தமிழ்ப்பள்ளிகளில் “டோப் டென்” பாலர் பள்ளி சிக்கல்கள்

கடந்த ஞாயிறன்று தமிழ் காப்பக இயக்கத்தின் பன்மை வகுப்பு எதிர்ப்புக் கூட்டத்திற்கு நானும் நண்பர் மணியமும் சென்றிருந்தோம்.

ஒரு சிலரைத்தவிர எல்லாம் பழமையான ம இ கா கூட்டத்து கல்வி மான்கள்தான்.

பன்மை வகுப்பு திட்டத்தை ஒத்திப்போட முடிவானது.

எப்படி? என்ன காரணம் காட்டி ஒத்திப்போடுவது பற்றி யாரும் சொல்லவில்லை.? தீர்மானமும் கல்வி அமைச்சரை சந்திக்கப்போவதாகவும் சொன்னார்கள்.

கல்வி அமைச்சில் இப்போதைய ஆலோக மன்ற உறுப்பினர் அதாவது முன்னாள் தலையாசியர் மன்ற தேசிய தலைவர் கூட வந்திருந்தார். 1 நிமிடம் பேசினார்.

பிரபல பிற முன்னாள் ஆசியர்களும், முன்னாள் த.ஆசிரியர்கள்,முனைவர்கள்,,பெரிய பெரிய ஆய்வியல் வித்வான்கள் எல்லாம் இருந்தார்கள்.

எப்போதும் போல 60 ஆண்டுக்கால இன்றைய அறிவுக்கு உதவாத பழைய அனுபவ பல்லவி பாடம்தான் நடத்தினார்கள்.

நாட்டில் 450 பள்ளிகளில் பாலர் பள்ளிகள் இல்லை !? பொறுப்பில் இருந்த அதிகார ஆளுமைவாதிகள், அடிப்படை பாலர் பள்ளிகள் முக்கியத்துவமும் மாணவர் பற்றாக்குறைக் காரணக்குறிப்புகளை பற்றியெல்லாம் பேசினார்கள்.

அரசியல் வழி ஒரு துணைக் கல்வி அமைச்சர் சீன தனியார் பாலர் பள்ளிகளுக்கு நிதிகளுக்கு வாக்குறுதிகள் தருவதை செய்திகளில் பார்க்கின்றோம்.

மலாய் இனத்தவர்களுக்கு கிராமம் தோறும், புது வீட்டுமனை திட்டங்களில் தடிக்கா, தக்ஷ்கா, புக்ஷ்கா என்றும்,இன்னும் இசுலாமிய பாலர் பள்ளிகள் இயல்பாக நடப்பதுண்டு.

450 தமிழ் பாலர் பள்ளிகளுக்கு மட்டும் இந்த ஏமாந்த நிலை. பாலர் பள்ளிக்கும் தமிழ்ப்பள்ளிகள் மாணவர் பற்றாக்குறைக்கும் நேரடி சம்பந்தம் உண்டு. தமிழ்க் கல்வி சார்பு பொறுப்பாளர்கள் BN அரசு தந்த வாய்ப்புகளை தவற விட்டுவிட்டு, இப்போ பன்மை வகுப்பு வேண்டாம் என்று சிந்திக்க சந்திக்கிறார்கள். நாட்டில் ஆயிரக்கணக்கில் தன் முனைப்பு பயிற்சிகள் ?

தமிழ்ப்பள்ளிகள்அல்லது தனியார் தமிழ் பாலர் பள்ளிகள் அரசு சார்பில் நிலைப்பெறாத வரையில் பன்மை வகுப்பு பற்றி பேச, எதிர்க்கவோ ஆசிரியர்கள் குறிப்பா முன்னாள் கூட்டமும் அரசியல் வாதிகளின் அரசூதிகள்தான் பொறுப்பு என்பேன்.

அதிகமான தமிழ் ஆசிரியர்களை கொண்ட மஇகாவும் தூங்கியது.

தமிழியல் மணி மன்றங்கள், இயக்கங்கள், தமிழ் அறவாரியம் உட்பட பல பல பயிற்சிகள் என்று ஏமாந்து அரசின் பன்மை வகுப்புக்கு வழி விட்டதுதான் உண்மை!

அமைச்சின் தமிழ்த்துறை நிருவாக அதிகாரிகள் முதல் துரோகத்தனம் மன்னிக்க முடியாததாகும்.

“தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு” என்று அரசியல் ஆர்ப்பாட்ட சுலோகங்கள் ஏந்திய செடிக்கின் டத்தோ ராஜேந்ததிரன் கூட நிகழ்வில் இருந்தார்.

