – ஹராப்பான் இரண்டுக்குமே இந்தியர்களின் ஆதரவு மிக முக்கியம்.
அதனால்தான் பிஎன் இந்தியர்கள் மீது கவனம் செலுத்தி, ‘மலேசிய இந்தியச் சமூகச் செயல் திட்டம் (எம்.ஐ.பி.) போன்ற பல்வேறு திட்டங்களுடன், அரசாங்கத் துறையில் 7% வேலைவாய்ப்பு போன்ற வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தருகிறது.
அதே நேரத்தில், இந்திய வாக்காளர்களைக் கவர பக்காத்தான் ஹராப்பான் இன்னமும் விரும்பினால், பக்காத்தானில் இந்தியர்களின் ஈடுபாட்டைப் புறக்கணிக்காமல், அந்த சிறுபான்மையினரை அணுக வழிதேட வேண்டும்.
இந்த விஷயத்தை ஹராப்பான் அலட்சியம் செய்தால், மாநில அல்லது மத்திய அரசாங்கத்தை அமைப்பதற்கான இலக்கை அவர்களால் அடைய முடியாது.
-பெரித்தா டெய்லி
ஜிஇ14 : இந்திய வாக்காளர்கள் ம.இ.கா.-உடன் இருப்பர் ஆனால் கடைசியில் வாக்களிக்கும் பொழுது எதிர்கட்சிக்கு வாக்களித்து விடுவார் . துரோகிகளை துரோகத்தால் துரோகம் செய் – திலீப் 2 .
இன்னும் எவ்வளவுக்கு காலத்திற்குத்தான் உங்களோடிருப்பார்கள்; நம்பி நம்பி மோசம் போனதுதான் மிச்சம்; இப்போதுச் சொல்லுங்கள் ஏன் உங்களோடிருக்க வேண்டுமென்று; நாடு சுதந்திரமடைந்து ஆண்டுகள் 60 மேலாகியும் இன்னும் நம்மவர்களின் அடிப்படைப் பிரச்சனைகளையே தீர்க்கவில்லை. ஆனால் இப்போது கூலி வேலைகளுக்காக இங்கு வந்த வங்க தேச இளைஞர்கள் இப்போது தொழில்கள் நடத்தும் நிலைக்கு உயர்ந்து விட்டார்கள்; அவர்களென்ன தொழிலதிபர்களா? இங்கு முதலீடுகள் செய்வதற்க்கா இங்கு வந்தார்கள்; இது எப்படி நடந்தது? நம்மவர்கள் இங்கு காலம் காலமாய் இருக்கின்றார்கள்; பலர் தொழில் செய்வதற்க்கே முடியவில்லை. இன்னும் நம்மில் பலருக்கு இங்கு நாடு சுதந்திரம் அடைந்தக் காலத்திலிருந்து இங்கு இருக்கின்றார்கள்; அவர்களுக்கு அடையாளாச் சிட்டைகளுமில்லை; குடியுரிமையுமில்லை; இதையெல்லாம் தீர்ப்பதற்கு ஏதாவது செய்தீர்களா? இன்று தமிழ்ப் பள்ளிகளில் அறிமுகப் படுத்தப் பட்ட இரு மொழித் திட்டம், கேட்பதற்கு நல்லாத்தானிருக்கின்றது. நல்லெண்ணமென்கின்றார்கள்.; தேச ஒற்றுமையென்கின்றார்கள்; நம் தேசத் தந்தை துங்கு அவர்களின் காலத்திலிருந்த தேச ஒற்றுமையும் நல்லெண்ணமும் இன்றில்லையே! ஏன்? இந்தப் பாடத் திட்டத்தால் நாளையோ நாளை மறுநாளோ நம் தமிழ்ப் பள்ளிகள் பாதிக்கப் படுமென்று உங்களுக்குத் தெரியாதா? இதை பற்றி எதையாவது அரசிடம் பேசினீர்களா? இந்த இரு . மொழித் திட்டத்ததால் நாளை தமிழ்ப் பள்ளியில் தமிழ் ஆசரியர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. இதை நீங்கள் அறியவில்லையா? ஆதலால் ஏன் இந்திய வாக்காளர்கள் தேர்தலில் உங்களுக்குத் பின்னால் இருக்க வேண்டும்? சொல்லுங்கள்!. கொஞ்சம் எங்களிடம் கருணைக் காட்டுங்கள்!
