காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத இந்திய மத்திய அரசுக்கு, மலேசிய நாம் தமிழர் இயக்கம் கண்டனம்
தமிழகத்தில் நீரில்லாமல் விவசாயிகள் செத்து கொண்டிருக்க, தமிழகத்திற்கு தரவேண்டிய நீரை தரமறுக்கும் கர்நாடக மாநில சிக்கலுக்கு தீர்வாக இந்திய உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை மலேசிய நாம் தமிழர் இயக்கம் கண்டிப்பதாக அதன் தேசிய வீயூக இயக்குநர் திரு. பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.
சுமார் 1974-ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை தமிழ்நாடு – கர்நாடக அரசுகளுக்கிடையே காவிரி நீருக்காக பல்வேறு சிக்கல்கள் போராட்டங்கள் நடந்து வருவதும் கர்நாடக அரசு ஒப்பந்தத்தை மீறுவதும் அதற்கு மத்திய அரசு துணை நிற்பதும் வாடிக்கையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
உலக தமிழர்களுக்கு அன்னை நிலமான தமிழகத்தை திட்டமிட்டு வஞ்சித்து வரும் வடநாட்டு மத்திய அரசு செயலை இனி பொறுத்துக்கொள்ள முடியாது.
எங்கள் தாய் நிலத்தை அழிக்க, நியுட்ரோ, ஸ்டெர்லைட், கேல்எரிவாயு, கூடங்குள அனுவுலை போன்ற எண்ணற்ற அபாயகர திட்டங்களை அமுல்படுத்தி தமிழகத்தை பாலைவனமாக்க நினைக்கும் நடுவன் அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி தக்க பதிலடி கொடுக்க வேண்டிய நிலையில் தமிழர்கள் நங்கள் நிற்கிறோம் என்றார் திரு. வீ.பாலமுருகன்.
எங்கள் தாய்த்தமிழ் தமிழக உறவுகளை காவிரி மேலாண், நீட் தேர்வு, விவசாயி, விலைவாசி, மீனவர் போன்ற எண்ணிலடங்கா வாழ்வுரிமை போராட்டங்களுக்கு தள்ளி போராட்டங்களே அவர்கள் வாழ்க்கையாக மாற்றிய ஆரிய திராவிட மத்திய மாநில அரசுகளை கால் ஊன்றாமல் களை எடுத்து, அனைத்து உயிருக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சியை அதிகாரத்தில் அமர தமிழ் நாட்டை ஒரு தமிழனே ஆள வைப்பது மட்டுமே இவ்வனைத்திற்கும் தீர்வாகும் என்றார்.
தன்னுரிமைக் காக்க பல்வேறு போராட்டங்களை ஒருங்கிணைத்து ஓய்வின்றி போராடி வரும் தமிழக உறவுகளுக்கு மலேசிய நாம் தமிழர் இயக்கம் என்றும் துணை நிற்கும் என்பதோடு புலம்பெயர்ந்த உலக தமிழர்களும் தாயக தமிழக மக்களுக்கு அனைத்து வகையிலும் பேராதரவு வழங்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.
காவிரி மேலாண் போன்ற உரிமை உடமை போராட்ட களத்தில் கைது செய்யப்பட்ட அத்தனை தமிழர்களையும் தமிழ் நாடு அரசு உடனே விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவை மலேசிய இந்திய தூதரகத்தில் வழங்க இருப்பதாகவும் தனது வாழ்வுரிமைக்காக போராடி வரும் தமிழக மக்களுக்கும், மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் புரட்சி வாழ்த்துக்களை மலேசிய நாம் தமிழர் இயக்கம் பதிவு செய்வதாக இயக்க தேசிய வீயூக இயக்குநரும் பேராக் மாநில ஒருங்கிணைப்பாளரான திரு. பாலமுருகன் வீராசாமி தெரிவித்துக் கொண்டனர்.
இங்கிருந்து கண்டித்து என்ன பயன்? அடுத்துவரும் சூன் மாதத்திலிருந்து தமிழ் நாட்டு முதன்மை அரசாங்க பல்கலைக்கழகங்கள் இந்தியாவின் நடுவண் அரசாங்கத்தின் மனித வளத்துறை அமைச்சுக்குக் கீழ் கொண்டு வரவிருக்கின்றனர். தமிழ் தெரியாதவரை பல்கலைக்கழகங்களில் உயர் நிலையில் அமர்த்தினால் தமிழ் மெல்ல மெல்ல சாகும். அங்குள்ள தமிழரே செய்வதறியாது தவிக்கின்றார்! பாவம் தமிழ் நாடு!
சித்திரையில் காவேரி நீர் தமிழக
த்துகு வருமா? சொல்லுங்கள்
சோசியத்தைகரைத்து குடித்த
விஞ்ஞான அறிவுஜிவிகளே?