இண்டியன் புளு பிரிண்டில் கூட தமிழ் பாலர் பள்ளிகளுக்கு பரிந்துரை ஏதும் செய்யவில்லை என்ற கோபம் நமக்குண்டு.

அவர் பேசுகையில் “எல்லா மொழி பள்ளிகளிலும் பன்மை வகுப்பு திட்டமுள்ளது” என்று அவருக்கே உரித்தான அரசு சமாதான சிபாரிசுதான் செய்தார்.

இந்நாட்டில் மலாய், சீனப் பள்ளிகளின் நிலை வேறு.

ஆனால் 200 ஆண்டுக்கால தமிழ்ப்பள்ளிகளின் வரலாறு வேறு.

பாலர் பள்ளி இழப்புகளுக்கு அரசியல், அரசு தந்த அவமானங்கள் இன்றும் தொடர்கிறது.

“தமிழ் மொழியே நமது தேர்வென்று” சொல்ல நம் இயக்குநர்கள் ஆய்வியல் வழியற்று,”பள்ளிக்கே” என்று கட்டடங்களுக்கு அரசியல் பொதுச் சாயம் பூசினர்.

அரசு சொத்தான கட்டடங்களை காட்டி அரசியலுக்கு ஓட்டு சேர்த்த பல உண்ணிகள் பண தின்னிகளாக சமூக மாற்றத்துக்கு சுமார் 2 பில்லியனை கரைத்துள்ளனர்.

பள்ளி கட்டிடங்களை மீண்டும் அரசு சொத்தாக்கி ஏமாந்து போனதுதான் அதர்ச்சி தரும் மிச்சம் !

இனி என்ன செய்யலாம்?

1.நாடு முழுக்க “தமிழ் பாலர் பள்ளிகள் வேண்டும்” என்ற பிரசாரம் மட்டுமே அரசியல், அரசுக்கு கேற்கும்.

பன்மை வகுப்பு நிறுத்தம்,பாலர் பள்ளி அமைத்தல், மாணவர்கள் சேர்க்கை வழி மட்டுமே சாத்திய முடியுவாகும்.

பாலர் மாணவர்கள், பெற்றோர்கள், சமூகத்தலைவர்கள், அரசியல் அரசு,அதிகாரிகள் குறிப்பா தலைமை ஆசிரியர்களின் மொழி, இனம் கடபாடு வழி மட்டுமே நிலை நாட்ட முடியும்.

நாம் அதிகம் நம்பி இருந்த தமிழ் அறவாரியம் கூட பன்மை வகுப்பு எதிர்ப்பில் , பாலர் பள்ளி மேம்பாட்டில் இப்போதுதான் கை வைக்க முனைகிறது என்பதில் மகிழ்ச்சிக்கொள்கிறோம்.

தமிழ்ப்பள்ளி பாலர் பள்ளிகள் திட்டத்தில் தமிழ் அறவாரியம் புதிய கோணத்தில் எல் பி எக்ஷ் அமைப்புக்கு தரவு செய்தது போன்று கையாண்டு இருக்க வேண்டும்.

பாலர் பள்ளிகள் வழி மட்டுமே மாணவர் எண்ணிக்கைகளை அதிகரிக்க முடியும்.இதனால் மட்டுமே PT 1 முதல் PT 3 வரை தமிழ் மொழி தேர்வுகளில் மாணவர் நாட்டமும் அக்கறையும் நிலை நிறுத்தப்படும்.

ஆண்டாண்டு சீனப்பள்ளிகளில் 12 ஆயிரம் இண்டிய மாணவர்களும், 52 % தேசியப் பள்ளிகளிலும் இண்டியர்கள், தமிழர்கள் போய் தொலைவதற்கு காரணங்களை காண்போம்:

1.தமிழ்ப்பள்ளிகளில் பாலர் பள்ளிகள் இல்லாமை.
2.பள்ளி வாரியங்கள், பெ ஆ சங்கங்கள், பழைய மாணவர் சங்கங்கள், தலைமையாசிரியர்கள் திமிரான போக்கால் பாலர் பள்ளிகள் அமைக்க முன்வராத அலட்சியத்தனம்.

பாலர் பள்ளிகளுக்கேற்ப வகுப்பறைகள் அல்லது நிலம் இருந்தும் அரசு மானியம் இல்லாமை.
இடை நிலைப்பள்ளிகளில் தமிழ் மொழிக்கு கட்டாயம் பாட திட்டம் ஏற்படாதது. இ. நிலைப்பள்ளிகளில் தமிழ் மொழி இயக்கம் இல்லாமை. மாணவர்களை, பெறோர்களை மிரட்டும் ஆதிக்கத்தனம் செய்வது.

