சீர்கேடுகளைக் களைவோம், ஏற்றத்திற்கு ஒன்றுபடுவோம், உறுதி கொள்வோம், ஓங்கட்டும் சமுதாயம், சேவியர்

 

சீர்கேடுகளைக் களைவோம், ஏற்றத்திற்கு ஒன்றுபடுவோம், உறுதி கொள்வோம், ஓங்கட்டும் சமுதாயம்,  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்,

 இத்தீபத் திருநாளில் மறையட்டும் இருள், ஒழியட்டும் ஊழல், ஓங்கட்டும் உழைப்பு, ஒளிரட்டும் நாடு, மலரட்டும் புதிய மலேசியா! மலேசிய இந்துக்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்,.

‘’தீபாவளி நாள் மட்டுமின்றி நம் எதிர்காலத்தையே ஒளிரச்செய்யும் மாற்றத்தை நம் குழந்தைகளுக்கு வழங்குவதே, அவர்களுக்கு நாம் வழங்கும் சிறந்த தீபாவளி பரிசாகும்’’.

மேலே குறிப்பிடுள்ளது கடந்த ஆண்டு நான் வழங்கிய தீபாவளி செய்தி. இந்நாளில் நமது அடுத்த தலைமுறை சிறப்புடன் வாழ, ஒரு மாற்றத்திற்கு வித்திடும் சக்தியை, நல்ல ஆசியை எல்லா இந்துக்களுக்கும் இறைவன் வழங்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டோம்!

ஆண்டவர் ஊழல், ஆணவம், ஊதாரித்தனம் என்னும் நவீன நரகாசுரன்களின் அட்டூழியங்களிலிருந்து நாட்டையும், மக்களையும் காப்பாற்றி விட்டார். நல்ல ஆசியை எல்லா மலேசியர்களுக்கும் வழங்கி விட்டர், அவருக்கு நன்றி கூறும் ஒரு நன்னாளாக இந்தத் தீபாவளி திருநாளைக் கொண்டாடுவோம்..

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவது அரசாங்கத்தின் கடமை! ஆசையும் கூட, ஆனால் நாட்டின் இன்றைய கடன் சுமை அதற்குப் பெரிய சவாலாக அமைந்துள்ளது. பிரதமர் உறுதியளித்துள்ளது போல் இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாட்டின் கடன் சுமைகள் வெகுவாகக் குறைந்துவிடும்,

அதிக ஊதியம் என்பதை விட, நம் ரிங்கிட்டின் மதிப்பு உயர அன்னியக் கடன்களைப் பட்டுவாடா செய்யும் கடப்பாடு மலேசியர்கள் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது..  இப்பொழுது அன்னிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பல உணவு பொருட்களின் விலைகள் குறையக் காரணமாக இருப்பது, உலக நாடுகளுக்குப் புதிய பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் மீது ஏற்பட்டுள்ள நம்பிக்கை, அதனால் நமது ரிங்கிட்டின் வாங்கும் சக்தி மீட்சி பெற ஆரம்பித்துள்ளது.

இந்தியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை  நிறைவேற்றுவதில் புதிய பக்காத்தான் அமைச்சரவை எந்தத் தங்குதடையின்றிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்தப் பட்ஜெட்டில் வெளிவந்துள்ள  குறைந்த வருமானங்கொண்ட மக்களுக்கு உதவும் அறிவிப்புகளே சான்றாகும். இந்த அரசு  தொடர்ந்து அதன் பணியை மேற்கொள்ளும். மக்கள் நல்வாழ்வும்,  தேச நலனுமே, பக்காத்தான் ஆட்சியின் இரு முக்கியக் கூறுகள்.

சுதந்திர மலேசியாவில், ஒரு கட்டுக்கோப்பு மிக்க, கல்வி பொருளாதார வல்லமை கொண்ட சமுதாயமாக இந்தியர்களை மாற்றியமைக்கும் குறிக்கோளையடைய  அனைவரும் ஒன்றுபடுவோம், ஏற்றத்திற்கு உறுதிகொள்வோம்.,சீர்கேடுகளை களைய பாடுபடுவோம், ஓங்கட்டும் நமது சமுதாயம், வளரட்டும் நமது பிள்ளைகள் வளமுடன், அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.