PalanisamyT அவர்களே , எந்த காலத்துல சார் இருக்கீங்க ? இந்தியர்களுக்கு செய்யறேன்னு HINDRAF பிடம் நம்பிக்கையை தந்தார் பிரதமர். 5 ஆண்டுகள் சொளையாய் முடிந்தன ! எந்த முன்னேற்றமும் இல்லை நம் இனத்திடம் ! இதற்க்கு காரணம் யார் ? பிரதமர் சொல்கிறார் அவர் RM 800 மில்லியன் வரை இந்தியர்களுக்கு செலவு செய்ததாக . அது எங்கே போயிட்ட்று ? இப்படி பல தேர்தல்கள் வந்து போயும் விட்ட்து ! இன்னமும் பல தேர்தல்கள் வரும் போகும் …..
தமிழ்ப்பள்ளிகளை வாரியம் வழி சொத்துடமை ஆக்குவீர். பிரதமருக்கு தமிழ்க்கல்வி ஒன்றியம் வேண்டுகோள்!
PR14 ELECTION DEMAND TO PM TURN TAMIL SCHOOLS AS LPS EQUITY.
530 over Tamils in the country are without equity right by LPS while sjk , sek men and Chinese schools are owned by the respective LPS nation wide.
This episode is ignored or brushed a side by Tamil schools LPS leaders and HM’s administration said head of coaliation of Msian Tamil education and Tamil Foundation vice President Pon Rangan.
He was pressing this point during the international mother day language gathering at Tamilar Centre in Kuala Lumpur recently .
The prime minister Dato seri Najib had honestly oppened many economic and équity doors for Indians. And this is about right time for PM to provide Tamil Schools LPS to obtain a blanket approval to acquire the building and land as mark of his new dimension to 200 years old Tamil schools in the country.
Tamil school was incepted as the first educational institution school in colonial Malaya in 1817. And coming PR 14 BN manifesto should comply this promise for BN to get win win a strategy fruity win at this crucial three party PRU 14 flagship in the country.
The meeting was attended by some 40 over Tamil educational NGOs and passed a motion to abolish DLP at all Tamil schools to remain as vanuculor schools of original language sustanablity.
We need more additional time for English and Malay to develope the feel of linguistic empowerment not via subject teaching in English said Mr. Pon Rangan. Its wrong to cheat and change the mindset of parents who don’t have right to interfere in sylabus other then education policy in the country.
We call upon our PM to personally intervene in the TWO vittal issues before PRU 14 for a simple majority ride from 90% Malaysian Tamils in the country. The PM is wrongly fed with economic lie print for some individualistic to make it fast b4 retiring and after. Social issue is not just money alone, it’s at deep through heart and soul says Thiruvalluvar a Tamil sage.
Karya etika Tamil yang berjudul Thiru.k.kural ciptaan seorang penyajak. Signifies the divine manifestations of life to live with moral not money.
Anbudamaiyil. Thank you.
Pon Rangan fb I’d.
” ஜிஇ14-ல், இந்தியர்களில் 80 விழுக்காட்டினர் ம.இ.கா – பாரிசானை ஆதரிப்பார்களா? !!! ” வாழ்த்துகள்.வாழ்த்துகள்.! வாழ்த்துகள்! இன்னும் 60 வருஷத்துக்கு அடிமை சாசனமாக இல்லாமல் எதிர்வரும் எல்லா தலைமுறையையும் பாரிசானின் நாட்டாமைக்கு எழுதி கொடுக்க துடிக்கும் அவர்களை கையெடுத்து கும்பிடுவோம். .