5.தமிழ்ப் பள்ளிகள் தூரம் , பொருளாதாரம் ஈடுகட்ட முடியாத 50% ஏழைகள் வறுமையின் கீழ் B4 அடியில் மிதப்பவர்களின் வாழ்வாதார சூழல்.

6.இயக்கங்கள் அரசு பணத்தை திட்டம் போட்டு அரசியல் தனமா திருடி தொண்டு நிலை மாறி வணிக வசூல் மயமாகிப்போனது.

7.மக்களுக்கு தமிழ்பள்ளிகள் மீது தலைமைத்துவ ஆளுமை மீது நம்பிக்கையின்மை ஏற்பட்டது.

சமுதாயம் அடுத்தக் கட்ட தமிழ்ப்பள்ளி, தமிழ் மொழி, மேன்மைக்கு இளைஞர்களை, யுவதிகளை தயார் செய்யாது, பணமே பிரதானம் என்ற சந்தர்ப்பவாத சுய நல போக்கில் சமுதாயத்தை முன் வைத்து சுய முதலீட்டு மாயை செய்வது.
கூட்டம் போடுவது. தீர்மானங்கள் போடுவது. வந்திருக்கும் பிரமுகர்கள் கூட்டத்தை காட்டி படம் பிடித்து, அத்தோடு காணமல் போனவர்கள் பெரும் பெரும் தலைவர்களானதால் சமுதாயம் ஏமாந்து நம்பிக்கை, இழந்தது. தமிழனையும் தமிழ்ப்பள்ளிகளின் கோளாறு தலைமைத்துவத்தை நம்ப மறுக்கும் அறிவுமிக்க பாமரர்கள்.

10.ஊடகங்கள் தமிழ்மொழி, தமிழர்கள், இண்டியர்கள், சமயம் , ஆன்மிகம், இந்துத்துவம், சிவனியம், தமிழ் சமயம், சைவ சித்தாந்தம் போன்ற முழுமையான நெறிகள், ஆய்வுகள் தெரியாமல், கணினியில் ‘கோப்பிபேக்ஷ்டு” வித்தையில் நிருபராகி இனத்தையும் மொழியையும் சமயத்தையும் போட்டு குழப்புவதால் வெறுத்துப் போன மக்கள் “மலாய் பள்ளிகளே போதுமட சாமிங்களா ” என்று ஒதுங்கிய மக்கள் கூட்டம்.

இறுதியாக செடிக் டத்தோ ராஜேந்திரன் அவர்கள் பொறுப்பிலிருந்து விலகியபோது, செடிக்கின் மீத நிதியான 90 மில்லியனை அரசு மெச்சிக்க அரசிடம் திரும்பக் கொடுத்து அரசுக்கு ” அறம்” காத்த தமிழ் சேதம் செய்ததால் சுமார் 50 பள்ளிகளில் பாலர் பள்ளி அமையும் வாய்ப்பை இழந்த ஏக்கத்தை எண்ணி தமிழியம் தவிக்கிறது.

பலர் கேற்கலாம் “நாங்கள் என்ன செய்கிறோம் என்று?”

மொழித்துறையில் பொறுப்பில், பதவியில்,சம்பளத்தில், அரசு ஓய்வூதியத்தில் இருப்பவர்கள், இருந்தவர்கள் ஏன் வழி காட்டாமல் தூங்குகிறார்கள்?

சமுதாயத்து மொழி, இன தோல்விகள் எல்லாம் படித்த பதவியர்கள் மேம்மட்ட பகட்டு,விளம்பர அரசியல் ஆடுவதால் “மொழி ஆளுமை சக்தி” ஆட்டங்கண்டுள்ளது.

தமிழ் மொழி காப்பகம் போன்ற இன்னும் பல இயக்கங்கள் மீண்டும் முயற்சி , முயற்சி என்று முயற்சிக்காமல் தமிழ்ப் பள்ளி பாலர் பள்ளிகள் அமைத்தல், மாணவர்கள் சேர்க்கையில் முடிவான மீட்சி ஆய்வு திட்டம் செய்து பிரதமர் வரை போக வேண்டும். அத்துடன் PT 1 முதல் PT 3 மாணவர்களின் தமிழ் மொழி ஆர்வமும் ஆதிக்கம் பெற உணர்வுகள் தமிழ் குருதியோடு ஊக்கம் பெற வேண்டும்.

பொன் ரங்கன்.
அம்பாங்.8/4/2019