வாருங்கள், தேர்தல் வாக்குறுதிகளைக் கண்காணிப்போம்!

ஓர் அரசியல் திருப்பு முணையாக அமைந்த 14-வது பொது தேர்தல், மலேசிய மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். அதில் தேசிய முன்னணியை தோற்கடித்த நம்பிக்கை கூட்டணி நாட்டு மக்களுக்கு நன்மை அளிக்கும் பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளது.

குறிப்பாக, இந்தியர்களுக்கு என்று 25 வாக்குறுதிகளை நம்பிக்கை கூட்டணியின் தேர்தல் கொள்கை அறிக்கை கொண்டுள்ளது. இந்த முக்கிய தேர்தல் காலத்தில்  வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இந்திய மக்களிடையே பலத்த எதிர்ப்பார்ப்பையும் ஆழ்ந்த நம்பிக்கையையும் உண்டாக்கியுள்ளது.

இந்தியர்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளைப் பூர்த்தி செய்வது ஒரு அத்தியாவசியமான நிர்பந்தமாகும். விடுதலை அடைந்த நாள் முதல் இன்றுவரை இன்னமும் செம்மையற்ற சூழலில் பாதி இந்தியர்கள் வாழ்கிறார்கள்.

இந்தச் சூழலில், நாட்டின் பிரதமர் பொறுப்பில் இருக்கும் துன் டாக்டர் மகாதீர் முகமட் தேர்தல் வாக்குறுதிகளை முற்றாக செயலாக்கம் காண இயலாது என கோடிகாட்டியுள்ளார்.

முன்னாள் பிரதமர் நஜிப் அவர்களின் தேசிய முன்னணி அரசாங்கம் நாட்டின் பணத்தை சூரையாடிவிட்டதாலும், தகாத வகையில் நிதி நிறுவாகம் செய்ததாலும்,  நாட்டின் கருவூலம் காலியாகவும், நாடு கடனில் அவதிப்படுவதாகவும் மகாதிர் கூறி வருகிறார். அதோடு நாட்டை காப்பாற்ற மக்களிடம் நிதியும் வசூல் செய்யப்படுகிறது.

அப்படியென்றால், இந்தியர்களுக்கான வாக்குறிதிகள் என்னவாகும்?

இதற்கு முன்னால் 2013 தேர்தலின் போது போடப்பட்ட  ஹிண்ட்ராப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அரசாங்கம் செயலாக்கம் செய்யவில்லை. அதன் பிறகு நஜிப் உருவாக்கிய இந்தியர்களுக்கான பெருந்திட்டம் செயலாக்கம் வரையரை அற்ற ஒரு கண்காட்சி ஆவணமானது. இவை சார்பாக பலத்த விமர்சனம் சந்தேகக் கண்ணோட்டத்துடன்  எழுப்பப்பட்டது.

தற்போது, நம்பிக்கை கூட்டணியின் இந்தியர்களுக்கான இந்த விசேச வாக்குறிதிகள்.  இந்த வாக்குறுதிகளை பூர்த்தி செய்ய இன்னமும் நான்கு ஆண்டுகள் எட்டு மாதங்கள் உள்ளன. இந்தக் காலக்கட்டத்தில் இவை படிப்படியாக அமுலாக்கம் காண வேண்டும்.

அதற்கான ஒரு கண்காணிப்பு குழுவை மலேசியஇன்று உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இவை சார்ந்த தகவல்களை பகிர்வதன் வழி அரசாங்கதின் தார்மீக பொறுப்பை தொடர்சியாக அவர்களின் கவனதிற்கு கொண்டு வர இயலும்.

  • மலேசியாஇன்று