பூனை கதை ஞாபகம் வருகிறது அதாவது பூனை நினைக்குமாம் தான் கண்னை மூடி கொண்டால் உலகம் இருண்டு விடும் என்று அப்படிதான் இருகிறது ம.இ.காவின் நினைப்பு. இது சாத்தியமாகுமா என நினைக்க தோன்றுகிறது. வரும் 14-வது பொதுத் தேர்தலுக்கான (ஜிஇ14) ஆயுத்த வேலைகள் ம.இ.கா தொடங்கி விட்டாலும் மக்கள் மனதில் அதன் தலைவர்கள் பற்றி என்ன இருகிறது என முதலில் பார்க்க வேண்டும். கடந்த சில மாதங்களிள் அதன் ஒரு சில குட்டி தலைவர்கள் மக்களுக்கு உதவி எனும் போர்வையில் சென்ற பொழுது நாம் WHATSAPP, FACEBOOK அதில் அந்த குட்டி தலைவர்களை துரத்தி விட்டது பார்த்தோம். ஒரு வகையில் வேதனைகள் இருந்தாலும். தொடர்ந்து அதன் தலைவர்கள் பேசிய பேச்சுக்கள், தமிழ் பத்திரிகைகள் மீது குண்டர் கும்பல் தாக்குதல் என வந்தன. இதை அதன் தேசிய தலைவர் கண்டித்து தமிழ் பத்திரிகையில் அறிக்கை விட்டு இருந்தால் ஏதோ மக்களுக்கு கொஞ்சம் கருணை வந்து இருக்கும். இன்று புதுசாக அறிக்கைகள் வருகின்றன. இவைகள் யாவும் பிரதமர் தமிழ் மக்களுக்கு தேர்தல் சமயத்தில் கொடுக்கும் வாக்குறுதிகள் யாயினும் அது நடைமுறையில் தேர்தல் முடிந்த பிறகு செயல் படுமா என்ற கேள்விகளும் எழுகின்றன. முன்பு இருந்த பிரதமர் இப்படிதான் அறிக்கைகள் கொடுது வெற்றி வாகை சூடினார். என்ன நடந்தது மக்களுக்கே தெரியும் அவரின் பிடிவாத குணம். நமக்கு அவரும் நிறைய கொடுத்தார் அனால் எல்லாமே ஒருவர் நமது தலைவர் கொஞ்சம் நமக்கு கொடுது விட்டு அவரின் பினாமிகளுக்கும் கொஞ்சம் கொடுத்தார். மற்றது அடி உதை நமக்கு. நல்ல மனிதர்? இப்போதைய பிரதமர் தமிழர்களுக்கு நிறைய செய்து இருப்பினும் ம.இ.கா. எனும் சொல்லும் பொழுது கோபம் கொள்கின்றனர் மக்கள் காரணம் இதற்கு முன்னால் இருந்த அந்த தலைவர் மீது கொண்ட கோபம் நமக்கு. அடுது ஒருபுறம் இன்றைய தலைவர் மௌன சாமியார் மாதிரி இருப்பதால். இருக்கும் மற்ற தலைவர்களும் என்ன பேசுகிறோம் என்ன செய்கிறோம் என்று ஒன்றுமே புரியாமல் அறிக்கைகள் விடுகின்றனர். இதில் திரு. சரவணன் கொஞ்சம் திறைமைசாலி அனால் அவரிடமும் ஒரு சில தவறுகள் இருப்பினும் இந்த தேர்தல் சமயத்தில் அவர் கொஞ்சம் நிதானம் கடைபிடிது இருக்கலாம். நல்ல பேச்சாளர் அத்துடன் திறமையானவர். அடுத்து திரு. டி. மோகன் சில சமயங்களில் பந்து விளையாட்டு அது இது என பத்திரிகையில் பார்க்க முடிகின்றது. இன்று எதிர்கட்சிகள் மிக நம்பிக்கையில் இருக்கின்றன இந்த தேர்தலில் அவர்களுக்கே வெற்றி என. வாழ்துவோம். ம.இ.கா. பிரதமர் நமக்கு செய்த சேவைகள் முன் வைத்துதே இனி ம.இ.கா. 14-வது பொதுத் தேர்தலுக்கான (ஜிஇ14) வெற்றி வாய்ப்பை தேட முடியும். ம.இ.கா. தலைவர்கள் இனி அவர்களே நேரடியாக சென்று மக்கள் மனதை கவர ஆண்டவன் தான் அவர்களின் வெற்றிக்கு பதில் சொல்லவேண்டும். எதிர்கட்சிகளோ அல்லது நடப்பு கட்சியோ எதுவாகினும் தலைவர்கள் மக்களிடம் தேர்தல் சமயத்தில் மட்டும் தன் முகத்தை காட்டுவது சிறப்பாக இருக்காது. நன்றி
ஜி. மோகன் – கிள்ளான் அவர்களே , நீங்கள் என்ன மிதவாதத்தின் இடதுசாரியா ? யாரையும் குறைசொல்லாமல் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு லாவகமாக குழப்பிவிட்டு விட்டு , பாவத்தை சுமக்காமல் கழண்டு கொண்டீர்கள் ! அதிலும் “அனால் எல்லாமே ஒருவர் நமது தலைவர் கொஞ்சம் நமக்கு கொடுது விட்டு அவரின் பினாமிகளுக்கும் கொஞ்சம் கொடுத்தார்.” என்று மிதவாதத்தின் உச்சத்திற்கே சென்றுள்ளீர்கள் ஐயா ! இன்று மா இ காவினிடம் இருப்பது ஏறக்குறைய 1200 மில்லியன் (1 .2 பில்லியன்) Malaysia வெள்ளி என்று ஒரு புள்ளிவிவரம் குறிப்பிடுகிறது ! ஆனால் Mahathir 3000 மில்லியன் வரை தந்ததாக கூறியதை பத்திரிக்கையில் படித்தேன். இந்த 1200 மில்லியனை 4 லட்சம் இந்திய குடும்பங்களுக்கு பிரித்தால், 4000 வெள்ளி கிடைக்கும் ! 3000 மில்லியனை 4 லட்சம் இந்திய குடும்பங்களுக்கு பிரித்தால், 7500 வெள்ளி கிடைக்கும் ஒரு குடும்பத்திற்கு ! இதனை சரியாக பராமரித்தால் : B40 யில் இருக்கும் 10 , 000 குடும்பங்களுக்கு RUMAH PANJANG 30 வருட குறைந்த வாடகைக்கு கட்டி தரலாம் ; 10 ஆயிரம் முன்னாள் இந்திய ஜெயில் கைதிகளுக்கு/குண்டர் கும்பல் உறுப்பினர்களுக்கு தலா 15 ,000 வெள்ளி சிறுதொழில் கடனுதவி மற்றும் வழிகாட்டி ; 100 000 இந்திய மாணவர்களுக்கு இலவச தொலைத்தொடர்பு அலைபேசி வழி கல்வி ; 10 000 பாலர் பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு ; 2 000 இந்திய மாற்று திறனாளிகளுக்கு இலவச மருத்துவ முகாம் ; 5 000 தனித்து வாழும் தாய்மார்களுக்கு இலவச தொலைத்தொடர்பு சமையல் , தையல் , கைவீணை பொருட்கள் தயாரிக்கும் கல்வி. 1000 பட்டதாரி இளைஞர் யுவதிகளுக்கு DATA SCIENCE இலவச கல்வி , 50 000 இந்திய திவால் ஆனவர்களுக்கு பயிற்சி பட்ட்ரை ஊக்கத்தொகை ONLINE சிறு தொழில் செய்ய ; 1000 மின்னியல் தோழி நுடட்பத்திற்கு , அதிலும் புத்தாக்கத்திற்கு சிறப்பு பயிற்சி வேலை இல்ல படடதாரிகளுக்கு ! என்று….. நிறைய கனவுகளுடன் 5 இளைஞர்கள் அரசியல் களம் புகுந்தனர் ! பொறாமையினால் இந்தியர்களே இந்தியர்களுக்கு எதிரியாகி உருப்படாமல் போனது வேறு யாரும் அல்ல , நம்மவர்கள்தான் ! இதில் எந்த வித பாவமும் சுமக்காமல், துரோகத்திலும் மிதவாதத்தை கடை பிடிப்பது மா இ கா மட்டும் தான் !
Dhilip 2 அவர்களே, உண்மையிலே நீங்கள் வாயால் வடை சுடுவதை விட்டு விட்டு இப்போ கையாலே சுடுகிரிர்கள். நல்ல முன்னேற்றம். ஒரு நல்ல ஆய்வு செய்து மிக தெளிவாக விளாவரியாக பிறிது பிறிது அறிக்கைகள் கொடுத்து இருகிறிர்கள்.
நான் உண்மையை தனே சொன்னேன் இதில் எந்த பாவத்தையும் சுமக்கவில்லை. அதை நீங்கள் புறிந்து கொள்ளுங்கள். அந்த சாதனை தலைவர் அறவே மக்களுக்கு செய்யவில்லையா என்று உங்களால் நிருபித்து சொல்ல முடியுமா. இன்று இப்போது பத்திரிக்கையில் படித்தேன் என்று வேறு சொல்கிறிர்கள் அது எந்த பத்திரிகை. அவ்வளவு பணமா மா.இ. காவிடம் இருக்கிறது? (இன்று மா இ காவிடம் இருப்பது ஏறக்குறைய 1200 மில்லியன் (1.2 பில்லியன்) இது எப்படி எதிர்க்கட்சிக்கு தெரியாமல் போய் விட்டது. மக்களுக்காக கொடுக்க பட்ட பணத்தை மா.இ.காவிடம் இருப்பது பெரிய தவறு என்று சொல்லவில்லை. அனால் இன்று நாம் கையேந்தும் நிலை வந்து விட்டதே. ஐயா, உங்களுக்கு தெரிந்தது இந்த உண்மைகள் மா.இ.கா அதன் தலைவர்களுக்கும் தெரியும் தனே. அவர்கள் சொன்னால் தான் உண்மைகள் வெளியே வரும். நீங்கள் சொல்வது எத்தனை சதவிதம் உண்மை என்று. உண்மை இருப்பினும் அது உண்மையிலே நீங்கள் வாயால் வடை சுடவில்லை என்று தெரிந்து விடும். நன்றி
ஜி. மோகன் – கிள்ளான் அவர்களே, இதோ முதல் ஆதாரம் : மா இ காவின் AIMST பல்கலைக்கழகம் ஏறத்தாழ RM 500 மில்லியன் . 70 மாணவர்களில் 3 மட்டுமே இந்தியர் . சொத்துடைமைகளில் இருந்து விற்று நன்கொடை வாங்கியா இந்திய மக்களிடமே திருப்பி கொடுங்கள் ! அதை விடுத்தது , அதில் வருமானம் எங்கே யாருக்கு உபயோகப்படுகிறது ? 10 வருட வரவு எங்கே ?